வெள்ளி, 4 மே, 2018

மதியின் இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

மதியின்  இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

*கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள்!*

* மதம் மக்களுக்கு அபின் போன்றது.
* உலகாயதத்தை மனிதனின் மனம் கிரகித்து அதனைச் சிந்தனை வடிவமாக மாற்றுவது தான் எண்ணம் ஆகும்.

* விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.

* சமூதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.

* நம்முடைய முந்தைய தலைமுறை தத்துவ ஞானிகள் உலகத்தைப் பற்றி வியாக்யானம் செய்தார்கள். ஆனால், தத்துவ ஞானிகளின் உண்மையான வேலை உலகை மாற்றுவது தான்.

* மனிதனின் வாழ்க்கையை அவனது மனசாட்சி நிர்ணயிப்பதில்லை. ஆனால், சமூக வாழ்க்கை தான் அவனது மனச்சாட்சியை நிர்ணயிக்கிறது.

* இதுவரை இருந்து வரும் சமூதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே.

* தலை வணங்குவதையும், கெஞ்சுவதையும் நான் பெரிதும் வெறுக்கிறேன்.



*நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி*

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி பேராசிரியர் சாமிநாதன், முன்னாள் ராணுவவீரர் குணசேகரன் பலியாகினர்.

*கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 8 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு நோட்டீஸ்*

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 8 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்பு உரிய ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்படும் என்று கடலூர் முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

*துறையூர் அருகே வெடிமருந்து ஆலைக்கு எதிராக சாலை மறியல்*

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருங்கப்பட்டியில் வெடிமருந்து ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடைபெற்றது. முருங்கப்பட்டி தனியார் வெடிமருந்து ஆலையில் 2016-ம் ஆண்டு நடந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் மூடப்பட்ட வெடிமருந்து ஆலைக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. வெடிமருந்து ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

*மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு*

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 257 கன அடியிலிருந்து 454 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டீர் அணையில் நீர் மட்டம் 34.62 அடியாகவும், நீர் இருப்பு 9.48 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் 500 கன அடியாக உள்ளது.

*ராஜபாளையம் அருகே குடியை நிறுத்தாததால் கணவரை அடித்துக் கொன்ற மனைவி*

விருதுநகர்: ராஜபாளையம் அருகே குடியை நிறுத்தாத கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர் காலணியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஜோதிமுத்து குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மனைவி கணவரை உலக்கையால் அடித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

*ரயில்கள் ரத்து காரணமாக திருத்தணி - சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை*

திருவள்ளூர்: திருத்தணியில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி-சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

*புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது*

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் சின்னப்பாண்டுரர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

*கும்பக்கரை அருவியில் குளிக்க 2-வது நாளாக தடை*

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

*புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு*

சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஜவ்வு சதீஷ் திடீர் என உயிரிழந்துள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த வாரம் சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

*சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு நிறுத்தம்*

பொன்னேரி: சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் நீர்மட்டம் 70 மில்லியன் கனஅடியாக குறைந்ததால் புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட 2 கனஅடி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

*காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாகிச் சண்டை*

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாகிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர் அருகே சத்தாபாலில் எல்லை தாண்டி நுழைய முயன்ற தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

*மே 05 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.77.43; டீசல் ரூ.69.56*

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

*மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி ரயில்கள் 31-ம் தேதி வரை ரத்து*

சென்னை மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடங்களுக்கு இடையே உள்ள அத்திப்பட்டு-மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்கண்ட 2 ரயில் சேவைகளும் இன்று முதல் வருகிற 31ம் தேதி வரை திங்கட்கிழமைகளை தவிர முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நள்ளிரவு 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் முழுவதுமாக 22 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

*தொழில்முனைவோர் மற்றும் பயனாளிகளுக்கு 9ம் தேதி இஎஸ்ஐசி குறைதீர்க்கும் நாள்*

சென்னை: தொழில்முனைவோர் மற்றும் பயனாளிகளுக்கு வரும் 9ம் தேதி இஎஸ்ஐசி குறைதீர்க்கும் நாள் நடத்தப்படும் என்று தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:  தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகம் தொழிலாளிகள் தொழில்முனைவோர் மற்றும் பயனாளிகளுக்காக குறைதீர்க்கும்நாள் நடத்தப்படுகிறது. இதனையொட்டி வரும் 9ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, இ.எஸ்.ஐ கார்ப்பரேஷன், மண்டல அலுவலகத்தில்   குறைதீர்க்கும் நாள் நடைபெறுகிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*கென்யா வெள்ளப்பெருக்கில் 112 பேர் பலி*

நைரோபி: கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை, வெள்ளப்பெருக்கில் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.  கென்யா செஞ்சிலுவை பொதுச் செயலாளர் அப்பாஸ் கெல்லட் கூறுகையில், “ நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 112 பேர் மழை, வெள்ளத்தால் பலியாகி உள்ளனர். 48,117 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 2,60,200, 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்தன. 20 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன” என்றார்.

*பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு*

இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் கெயில் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

*திமுக தலைவர் கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் வின்ஹா சந்திப்பு*

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியுடன்  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சந்தித்துள்ளார். ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவருடன் கோபாலபுரம் வந்துள்ளார். பாஜக அதிருப்தியாளரும் பிரபல நடிகருமான சத்ருகன் சின்ஹாவும் உடன் வந்துள்ளனர்.

*நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள்*

சென்னை: நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க பினராயி உத்தரவிட்டுள்ளார். அந்தந்த மாவட்டங்களில் உதவி மையம் அமைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

*பெங்களூர் அணி வெற்றி பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: மும்பை அணி பந்து வீச்சு*

இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித்  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை எடுத்து பஞ்சாப் அணி களமிறங்கி வெற்றி

*பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நிறைவு: சந்தானம்*

மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நிறைவு பெற்றதாக விசாரணை அதிகாரி சந்தானம் அறிவித்துள்ளார்.  சென்னை சென்று விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியை கவனிக்க உள்ளேன் என்று சந்தானம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19-ல் விசாரணையை தொடங்கி 3 கட்டங்களாக சந்தானம் விசாரணை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக