பரபரப்பு செய்திகள் 05/01/18 !
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் திருப்திகரமாக இல்லையெனில் வேறு வேலையை பார்க்கட்டும் -
உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி அம்ருதா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஜனவரி.25க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
பீகாரில் கால்நடை ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உட்பட 15 பேருக்கான தண்டனை விவரம் நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பு : ராஞ்சி சிபிஐ நீதிமன்றம்.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு, சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நகலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் ஆணை.
என் மீது புகார் அளித்தது யாரென்று கூறினால் மட்டுமே சம்மனுக்கு பதில் - விசாரணை ஆணையத்தில் சசிகலா மனு.
உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை திங்களன்று முன்வைப்போம்; எங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள்.
அரசு, தொழிலாளர்கள் என இரு தரப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.பொங்கலுக்கு முன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் - நீதிபதிகள் நம்பிக்கை.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என 17 தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு.
சென்னையில் தற்காலிக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தேவை : மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்திற்கு இழப்பீடாக ரூ.632 கோடி விடுவிப்பு.கர்நாடகாவிற்கு அதிகபடியாக ரூ. 3,271 கோடியும், பஞ்சாபிற்கு ரூ. 2,098 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது : மத்திய அரசு.
மதுரை அழகர்கோயிலில் ஜன.7இல் கிடா வெட்டு இல்லை; ஆனால் விருந்து உண்டு - ரஜினிகாந்துக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியதை தொடர்ந்து மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் அறிவிப்பு.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு : மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு கருத்து.
தமிழகம் முழுவதும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு மக்களின் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு போதிய மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது - அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர்.
தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவது தவறு - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.
மலேசியா பிரதமர் முகமது நஜீப் துன் ரஜாக் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் நேரடியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை.வயது, உடல்நிலையை கருதி குறைந்த தண்டனை அளிக்க லாலுபிரசாத் யாதவ் கோரிக்கை.
தமிழத்தில் 80% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன ஊதிய உயர்வால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி கூடுதல் செலவாகும்.ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள்- அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர்.
பட்டாசுக்கு தடைக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து முடிக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் 11வது நாளாக வேலைநிறுத்தம்.
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க, உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரியது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் : வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 14 தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னை தி.நகரில் ஆலோசனை.
சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பில் வழக்கில்
24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கயி குற்றாளி முஷ்டாக் அகமதுவை சிபிஐ கைது செய்தது.
போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் நடைபெறவிருந்த M.Phil (ஆய்வியல் நிறைஞர்)மற்றும் தனித் தேர்வு (Private Exam) ஒத்திவைப்பு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
மணல் விற்பனைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை நேரடியாக விற்பனை செய்ய முடியாது இறக்குமதி செய்பவர்கள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.மணலை ஆய்வுக்குட்படுத்தி, பொதுப்பணித் துறையே விலை நிர்ணயம் செய்யும் பொதுப்பணித் துறையே விற்பனை செய்யும் : அரசாணை.
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் 86% பேருந்துகள் உரிய நேரத்தில் இயங்கி வருகிறது; கூடுதல் ஓட்டுநர்களும் தயார் நிலையில் உள்ளனர் - ஆட்சியர் ரோகிணி.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - த.மா.கா தலைவர் வாசன் வலியுறுத்தல்.
கனிமொழி அவரது 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல்தலைவர் முக.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முதுவாண்டி- காவட்கோண் வனப்பகுதிக்கு அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை.
ஆர்கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் கமலுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு.
சபரிமலை கோயிலில் பெண்கள் தரிசனம் செய்ய வயது சான்றிதழ் கட்டாயம் : தேவசம் போர்டு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகளே இயக்கம்.
தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும் - நடிகர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் யானைகளால் தாக்கப்பட்டு 157 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய அரசு
சேலத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் 80 சதவீத பேருந்துகள் இயக்கம்.
போக்குவரத்து ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை தொடுக்காமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - வைகோ.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக