செவ்வாய், 23 ஜனவரி, 2018

செய்திச் சுருக்கம் (23/01/2018)

செய்திச் சுருக்கம் (23/01/2018)

1 உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்ட பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது.

2 பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது.

3 ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

4 இலங்கை கடற்படையினர் கைது செய்வதால்தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது 50 சதவீதம் குறைந்துள்ளது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 நடிகர்கள் ரஜினி-கமல் ஒருபோதும் கட்சி தொடங்கமாட்டார்கள் என்று டிடிவி தினகரன் அணி ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

6 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 122வது பிறந்தநாள் விழா சென்னை மெரினாவில் நடைபெற்றது.

7 இலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார்.

8 உலகெங்கும் உள்ள பெண்களின் கல்விக்கு உதவுவதற்காக மலாலாவுடன் இணைந்து நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

9 ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க சென்ற பெண் ஒருவர் தனது அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

10 பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங்கினார்.

11 தமிழகத்தில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

12 காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

13 இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை செய்யும் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, சென்னை நகரில் மேலும் 8 இடங்களில் இந்த சிலிண்டர் விற்பனையை தொடங் கியுள்ளது.

14 ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே இணை அமைச்சர் ராஜேன் கொஹென் தெரிவித்துள்ளார்.

15 பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஞாயிற்றுக் கிழமைகளில் வழங்கி வந்த இலவச அழைப்பு சலுகையை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

16 தமிழகத்தில் வறட்சியால் வெளிமாநில நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது.

17 சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

18 முதல்வரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

19 தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

20 சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில், நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

21 சென்னைக்கு நேற்று வந்த ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹன் தெற்கு ரயில்வே திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார்.

22 மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான இலக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 வாஷிங்டனில் நடந்த பொங்கல் விழாவில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடலை அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டார்.

24 நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில், 2019ல் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. அதுபோன்று தேர்தல் நடத்த 2024ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

25 எதிரிநாடுகளிடம் இருந்து வரும் ரகசிய போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்கக் கூடிய, ரூ.39,000 கோடி மதிப்பிலான 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

26 11-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே 27ந்தேதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது.

27 எய்ம்ஸ், ஜிப்மர் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு. மற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கிறது.

28 சிவகாசியில் கடந்த 27 நாட்களாக முழு அடைப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு ஆலைகள், போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நேற்று முதல் மீண்டும் உற்பத்தியை தொடங்கின.

29 வடகர்நாடக பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாநில அரசால் செயல்படுத்த திட்டமிட்டுள்ள மகதாயி நதிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 25ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், பிப்ரவரி 4ம் தேதி பெங்களூரு நகர மாவட்ட முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

30 தென்ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டி தொடரில் ஆடும் லெவன் அணியில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார்.

31 இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

32 நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது.

33 முதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

34 உழைக்கும் மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் பிப்ரவரி 24-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது

35 நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து மாநில பாடத்திட்டங்களும் இணைந்த சிலபஸ் பின்பற்றப்படும் என சி.பி.எஸ்.இ தெளிவுபடுத்தியுள்ளது.

36 உதவி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

37 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

38 சென்னை: ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா தாக்கல் செய்ய மனு மீதான விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

39 போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு, பொருளாதார உதவி செய்வதற்காக துவங்கப்பட்ட கணக்கில், ஒரு மணி நேரத்தில், 13 கோடி ரூபாய் நன்கொடையாக சேர்ந்தது

40 பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்றுள்ளது.

41 மதுரை காமராஜ் பல்கலையின் 51வது பட்டமளிப்பு விழா ஜன., 29 நடக்கிறது.

42 இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 தென்னிந்தியாவின் முதலாவது பெண் டாக்சி டிரைவர் செல்விக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந் ‘முதல் பெண்மணி’ விருது வழங்கினர்.

44 புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று(ஜன.,23) பதிவியேற்கிறார்.

45 சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் இரு தரப்புகள் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதிய தலைமை தேர்தல் ஆணை யர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித் துள்ளார்.

47 தேசிய கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக