புதன், 10 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 10/01/18 !

பரபரப்பு  செய்திகள் 10/01/18 !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 12ம் தேதி விடுமுறை - தமிழக அரசு.

இஸ்ரோ தலைவராக தமிழக விஞ்ஞானி சிவன் நியமனம் : மத்திய அரசு உத்தரவு.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் சிறையில் சம்பாதித்த ரூ.20,000-ஐ ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வழங்கினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு நாளை ஒத்திவைப்பு.

பொங்கல் நேரமாக இருப்பதால் மக்களின் நலன் கருதி பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் நாளை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் : தொழிற்சங்கங்கள்.

இலங்கை காங்கேசன் துறைமுக மேம்பாட்டுக்கு இந்தியா ரூ.286 கோடி கூடுதல் நிதியுதவி புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தானது.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு : வரும் 22ம் தேதி எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

4 நாட்களுக்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியத்தொகை முழுவதும் வழங்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை வரும் 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்காவிட்டால், அப்பலோ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க - விசாரணை ஆணையம் திட்டம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவை , தீபக், ராமமோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி ஆகியோர் நேரில் பார்த்தனர் - விசாரணை ஆணையம்.

எம்எல்ஏக்களுக்கு 1 ஜுலை 2017 முன்தேதியிட்டு சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25.32 கோடி செலவு : தமிழக அரசு.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா
பிறந்தநாளை அரசு விடுமுறையாக்க அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கோரிக்கை.

சட்டப்பேரவையில் தம்மை பேசவிடாமல் தடுக்கின்றனர் சில அமைச்சர்களின் சதியால் ஒதுக்கி வைக்கப்பட்டேன்.மதுசூதனன் மிகப்பெரிய ஃபிராடு.முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் சிறந்த நடிகர்கள் - டிடிவி.தினகரன்.

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க கர்நாடக அரசுடன் நேரடியாகவும், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் வாயிலாகவும் நடவடிக்கை : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் செம்மலை – ஸ்டாலின் காரசார விவாதம்.

4 மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படுவார் : அமைச்சர் அன்பழகன்.

கடன் பெற்ற நபரிடம் அதிக வட்டி வசூல் செய்யும் பைனான்சியர்கள் மீது நீதிமன்ற நடைமுறைப்படி நடவடிக்கை.அதிக வட்டி வசூலித்தல், கடன் பெற்றவருக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பு - சென்னை ஆட்சியர்.

முகவரி இல்லாமல் வீதியில் வசிப்பவர்கள் எப்படி ஆதாரை பெறுவார்கள்? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்ததை வரவேற்கிறேன். வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டுவதில் உண்மைத்தன்மையை உணர்ந்து கூற வேண்டும் - ஹெச்.ராஜா.

சென்னை அருகே கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை 15 நாட்களுக்குப்பின் திருவேற்காட்டில் மீட்கப்பட்டது - மாணிக்கம் என்பவர் கைது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

எஸ்பிஐ வங்கியில் ரூ.750 கோடியை அவசரகால கடனாக பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு திங்கட்கிழமைக்குள் நவ.30 வரையிலான ஓய்வூதிய பலன்களின் நிலுவைத்தொகை தரப்படும் : அரசு தலைமை வழக்கறிஞர்.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் மதகு உடைந்தது தொடர்பாக 4 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர் மற்றும் பட்டாசு ஆலை பிரச்சனையை தீர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்.

நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி மொழியில் பிரார்த்தனை கீதம் பாடுவதை எதிர்த்து வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

தாம்பரம் - பல்லாவரம் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்த பேரவையில் திமுக கோரிக்கை.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேச அனுமதிக்க வேண்டும் : சபாநாயகரிடம் டிடிவி தினகரன் மனு.

லாபகரமாக இயங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து கழகங்கள் இரண்டு கழக ஆட்சிகளால் நஷ்டத்தில் இயங்கிவருகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை பேரவையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டம் அருகே நாளை ஆர்ப்பாட்டம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு.

நடிகர் சங்கத்தில் மூத்த கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை - நடிகர் எஸ்வி.சேகர்.

தமிழக எம்எல்ஏக்களின் சம்பள உயர்வு மசோதாவில் மாதம் ஒன்றுக்கு தொலைபேசிக்காக ரூ.5000லிருந்து ரூ.7500ஆக உயர்வு.

தமிழக முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயரும்.

தனியாருடன் இணைந்து போக்குவரத்துறையை லாபகரமான துறையாக மாற்ற வேண்டும் : நடிகர் சரத்குமார்.

நாளை முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் இரவு 11.30 மணி வரை இயங்கும்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடக்கம்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக