திங்கள், 8 ஜனவரி, 2018

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨08/01/18 !

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨08/01/18  !

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 15 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.

பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட 147 இந்திய மீனவர்கள் இந்தியாவில் வாகா-அட்டாரி எல்லை வழியாக நுழைந்தனர்.

குடியரசு தினத்தன்று தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் டெல்லி உள்பட 7 மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற உத்தரவை திரும்பப் பெறுகிறேன் - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பி விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது - அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் திமுக கொண்டுவந்தால் ஆதரிப்போம் - டிடிவி தினகரன்.

அமைச்சரவை குழு புதிய வழிமுறைகளை வகுக்கும் வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை - மத்திய அரசு.

பஸ் ஸ்டிரைக் எதிரொலியாக, நாளை முதல் மறுஅறிவிப்பு வரும்வரை சென்னை புறநகர் ரயில் சேவையில் வழக்கத்தை விட கூடுதலாக 30 ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சட்டப்பேரவையில் தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழிலேயே தனது உரையை முடித்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இயக்குநர் கவுதமன் சந்திப்பு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ்யிடம் வலியுறுத்தல்.

மத்திய அரசை பார்த்தாலே நடுங்குகிறது தமிழக அரசு.ஆளுநர் தன் உரையில் எதுவும் பேசவில்லை : சுயேட்சை எம்எல்ஏ டிடிவி.தினகரன்.

தமிழக ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு :  எம்எல்ஏ தமிமுன் அன்சாரி மற்றும் ஐயூஎம்எல் கட்சியும் வெளிநடப்பு.

பிள்ளையார்பட்டி கோயிலில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமி தரிசனம்.

மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது - தமிழக ஆளுநர்

ஜிஎஸ்டி வரி மாற்றத்தை சிக்கலின்றி நடைமுறைபடுத்தியதாக தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு : ஒகி புயல் பாதிப்புகளை பார்வையிட தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.

நடிகர் கமலும் , ரஜினியும்  அரசியலுக்கு  தகுதியில்லாத கிழட்டு நடிகர்கள் - தனியரசு எம்எல்ஏ.

நடிகர் சங்கத்தலைவர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக , நடிகர் சங்க அறங்காவலர் பொறுப்பை ராஜினாமா செய்தார் எஸ்வி.சேகர்.

தமிழக ஆளுநர் உரையில் ஒரே ஒரு புதிய அறிவிப்பு கூட இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆர்கே.நகர் எம்எல்ஏ தினகரன் சந்திப்பு.

தமிழக சட்டசபை பேரவைக்குள் நுழைய முயன்ற தங்கத்தமிழ்ச்செல்வனை காவலர்கள்
தடுத்து நிறுத்தினர்.

பெரும்பான்மை இன்றி அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; மெஜாரிட்டி நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.சட்டப்பேரவையில் நிகழ்ந்த ஆளுநர் பன்வாரிலாலின் உரை மஸ்கோத் அல்வா போல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின்.

ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலைவழக்கில் தேடப்படும் நாதுராம் பேஸ்புக்கில் சுதந்திரமாக திரிகிறார்.கையில் துப்பாக்கியுடன் நிற்பது போல் பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்டுள்ளார் நாதுராம்.

சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் செல்ல இடைத்தரகர்களுக்கு தடை - பத்திரப்பதிவுத் துறை அறிவிப்பு.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் கடல் வழியாகவும் பயணம் செய்ய சவுதி அரேபியா ஒப்புதல் : கடல் வழியாக கப்பலில் பயணம் செய்யும்போது பயணச் செலவு வெகுவாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடன் வழங்கியதில் ரூ.18 கோடி முறைகேடு - இந்தியா வங்கியின் முன்னாள் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

45 வயதுக்கு மேற்பட்ட  குறைந்த பட்சம் 4 பெண்கள்  அடங்கிய குழு ஆண் துணையில்லாமல் ஹஜ் புனித யாத்திரை செல்லலாம் - மத்திய அரசு.

ஒப்பந்த செவிலியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்புஅரசு மருத்துவமனையில் 9,533 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர் : தமிழக அரசு.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்துத்துறை நோட்டீஸ்.

தமிழக ஆளுநர் உரையை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் புறக்கணித்தனர்.

அரசு போக்குவரத்து கழகங்களை கலைத்துவிட்டு தனியார்மயம் ஆக்கலாமா ? அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.

தமிழக ஆளுநரின் உரை போலி வாக்குறுதிகளும் பொய்யான தகவல்களும் கொண்டதாக இருக்கிறதுதமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுகிறது - திருமாவளவன்.

நெல்லை : வரும் 12ம் தேதி முதல் திருநெல்வேலி வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

வரும் 10ல் பசுபதி பாண்டியன் நினைவு தினம் : தூத்துக்குடி மாவட்டத்தில் 9ம் தேதி மாலை 6 மணியில் இருந்து 11ம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்களுக்கு 144 தடை  பிறப்பிப்பு : மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி புறநகர் பணிமனையில் இலவசமாக பேருந்துகளை இயக்க முடிவு - தொ.மு.ச அறிவிப்பு.

கோவை அச்சகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் நாசிக் அச்சகத்தில் பணியில் சேர மத்திய அரசு உத்தரவு.

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு : திமுகவுக்கு மதிமுக எப்போதும் பக்கபலமாக இருக்கும் என கருணாநிதியை சந்தித்த பின் வைகோ பேட்டி.

2016ல் தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த, மத்திய பாதுகாப்பு படை வீரர் தர்மராஜ் குடும்பத்திற்கு ரூ.54.39 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவு.

நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியையும் அதனை தொடர்ந்து 6 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கிரார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு.

காரைக்குடி : காகிதத்தை அமெரிக்க டாலராக மாற்றித்தருவதாக கூறி பண மோசடி செய்ய முயன்றதாக அறந்தாங்கியைச் சேர்ந்த திருஞானசம்பந்தர், சுதாகர் ஐயப்பன் ஆகிய இருவர் கைது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி.

அடுத்த 6 நாட்களுக்கு இயல்பை விட குளிர் அதிகமாக இருக்கும் கிழக்கு திசையில் வீசும் காற்று ஈரப்பதத்துடன் இருப்பதால் குளிர் அதிகமாக உள்ளது : வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக