ஞாயிறு, 27 மே, 2018

ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன்


மூன்றாவது முறை ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன் 

🏏ஐ.பி.எல்., அரங்கில் 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய சென்னை அணி, மூன்றாவது முறையாக (2010, 2011, 2018) கோப்பை வென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை மும்பையுடன் (2013, 2015, 2017) பகிர்ந்து கொண்டது. இது தவிர, கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) தலா ஒரு முறை கோப்பை வென்றன.

*🎾ரூ. 20 கோடி பரிசு*

🏏ஐ.பி.எல்., பைனலில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

*🎾அனுபவ சிங்கங்கள்*

🏏சென்னை அணியில் 11 பேர், 30 வயதுக்கு மேல் இருக்க 'டாடி ஆர்மி' என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், அனுபவம் தான் சிறந்தது என சாதித்துக் காட்டியது சென்னை அணி. 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதற்கேற்ப பைனலில் 36 வயதான வாட்சன் சதம் கடந்து சென்னை அணி 3வது முறையாக கோப்பை வெல்ல காரணமானார். தவிர, ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் 'பீல்டிங்கில்' துடிப்பாக செயல்பட்டனர்.

*🎾சோதனை கடந்து சாதனை*

🏏சூதாட்ட பிரச்னை காரணமாக கடந்த 2 சீசனில் (2016, 2017) சென்னை அணி விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பின் இம்முறை மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, சொந்த மைதானமாக சேப்பாக்கத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில், காவிரி பிரச்னை எழ, போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனைகளை கடந்த சென்னை அணி, 3வது முறையாக கோப்பை வென்று சாதித்துக் காட்டியது.

*🎾3*

🏏இந்த சீசனில் ஐதராபாத் அணியின் வில்லியம்சன், 17 போட்டியில், 735 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் 3வது இடம் பிடித்தார். முதலிரண்டு இடங்களில் பெங்களூருவின் விராத் கோஹ்லி (973 ரன், 2016), ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (848 ரன், 2016) உள்ளனர்.

*🎾4*

🏏அபாரமாக ஆடிய சென்னையின் வாட்சன், இந்த சீசனில் 2வது சதமடித்தார். இதன்மூலம் ஒரு ஐ.பி.எல்., சீசனில் 2 அல்லது அதற்கு மேல் சதமடித்த 4வது வீரரானார். ஏற்கனவே கோஹ்லி (4 சதம், 2016), கெய்ல் (2 சதம், 2011), ஆம்லா (2 சதம், 2017) இச்சாதனை படைத்திருந்தனர்.

*🎾5*

🏏இம்முறை மொத்தம் 5 சதம் பதிவானது. இதில் வாட்சன் 2 (106-எதிர்: ராஜஸ்தான், 117*-எதிர்: ஐதராபாத்) சதமடித்தார். ரிஷாப் பன்ட் (128*, எதிர்: ஐதராபாத்), கெய்ல் (104*, எதிர்: ஐதராபாத்), அம்பதி ராயுடு(100*, எதிர்: ஐதராபாத்) தலா ஒரு சதமடித்தனர்.

*🎾101*

🏏இந்த சீசனில் மொத்தம் 101 அரைசதம் பதிவானது. அதிகபட்சமாக ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன், 8 அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), டிவிலியர்ஸ் (பெங்களூரு) தலா 6 மற்றும் ரிஷாப் பன்ட் (டில்லி), பட்லர் (ராஜஸ்தான்) தலா 5 அரைசதம் பதிவு செய்தனர்.

🏏இம்முறை ஒரு 'ஹாட்ரிக்' விக்கெட் கூட பதிவாகவில்லை. இதேபோல, ஒரு போட்டி கூட 'டை' ஆகவில்லை. இதனால் 'சூப்பர் ஓவர்' முறை பயன்படுத்தப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக