பெற்றோர்களே உஷார் .! வந்துள்ள பேராபத்து .,குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்...
குழந்தைகளைக் கடத்த வடமாநில கும்பல் ஒன்று தமிழகத்திற்குள் வந்துள்ளதாக வெளியான வாட்ஸ் ஆப் செய்தியால் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் குழந்தைகளைக் கடத்த, வட மாநிலங்களிலிருந்து 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று தமிழகத்திற்குள் வந்துள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாக, குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்களும், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவும்,எங்கும் வெளியே அழைத்துசெல்லவும் பெற்றோர்கள் அச்சம் கொள்கின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வந்துவிட்டதால், அவர்களை எளிதில் கடத்த முடியும் என்று எண்ணி குழந்தைகளை கடத்துவதற்காக பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து சுமார் 200 பேர் கொண்ட கும்பல் தமிழகத்திற்கு வந்துள்ளதாக வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வாட்ஸ்அப் ஆடியோவில், போலீஸார் இதுதொடர்பாக இதுவரை 10 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோர்கள் சந்தேகமான வகையில், வட மாநிலத்தவர் யாரையேனும் பார்த்தால்,அல்லது வீதியில் யாரேனும் பொருட்களை விற்பதுபோல் வந்தாலும் அவர்களை கண்காணியுங்கள் எனவும் அவர்களைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில் உள்ள தகவல்கள் உண்மையானதா என்பது தெரியாத நிலையில், குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் குழந்தைகளை பாதுகாக்கப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக