அதுக்கு செலவு செய்யுறதுனா நம்ம ஆளுங்க தான் ‘ டாப்’
சமீபத்தில் டியூரெக்ஸ் குளோபல் அமைப்பு செக்ஸ் குறித்த சர்வே நடத்தியது. இதில் இந்தியா உட்பட 42 உலக நாடுகளை சேர்ந்த 33,000 பேர் பங்கெடுத்தனர். இதில், 80% பேர் செக்ஸ் வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கினர் செக்ஸ் கோளாறுகள், சந்தேகங்களை வெளிப்படுத்த சங்கோஜப்படுவதாக கூறி இருந்தனர்.
செக்ஸ் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 59% பேர் பெண்ணுறுப்பு ரீதியான உறவு என்றும். 45% பேர் ஆண், பெண் மத்தியிலான உடல் ரீதியான இணைப்பு என்றும், 40% பேர் முத்தமிட்டுக் கொள்வது என்றும் பதில் அளித்துள்ளனர்.
செக்ஸ் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 82% பேர் பெற்றோரிடம் என்றும். 61% பேர் நண்பர்களிடம் என்றும் கூறியுள்ளனர். ஒரே நபருடன் உறவு வைத்துக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு 28% பேர் ஒரே ஒரு துணையுடன் என்றும், 63% சதவீதத்தினர் பலருடன் உறவு வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் பணம் கொடுத்து செக்ஸ் வைத்துக் கொள்வதில் இந்தியர்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள் 42% உள்ளனர்.உலக அளவில் இதன் சதவீதம்38. சுய இன்பத்தில் பெண்கள் 68% பேரும், ஆண்கள் 73% பேரும் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
செக்ஸ் மிகவும் திருப்தி என்று 72% பேர் பதில் அளித்துள்ளனர்.கருத்தடைக்கு 73% பேர் ஆணுறை என்றும், 25% பேர் மாத்திரைகள் என்றும், 13% பேர் காலண்டர் நாள் குறித்து வைத்து உடலுறவில் ஈடுபடுகிறோம் என்றும் பதில் அளித்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பாதி பேர் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதில்லை என்று அதிர்ச்சியளித்துள்ளனர். புறநகர் பகுதியை விட நகர்புற மக்கள் அதிகம் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் இதில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக