புதன், 10 ஜனவரி, 2018

முடிவுக்கு வரும் ஸ்டிரைக்!! 2.44% ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயார்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள்!



2.44% ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயார்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள்! முடிவுக்கு வரும் ஸ்டிரைக்!!


சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் அறிவுறுத்தியைது போல் 2.44 சதவீத ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கானது நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கங்கள் கூறுகையில் , பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் பணிக்கு திரும்ப தயாராக உள்ளோம். வேலைநிறுத்தம் என்பது கடைசி கட்ட போராட்டம்தான். மெஜாரிட்டியான சங்கங்களை புறக்கணித்துவிட்டு தமிழக அரசு போலி ஒப்பந்தத்தை செய்துள்ளது.
வேலைநிறுத்தம்
அரசின் போலி ஒப்பந்தத்தை கண்டித்துதான் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அப்போது நீதிபதி, 6 மாதத்துக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது வேலைநிறுத்தம் செய்யலாமா?. பஸ்களையே உடனே இயக்க வேண்டும். ஊதிய உயர்வில் 0.13 சதவீதம்தான் வேலைநிறுத்தத்துக்கு காரணமாக உள்ளது.
ல்டிரைக் வாபஸ் பெறப்படுமா
2.44 சதவீத ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க உத்தரவிட்டால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுமா?. 2.44 சதவீதம் ஊதிய உயர்வுக்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
அதற்கு தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களின் கருத்தை கேட்டு சொல்வதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2.44 சதவீதம் இடைக்கால ஊதியமாக ஏற்க முடிவு
இதனிடையே நீதிபதிகளின் பரிந்துரையை ஏற்பது குறித்து வழக்கறிஞர்களுடன் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜனவரி 4-ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து 2.44% சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக