செவ்வாய், 30 ஜனவரி, 2018

நெல்லை புத்தகத் திருவிழா- 2018 நிகழ்ச்சிநிரல்

நெல்லை புத்தகத் திருவிழா- 2018 நிகழ்ச்சிநிரல் 

2018 பிப்ரவரி மாதம் 3 முதல் 11 முடிய
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில்
அறிவுக்கும் மனதுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் இப்புத்தகத் திருவிழா நடைபெறும். 110 புத்தகக் கடைகள்
அமைக்கப்படவுள்ளன.

04-02-2018 அன்று காலை 10 மணிக்கு
மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்றுகிறார்.

அன்றைய தினம் (04-02-2018 ) மாலை 6 மணிக்கு , சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன், எழுத்தாளர் ரவிகுமார் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

05-02-2018 மாலை 6 மணிக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் வண்ணதாசன், தோப்பில் முகமது மீரான் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

06-02-2018 மாலை 6 மணிக்கு, சூழலியலாளர் நக்கீரன், எழுத்தாளர் உதயசங்கர், காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர்
சிறப்புரையாற்றுகின்றனர்.

07-02-2018 மாலை 6 மணிக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், இதழாளர் சமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

08-02-2018 மாலை 6 மணிக்குப் பேராசிரியர்கள் இரா. காமராசு, "மேலும்" சிவசு ஆகியோர்
சிறப்புரையாற்றுகின்றனர்.

09-02-2018 மாலை 6 மணிக்கு மருத்துவர் கு.சிவராமன், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன்
ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.

10-02-2018 மாலை 6 மணிக்குத் திரு. பாரதி
கிருஷ்ணகுமார், எழுத்தாளர் மலர்வதி ஆகியோர் சிறப்புரையாற்றுவர். 8 மணிக்குக் கவிஞர் பா. தேவேந்திரபூபதி தலைமையில் கவிதை வாசிப்பு
நடைபெறும்.

11-02-2018 மாலை 5 மணிக்கு வேலு சரவணன் அவர்களின் குழந்தைகள் நாடகம் நடைபெறும். 6 மணிக்கு சாகித்திய அகாதமி விருது பெற்ற
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றுகிறார்.

11-02-2018 - அன்றையதினம் இரவு 8 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப, அவர்கள் புத்தகத் திருவிழாவை நிறைவு
செய்து விழாப் பேருரையாற்றுவார்கள்.

புத்தகத் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்குப் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியரின் கலைப்போட்டிகளும் 4
மணிக்கு அவர்களுடைய கலை நிகழ்ச்சிகளும்
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் வருக!
ஆதரவு தருக!

#Nellaibookfair2018

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை...

தமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை...

பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 *தமிழக பள்ளிகளின், 'அட்டெண்டன்ஸ்' முறையில்..  புதுமை!*

கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை
பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

*வருகைப்பதிவு எப்படி?*


புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


திங்கள், 29 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 29/01/18 !


பரபரப்பு செய்திகள் 29/01/18 !

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக மறியல் : மறியலில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது.

2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை.

திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளால் தற்போது கட்டணம் உயர்வு.போக்குவரத்து ஊழியர்களை தூண்டிவிட்டதும், தற்போது போராட்டம் நடத்துவதும் திமுக தான் - தமிழக முதலமைச்சர்.

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களை ஒருபோதும் அகற்ற முடியாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கு பிப்.14 க்கு ஒத்திவைப்பு : வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகரின் காவலை பிப்.14 வரை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்.

புதிய இந்தியாவை உருவாக்குவதில் 2018 ஆம் ஆண்டு முக்கிய பங்கு வகிக்கும்.சமூக நீதி, பொருளாதார சமநிலையை உருவாக்குவதில் எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது - இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை கொளத்தூரில் சாலையில் அமர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறியல்.

பேருந்து கட்டணம் உயர்வை கவுரவம் பார்க்காமல் தமிழக அரசு குறைக்க வேண்டும் - டிடிவி தினகரன்.

மின்சார வாரியத்தில் எந்த வித ஒப்பந்தமாக இருந்தாலும் , அது நேரடியாக தான் நடைபெறுகிறது : மின்சார துறை அமைச்சர் தங்கமணி.

சென்னை மெரினால் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் விதிகள் மீறப்படவில்லை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு.

பெட்ரோல் டீசலை , ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மத்திய அரசிடம் எதிர்ப்பு தெரிவிப்போம். அதிமுகவில் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

பாரத மிகு மின் நிலையத்துக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : உடன்குடி மின் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர்அடிக்கல் நாட்டினார்.

தற்போது போக்குவரத்து கழகம் கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது.டீசல், பேருந்து உதிரிபாகங்கள் விலை திமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது - தமிழக முதலமைச்சர்.

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்து கழக நஷ்டத்தை சரிசெய்யலாம் : முக.ஸ்டாலின்.

ஐயர் என்றால் ஆசிரியர், மேன்மை கொண்டோர் என்று தான் பொருள். ஆகவே இசைஞானி இளையராஜா ஏற்கனவே ஐயர் தான்;அவர் புதிதாக முயற்சிப்பதாகக் கூறுவது புரிதல் இன்மையே - இளையராஜா அயராக மாற நினைப்பதாக கூறிய இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஹெச். ராஜா பதில்.

எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து விவசாயிகளின் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும் - அய்யாக்கண்ணு வலியுறுத்தல்.

உயர்நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய நித்தி சீடர் நரேந்திரனை கைது செய்ய உத்தரவு.

மதுரை ஆதினம் வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

ஜல்லிக்கட்டு அழைப்பிதழில் என் பெயர் இல்லாதது பற்றி எனக்கு கவலை இல்லை - பன்னீர்செல்வம், துணை முதல்வர்.

தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள 67 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் துவக்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்.

கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் போராட்டத்திற்கு மாணவர்களை யாரும் தூண்டிவிடவில்லை கைது செய்தவர்களை விடுதலை செய்து வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - வைகோ.

காரைக்கால் பெண் தாதா எழிலரசிதனது ஆதரவாளர்கள் 30 பேருடன் கைது : எதிரியை கொலை செய்ய நட்சத்திர ஓட்டலில் சதிதிட்டம் தீட்டிய போது சிக்கினர்.

திருவாரூர் : மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு உயர்த்தப்பட்ட அரசுப்பேருந்து கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெற கோரிக்கை.

கட்சிக்கு முரணாக செயல்பட்டதாக சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்.

மன்னார்குடி மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்.

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த நாதுராமை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோவிலில் இன்று முதல் பிப்.2 வரை தங்கத்தேரோட்டம் நிறுத்தம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

*🏏ஐபிஎல் ஏலம்: ஷர்துல் தாகூரை ரூ. 2.6 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்*

*🏏ஐபிஎல் ஏலம்: ஜெய்தேவ் உனத்கட்டை ரூ. 11.5 கோடி கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்*

*🏏ஐபிஎல் ஏலம்: நாதன் கவுல்டர் நைல்-ஐ ரூ. 2.2 கோடி கொடுத்து வாங்கியது ஆர்சிபி*

*🏏ஐபிஎல் ஏலம்: மொகமது சிராஜ்-ஐ ரூ. 2.6 கோடி கொடுத்து வாங்கியது ஆர்சிபி*

*🏏ஐபிஎல் ஏலம்: சந்தீப் சர்மாவை ரூ. 3 கோடி கொடுத்து வாங்கியது ஐதராபாத்*

*🏏ஐபிஎல் ஏலம்: மோகித் சர்மாவை ரூ. 2.4 கொடுத்து வாங்கியது பஞ்சாப்*

*🏏ஐபிஎல் ஏலம்: பென் கட்டிங்கை ரூ. 2.2 கோடி கொடுத்து மும்பை வாங்கியது*

*🏏ஐபிஎல் ஏலம்: குர்கீரத் சிங்கை ரூ. 75 லட்சம் கொடுத்து வாங்கியது டெல்லி*

*🏏ஐபிஎல் ஏலம்: ஆப்கானிஸ்தானின் 16 வயது இளம் வீரரை ரூ.4 கோடி கொடுத்து வாங்கியது பஞ்சாப்*


வியாழன், 25 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 25/01/18 !

பரபரப்பு செய்திகள் 25/01/18 !

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்கள் 108 பேரையும் 165 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.

அணுசக்தியைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி கூறும் நாடுகளின் குழுக்களில் இந்தியா இணைந்துள்ளது. இந்தியா இணைந்ததற்கு அமெரிக்கா பாராட்டு.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா நேரில் ஆஜராவதில் சிரமம் இருப்பதால் பெங்களூரு சிறைக்கு சென்று விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு.

கிராமியமே நமது தேசியம் என்றால், நாளை நமதே.நேற்றையும், இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே.தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால், நாளை நமதே - நடிகர் கமல்.

நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் - உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ பிரமாண பத்திரம் தாக்கல்.

இலங்கை இயற்றியுள்ள #மீன்பிடி மசோதா அதிர்ச்சி அளிக்கிறது.வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்க செல்பவர்கள் எப்படி கடல் எல்லையை கண்டறிந்து மீன்பிடிக்க முடியும் - அமைச்சர் ஜெயக்குமார்.

விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவல் ஆய்வாளர்களை பணிமாறுதல் செய்யக் கூடாது - தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

டிஜிபியின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படாததால் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கத் தேவையில்லை : லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 1200 சிலைகள் திருட்டு இதுவரை 56 சிலைகள் மீட்பு - உயர்நீதிமன்றத்தில் இந்துசமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்.

சென்னை கொளத்தூரில் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான கொள்ளையன் நாதுராமை சென்னை தனிப்படை போலீசிடம் ராஜஸ்தான் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

எல்லா இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட கூடாது என்பதே என் கருத்து - நடிகர் கமல்ஹாசன்.

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த 110 வயதான ஜீயர் சிவக்குமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்.

சினிமாவைவிட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.தமிழ்த்தாய் வாழ்த்தின்போது உள்ளத்திலும், உணர்விலும் விஜயேந்திரருக்கு வலுவில்லை.தமிழுக்கு விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவு தான் - திமுக முதன்மை செயலர் துரைமுருகன்.

விஜயேந்திரர் எழுந்து நிற்காது தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்ததை விட மோசமான அவமரியாதை ஒரு மாநில ஆளுநர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதைக் கண்ட கண்ட இடம் என்று கூறியது. கமலஹாசனுக்குக் கடும் கண்டனங்கள் - சீமான்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்காததற்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், பொறுமையுடன் பேசி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால் டாக்சி ஓட்டுனர் தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து போக்குவரத்து காவலர்களுக்கு, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தல்.

ரயில் முன் நின்று செல்பி எடுப்பதை தவிருங்கள் செல்பி விபத்துகள் மனதை வலிக்கச் செய்கிறது -பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர்.

கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமல்ஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா ? – சீமான் கண்டனம்.

31 மாவட்டங்களில், ரூ.15.5 கோடி மதிப்பில் மூப்பியல் சிகிச்சை மையங்கள் விரைவில் தொடங்கப்படும்.தீராத நோயாளிகளுக்கு 20 மாவட்டங்களில் தலா ரூ.40 லட்சம் மதிப்பில் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

மதுரை - கோவை இடையே ஜன.27-ம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கம்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.45க்கு புறப்படும், பிற்பகல் 2.25 மணிக்கு கோவை சென்றடையும்.

ஜன.27-ம் தேதி கோவையிலிருந்து மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே.

கர்னி சேவா அமைப்பினர் பள்ளிகுழந்தைகள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது - இசைஅமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்.

செம்மரக் கடத்தல் வழக்கில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு திமுக ஒன்றிய செயலாளர் பாபு திருப்பதியில் கைது - கடப்பா எஸ்பி.

வேலூர் கோட்டை அகழியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.

தமிழகத்தை சேர்ந்த தீயணைப்புப்படை வீரர்கள் தர்மராஜ் சந்திரன், முனிராஜ், வேலு எம்.சண்முகம் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் விருது.

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் : தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 194 ரன்களுக்கு ஆட்டமிழப்பு : இந்திய அணியை விட 7 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு


இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது.

எம்.ஆர்.ராஜகோபால், நாகசாமி, ஞானம்மாள், தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் வாசுதேவன் ஆகியோர் பத்ம விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 24 ஜனவரி, 2018

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.


பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

பரபரப்பு செய்திகள் 24/01/18 !

பரபரப்பு செய்திகள் 24/01/18 !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு எதிர்ப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனு தாக்கல்.

குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.

பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழ்த்தாயை அவமானப்படுத்தும் செயல் - திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின்.

கால்நடை தீவன ஊழல் தொடர்பான 3-வது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை.பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டு சிறை - ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் : சங்கரமடம் விளக்கம்.

தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாள் பிப்.1ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் - தமிழக முதலமைச்சர்.

அதிமுக அம்மா பெயர், குக்கர் சின்னம் ஒதுக்க கோரிய தினகரனின் இடைக்கால மனு : ஒரு வாரத்தில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சி தேர்தலுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் சம்மந்தம் இல்லை : தேர்தல் ஆணையம் விளக்கம்.

உள்ளாட்சி தேர்தலில் வேறு பெயர், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் வழக்கில் எந்த பாதிப்பும் வரக்கூடாது - டிடிவி.தினகரன் கோரிக்கை

தாய் மொழியை தாண்டி மாற்று மொழிகளை கற்பதன் மூலம் கூடுதல் அறிவாற்றலை பெற முடியும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை , அரசியலுக்கு யார் வந்தாலும், எம்ஜிஆரை போல் நிலைத்து நிற்க முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் முடிவு ஏற்புடையதல்ல.மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் வகையிலான தமிழக அரசின் முடிவு ஏற்புடையதல்ல : பாமக நிறுவனர் ராமதாஸ்.

பெட்ரோல், டீசலுக்கு நாள்தோறும் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின்.

நீரா பானம் விற்பனையை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.

கோவை, திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி மற்றும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் வேலுமணி.

இந்தியாவில் 65% காவிமயமாகி விட்டது, தமிழகம் விரைவில் காவிமயமாகும் - தமிழிசை.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மவுன விரதம் இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக வர இயலாது என வருமான வரித்துறை நோட்டீசுக்கு சசிகலா பதில்.

2,3 நாட்கள் அமைதியாக இருந்திருந்தால் , பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் ஆகி இருப்பார் - முன்னாள் எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன்.

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த நிலைப்பாட்டில் விஜயேந்திரர் இருந்தார் என்று தெரியவில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜூ.

புதுச்சேரி பிரெஞ்சு அரசு பள்ளி ஆண்டு விடுமுறை காலம் மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு : தற்போது நடைமுறையில் உள்ள மே மாத விடுமுறை பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்ப ஜூலையாக மாற்றப்பட்டதை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சேதுநாராயணபுரத்தில் ஜல்லிக்கட்டு : 350 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் யாரும் கூடுதல் செலவு செய்யவில்லை - இந்திய தேர்தல் ஆணையம்.

சென்னையில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி.

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் முப்படையின் இறுதிக்கட்ட ஒத்திகை : ஒத்திகை நிகழ்ச்சியில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் , டிஜிபி டிகே.ராஜேந்திரன் பங்கேற்றனர்.

நடிப்பால் கஜானாவை நிரப்பிவிட்டு, கஜானா எனது குறிக்கோள் அல்ல என கமல் கூறுவதை தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

அதிமுக ஆட்சியுடன் தான் பாஜக இணக்கமாக உள்ளது, கட்சியுடன் இல்லை - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான, தென்மண்டல திசு வங்கி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திறப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

கரூர்: வெங்கமேடு பகுதியில் உள்ள பண்டரிநாதன் கோவிலில் பழமையான ஐம்பொன் சிலை திருட்டு.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் இருந்தது சரியல்ல - பத்திரிகையாளர் பத்ரி சேஷாத்ரி.

பிப்ரவரி 21ந் தேதி ராமேஸ்வரத்தில் நடிகர் கமல் நற்பணி மன்றம் சார்பில் பொதுக்கூட்டம்.

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் நிற்க முக.ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார் - மா.சுப்பிரமணியன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஸ்டிரைக்.

திருவள்ளூர் : பீமந்தோப்பு அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி நந்தினியை கொலை செய்துவிட்டு கணவன் நாகராஜ் தப்பியோட்டம்.

பெரம்பலூரில் உள்ள அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு.

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை அவரது மனைவி பானுரேகாவிடம் வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் உத்தரவு.

வரலாற்றில் இடம்பிடித்த கோலி : டெஸ்ட் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்தியா டெஸ்ட் போட்டியில் களமிறங்குவது இது 3வது முறை.

சென்னையில் சீட்பெல்ட் அணியவில்லை என போலீஸ் தாக்கியதால் இளைஞர் தீக்குளிப்பு.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் - தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கண்டனம்.

பாரிஸில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரியின் பாபோஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

செய்திச் சுருக்கம் (23/01/2018)

செய்திச் சுருக்கம் (23/01/2018)

1 உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது.

2 பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது.

3 ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

4 இலங்கை கடற்படையினர் கைது செய்வதால்தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது 50 சதவீதம் குறைந்துள்ளது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 நடிகர்கள் ரஜினி-கமல் ஒருபோதும் கட்சி தொடங்கமாட்டார்கள் என்று டிடிவி தினகரன் அணி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

6 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்தநாள் விழா சென்னை மெரினாவில் நடைபெற்றது.

7 இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார்.

8 உலகெங்கும் உள்ள பெண்களின் கல்விக்கு உதவுவதற்காக மலாலாவுடன் இணைந்து நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

9 ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க சென்ற பெண் ஒருவர் தனது அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

10 பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங்கினார்.

11 தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

12 காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

13 இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்யும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, சென்னை நகரில் மேலும் 8 இடங்களில் இந்த சிலிண்டர் விற்பனையை தொடங் கியுள்ளது.

14 ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே இணை அமைச்சர் ராஜேன் கொஹென் தெரிவித்துள்ளார்.

15 பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கி வந்த இலவச அழைப்பு சலுகையை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

16 தமிழகத்தில் வறட்சியால் வெளிமாநில நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது.

17 சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

18 முதல்வரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

19 தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

20 சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில், நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

21 சென்னைக்கு நேற்று வந்த ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் தெற்கு ரயில்வே திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார்.

22 மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான இலக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 வாஷிங்டனில் நடந்த பொங்கல் விழாவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடலை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டார்.

24 நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில், 2019ல் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அதுபோன்று தேர்தல் நடத்த 2024ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

25 எதிரிநாடுகளிடம் இருந்து வரும் ரகசிய போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய, ரூ.39,000 கோடி மதிப்பிலான 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

26 11-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27ந்தேதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது.

27 எய்ம்ஸ், ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு. மற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கிறது.

28 சிவகாசியில் கடந்த 27 நாட்களாக முழு அடைப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நேற்று முதல் மீண்டும் உற்பத்தியை தொடங்கின.

29 வடகர்நாடக பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசால் செயல்படுத்த திட்டமிட்டுள்ள மகதாயி நதிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 25ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், பிப்ரவரி 4ம் தேதி பெங்களூரு நகர மாவட்ட முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

30 தென்ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டி தொடரில் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார்.

31 இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

32 நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது.

33 முதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

34 உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது

35 நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து மாநில பாடத்திட்டங்களும் இணைந்த சிலபஸ் பின்பற்றப்படும் என சி.பி.எஸ்.இ தெளிவுபடுத்தியுள்ளது.

36 உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

37 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

38 சென்னை: ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா தாக்கல் செய்ய மனு மீதான விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

39 போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, பொருளாதார உதவி செய்வதற்காக துவங்கப்பட்ட கணக்கில், ஒரு மணி நேரத்தில், 13 கோடி ரூபாய் நன்கொடையாக சேர்ந்தது

40 பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்றுள்ளது.

41 மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது.

42 இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் செல்விக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ‘முதல் பெண்மணி’ விருது வழங்கினர்.

44 புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று(ஜன.,23) பதிவியேற்கிறார்.

45 சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் இரு தரப்புகள் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதிய தலைமை தேர்தல் ஆணை யர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித் துள்ளார்.

47 தேசிய கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திங்கள், 22 ஜனவரி, 2018

இரவுச்செய்திகள்-22-01-18

இரவுச்செய்திகள்-22-01-18


புத்தகக் காட்சி நிறைவு: 12 லட்சம் புத்தகங்கள் விற்று சாதனை

சென்னை: சென்னையில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவடைந்தது. ஜனவரி 10ம் தேதி தொடங்கி 22 வரை நடந்த புத்தகக் காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வந்தனர். சென்னை புத்தகக் காட்சியில் 12 லட்சம் புத்தகங்கள் ரூ.15 கோடிக்கு விற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், வைரமுத்து நூல்கள் அதிக வாசகர்கள் வாங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டின் போது ஆள்மாறாட்டம் செய்த கல்லூரி மாணவர் கைது

மணப்பாறை: மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது ஆள்மாறாட்டம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். ஆ.கலிங்கப்பட்டு ஜல்லிக்கட்டு மருத்துவ சோதனையில் மாணவர் வெங்கடபிரசாத் பங்கேற்றுள்ளார். சோதனையில் வெங்கடபிரசாத் பங்கேற்றுவிட்டு ரஞ்சித் என்பவரை ஜல்லிக்கட்டுக்கு அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு பங்கேற்றபோது காளை முடியதில் ரஞ்சித் உயிரிழந்தார். இதனையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த கல்லூரி வெங்கடபிரசாத் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

ஆரணி: ஆரணியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு மோதல் தொடர்பாக இளைஞர் கார்த்திக் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2 நாட்களாக தலைமறைவாக இருந்த கார்த்திக் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து காவல்துறையை கண்டித்து ஆரணி அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் நடைபெற இருந்த மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற இருந்த மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய விழாவுக்கு செல்ல நாட்டுப்படகு மீனவரை அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சத்தீவுக்கு நாட்டுப்படகை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எடப்பாடி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

சேலம் : எடப்பாடி அருகே ஒருவாப்பட்டி காட்டுக்காடு பகுதியில் தாய் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக சந்துரு(7), ஸ்ரீஜா(5) மீது தீ வைத்துவிட்டு, பழனியம்மாள்(35) தற்கொலை செய்துகொண்டார்.

தமிழக உள்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

கோவை: தமிழக உள்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கோவையைச் சேர்ந்த ஜோசப் டேனியல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கோவையில் எம்.ஜி.ஆர் விழா நடந்த போது அலங்கார வளைவில் மோதி இளைஞர் உயிரிழந்தார். போக்குவரத்துக்கு இடையூறாக அலங்கார வளைவு வைக்க உச்சநீதிமன்றம் முன்பே தடை விதிக்கப்பட்டது.

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. மாணவி எலிசமேரியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய ராபின் என்பவருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அர்ச்சனா பட்நாயக், சிஜி தாமஸ் வைத்யன், சத்தியமூர்த்தி, மைதிலிராஜேந்திரனுக்கு பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் மீது புகார்

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் சில பத்திகளை விட்டுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கூட்டணி அரசின் கொள்கைகளை கூறும் பாராக்களை ஆளுநர் விட்டுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மாநில அரசு தயாரித்துள்ள உரையில் மத்திய அரசை விமர்சிக்கும் பாராக்களையும் ஆளுநர் விட்டுவிட்டார். மத்திய அரசை விமர்சிக்கும் பத்திகளை மட்டும் ஆளுநர் சதாசிவம் படிக்காமல் விட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கனடா பிரதமர் இந்தியா வருகிறார்

டெல்லி: கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் பிப்ரவரி 17ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். பிப்ரவரி 23ம் தேதி வரை கனடா பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .

ஏப்ரல் 6ல் மும்பையில் ஐ.பி.எஸ் தொடக்கம்



மும்பை: 11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது.இறுதிப்போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் மே 27ல் நடக்கிறது.

திருவாரூரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை

திருவாரூர்: திருவாரூரில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.3 லட்சம் பணமும், 5 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஜூரிச்: உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து சென்றடைந்தார். விமானத்தில் ஜூரிச் வந்திறங்கிய பிரதமர் மோடியை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். ஜூரிச்சில் இருந்து பொருளாதார மாநாடு நடைபெறும் டாவோஸுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.

மார்ச் 28ல் தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல்

சென்னை: தமிழ்நாடு பார்கவுன்சில் தேர்தல் மார்ச் 28ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர்அலி தலைமையில் பார்கவுன்சில் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கனரா வங்கி ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை; சென்னை மயிலாப்பூர் கனரா வங்கி ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ATM இயந்திரத்தை உடைக்க முயன்ற நபரை பிடித்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4ம் சுற்றில் ஜோகோவிச் தோல்வி அடைந்துள்ளார். ஜோகோவிச்சை 7-6, 7-5, 7-6, என்ற நேர் செட்களில் கொரியவீரர் ஹியோன்சுங் வீழ்த்தியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் கொரியவீரர் ஹியோன்சுங் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின்வாரிய ஊழியர் அடையாள வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு



சென்னை; நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மின்வாரிய ஊழியர் அடையாள வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களின் கோரிக்கை குறித்து முடிவெடுக்க தமிழக அரசு தரப்பு பிப்ரவரி 12 வரை அவகாசம் கோரியது. இதனையடுத்து மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

*திருத்தணி அருகே 10 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதம்*

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி அருகே 10 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. ரகுபதி, லட்சுமணன், பாஸ்கர் என்பவர்களுக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

*கொள்ளிடம் ஆற்றில் குளித்த இருவர் புதை மணலில் சிக்கி உயிரிழப்பு*

திருச்சி - மணச்சநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த இளைஞர்கள் கோபி, கணேசன் ஆகியோர் புதை மணலில் சிக்கி உயிரிழந்தனர்.

*கோவை அருகே காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்*

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சனி, 20 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 19/01/18 !

பரபரப்பு செய்திகள் 19/01/18 !

ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை மெல்ல கொல்லும் விஷமாக 8 மாதமாக செலுத்தப்பட்டது - அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்.

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய சிபிஐ-க்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி : சிபிஐ-ன் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்தது மத்திய சட்ட அமைச்சகம்.

ராஜீவ் கொலை வழக்கு : வரும் செவ்வாய்கிழமை இறுதி விசாரணை.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

‘பத்மாவத்’ வெளியாகும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துங்கள் - பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ஃபேஷ்புக் பதிவு.

பணமதிப்பிழப்புநீக்கம் மற்றும் ஜிஎஸ்டியை வைத்து மட்டும் என்னை மதிப்பீடு செய்யாதீர்கள் - பிரதமர் மோடி.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற முடியாது - போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.மக்களுக்கான ஆட்சி அல்ல, கமிஷனுக்கானது என்பதை நிரூபிக்கிறது பேருந்து கட்டண உயர்வு : மு.க.ஸ்டாலின்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை - அமைச்சர் விஜயபாஸ்கர்.

எல்லா மதங்களும் மதிக்கப்பட வேண்டும், இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவது வேதனையளிக்கிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம், வேலூரில் நடைபெற்றது : அகில இந்திய ரஜினி மக்கள் மன்ற தலைமை பொறுப்பாளர் சுதாகர் தலைமையில், அரசியல் இயக்கமாக தயாராவது குறித்து ஆலோசனை.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் 22ல் ஆர்ப்பாட்டம், தர்ணா, மறியல் - மார்க்சிஸ்ட்.

ஆண்டாள் சர்ச்சை குறித்து வைரமுத்து விளக்கம் : வாயை மூடுங்கள் வைரமுத்து - எஸ்வி. சேகர் விமர்சனம்.

விபத்துகள், உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் நிதியுதவி.

தமிழகத்தில் திராவிட இயக்கத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது - மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை.

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.1000 வரை உள்ள பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் - தமிழக அரசு.

2ஜி விவகாரத்தில் பிரதமர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்.பிரதமருக்கு சரியான விஷயங்கள் தரப்பட்டிருக்க வேண்டும்; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சரியான விஷயங்கள் தெரியப்படுத்தப்படவில்லை - ஆ.ராசா.

2ஜி வழக்கில் காங்கிரஸ் காட்டிய மெளனமே அரசை வீழ்த்திவிட்டது.திமுகவும், கருணாநிதியும் ஸ்டாலினும் இல்லையெனில் நான் காணாமல் போயிருப்பேன்.2ஜி வழக்கு குறித்து நான் எழுதிய புத்தகத்தில் 99% சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் - ஆ.ராசா.

அரசு பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது - டிடிவி. தினகரன்.

டிடிவி தினகரனின் முதலமைச்சர் கனவு கானல் நீராகும் நாட்டில் இதுவரை சுயேச்சை எம்எல்ஏக்கள் யாரும் முதலமைச்சரானதில்லை - வைத்திலிங்கம் அதிமுக எம்பி.

ஆண்டாள் குறித்து ஆசை ஆசையாக அரங்கேற்றியது தவறா ? ஆய்வுகளை திரட்டி கட்டுரை இயற்றியது தவறா? ஆண்டாள் எனக்கும் தாய் தான் அவள் எனக்கும் தமிழச்சி - கவிஞர் வைரமுத்து உருக்கம்.

தமிழ் வெளியில் எழுத முதல் பெண் விடுதலைக் குரல் ஆண்டாளுடையது புதிய தலைமுறையினரும், இளைய தலைமுறையினரும் பயன் பெறவே கட்டுரை எழுதினேன் - ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக வைரமுத்து விளக்கம்.

ஆண்டாள் புகழ்பாட நான் ஆசைப்பட்டது தவறா? ; 'தாசி' என்ற கருத்து திரிக்கப்பட்டு 'வேசி' என பரப்பப்பட்டது.ஆண்டாள் புகழ் பாட நினைத்தது தவறா ? - கவிஞர் வைரமுத்து.

டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் தோளோடு தோள் நின்று ஆதரவு அளிப்போம்.
தனிக்கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனின் தலைமையை ஏற்போம் - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சின்ன மருது, பெரிய மருது போல் செயல்பட்டு வருகிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு.

நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம். சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு.

தமிழக முதலமைச்சர் பேருந்து கட்டணத்தை மனமுவந்து ஏற்றவில்லை , பணவீக்கம் உயர்ந்துள்ளதால் ரூ.1 பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்கமாட்டார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ.

புதிதாக கட்சி தொடங்கவுள்ள நடிகர்கள் ரஜினி, கமல் நாட்டிற்கு என்ன நன்மை செய்தார்கள், மக்கள் ஏமாளிகள் அல்ல - அமைச்சர் செல்லூர் ராஜூ.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு வினையாற்றி நம் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் : உயரம் பற்றி விமர்சனம் செய்த தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்.

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் தளத்தில் ரூ. 187 கோடி மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது கடலோர ரோந்துக்கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் தனது சுற்றுப்பயணத்துக்கு இறுதிவடிவம் கொடுப்பது குறித்து திங்கட்கிழமை நடிகர் கமல் ஆலோசனை.

அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டுவபாளையம் கிராம சேவை மைய கட்டிடத்தை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்தார்.

மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழப்பு.

ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை முன்பு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

அமெரிக்காவில் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாததால் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா அரசு முடக்கம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கூத்தப்பன்பட்டியில் உள்ள மலையாள மந்தைக் கருப்பண சுவாமி கோவில்மாடு உடல் நலக்குறைவால் உயிரிழப்பு.

வெள்ளி, 19 ஜனவரி, 2018

#BreakingNews பேருந்து கட்டணம் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

#BreakingNews பேருந்து கட்டணம் உயர்வு -  தமிழக அரசு அறிவிப்பு

* புதிய பேருந்து கட்டணம் 20.1.18 முதல் அமல் - தமிழக அரசு

* சாதாரண பேருந்து 10.கி.மீட்டருக்கு ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்வு

* விரைவு பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆக உயர்வு

* அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்வு

* குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆக உயர்வு.

பரபரப்பு செய்திகள் 19/01/18 !

பரபரப்பு  செய்திகள் 19/01/18 !

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

ஆர்கே.நகர் தேர்தலில் வாக்காளருக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் – டிடிவி.தினகரன் அணி மாவட்டச் செயலாளர் முசிறி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் பேச்சு.

H1B விசா வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை குழப்பம் தேவையில்லை - சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கஸ்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேலிடம்
கொடுத்து வெளியிடச் சொன்னது டிடிவி.தினகரன் தான் - முன்னாள் எம்எல்ஏ ராஜாசேகர்.

ஒகி புயல் குறித்து தமிழகத்தில் நடந்த ஆய்வு குறித்து மத்திய குழு அறிக்கை சமர்பிப்பு.

திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வெளிவரும் தீர்ப்பிற்கு பின் ஆட்சி கலையும் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்தில் தவறு இருப்பாதாக தெரியவில்லை, ஆராய்ச்சி கட்டுரையை மேற்கோள் காட்டியே உரையாற்றி இருக்கிறார் - சென்னை உயர்நீதிமன்றம்.

நான் தனிக்கட்சி ஆரம்பித்தால் தகுதி நீக்கம் ஆன 18எம்எல்ஏக்கள் சேர முடியாது.அதிமுக அம்மா அணி என்ற பெயரில் கட்சி செயல்பட நீதிமன்றத்தை நாடுவோம் : டிடிவி தினகரன்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார் : தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி வரும் 22 ஆம் தேதி பதவியில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து.

2ஜி வழக்கில் வினோத் ராயை விசாரிக்க வேண்டும் : ஆ.ராசா.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

பிப்ரவரியில் பூமிக்கு அருகில் மிகப்பெரிய விண்கல் வர வாய்ப்பு : நாசா தகவல்.

தமிழகத்தில் எம்-சாண்ட் அதிக விலைக்கு விற்கப்படுகிறது, இதன் மூலம் தேவையை பூர்த்திசெய்ய முடியாது - நெப்போலியன், கட்டுமான பொறியாளர் சங்கம்.

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் இனியாவது உறுதி செய்யவேண்டும். - டிடிவி. தினகரன்.

சென்னை மெரினா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போராட்ட நினைவு சின்னம் அமைக்க வேண்டும் - ஜல்லிக்கட்டு அனைத்து போராட்ட குழுக்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நாளான ஜனவரி 23 ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் : ஜல்லிக்கட்டு அனைத்து போராட்ட குழுக்கள்.

ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்துசெய்யக் கோரி கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 25வது நாளாக காலம்வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுத் தூண் அமைக்க ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் கோரிக்கை.

டெல்லி மருத்துவக்கல்லூரியில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் உடல் திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஆறு பேர் மீது பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது : தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 31ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமை சென்னை எனக்கு 2ஆவது வீடு - தோனி.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக கருதவில்லை - உயர்நீதிமன்றம்.

திருவள்ளூரில் திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்த விவகாரத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வ பிரியா, துப்புரவு பணியாளர்கள் அப்பாவு, மருந்தாளுநர் ருக்மாங்கதன் ஆகிய 3 பேர் பணியிட மாற்றம்.

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் சுரேஷின் உடலுக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே. பி அன்பழகன் மரியாதை செய்தார்.

இயக்குநர் பாரதிராஜா மீது, இந்து மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் வடபழனி காவல்நிலையத்தில் புகார் : சென்னையில் நேற்று நடந்த படவிழாவில், வைரமுத்துக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்துவோம் என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார்.

உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டும் சம்பளம் வழங்கக்கூடாது என முதல்வர் உத்தரவிடுவது சட்டமீறல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் கண்டனம்.

விருத்த்துநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் லாரி மோதி தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.

டெல்லியில் உயிரிழந்த மாணவர் சரத்பிரபுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து டிடிவி.தினகரன் ஆறுதல்.

வைகை அணையில் இருந்து பாசன வசதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகை.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது, நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் - நடிகர் விஷால்.

யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் : ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

வியாழன், 18 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 18/01/18 !

பரபரப்பு செய்திகள் 18/01/18 !

ஜல்லிக்கட்டு தொடர்பாக இதுவரை ஒரு புகார் கூட இல்லை : விலங்குகள் நலவாரியம் தகவல்.

டிஎன்ஏ பரிசோதனைக்கு ஜெயலலிதா உயிரியல் மாதிரிகள் தேவை : அப்பல்லோவுக்கு பெங்களூரு அம்ருதா நோட்டீஸ்.

அரசாணை இல்லாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் - உயர்நீதிமன்ற கிளை கருத்து.

29 கைவினைப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தத் தேவையில்லை - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு.

தென்னக நதிகளை இணைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தினோம் : துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.

மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கினால் நடவடிக்கை - தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்.

ஆந்திராவில் தமிழ் பள்ளிகள் இருக்கும்போது தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் தொடங்குவதில் என்ன தவறு ? தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் தொடங்க முதல்வருடன் கலந்து ஆலோசிப்போம் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு பிரச்னை இல்லை வருவாய் தான் கிடைத்திருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கட்சி அல்ல அதிகமான கடவுள் மறுப்பாளர்களை கொண்ட கட்சி - திமுக எம்பி கனிமொழி.

காஷ்மீரில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி.

வரும் பிப்.21 ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல் : கலாமிற்கு பல கனவுகள் இருந்தன அவரை போல பல கொண்டவன் நான் விமர்சிப்பது மட்டுமே என் வேலையன்று நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் - நடிகர் கமல்ஹாசன்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.14 முதல் ஜன.31க்குள் நடத்தி முடிக்க வேண்டும் - ஜன.12ல் வெளியிடப்பட்ட அரசாணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார் தமிழக அரசு வழக்கறிஞர்.

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.வைரமுத்துவை தமிழக அரசு குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - இந்துசமய தலைவர்கள், ஆலய பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பேட்டி.

சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரான வெற்றிவேலின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நான் பிரபாகரனின் மூத்த மகன். தமிழர்களின் எழுச்சிக்காக போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆண்டாள்.அப்போது இந்து மதம் ஏது?அவள் எங்கள் குல மூதாதை.அவர் மீது வைரமுத்துவுக்கு இல்லாத அக்கறை உனக்கு என்ன ? - ஆண்டாள் சர்ச்சை குறித்து சீமான் பேச்சு

வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைபுறமாக வர நினைத்தால் வர முடியாது.மீண்டும் எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள் - இயக்குநர் பாரதிராஜா.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்திப்பு.

49 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தது அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில்.

ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பு.

கஜகஸ்தானில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலியாகினர்.

நடிகர் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை.வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும்.கருத்து கூறியவர்களின் தலையை வெட்டுவதாகக் கூறுவது இழிவான அரசியல் - சீமான்.

சென்னை தியாகராய நகரில் தனியார் பயிற்சி மையத்தில் மத்திய குற்றப்பிரிவினர் சோதனை : 2015ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வு விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சோதனை.

வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தரவும் தொண்டர்கள் தயாராக உள்ளனர் - பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.

சென்னை பெரம்பூர் தனியார் பள்ளிக்கு காலதாமதமாக வந்த மாணவனை, ஆசிரியர் முட்டி போட வைத்து தண்டனை வழங்கியதில் மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சந்தனமரம் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தனது இரண்டு மகள்கள் வித்யாராணி மற்றும் பிரபாவுடன் இணைந்து, 'மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பு' என்ற புதிய இயக்கத்தை சேலத்தில் தொடங்கினார்.

வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது : வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

பத்மாவத் படத்துக்கு எந்த மாநிலமும் தடைவிதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

மகாராஷ்திராவில் பள்ளி விழாவில் உணவருந்திய 30 சிறுவர்களுக்கு உடல் நலக்குறைவு.

நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.மதவாத அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது வைரமுத்து தமிழர்களின் சொத்து - வைகோ.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் : குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி.

14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயங்கள்-ரிசர்வ் வங்கி



14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயங்கள்-ரிசர்வ் வங்கி

10 ரூபாய் நாணயங்கள் இதுவரை 14 வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து வடிவமைப்புகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத் தன்மையில் சந்தேகம் காரணமாக வணிகர்களும் பொதுமக்களும் வாங்க மறுப்பதாக தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் பல்வேறு காலகட்டங்களில் சமூக, பொருளாதார, கலாச்சார மதிப்பீடுகளின் அடிப்படையில் மாறுபட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டவை என்றும் நாணயங்களின் மாறுபட்ட அம்சங்கள் செய்திக்குறிப்புகள் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் மறுக்க வேண்டாம் எனவும், அனைத்து வங்கிகளுக்கும் 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 17 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 17/01/18 !

பரபரப்பு செய்திகள் 17/01/18 !

விரைவில் தமிழ் மொழிக்கு என்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு புதிய தமிழ் சொற்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

அரசு வேலைகளில் ஆதரவற்றவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அரசு ஒப்புதல்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சி போன்ற வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவு.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட சசிகலா, பூங்குன்றன் அறைகளில் வருமான வரித்துறையினர் மீண்டும் ஆய்வு.

ஓபிஎஸ் அணியினரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு : அரசு தரப்பு அவகாசம் கோரியதால் பிப்.13-க்கு ஒத்திவைப்பு.

பிரதமர் நேரம் ஒதுக்கி தந்த பிறகு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கும்.டிடிவி.தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - முதலமைச்சர் பழனிசாமி.

புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை அதிமுக அம்மா பெயரில் செயல்பட முடியாதபோது வேறு வழியில்லாமல் புதிய கட்சி தொடங்கப்படும்; புதிய கட்சி தொடங்கினால் அது அதிமுக, இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும் - டிடிவி தினகரன்.

சென்னை : போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு.

ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை, துப்பாக்கி சத்தம் கேட்டதும் நண்பனுடன் தப்பி ஓடிவிட்டேன் - நாதுராம் வாக்குமூலம்.

முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் 101வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணியில் மஹா புஷ்கரம் : ராமநதியில் தூய்மை பணி துவக்கம்.

அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம்.அதிமுக அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதிகோரி நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.வருகின்ற சட்டமன்ற,உள்ளாட்சி,நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்திலேயே போட்டி -டிடிவி.தினகரன்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 விதமான
ரூ.10 நாணயங்களும் செல்லும் என அறிவிப்பு.

தற்போதைய முதல்வர் ஈபிஎஸ் முதல்வர் பதவி ஏற்றவுடன் என்னிடம் வந்து நான் இன்னொரு ஓபிஎஸ் ஆக இருக்க மாட்டேன் என்றார். இப்போது தான் தெரிகிறது ஓபிஎஸ் விட மிகப்பெரிய துரோகி ஈபிஎஸ் - திவாகரன்.

ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு திமுக கண்டனம் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வெளிவருகிறது நமது அம்மா நாளிதழ்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் பிரபு தற்கொலை : இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்து வந்தார்.

நிலத்தடி நீர் மாசுபடுவதால் திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.

ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்திற்குரியது - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்.

பிப்.21 ல் தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார் : அன்றைய தினமே ராமநாதபுரத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.கே.நகர் தோல்வி குறித்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசனை.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் ஆலோசனை.

புதுக்கோட்டை வடமலாபூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது; 200க்கும் மேற்பட்ட காளைகள் 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரரகள் பங்கேற்றனர்.

திருச்சி : மணப்பாறை அருகே பூலாம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சம்பளம் தரக்கூடாது - கணக்கு & கருவூல இயக்குநருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவு.

டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டத்தால் 21 ரயில்கள் தாமதம், 13 ரயில்கள் ரத்து.

மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும் - தமாகா தலைவர் வாசன்.

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தனது மனைவியுடன் குஜராத் - சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்றார்.

நான் நினைத்திருந்தால் அமைச்சர்கள் தற்போது பதவியில் இருந்திருக்க மாட்டார்கள். ஆளுங்கட்சிக்கு மத்தியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி - டிடிவி.திவாகரன்.

பத்மாவத் படத்துக்கு பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு : குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்க தயாரிப்பாளர் கோரிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் : கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து ஓராண்டு ஆனதை முன்னிட்டு சென்னை மெரினாவில் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு விமான சேவை... இராமேஸ்வரம் ஆன்மீக தலம் என்பதால் இங்கு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது - தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து வருத்தம் தெரிவிக்க தேவையில்லை - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தளவாய்புரத்தில் பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்ததில், வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.

கடலூரில் ஈபிஎஸ் அணியின் நகர செயலாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை ஓபிஎஸ் அணியினர் புறக்கணித்தனர்.

அதிமுக சார்பில் வழங்கப்பட்ட இன்னோவா காரை திருப்பி கொடுத்தார் நாஞ்சில் சம்பத்.

ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது - ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜபார்.

காவிரி விவகாரம் : தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 27ம் தேதி ரயில் மறியல் போராட்டம் - அனைத்து விவசாய சங்கம் அறிவிப்பு.

ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் நடிகை அமலா பாலுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின்.

ஓசூர் அடுத்த பொம்மதாத்தனூரில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி.

ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி நவம்பர் 30ல் இருந்து டிசம்பர் 31வரை நடந்தது : இந்திய கடலோர காவல்படை இயக்குநர்.

இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.உள் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

எழுத்தாளர் ஞானி சங்கரன் மரணம் : திடீர் மூச்சுத் திணறலால் காலமானார்.


எழுத்தாளர் ஞானி சங்கரன் மரணம் : திடீர் மூச்சுத் திணறலால் காலமானார்.

ஞானி சங்கரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர்! 63 வயதான அவர், உடல் நலக்குறைவால்  (ஜனவரி 15) அதிகாலை காலமானார்.
ஞானி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கிலப் பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞானிக்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
ஞானி சங்கரன், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கூர்மையாக அரசியல் விமர்சனங்களை வைக்கக்கூடியவர். ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் களத்திலும் நின்றார். ஞானியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சனி, 13 ஜனவரி, 2018

கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது!


கணக்கில் வராத வருவாயே 4,500 கோடியா?... சசிகலா குடும்ப மெகா ரெய்டில் சிக்கியது!

சென்னை : சசிகலாவின் உறவினர்கள் வீடு, நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.4,500 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வருமான வரி புலனாய்வுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் சசிகலா குடும்பத்தையே புரட்டிப் போட்டது ஆபரேஷன் கிளின் மணிக்காக நடத்தப்பட்ட மெகா ரெய்டு. சுமார் 5 நாட்களை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சசிகலா உறவினர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினர். ஆவணங்கள் ஒவ்வொன்றாக தோண்டித் துருவியதோடு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் சம்மனும் அனுப்பப்பட்டது.
இந்த ரெய்டில் வருமான வரிஅதிகாரிகளின் கவனம் முழுக்க இருந்தது இளவரசியின் வாரிசுகள் மீதே.
விவேக், கிருஷ்ணப்ரியா இருவரும் தான் போலி நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்வதாக மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அளித்த தகவலின் அடிப்படையில் இவர்களிடம் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. இந்நிலையில் இந்த வருமான வரி சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்பொது வெளிவரத் தொடங்கியுள்ளன.
சோதனை எதற்காக?
எங்கெல்லாம் சோதனை நடந்தது?
இது குறித்து வருமான வரி புலனாய்புப் பிரிவின் இயக்குநர் கூறியதவாது : தமிழகம் முழுவதும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் கடந்த நவம்பர் மாதம் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வேதாநிலையத்தில் பூங்குன்றன் அறை, சசிகலாவின் அறையிலும் சோதனை நடந்தது.
போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு
80 போலி நிறுவனங்கள்
இந்த சோதனையின் போது 2 பென்டிரைவ்கள் மற்றும் ஒரு லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் அதிகாரிகளால் கைபற்றப்பட்டது. அவற்றை வருமான வரி அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர். வருமான வரி சோதனையின் போது சசிகலா குடும்பத்தினர் நடத்திய 30 போலி நிறுவனங்கள் சேர்த்து சோதனையில் 80 போலி நிறுவனங்கள் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பின் போது
நிலம் வாங்கி போட்ட மார்க் நிறுவனம்
போலி நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 1800 ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்பின் போது, மார்க் நில விற்பனை நிறுவனம் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து 150 கோடி பெற்றதாகவும், அந்த பணத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் 1200 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டாத சொத்துகள்
200 வங்கி கணக்குகள் முடக்கம்
சசிகலா, இளவரசி மற்றும் அவரது உறவினர்களுக்கான வி.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் கலியபெருமாள், டாக்டர் சிவக்குமார் ஆகியோரது பெயர்களில் அதிக கணக்கில் காட்டாத சொத்துகள் பறிமுதல் வெய்யப்பட்டுள்ளது. சோதனையின் தொடர்புடைய 200 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் வருமான வரி இயக்குநர் கூறியுள்ளார்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஜனவரி 14..! பொங்கல் வைக்க சரியான நேரம் இது தான்...!

ஜனவரி 14..! பொங்கல் வைக்க சரியான நேரம் இது தான்...!*


ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை, சர்க்க்கரை,பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகை வரும்14 ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது.
இதற்காகவே மக்கள் இப்பவே ஆர்வமாக பொங்கலிடம் பானைகளை வாங்க காத்திருகிறார்கள்.

*பொங்கல் வைக்க சரியான நேரம்*
ஹேவிளம்பி வருடம் தை மாதம் 14-01-2018 ஞாயிறு தைப்பொங்கல் பண்டிகை
வருகிறது.

*பொங்கல் பானை வைக்கும் நல்ல நேரம்*
காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11 முதல் 12 மணிக்கு குரு ஓரையில் வைக்கலாம்.

தைமாதம் பிறப்பு 14 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.09 மணிக்கு பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: 2017 ம் வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சென்னை: 2017 ம் வருடத்திற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
01. திருவள்ளுவர் விருது: முனைவோர் கோ. பெரியண்ணன்
02. தந்தை பெரியார் விருது: பா.வளர்மதி
03. அண்ணல் அம்பேத்கர் விருது: டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
04. பேரறிஞர் அண்ணா விருது: அ.சுப்ரமணியன்
05. பெருந்தலைவர் காமராசர் விருது: தா.ரா. தினகரன்
06. மகாகவி பாரதியார் விருது: சு.பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
07. பாவேந்தர் பாரதிதாசன் விருது: ஜீவபாரதி
08. தமிழ்த்தென்றல் திரு.வி.க., விருது: வை.பாலகுமாரன்
09. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது: ப.மருதநாயகம் ஆகியோருக்கும் வழங்கப்படுவதாகவும்., அவர்களுக்கு வரும் 16 ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இவ்விழாவில் வயதான தமிழறிஞர்கள் 50 பேருக்கு மாதந்தோறும் ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 வழங்குவதற்கான அரசாணை வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று பொய் சொன்னோம் : அப்பல்லோ தலைவர் ரெட்டி அதிர்ச்சி தகவல்..

 ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று பொய் சொன்னோம் : அப்பல்லோ தலைவர் ரெட்டி அதிர்ச்சி தகவல்..


சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காகவே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது அவருக்கு வெறும் காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அப்பல்லோ ஆஸ்பத்திரி குழும தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
"ஜெயலலிதாவை ஆபத்தான நிலையில் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை.
தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமி‌ஷன் நடைபெற்று வருவதால் அதுபற்றி மேலும் பேச முடியாது. எங்கள் மருத்துவமனை மருத்துவர்களுக்கு விசாரணை கமி‌ஷனில் இருந்து சம்மன் வந்துள்ளது. எனக்கு சம்மன் வரவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ஜெயலலிதா உடல் நிலை பற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ‘அவர் இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இப்போது அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி. ரெட்டி, ‘சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்தோம்' என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது 4 மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு


உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வு உள்பட பல சர்ச்சைகளை அவர்கள் தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கவலையையும் ஆட்சேபத்தையும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு முன்னதாகவே கொண்டு சென்றும் கவனிக்கப்படவில்லை என்றும், இன்று காலையும் அவரிடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டும் அது கவனிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் புகார் கூறினார்கள்.

தலைமை நீதிபதிக்கு அவர்கள் ஏற்கெனவே எழுதிய ஏழு பக்க கடிதத்தில், தலைமை நீதிபதி அனைத்தையும் நிர்வகித்தாலும், உச்ச அதிகாரம் படைத்தவர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவை தலைமை நீதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்வுகளுக்கு ஒதுக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் குறைத்திருப்பதாக தங்கள் கடிதத்தில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களது முயற்சி தோல்வியடைந்த காரணத்தால்தான், என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களிடம் தெரிவித்து, அடுத்து அவர்கள் முடிவு செய்யட்டும் என்பதற்காகத்தான் தாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்து இதை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை குற்றவாளி என்று நிரூபணம் செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் டிசம்பர் 30 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு விடுவித்தது.

குஜராத் மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு சிறப்பு காவல் பிரிவால், கடந்த 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட என்கவுன்டர் கொலை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சோராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் கொலை போலியானது என்றும், இதற்கும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அமித் ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், கடந்த 2006 ஆம் ஆண்டின் போது குஜராத் காவல் துறையினரால் மற்றொரு போலியான என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படிருந்தது.

இந்நிலையில் இந்த கொலைகளுக்கும் அமித் ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.


வியாழன், 11 ஜனவரி, 2018

ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட் : போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்...



ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட் : போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்...

*சென்னை:-* போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பையடுத்து போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இன்றை முடிவுக்கு வந்துள்ளது. பொங்கல், வயதானவர்கள், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு பணிக்கு திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த 8 நாட்களாக போராட்டத்தால் தமிழகம் ஸ்தம்பித்தது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரித்தது.

*பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்*

தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார் என்று நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்தது. ஆனால் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என போக்குவரத்து துறை செயலாளர் நீதிமன்றத்தில் கூறினார். 0.13 காரணி ஊதிய உயர்வு வித்தியாசம் தான் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் மீதான குற்ற வழக்குகளை வாபஸ் பெற அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த பதிலை ஏற்க தொழிற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்தனர். அரசு தொழிற்சங்கங்களும் விட்டுகொடுத்து போகுமாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

*அரசு தரப்பு*

2.44 ஊதிய மடங்கை 2.57-ஆக உயர்த்துவது குறித்து மத்தியஸ்தர் முடிவு செய்யட்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 2.57 என முடிவு செய்தால் 2.44 மடங்கு உயர்வு தன்னிச்சையாக காலாவதியாகிவிடும். மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் தேதியை மத்தியஸ்தரே முடிவு செய்வார் எனவும் அரசு தரப்பில் வாதிட்டனர். அதனால் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டியதில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

*தொழிற்சங்கம் கோரிக்கை*

வேலைநிறுத்த நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கம் தரப்பு கோரிக்கை வைத்தது. குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்சனையாக உள்ளது, இது தொடர்பாக நடுவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

*உயர்நீதிமன்றம் திட்டவட்டம்*

நீதிமன்றம் மக்கள் பாதிப்பை மட்டமே முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊழியர்கள் நலனுக்காக மத்தியஸ்கரை நியமிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. பொது நலனை பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

*தொழிற்சங்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி*

ஒட்டு மொத்த மக்கள் நலனா? போக்குவரத்து ஊழியர் நலனா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இடைக்காலமாக ஏற்றுக்கொண்டு சமரச பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.

*மத்தியஸ்தர் நியமனம்*

இதற்கிடையே ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபனை மத்தியஸ்தராக உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. பொதுமக்கள் நலன்கருதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் குறித்து மத்தியஸ்தர் விசாரிப்பார் என நீதிமன்றம் கூறியுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 0.13 ஊதிய வித்தியாசம் குறித்து மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைக்கு நடத்துவார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மத்தியஸ்தர் நியமனத்தை அடுத்து 8-நாட்கள் நடந்து வந்த போராட்டம் இன்றே முடிவுக்கு வருகிறது. இதையடுத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதன், 10 ஜனவரி, 2018

இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்


இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்...

விண்வெளித்துறை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை நியமனம், இஸ்ரோ தலைவராகவும் செயல்படுவார்.
இஸ்ரோ தலைவரான முதல் தமிழர்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழரான சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ள செய்துள்ளது.

நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை அலங்கரிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

2015 ஜனவரி 12ம் தேதி முதல் இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரன்குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் புதிய தலைவராக சிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஐ.டி (MIT) எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிகல் இன்ஜினியரிங் படித்த சிவன், 1982ம் ஆண்டு இஸ்ரோவில் நுழைந்து பி.எஸ்.எல்.வி (PSLV) உள்ளிட்ட ராக்கெட் திட்டங்களில் பணியாற்றியவர். தற்போது கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பயணியாற்றி வருகிறார்.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைப் படைக்க காரணமாக இருந்தது ராக்கெட் ஸ்பெசலிஸ்டான சிவனின் சாதனையாகவே பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்த தமிழரான சிவனின் பங்களிப்பு முக்கியக் காரணமாகும்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக சிவன் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது கிரையோஜெனிக் எஞ்ஜின்.

இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக் கோள்களை (பிற நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள்) இஸ்ரோ விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள சிவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தற்போது தனது முழு மனதும் அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், யு.ஆர்.ராவ் உள்ளிட்ட மாமேதைகள் தலைமையேற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்பது மிகப்பெரிய கடப்பாடு நிறைந்தது என்றும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.


சிவன் சாதனை கால அட்டவணை

➤ சென்னை எம்.ஐ.டியில் 1980-ல் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

➤ பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை 1982ம் ஆண்டில் முடித்தார்.

➤ இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் 1982ம் ஆண்டு சேர்ந்தார்.

➤ இஸ்ரோவின் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வில் அளப்பரிய பங்களிப்பை சிவன் வழங்கினார்.

➤ பணியில் இருந்துகொண்டே மும்பை ஐ.ஐ.டி-யில், 2006-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

➤ 2011-ல் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட சிவன், 2014-ல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை மையத்தின் இயக்குநரானார்.

➤ 2015 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

➤ இஸ்ரோவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சிவன், விருதுகளையும் குவித்துள்ளார்.

➤ 2007ல் இஸ்ரோவின் விருதையும், 2011-ல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதையும், சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடக்கம்


சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடக்கம் 

சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடக்கம்
*6 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழா அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 12 ராட்சச பலூன் கொண்டு வரபட்டுள்ளது.*
*காலையில் பலூனின் பறப்பதற்கும், மாலையில் பார்வையிடுவதற்கும்  ஏற்பாடு செய்ய பட்டுள்ளது*

பரபரப்பு செய்திகள் 10/01/18 !

பரபரப்பு  செய்திகள் 10/01/18 !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 12ம் தேதி விடுமுறை - தமிழக அரசு.

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம் : மத்திய அரசு உத்தரவு.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் சிறையில் சம்பாதித்த ரூ.20,000-ஐ ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வழங்கினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு.

பொங்கல் நேரமாக இருப்பதால் மக்களின் நலன் கருதி பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நாளை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் : தொழிற்சங்கங்கள்.

இலங்கை காங்கேசன் துறைமுக மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.286 கோடி கூடுதல் நிதியுதவி புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தானது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு : வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

4 நாட்களுக்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத்தொகை முழுவதும் வழங்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்பலோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க - விசாரணை ஆணையம் திட்டம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்தனர் - விசாரணை ஆணையம்.

எம்எல்ஏக்களுக்கு 1 ஜுலை 2017 முன்தேதியிட்டு சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25.32 கோடி செலவு : தமிழக அரசு.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா
பிறந்தநாளை அரசு விடுமுறையாக்க அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கை.

சட்டப்பேரவையில் தம்மை பேசவிடாமல் தடுக்கின்றனர் சில அமைச்சர்களின் சதியால் ஒதுக்கி வைக்கப்பட்டேன்.மதுசூதனன் மிகப்பெரிய ஃபிராடு.முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் சிறந்த நடிகர்கள் - டிடிவி.தினகரன்.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க கர்நாடக அரசுடன் நேரடியாகவும், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் வாயிலாகவும் நடவடிக்கை : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் செம்மலை – ஸ்டாலின் காரசார விவாதம்.

4 மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படுவார் : அமைச்சர் அன்பழகன்.

கடன் பெற்ற நபரிடம் அதிக வட்டி வசூல் செய்யும் பைனான்சியர்கள் மீது நீதிமன்ற நடைமுறைப்படி நடவடிக்கை.அதிக வட்டி வசூலித்தல், கடன் பெற்றவருக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு - சென்னை ஆட்சியர்.

முகவரி இல்லாமல் வீதியில் வசிப்பவர்கள் எப்படி ஆதாரை பெறுவார்கள்? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்ததை வரவேற்கிறேன். வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டுவதில் உண்மைத்தன்மையை உணர்ந்து கூற வேண்டும் - ஹெச்.ராஜா.

சென்னை அருகே கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை 15 நாட்களுக்குப்பின் திருவேற்காட்டில் மீட்கப்பட்டது - மாணிக்கம் என்பவர் கைது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

எஸ்பிஐ வங்கியில் ரூ.750 கோடியை அவசரகால கடனாக பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு திங்கட்கிழமைக்குள் நவ.30 வரையிலான ஓய்வூதிய பலன்களின் நிலுவைத்தொகை தரப்படும் : அரசு தலைமை வழக்கறிஞர்.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மதகு உடைந்தது தொடர்பாக 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர் மற்றும் பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்.

நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி மொழியில் பிரார்த்தனை கீதம் பாடுவதை எதிர்த்து வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

தாம்பரம் - பல்லாவரம் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்த பேரவையில் திமுக கோரிக்கை.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேச அனுமதிக்க வேண்டும் : சபாநாயகரிடம் டிடிவி தினகரன் மனு.

லாபகரமாக இயங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து கழகங்கள் இரண்டு கழக ஆட்சிகளால் நஷ்டத்தில் இயங்கிவருகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை பேரவையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டம் அருகே நாளை ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

நடிகர் சங்கத்தில் மூத்த கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை - நடிகர் எஸ்வி.சேகர்.

தமிழக எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு மசோதாவில் மாதம் ஒன்றுக்கு தொலைபேசிக்காக ரூ.5000லிருந்து ரூ.7500ஆக உயர்வு.

தமிழக முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயரும்.

தனியாருடன் இணைந்து போக்குவரத்துறையை லாபகரமான துறையாக மாற்ற வேண்டும் : நடிகர் சரத்குமார்.

நாளை முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் இரவு 11.30 மணி வரை இயங்கும்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடக்கம்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

முடிவுக்கு வரும் ஸ்டிரைக்!! 2.44% ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயார்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள்!



2.44% ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயார்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள்! முடிவுக்கு வரும் ஸ்டிரைக்!!


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் அறிவுறுத்தியைது போல் 2.44 சதவீத ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கானது நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் கூறுகையில் , பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் பணிக்கு திரும்ப தயாராக உள்ளோம். வேலைநிறுத்தம் என்பது கடைசி கட்ட போராட்டம்தான். மெஜாரிட்டியான சங்கங்களை புறக்கணித்துவிட்டு தமிழக அரசு போலி ஒப்பந்தத்தை செய்துள்ளது.
வேலைநிறுத்தம்
அரசின் போலி ஒப்பந்தத்தை கண்டித்துதான் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அப்போது நீதிபதி, 6 மாதத்துக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது வேலைநிறுத்தம் செய்யலாமா?. பஸ்களையே உடனே இயக்க வேண்டும். ஊதிய உயர்வில் 0.13 சதவீதம்தான் வேலைநிறுத்தத்துக்கு காரணமாக உள்ளது.
ல்டிரைக் வாபஸ் பெறப்படுமா
2.44 சதவீத ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க உத்தரவிட்டால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுமா?. 2.44 சதவீதம் ஊதிய உயர்வுக்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
அதற்கு தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களின் கருத்தை கேட்டு சொல்வதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2.44 சதவீதம் இடைக்கால ஊதியமாக ஏற்க முடிவு
இதனிடையே நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்பது குறித்து வழக்கறிஞர்களுடன் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜனவரி 4-ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து 2.44% சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜனவரி 12 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு..

Flash News : ஜனவரி 12 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு..


செவ்வாய், 9 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 09/01/18 !

பரபரப்பு செய்திகள் 09/01/18  !

காவிரி நீர் பங்கீடு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

தமிழக மாநிலத்தின் வளர்ச்சியில் ஆளுநரின் பங்கு என்ன என்பது குறித்த அறிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

சென்னை : டாஸ்மாக் கடையில் எம்ஆர்பி எம்ஆர்பி விலைக்கு மேல் ரூ.1 கூடுதலாக விற்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்.

தூக்கிலிடுவதை தவிர வேறு ஏதேனும் முறையில் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை உள்ளதா ? : பொதுநல வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டத்தை கைவிடுவோம் - பல்லவன் இல்லம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தலைவர் சௌந்தரராஜன்.

தமிழக முதல்வர் தரப்பில் வாதங்கள் முடிவடையாததை அடுத்து 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நாளையும் தொடரும் - உயர்நீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக்கூடாது - துரைமுருகன்.

அமைச்சர், நீதிபதி கார் ஓட்டுனர்களுக்கு வழங்கும் சம்பளம் பேருந்து ஓட்டுனர்களுக்கும் வழங்கினால் போராட்டம் வாபஸ் பெறுகிறோம் - சௌந்தரராஜன்.

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மெட்ரோ ரயிலில் 31,500பேர் பயணம்.

போராட்டத்தில் கலந்து கொண்டதால் பணிக்கு வராமைக்கு விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் : ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் மாரடைப்பால் மரணம்.

அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மதுசூதனன் போர்க்கொடி.

திருச்சி ராமஜெயம் கொலை  வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு.

திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலினிடம் நட்பு ரீதியில் பேசினால் தவறா ? டிடிவி தினகரன் கேள்வி.

வாட்ஸ் அப் மூலம் திமுக தவறான தகவல் பரப்பியது என்று துணை முதலமைச்சர் கூறியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் : திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் பேச்சு.

ஆர்கே நகர் தோல்வி பற்றி இதுவரை ஆலோசிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி முதல்வருக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோமஸ் கந்தர் சிலை முறைகேடு வழக்கு :கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் விசாரணை.

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு சமூகத்தில் பாதுகாப்பும் இல்லை மரியாதையும் இல்லை - இசையரசு (சமூக செயற்பாட்டாளர்).

பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என கலசபாக்கம் எம்எல்ஏ புகழ்ந்தார்.

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு தடை கோரி நடிகர் பிரசாந்த் தாயார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

கர்நாடக சங்கீதத்தில் படித்து நான் டாக்டர் பட்டம் பெற்றேன். கலைமாமணி விருது பெற்றுள்ளேன். ஆனால் என்னை இதுவரை என்னை எந்த சபாவிலும்  பாட அழைத்தது இல்லை - டாக்டர்.புஷ்பவனம் குப்புசாமி.

குட்கா ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த விகே.ஜெயக்கொடி நில நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம்.

ஆண்டாள் குறித்து இழிவாக பேசியதற்காக, கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

ஜன.10ம் தேதி பழனி - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்; பழனியிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லை மதியம் 12.45க்கு சென்றடையும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

ஜன.10ல் மதுரை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்; மதுரையிலிருந்து காலை 8.45க்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 12.30க்கு செங்கோட்டை சென்றடையும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு.

ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் – நடிகர் ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் – நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.

மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி – சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கள், மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைபடுத்துவது இல்லை. அனைத்து, சாதி, மதத்தை ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல். அதை தவறாக புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்கிறார்கள்.

மதுரை ஒரு ராசியன மண். எனவே இந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்குவார் என கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும்.

கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

திங்கள், 8 ஜனவரி, 2018

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨08/01/18 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨08/01/18  !

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 15 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.

பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட 147 இந்திய மீனவர்கள் இந்தியாவில் வாகா-அட்டாரி எல்லை வழியாக நுழைந்தனர்.

குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் டெல்லி உள்பட 7 மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற உத்தரவை திரும்பப் பெறுகிறேன் - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பி விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் திமுக கொண்டுவந்தால் ஆதரிப்போம் - டிடிவி தினகரன்.

அமைச்சரவை குழு புதிய வழிமுறைகளை வகுக்கும் வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை - மத்திய அரசு.

பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக, நாளை முதல் மறுஅறிவிப்பு வரும்வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் வழக்கத்தை விட கூடுதலாக 30 ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சட்டப்பேரவையில் தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழிலேயே தனது உரையை முடித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இயக்குநர் கவுதமன் சந்திப்பு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ்யிடம் வலியுறுத்தல்.

மத்திய அரசை பார்த்தாலே நடுங்குகிறது தமிழக அரசு.ஆளுநர் தன் உரையில் எதுவும் பேசவில்லை : சுயேட்சை எம்எல்ஏ டிடிவி.தினகரன்.

தமிழக ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு :  எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் வெளிநடப்பு.

பிள்ளையார்பட்டி கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமி தரிசனம்.

மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது - தமிழக ஆளுநர்

ஜிஎஸ்டி வரி மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைபடுத்தியதாக தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு : ஒகி புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.

நடிகர் கமலும் , ரஜினியும்  அரசியலுக்கு  தகுதியில்லாத கிழட்டு நடிகர்கள் - தனியரசு எம்எல்ஏ.

நடிகர் சங்கத்தலைவர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , நடிகர் சங்க அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்தார் எஸ்வி.சேகர்.

தமிழக ஆளுநர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆர்கே.நகர் எம்எல்ஏ தினகரன் சந்திப்பு.

தமிழக சட்டசபை பேரவைக்குள் நுழைய முயன்ற தங்கத்தமிழ்ச்செல்வனை காவலர்கள்
தடுத்து நிறுத்தினர்.

பெரும்பான்மை இன்றி அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; மெஜாரிட்டி நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஆளுநர் பன்வாரிலாலின் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின்.

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலைவழக்கில் தேடப்படும் நாதுராம் பேஸ்புக்கில் சுதந்திரமாக திரிகிறார்.கையில் துப்பாக்கியுடன் நிற்பது போல் பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்டுள்ளார் நாதுராம்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் செல்ல இடைத்தரகர்களுக்கு தடை - பத்திரப்பதிவுத் துறை அறிவிப்பு.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் கடல் வழியாகவும் பயணம் செய்ய சவுதி அரேபியா ஒப்புதல் : கடல் வழியாக கப்பலில் பயணம் செய்யும்போது பயணச் செலவு வெகுவாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடன் வழங்கியதில் ரூ.18 கோடி முறைகேடு - இந்தியா வங்கியின் முன்னாள் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

45 வயதுக்கு மேற்பட்ட  குறைந்த பட்சம் 4 பெண்கள்  அடங்கிய குழு ஆண் துணையில்லாமல் ஹஜ் புனித யாத்திரை செல்லலாம் - மத்திய அரசு.

ஒப்பந்த செவிலியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்புஅரசு மருத்துவமனையில் 9,533 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர் : தமிழக அரசு.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ்.

தமிழக ஆளுநர் உரையை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் புறக்கணித்தனர்.

அரசு போக்குவரத்து கழகங்களை கலைத்துவிட்டு தனியார்மயம் ஆக்கலாமா ? அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.

தமிழக ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும் பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறதுதமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்.

நெல்லை : வரும் 12ம் தேதி முதல் திருநெல்வேலி வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

வரும் 10ல் பசுபதி பாண்டியன் நினைவு தினம் : தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 11ம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை  பிறப்பிப்பு : மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி புறநகர் பணிமனையில் இலவசமாக பேருந்துகளை இயக்க முடிவு - தொ.மு.ச அறிவிப்பு.

கோவை அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் நாசிக் அச்சகத்தில் பணியில் சேர மத்திய அரசு உத்தரவு.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு : திமுகவுக்கு மதிமுக எப்போதும் பக்கபலமாக இருக்கும் என கருணாநிதியை சந்தித்த பின் வைகோ பேட்டி.

2016ல் தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த, மத்திய பாதுகாப்பு படை வீரர் தர்மராஜ் குடும்பத்திற்கு ரூ.54.39 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவு.

நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியையும் அதனை தொடர்ந்து 6 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கிரார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு.

காரைக்குடி : காகிதத்தை அமெரிக்க டாலராக மாற்றித்தருவதாக கூறி பண மோசடி செய்ய முயன்றதாக அறந்தாங்கியைச் சேர்ந்த திருஞானசம்பந்தர், சுதாகர் ஐயப்பன் ஆகிய இருவர் கைது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி.

அடுத்த 6 நாட்களுக்கு இயல்பை விட குளிர் அதிகமாக இருக்கும் கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதால் குளிர் அதிகமாக உள்ளது : வானிலை ஆய்வு மையம்.