14 வடிவமைப்புகளில் 10 ரூபாய் நாணயங்கள்-ரிசர்வ் வங்கி
10 ரூபாய் நாணயங்கள் இதுவரை 14 வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து வடிவமைப்புகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில் 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத் தன்மையில் சந்தேகம் காரணமாக வணிகர்களும் பொதுமக்களும் வாங்க மறுப்பதாக தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் பல்வேறு காலகட்டங்களில் சமூக, பொருளாதார, கலாச்சார மதிப்பீடுகளின் அடிப்படையில் மாறுபட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டவை என்றும் நாணயங்களின் மாறுபட்ட அம்சங்கள் செய்திக்குறிப்புகள் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. மேலும், 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் மறுக்க வேண்டாம் எனவும், அனைத்து வங்கிகளுக்கும் 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக