வியாழன், 4 ஜனவரி, 2018

பரபரப்பு செய்திகள் 04/01/18 !

பரபரப்பு செய்திகள் 04/01/18 !

இலங்கை கடற்படையால் இன்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேருக்கு ஜன.18 வரை காவல் - ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்.

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் 12 பாக். ராணுவத்தினர் உயிரிழந்ததாக தகவல் : பாகிஸ்தானின் 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறுத்தம் . 13வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேருந்து ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 6 மாதம் காலநீட்டிப்பு செய்ததற்கான அரசாணை வெளியீடு.

முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப தயார், அதற்கு முன்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் - காங்கிரசுக்கு பாஜக நிபந்தனை.

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என கமல் நினைக்கிறார் - டிடிவி.தினகரன்.

தேடப்படும் குற்றவாளியாக தொழிலதிபர் விஜய் மல்லய்யாவை அறிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

சுற்றுச்சூழல் அனுமதியில்லை என கூறி மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை தேவை - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை.

தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் உருவாகும்.ஆர்கே நகர் தொகுதி மக்களுக்காக தொகுதியில் வாரத்தில் 3 நாட்கள் தங்குவேன் : டிடிவி.தினகரன்.

ஆர்கே.நகர் மக்களை கமல் பிச்சைக்காரர்களாக கருதுகிறாரா ? அரசியலில் எடுபடமாட்டோம் என்ற அச்சத்தில் பேசுகிறார் கமல் : டிடிவி தினகரன்.

திரைத்துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வரலாம் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் : ஏஆர்.ரகுமான்.

2ஜி வழக்கில் உண்மை வென்றது 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது - ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு.

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் சான்றிதழ்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக வரும் 7-ம் தேதி திண்டுக்கல்லில் அறிவிப்பேன் - ஆவடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி.

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாப மரணம்.

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டபேரவை இணையதளத்தில் தகவல்.

ஜெயலலிதா மரணம் - விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்தியபாமா ஆஜர்.

ஆர்கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது.ஆர்கே.நகர் தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய களங்கம் - நடிகர் கமல்.

பணப்பட்டுவாடா செய்ததாக கமல்ஹாசன் கூறுவது ஆர்கே.நகர் மக்களை அவமதிக்கும் செயல்.கமலுக்கு ஆர்கே.நகர் மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் - டிடிவி.தினகரன்.

ஆன்மிக அரசியலை விளக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற அறிஞர்களால் மட்டுமே முடியும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு இசையமைப்பாளர் ஏஆர். ரகுமான் வாழ்த்து.

புதுடெல்லி : விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பருக்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம்.

கடன் சொல்லி டிடிவி.தினகரன் ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்ததில்லை - அமைச்சர் ஜெயக்குமார்.

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் சில ஷரத்துக்களை மாற்ற வேண்டும்.தமிழக பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில், மசோதாவில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஜம்மு - காஷ்மீர் : ஆர்எஸ். புரா அருகே எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் - ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் சேவைகளை பயன்படுத்தும் வகையில் விமானத்தில் இலவச வைஃபை சேவையை பயணிகளுக்கு வழங்க மத்திய அரசு அனுமதி.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்.

தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை, நான் தான் அவரை சந்தித்தேன் : ஸ்டாலின் கருத்துக்கு தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மறுப்பு.

வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு ஜனவரி 8ல் விசாரணைக்கு வருகிறது - உச்சநீதிமன்றம்.

ஆர்எம்.வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு.

கடும் பனி மூட்டம் காரணமாக தலைநகர் டெல்லியில் ரயில் சேவை தொடர்ந்து பாதிப்பு 49 ரயில்கள் தாமதம் 13 ரயில்களின் நேரம் மாற்றம், 12 ரயில்கள் ரத்து : ரயில்வே நிர்வாகம்.

அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ரஜினியை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை - த.மா.கா தலைவர் ஜிகே.வாசன்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரம் : வெற்றிவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

நாங்கள் ஏற்கனவே ஆன்மிக அரசியல் செய்து வருகிறோம் - தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பாதுகாப்பு கருதி டூவீலர்களில் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் சந்திப்பு.

தஞ்சை சென்னம்பட்டியில் போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி ஜோதிராமன் என்பவர் அடித்துக் கொலை.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.

ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அதிமுக எம்பி. வேணுகோபால் நியமனம் : எச்.ராஜா தலைமையிலான ரயில் பயணிகள் ஆலோசனைக் குழுவில் வேணுகோபால் எம்பிக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாகை : கடல்சீற்றத்தால் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே டிப்பர் லாரியின் டயர் வெடித்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து : கூலி தொழிலாளர்தள் 8 பேர் உயிரிழப்பு.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை செய்வதாக கூறி மோசடி செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் - ஹெச். ராஜா.

கோவை மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது : நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக