2018 IPL : கோப்பையை தட்டி தூக்கியது சென்னை சூப் கிங்ஸ்! #IPL 2018
ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 26 ரன்களும், வில்லியம்சன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். யூசப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். 179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டகாரர்களாக வாட்சன் மற்றும் டு ப்ளசிஸ் களமிறங்கினர். இதில் டு ப்ளசிஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கி 32 ரன்கள் எடுத்து ஆடமிழந்தார். மேலும் வாட்சன் 117 ரன்களும், ராயுடு 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் 18.3 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL ல் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
உங்கள் கருத்துகளை பகிரவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். ரொம்ப பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
உங்கள் கருத்துகளை பகிரவும். பிடித்திருந்தால் பின் தொடரவும். ரொம்ப பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக