வியாழன், 31 மே, 2018

அட கொய்யால 42 வயதில் 21-வது குழந்தை பெற்றெடுத்த பெண் இது அல்லவா சாதனை

அட கொய்யால 42 வயதில் 21-வது குழந்தை பெற்றெடுத்த பெண் இது அல்லவா சாதனை

பிரித்தானியாவில் 20 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
பிரித்தானியாவின் Morecambe பகுதியைச் சேர்ந்த தம்பதி Sue(42)-Noel(47). இந்த தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் தான் குழந்தை பிறந்தது.
அது அவர்களுக்கு 20-வது குழந்தை என்பதால், இனிமேல் குழந்தையே பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்.
ஆனால் Sue தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார் 21-வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். அக்குழந்தை பெண் குழந்தை எனவும் நம்பிக்கையில் உள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இந்த தம்பதிக்கு மொத்தம் 20 குழந்தைகள் உள்ளனர்.
அவர்களின் பெயர்கள் Chris(28), Sophie(23), Chloe(22), Jack(20), Daniel(18), Luke மற்றும் Millie(16), Katie(14), James(13), Ellie(12) Aimee(11), Josh(10), Max(8), Tillie(7), Oscar(5), Casper(4), Hallie(2), மற்றும் Phoebe 13 மாத குழந்தையாகவும், கடந்த செப்டம்பர் மாதம் பிறந்த குழந்தைக்கு Archie என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தம்பதி வாரத்திற்கு 300 பவுண்ட் ஷாப்பிங்கிற்கே செலவு செய்வதாகவும், நாள் ஒன்றுக்கு 10.50 லிட்டர் பால் மற்றும் மூன்று லிட்டர் பழச்சாறு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தம் 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டில் இவர்கள் வசித்து வருவதாகவும், தந்தையான நோயில் Pie கம்பெனி நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தம்பதிக்கு மூன்று பேரக்குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மூன்று வார்த்தை சொன்னதுக்கு 320 கோடி சம்பளம் .யாருக்கு தெரியுமா?

மூன்று வார்த்தை சொன்னதுக்கு 320 கோடி சம்பளம் .யாருக்கு தெரியுமா?

அது வேற யாரும் இல்லைங்க .படத்துல நடித்த வின் டீசலுக்கு தான் இவ்வளவு பெரிய சம்பளம் .
வின் டீசல் ஹாலிவுட் -ல் மிக பெரிய ஸ்டார் நடிகர் . அவருடைய படங்கள் சாதாரணமாக 7000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் .
வெறும் மூன்று வார்த்தை சொல்லி எந்த படத்துக்கு தெரியுமா 320 கோடி சம்பளம் வாங்குனார்? மார்வல் தயாரிப்பில் வெளிவந்த "கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி " படத்துக்கு தான் .
இந்த படத்தில் க்ரூட் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்தது அவர் சொன்ன அந்த மூன்று வார்த்தை இது தான்"I am Groot" .இதுக்கு இவருக்கு 320 கோடி சம்பளம் .
இதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதை கம்மன்ட் பண்ணுங்க .
மேலும் இது போன்ற சுவையான தகவல்களுக்கு மறக்காம follow பண்ணுங்க

செவ்வாய், 29 மே, 2018

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்

*FLASH NEWS*

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்

துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  துப்பாக்கி சூடு பற்றி   சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  தனி துணை  வாட்டாட்சியார்  சேகர், சிப்காட் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு உத்தரவிட்டதன் பேரில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.திரேஸ்புரத்தில் மண்டல துணை வாட்டாட்சியார் கண்ணன் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. துணை வாட்டாட்சியார் கண்ணன் ஆய்வாளர் பார்த்திபனுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.


திங்கள், 28 மே, 2018

பிக் நியூஸ் 28/05/18

பிக் நியூஸ் 28/05/18 !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் துணைவட்டாச்சியர் சேகர் உத்தரவின்பேரிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எப்ஐஆரில் தகவல்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு கோடை விடுமுறைக்குப் பின் விசாரணை - உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்
தூத்துக்குடியில் அமைதி திரும்பியுள்ளது.
காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறினோம். துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

பொதுச் சொத்து சேதத்தை தவிர்க்க தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு துணை வட்டாட்சியர் உத்தரவிட்டதாக தகவல் : வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் தகவல்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி பயணம்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை : ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க ஆணையம் முடிவு.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மொத்தம் 86 எஃப்.ஐ.ஆர்-கள், போராட்டக்காரர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் - சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேட்டி.

எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்யக் கூடாது, அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி விரைவில் கட்சி தொடங்குவார் - செகு.தமிழரசன்.

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம்.

பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

நிபா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு.

திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் ரூ.6 கோடி நகைகள் மாயம்.

உஜ்வாலா திட்டத்தால் பெண்கள் அதிக பயனடைந்துள்ளனர்.கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி புதிய கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி.

தூத்துக்குடியில் வன்முறையை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேர் கைது.

விவசாயகடன் தள்ளுபடி கோரி கர்நாடகாவில் நாளை பந்த் : எடியூரப்பா அறிவிப்பு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 22 பேர் புழல் சிறையில் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து
நெல்லையில் இடிந்தகரை உள்பட 10 கிராம 8000 நாட்டுப்படகு மீனவர்கள் 6ஆம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

கர்நாடகாவில் துளசிகெரி பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் 29 மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டதை தொடர்ந்து காப்பகத்தை மூட ஆட்சியர் உத்தரவு.

துணை முதல்வர் ஓபிஎஸ் தூத்துக்குடி சென்றது ஆரோக்கியமானது.இயல்பாக நடக்கும் எல்லாவற்றையும் அரசியலாக மாற்றி தமிழகத்தை எதிர்கட்சிகள் போராட்டக்களமாக்குகின்றன - தமிழிசை.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நுண்கதிரியல் உயர்தர ஸ்கேன் இயந்திரம் அமைப்பு : அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம் ரூ.10லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு.பலத்த காயமடைந்தோருக்கு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக நிவாரணம் அதிகரிப்பு - தமிழக முதல்வர் பழனிசாமி.

சென்னை : 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மாலை அணிவித்து ரசிகர்கள் வரவேற்பு.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடிக்க முயற்சி : பணி நேரம் குறைப்பு, பணியிட மாற்றத்தால் விரக்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 25 பேர் தற்கொலை முயற்சி.

4 மக்களவை தொகுதிகள், 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடங்கியது.

காஞ்சிபுரம் ஒரிக்கையில் மதுபானங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் தீயில் எரிந்து சேதம்.

விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காலா பாடத்திற்கு ட்விட்டர் எமோஜி நான்கு மொழிகளில் அறிமுகம்.

மாவீரன் குரு அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு 30-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும் - மருத்துவர் அய்யா அறிவிப்பு.

திருவாரூரில் கள்ளச்சாராயம் குடித்து தொழிலாளி பலி.

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து குளச்சல் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது 400 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

விருத்தாச்சலத்தில் நடந்து சென்ற இளம்பெண்ணின் கழுத்து அறுப்பு மருத்துவமனையில் அனுமதி.

ஈரோடு : அந்தியூர் அருகே மின்வேலியில் சிக்கி கணவன் சரவணன் (35) உயிரிழப்பு, படுகாயமடைந்த மனைவி சத்யா (32) மருத்துவமனையில் அனுமதி.

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

*ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை வெளியிட்டது*

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை வெளியிட்டது..

ஞாயிறு, 27 மே, 2018

2018 IPL : கோப்பையை தட்டி தூக்கியது சென்னை சூப் கிங்ஸ்! #IPL 2018

2018 IPL : கோப்பையை தட்டி தூக்கியது சென்னை சூப் கிங்ஸ்! #IPL 2018

ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 26 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். யூசப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டகாரர்களாக வாட்சன் மற்றும் டு ப்ளசிஸ் களமிறங்கினர். இதில் டு ப்ளசிஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கி 32 ரன்கள் எடுத்து ஆடமிழந்தார். மேலும் வாட்சன் 117 ரன்களும், ராயுடு 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் 18.3 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL ல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
உங்கள் கருத்துகளை பகிரவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். ரொம்ப பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
உங்கள் கருத்துகளை பகிரவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். ரொம்ப பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...

ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன்


மூன்றாவது முறை ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன் 

🏏ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை மும்பையுடன் (2013, 2015, 2017) பகிர்ந்து கொண்டது. இது தவிர, கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) தலா ஒரு முறை கோப்பை வென்றன.

*🎾ரூ. 20 கோடி பரிசு*

🏏ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

*🎾அனுபவ சிங்கங்கள்*

🏏சென்னை அணியில் 11 பேர், 30 வயதுக்கு மேல் இருக்க 'டாடி ஆர்மி' என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், அனுபவம் தான் சிறந்தது என சாதித்துக் காட்டியது சென்னை அணி. 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதற்கேற்ப பைனலில் 36 வயதான வாட்சன் சதம் கடந்து சென்னை அணி 3வது முறையாக கோப்பை வெல்ல காரணமானார். தவிர, ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் 'பீல்டிங்கில்' துடிப்பாக செயல்பட்டனர்.

*🎾சோதனை கடந்து சாதனை*

🏏சூதாட்ட பிரச்னை காரணமாக கடந்த 2 சீசனில் (2016, 2017) சென்னை அணி விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பின் இம்முறை மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, சொந்த மைதானமாக சேப்பாக்கத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில், காவிரி பிரச்னை எழ, போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகளை கடந்த சென்னை அணி, 3வது முறையாக கோப்பை வென்று சாதித்துக் காட்டியது.

*🎾3*

🏏இந்த சீசனில் ஐதராபாத் அணியின் வில்லியம்சன், 17 போட்டியில், 735 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் பெங்களூருவின் விராத் கோஹ்லி (973 ரன், 2016), ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (848 ரன், 2016) உள்ளனர்.

*🎾4*

🏏அபாரமாக ஆடிய சென்னையின் வாட்சன், இந்த சீசனில் 2வது சதமடித்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் 2 அல்லது அதற்கு மேல் சதமடித்த 4வது வீரரானார். ஏற்கனவே கோஹ்லி (4 சதம், 2016), கெய்ல் (2 சதம், 2011), ஆம்லா (2 சதம், 2017) இச்சாதனை படைத்திருந்தனர்.

*🎾5*

🏏இம்முறை மொத்தம் 5 சதம் பதிவானது. இதில் வாட்சன் 2 (106-எதிர்: ராஜஸ்தான், 117*-எதிர்: ஐதராபாத்) சதமடித்தார். ரிஷாப் பன்ட் (128*, எதிர்: ஐதராபாத்), கெய்ல் (104*, எதிர்: ஐதராபாத்), அம்பதி ராயுடு(100*, எதிர்: ஐதராபாத்) தலா ஒரு சதமடித்தனர்.

*🎾101*

🏏இந்த சீசனில் மொத்தம் 101 அரைசதம் பதிவானது. அதிகபட்சமாக ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், 8 அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), டிவிலியர்ஸ் (பெங்களூரு) தலா 6 மற்றும் ரிஷாப் பன்ட் (டில்லி), பட்லர் (ராஜஸ்தான்) தலா 5 அரைசதம் பதிவு செய்தனர்.

🏏இம்முறை ஒரு 'ஹாட்ரிக்' விக்கெட் கூட பதிவாகவில்லை. இதேபோல, ஒரு போட்டி கூட 'டை' ஆகவில்லை. இதனால் 'சூப்பர் ஓவர்' முறை பயன்படுத்தப்படவில்லை.

வெள்ளி, 25 மே, 2018

காடுவெட்டி குரு காலமானார்


வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு ( 57) காலமானார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் குரு.

#BREAKING சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


#BREAKING சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ;பதட்டம் 5000 போலீசார் குவிப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ;பதட்டம் 5000 போலீசார் குவிப்பு

தூத்துக்குடி 2018 செவ்வாய்க்கிழமை 22 ;
 தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.திரேஸ்புரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து தலை சிதறி பெண் பரிதாபமாக பலியானர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.


ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.


தூத்துக்குடி போலிசார் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள் அதில்
1. பொன்னுநாயகம் மகன் தமிழரசன், (35/18), குறுக்குச்சாலை
2. சண்முகம்( 25/18 ) ,ஆசிரியர் காலனி,தூத்துக்குடி
3. கோவில்பிச்சை மகன் கிளாஸ்டன் (40), லூர்தம்மாள்புரம்,தூத்துக்குடி
4. குப்புசாமி,மகன் கந்தையா (55), சிலோன்காலனி,தூத்துக்குடி
5. சௌந்திரபாண்டி மகன் மணிராஜ் ( 34/18 ), தாமோதர் நகர்,தூத்துக்குடி
6. வெணீஸ்டா ( 16/18 ),
7. அந்தோணி செல்வராஜ் ( 35/18 )
8. ஜெயராமன் ( 62/18 ),உசிலம்பட்டி,மதுரை
9. Unknown lady ( 46/18 ),திரேஸ்புரம்,தூத்துக்குடி
10.  திரேஸ்புரம்,தூத்துக்குடி
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளன

திங்கள், 21 மே, 2018

நிபா வைரஸ் ஒரு பார்வை


நிபா வைரஸ் ஒரு பார்வை

கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிபா வைரஸ் என்பது என்ன அது எப்படி பரவுகிறது என்றும் அதனை எப்படி தடுக்கலாம் என்றும் தற்போது பார்க்கலாம்.புனேயில் உள்ள வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மையம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பத்து பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் அனைவருக்கும் முதற்கட்ட சோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார். விலங்ககளிலிருந்து பரவுகிறது: நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையான தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து ​​நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்: லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.தடுப்பு மருந்துகள் கிடையாது: நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி  குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்?

மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ‘நிபா’ வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது?

பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா வைரஸ் என்ற இனத்தில், பேரமிக்ஸோவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது. ‘நிபா’வைரஸ் வசிக்கும் காட்டு உயிரினங்கள் நகரத்திற்கு வரும் போது, அங்குள்ள மனிதர்களின் ஆடு, நாய், பூனை, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அவற்றின் கழிவுகளில் இருந்து இது பரவுகிறது. பின்னர் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.

கடந்த 1998, 99 ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. மலேசியாவின் ‘நிபா’ கிராமத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதால்தான் இதற்கு ‘நிபா’ வைரஸ் என்ற பெயரே வந்தது. மலேசிய காடு அழிப்பே அதன் காரணமாகக் கூறப்பட்டது. எளிதில் தொற்றும் ‘நிபா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ‘நிபா’வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. தடுப்பூசியும் இல்லை. அதனால் நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். காய்ச்சல், தலைவலி, மயக்கம் என்று ஆரம்பித்து தாக்கிய சில நாட்களிலேயே கோமா, மரணம் என ஆளைக் கொள்ளும் கொடூர வைரஸ் ‘நிபா’.நிபாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிழைக்க 30% வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக உலகச் சுகாதார நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன.

செவ்வாய், 15 மே, 2018

பிளஸ்2 தேர்வு முடிவுகள் எந்தெந்த இணைய தளங்களில் தேர்வு முடிவுகள்?


பிளஸ்2 தேர்வு முடிவுகள் எந்தெந்த இணைய தளங்களில் தேர்வு முடிவுகள்?

பிளஸ்2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்படவுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, மாவட்ட, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோன்று பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இத்துடன் மாணவர்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு இதேபோன்று அனுப்பி வைக்கப்படும்.
ஜூனில் சிறப்பு துணைத் தேர்வு
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மே 21 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் மே 21-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் மே 21-ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற அல்லது தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 21 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு...விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வியாழக்கிழமை (மே 17) முதல் சனிக்கிழமை (மே 19) வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள், இணையதள முகவரி ஆகிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

பிக்பாஸ்’ 2வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார்..? அட இவர்கூட இதுல இருக்காரா?

‘பிக்பாஸ்’ 2வில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார்..? அட இவர்கூட இதுல இருக்காரா?

ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை இந்த நிகழ்ச்சி சந்தித்தாலும். கமல் இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம், சரிசமமாக அனைவரையும் நடத்திய முறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
இதனால் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதையும் நடிகர் கமல் தான் 
மீண்டும் தொகுத்து வழங்க உள்ளார்.
விரைவில் தொடங்க உள்ள ‘பிக்பாஸ் 2’ வில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களிடம் பிக்பாஸ் 2வில் கலந்துக்கொண்டு விளையாட தொலைக்காட்சி, அழைப்பு விடுத்து வருவதாகவும். இந்த பட்டியலில் உள்ளவர்கள் பாதி பேர் வெளியேறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்று பார்க்கலாமா..?
இனியா:
நடிகை கஸ்தூரி:
நடிகை  ராய்லக்ஷ்மி:
நடிகை லட்சுமி மேனன்:
ஜனனி ஐயர்:
நடிகை  சுவர்ணமால்யா:
நடிகை  பூனம் பாஜ்வா:
நடிகை  ப்ரியா ஆனந்த்:
நடிகை  நந்திதா:
ஆலியா மானசா:
ரக்ஷிதா:
கீர்த்தி சாந்தனு: 
நடிகர் பரத்:
நடிகர் ஷாம்:
நடிகர் சாந்தனு:
நடிகர் அசோக் செல்வன்:
நடிகர் ஜித்தன் ரமேஷ்:
நடிகர் ஜான் விஜய்:
படவா கோபி:
பவர் ஸ்டார்:
ப்ரேம்ஜி:
பால சரவணன்:
தாடி பாலாஜி: 
ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் இதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது

ஞாயிறு, 13 மே, 2018

150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு :


150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு : 

உளவுத்துறை அறிக்கை: ஆளும் மேலிடம் அதிர்ச்சி
நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்னரே, அவருக்கு, 150 தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, ரஜினியை, அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, நெருக்கடி கொடுக்க, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சமீபத்தில், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பங்கேற்றார், அப்போது அவர், 'எம்.ஜி.ஆர்., கொடுத்த நல்லாட்சியை, நானும் கொடுப்பேன்' என, பேசியதன் வாயிலாக, அ.தி.மு.க., தொண்டர்களை கவர்ந்தார். கடந்த, 9ம் தேதி, சென்னையில் நடந்த, 'காலா' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், 'சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னை புகழ்ந்து பேசினார்' என, கூறியதோடு, அவரது குரலை மீண்டும் கேட்க, ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் வாயிலாக, தனக்கு எதிரி,கருணாநிதி அல்ல என்பதை, தி.மு.க.,வினருக்கு தெரிவித்திருக்கிறார். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள், தன் பக்கம் வர வேண்டும் என்றும் விரும்புகிறார்.
தமிழக அரசியலில், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை, தன்னால் நிரப்ப முடியும் என, நம்புகிறார். அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்த நேரத்தில், '234 சட்டசபை தொகுதிகளிலும், அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது' என்ற, 'சர்வே' உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம்; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள், 8 சதவீதம்; மற்ற சமுதாய ஓட்டுகள், 15 சதவீதம் அவருக்கு கிடைக்குமாம். அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என, சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த ஆளுங்கட்சி மேலிடம், ரஜினியை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, 'ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்' என, கிண்டலாக பேசி, ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். அதேபோல், அமைச்சர் ஜெயகுமார், 'நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ரஜினி; காணாமல் போய் விடுவார்' என்றார். 'டிவி' விவாதங்களில் பேசுகிற ஆளுங்கட்சி நிர்வாகிகளும், ரஜினியை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர்.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.