செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ;பதட்டம் 5000 போலீசார் குவிப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ;பதட்டம் 5000 போலீசார் குவிப்பு

தூத்துக்குடி 2018 செவ்வாய்க்கிழமை 22 ;
 தூத்துக்குடியில் இன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.திரேஸ்புரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து தலை சிதறி பெண் பரிதாபமாக பலியானர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப் புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின் கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின் தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.


ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.


தூத்துக்குடி போலிசார் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள் அதில்
1. பொன்னுநாயகம் மகன் தமிழரசன், (35/18), குறுக்குச்சாலை
2. சண்முகம்( 25/18 ) ,ஆசிரியர் காலனி,தூத்துக்குடி
3. கோவில்பிச்சை மகன் கிளாஸ்டன் (40), லூர்தம்மாள்புரம்,தூத்துக்குடி
4. குப்புசாமி,மகன் கந்தையா (55), சிலோன்காலனி,தூத்துக்குடி
5. சௌந்திரபாண்டி மகன் மணிராஜ் ( 34/18 ), தாமோதர் நகர்,தூத்துக்குடி
6. வெணீஸ்டா ( 16/18 ),
7. அந்தோணி செல்வராஜ் ( 35/18 )
8. ஜெயராமன் ( 62/18 ),உசிலம்பட்டி,மதுரை
9. Unknown lady ( 46/18 ),திரேஸ்புரம்,தூத்துக்குடி
10.  திரேஸ்புரம்,தூத்துக்குடி
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது. மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக