அனிதா பெயரில் சாட்டிலைட்; மெக்சிகோ வரை தமிழர்களின் புகழ் பரப்பிய திருச்சி பொண்ணு.!
சரியாக நேற்றும் காலை 7 மணியளவில், மெக்சிகோவில் இருந்து, காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அளவிடும் செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த செயற்கைகோள் பெயர் - ஆன அனிதா-சாட் (Anitha-SAT) ஆகும்.!

ஆம், நீட் தேர்வின் விளைவாக, தன் உயிரை மாய்த்துகொண்ட "தமிழ்நாட்டின் தங்கையான" அனிதாவின் பெயர் தான், இந்த சாட்டிலைட்டுக்கு சூட்டப்பட்டுள்ளது.ஏன்.? எப்படி.? இந்த சாட்டிலைட்டுக்கு அனிதாவின் பெயரை சூட்டியது யார்.? அனிதாவின் "புகழும்", அவள் மீதான தமிழர்களின் நேசம் எப்படி மெக்சிகோ வரை சென்றது.?

யார் இந்த வில்லெட் ஓவியா.!
திருச்சியை சேர்ந்த, 17 வயது பிளஸ் டூ மாணவியான வில்லெட் ஓவியா தான் இதற்கெல்லாம் காரணம். காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அளவிடும் அனிதா-சாட் எனும் செயற்கைக்கோளை உருவாக்கியது வில்லெட் ஓவியா தான். மெக்ஸிகோ நகரின் அஸ்ட்ரா லேப்ஸ்-ல் இருந்து, நேற்று காலை 7.00 மணி அளவில் (இந்திய இந்திய நேரப்படி) அனிதா-சாட், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

வெறும் 500 கிராம் எடையுள்ள அனிதா சாட்.!
அனிதா-சாட் என்பது வெறும் 500 கிராம் எடையுள்ள, ஒரு கூம்பு வடிவிலான செயற்கைக்கோள் ஆகும். க்ளோபல் போஷிஷனிங் சிஸ்டம் (global positioning system - GPS) மற்றும் ஒரு கேமரா உடன் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஆனது, ஒரு ஹீலியம் பலூன் உதவி கொண்டு, பூமியில் இருந்து சுமார் 15 கிமீ உயரத்தில் அதாவது ட்ராபோஸ்பியர் (troposphere) எனப்படும் பூமி கிரகத்தின் அடிவெளிப்பகுதிக்குள் நிலை நிறுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக