புதன், 29 ஆகஸ்ட், 2018

ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!!!

ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்!!!


ஐ.நா.சபை துணை பொதுச்செயலாளராக இந்தியர் நியமனம்
சத்யா திரிபாதி
இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் சத்யா திரிபாதி ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா. சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்ததாவது: இந்தியாவை சேர்ந்த சத்யா திரிபாதியை துணை பொதுச்செயலாளராக நியமித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. சபையில் பல்வெறு முக்கிய பொறுப்புகளை சத்யா திரிபாதி வகித்துள்ளார். மாசுக் கட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் இயக்குநர் மற்றும் நிர்வாகத் தலைவர், சைப்ரஸ் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையின் சட்டம் மற்றும் ஒப்பந்தக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் சத்யா திரிபாதி திறம்பட செயல்பட்டார்.

2030-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் வளர்ச்சி திட்டத்தின் மூத்த ஆலோசகராக கடந்த ஆண்டு முதல் சத்யா திரிபாதி இருந்து வருகிறார் என்று ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார். சத்யா திரிபாதி கடந்த 35 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 36 ஆண்டு கனவை நனவாக்கிய பி. வி சிந்து

இந்தியாவின் 36 ஆண்டு கனவை நனவாக்கிய
பி. வி சிந்து

ஜகார்தா: ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும், வீராங்கனையும் வெள்ளிப்பதக்கம் வென்றதே இல்லை. முதல் முறையாக வெள்ளி வென்று சிந்து வரலாறு படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பத்தம் வெல்வது என்பது இந்தியாவின் 36 ஆண்டு கனவாகும். அதை நேற்று சாய்னா நேவால் வெண்கலம் வென்று நிறைவேற்றினார். கடைசியாக 1982-ம் ஆண்டு சயித் மோடி ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின், 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நிறைவேறியது.

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை சாய்னா வசமாகி உள்ளது. கடந்த 36 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு பதக்கம் கூட வென்றதில்லை, மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை யாரும் பதக்கம் வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை சாய்னா, சிந்து இருவரும் மாற்றி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உலகசாதனையாளராக உருவெடுக்கிறார் டாக்டர் திருமா' !


உலகசாதனையாளராக உருவெடுக்கிறார் டாக்டர் திருமா' !

ஒரேநாளில் - ஆகத்து 17 ல் மட்டும் -
2, 68,558 பனை விதைகளை தமிழகமெங்கும் விதைத்த -மண்ணின் மைந்தன் திருமா அவர்களின் செயலை உற்று நோக்கினது உலக அரங்கம்! .

அதைத்தொடர்ந்து வருகின்ற ஆகத்து 29ல் - உலக சாதனையாளராக தலைவர் திருமா அவர்களை தேர்வுச்செய்து - அதற்கான

" உலக சாதனையாளர்" விருதினை தந்து மகிழ்கின்றது -

UNIVERSAL ACHEIVERS BOOK OF RECORDS "

இந்த விழா நடைப்பெறும் அரங்கம் விரைவில் வெளியிடப்படும்!

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்


கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்

ம றைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.
``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.


நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.
``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.

பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.
இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி. நன்றி துளிர் கல்வி.


முனைவரானார் திருமாவளவன்



முனைவரானார் திருமாவளவன்
-----------------------------------------------------★
*தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் முகமாக* *உருவெடுத்திருக்கும் திருமாவளவன்,* *பெரம்பலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் 1962-ல் பிறந்தார். பெற்றோர் தொல்காப்பியன் - பெரியம்மாள்.* *வீட்டுக்கு இரண்டாவது பிள்ளை. வான்மதி என்னும் அக்காள், செங்குட்டுவன், பாரிவள்ளல் என இரு தம்பிகள். காட்டில் விறகு வெட்டி வாழ்க்கையை நடத்திவந்தவர் திருமாவின் தந்தை.*

*பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்த திருமா,* *விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பியுசி,* *சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல்,* *முதுநிலை குற்றவியல் படிப்பு முடித்து, 1988-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார்.* *அந்த ஆண்டே அரசின் தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளர் பணியில் அமர்ந்தார்.* *சென்னை, மதுரை,* *கோவைஎனப் பல* *இடங்களில்* *பணியாற்றினார்.*

*கட்சி ஆரம்பித்த பிறகும் அரசுப் பணியில் இருந்தார்.* *1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசுப் பணியிலிருந்து விலகினார்.*

*அம்பேத்கரின் துணைவியார் சவீதா, பாரதிய தலித் பாந்தர் இயக்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் 1982-ல் தொடங்கியபோது, திருமா அதில் தன்னை இணைத்துக்கொண்டார். 1983-ல் இலங்கைப் பிரச்சினையையொட்டி மாணவர்கள் போராட்டம் வெடித்தபோது,* *அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளில் திருமாவளவன் ஈடுபட்டதுதான், அவரின் அரசியல் நுழைவுக்கான அடித்தளமாகும்.*

*1984-ம் ஆண்டில் கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் பொதுச்செயலர், 1985-ல் தலித், மீனவ மாணவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இளைஞர் நல இயக்கத்தின் பொதுச் செயலராகவும் பொறுப்பு வகித்த திருமா, இலங்கைப் பிரச்சினைக்காகப் பல போராட்டங்களில் ஈடுபட்டவர். 1986-ல் இலங்கை சென்ற திருமா, அங்குள்ள தமிழ்க் கல்லூரி மாணவர்களுடன் ஒரு போராட்டத்தில் பங்கேற்றார். அதே ஆண்டில், சென்னையில் தி.க. நடத்திய ரயில் மறியல் போராட்டத்திலும் பங்கேற்றார்.*

*இதனிடையே பாரதிய தலித் பாந்தர் இயக்கத்தின் தமிழக அமைப்பாளராக இருந்த அ.மலைச்சாமி 1989-ல் மரணமடையவே, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பொறுப்புக்கு 1990-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமா. அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்றும் மாற்றினார். நீலம், சிவப்பு, நட்சத்திரம் சகிதம் இந்திய ஒடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் அமைப்பின் கொடி 1990-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1991-ல் அந்த அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பானது. கொடி அதே கொடி!*

*ஆரம்பக் காலத்தில், தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டோம் என்று திருமாவால் அறிவிக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். 1990 - 1999 காலகட்டத்தில் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக, இலங்கைப் பிரச்சினைக்காக, பஞ்சமி நில மீட்புக்காக எனப் பல போராட்டங்களை நடத்தியது விசிக.*

*திருமாவை தேர்தல் அரசியல் நோக்கி அழைத்துவந்தவர் மூப்பனார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா கூட்டணிக்கு விசிகவை அவர் அழைத்துவந்தார். முதல் தேர்தலிலேயே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குக ளையும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் விசிக பெற்றதால், திருமாவை அரசியல் உலகு திரும்பிப் பார்த்தது.*

*2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது விசிக. மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டிய திருமாவளவன், தனது எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு, 2004-ல் கூட்டணியிலிருந்து வெளியேறினார்.*

 *2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த் தேசியம் போன்ற கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். தேர்தலில் தோற்றாலும், சிதம்பரம் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்குகளை திருமா அள்ளினார்.*

*தொடர்ந்து, பாமகவுக்கும் விசிகவுக்கும் வட மாவட்டங்களில் இருந்த உரசல்களைச் சீரமைக்கும் நோக்கில், பழ.நெடுமாறன், சேதுராமன் ஆகியோர் முயற்சியில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் 2004-ல் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு எலியும் பூனையுமாக இருக்கும் திருமாவும், ராமதாஸும் அன்றைக்குப் பல மேடைகளிலும், போராட்டக் களங்களிலும் ஒன்றாக நின்றனர்.*

*2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்ற அழைப்பை ஏற்றார் திருமாவளவன். தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுவையில் 2 இடங்களிலும் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் செல்வப்பெருந்தகையும், மங்களூரில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர்.* *2006 உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிய திருமாவளவன்,*

*அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மீண்டும் திமுகவுடன் விசிக கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தல் வரை நீடித்தது. 2009 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் 4.28 லட்சம் வாக்குகளோடு வென்றார் திருமா. 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இடங்களில் தோல்வியைத் தழுவவே, மக்கள் நலக்கூட்டியக்கத்தில் இணைந்தது விசிக.*

அரசியலைத் தாண்டி மின்சாரம், கலகம் போன்ற சில திரைப்படங்களிலும் திருமாவளவன் முகம் காட்டினார். இலக்கிய ஆர்வமும் திருமாவுக்கு உண்டு. ‘அத்துமீறு’, ‘தமிழர்கள் இந்துக்களா?’, ‘இந்துத்துவத்தை வேரறுப்போம்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

திருமா திருமணம் செய்துகொள்ளவில்லை. “கட்சிக்குத் தேர்தல் அங்கீகாரம் கிடைத்த பின் அதைப் பற்றி யோசிப்பேன்” என்று தனது 50-வது பிறந்த நாளன்று சொன்னார்.

வேளச்சேரியில் தாய் மண் அலுவலகம், அசோக் நகர் வெளிச்சம் அலுவலகம் என சென்னையில் இருக்கும்போதெல்லாம் தொண்டர்களுடன் கலந்திருப்பது திருமாவளவனின் அரசியல் அணுகுமுறை!

நன்றி : தி இந்து

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு SBI அழைப்பு!


ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளா்களுக்கு SBI அழைப்பு!


இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, ‘சிப்’ அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளா்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது. இதற்கு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ‘ஸ்கிம்மா்’ கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளா்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ‘சிப்’ அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசா்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக டுவிட்டரில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்பார்ந்த வாடிக்கையாளா்களே, ஆா்பிஐ வழிகாட்டுதலின்படி நமது வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் அட்டைகளை ‘சிப்’ தொழில்நுட்பத்தில் மாற்ற இருக்கிறோம். வாடிக்கையாளா் தங்கள் அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இதற்கு இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளா்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.
எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பகுதி ஏற்கெனவே சிப் தொழில்நுட்பத்தில் உள்ளது. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய அட்டைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வருகின்றன...

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வாகப் போகும் மு.க ஸ்டாலின்


போட்டியின்றி திமுகவின் தலைவராக தேர்வாகப் போகும் மு.க ஸ்டாலின்

திமுகவில் தலைவராக செயல்தலைவர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ் அறிவுப்பு நாளை மறுநாள் வெளியாகும். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு நாடெங்கிலிருந்தும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய ஸ்டாலின், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இன்று அளித்தார். அதேபோல் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முனைவர் (PhD) சான்றிதழ் பெற்ற திருமா



முனைவர் (PhD) சான்றிதழ் பெற்ற திருமா
~~~~~~~~
கடந்த சில ஆண்டுகளாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் 'Mass Religious Coversion at Meenakshipuram; A Victimological Analysis' என்ற தலைப்பில் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மேற்கொண்ட முனைவர் பட்ட (PhD) ஆய்வு அறிக்கையை (Thesis) பல்கலைகழகத்தில் சமர்பித்திருந்தார்.

நேற்று (24.8.2018) பல்கலைகழகத்தில் வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் பங்கேற்று தனது ஆய்வை விளக்கி உரையாற்றினார். டெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் குற்றவியல் துறையின் பேராசிரியரும், வாய்மொழித் தேர்வின் (Viva) கண்காணிப்பாளருமான திரு.பாஜ்பாய் அவர்களும், எழுச்சித்தமிழரின் ஆய்வு நெறியாளரும், பேராசிரியருமான Dr.திரு.சொக்கலிங்கம் அவர்களும், மற்றும் அங்கிருந்த பேராசிரியர்களும், மாணவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு எழுச்சித்தமிழர் பதிலளித்தார்.
முனைவர் பட்ட ஆய்வில் (PhD) எழுச்சித்தமிழர்  தேர்ச்சி பெற்றதாக தேர்வாளர்கள் அறிவித்தனர்.

பின்னர் பல்கலைகழக துணைவேந்தர் திரு.பாஸ்கர் அவர்களும் எழுச்சித்தமிழரின் ஆய்வு நெறியாளரும், எனது பேராசிரியருமான முன்னாள் துணைவேந்தர் Dr.சொக்கலிங்கம் அவர்களும் முனைவர் பட்ட (Ph.D - Provisional Certificate) சான்றிதழை வழங்கினார்கள்.

ஏன்பௌத்தம்தழுவாமல்...இஸ்லாம்தழுவினர்? இதுவேஆய்வு! முனைவர் திருமா விசிக தலைவர்


ஏன்பௌத்தம்தழுவாமல்...இஸ்லாம்தழுவினர்? இதுவேஆய்வு!
முனைவர் திருமா விசிக தலைவர்

பரபரப்பான தமிழக அரசியல் பணிகளுக்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இது ஒன்றும் படிக்காமலோ, அல்லது சிபாரிசின் அடிப்படையிலோ, அல்லது செல்வாக்கினை பயன்படுத்தியோ வாங்கிக் கொண்ட கெளரவ பட்டம் அல்ல. பிஎச்டி என்னும் ஆராய்ச்சி மேற்கொண்டு களப்பணி ஆற்றி பெற்ற டாக்டர் பட்டம் ஆகும். அவர் எடுத்துக் கொண்ட தலைப்பின் பெயர் மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு'என்பதுதான். மீனாட்சிபுரம் தமிழக மக்களால் என்றென்றும் மறக்க முடியாத ஒரு கிராமம். நெல்லை மாவட்டத்தில் உள்ளது. 1981-ம் ஆண்டு ஏராளமானோர் இந்த கிராமத்தில் மதம் மாறிய நிகழ்வு பெரும் விவாதங்களையும், சர்ச்சைகளையும், கிளப்பிவிட்டு அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அதனால்தான் இந்த மீனாட்சிபுரத்தினை அவர் ஆய்வுக்காக மேற்கொண்டார். இதனை எவ்வளவோ அரசியல் வேலைகளுக்கு இடையே பொறுப்புடன் முடித்து அதனை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்து வைவாவையும் முடித்துவிட்டு அசத்தி விட்டார் திருமாவளவன். மீனாட்சிபுரத்தை திருமாவளவன் ஏன் தேர்ந்தெடுத்தார், ஆய்வின் முடிவு என்ன, தாக்கம் என்ன, மாற்றம் என்ன, இவை அனைத்தையுமே கேள்விகளாக தொடுத்து "நிகழ்வு செய்திகள் ®"சார்பாக அவரிடம் கேட்கப்பட்டது. அவற்றுக்கு திருமாவளவன் அளித்த பதில்கள்தான் இவை:

#கேள்வி: உங்களுடைய பிசியான அரசியல் செடியூலில் எப்படி ஆய்வு செய்வதற்கெல்லாம் நேரம் ஒதுக்கினீர்கள்?

#பதில்: நேரம் ஒதுக்குவதில் கடுமையான நெருக்கடி இருந்தது. சிரமங்களும் இருந்தன. இருந்தாலும் நேரடையாககிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க 3 நாட்களை இதற்கென ஒதுக்கி கொண்டேன். அந்த 3 நாட்களும் கிராமத்திலேயே தங்கி இருந்து அவர்களிடம் கேள்வித் தாள்களை கொடுத்து, அதற்குரிய பதில்களை அவர்களிடம் பதில்களை பெற்று டேட்டா கலெக்‌ஷன் என்ற தகவல் சேகரிப்பு பணியினை நிறைவு செய்தேன். அதன்பிறகு அதை வைத்து உரிய வல்லுநர்களை கலந்து பேசி குறிப்பாக புள்ளியல் துறை சார்ந்த கலந்து பேசி ஆய்வை மேற்கொண்டோம்.

#கேள்வி: வட மாவட்டத்தைச் சேர்ந்த நீங்கள் ஏன் ஆய்வுக் களமாக தென் மாவட்டத்தை தேர்ந்தெடுத்தீர்கள்? குறிப்பாக மீனாட்சிபுரம் பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்தீர்கள்?

#பதில்: இதில் வட மாவட்டம், தென்மாவட்டம் என்கிற பாகுபாடு இல்லை. நான் மாநில கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில் இந்த மத மாற்றம் குறித்து அப்பவே ஊடகங்களில் தெரிவித்திருக்கிறேன். அகில இந்திய அளவில்அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மறைந்த வாஜ்பாய் அவர்கள், நேடிடையாக அந்த கிராமத்திற்கு வந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான யோகேந்திர மகந்த் அந்த கிராமத்திற்கு சென்றார். அதைபோல தமிழகத்தை சேர்ந்த இளையபெருமாள் அவர்களும் அந்த கிராமத்திற்கு சென்றிருக்கிறார். இதையெல்லாம் அப்போதே செய்தித்தாள்களில் நான் படித்திருக்கிறேன். அப்போதே கிராம மக்கள் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு போகிறார்களே, அதுவும் இஸ்லாம் மதத்தை ஏற்கிறார்களே, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்ற வேட்கை எனக்குள் எழுந்தது. பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது, அவரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. சென்னை பல்கலைக்கழத்தில் நான் படித்தபோது எனக்கு எனக்கு பேராசிரியராக இருந்தவர். அவரிடம்தான் நான் 2 வருடங்கள் படித்தேன். எனவே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரான பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது ஆராய்ச்சி குறித்து அவரிடம் தெரிவித்தேன். இருவரும் கலந்து பேசினோம்.

அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அவரது கண்காணிப்பு மற்றும் ஒத்துழைப்போடு தான் இந்த ஆராய்ச்சியை நான் மேற்கொண்டேன்.

#கேள்வி: நீங்கள் ஏன் மத மாற்றத்தைப் பற்றி ஆய்வுத் தலைப்பாக எடுத்தீர்கள்? அம்பேத்கர், அயோத்திதாசர் போன்றவர்கள் பௌத்தத்தை மதமாற்றத்தை வலியுறுத்திய நிலையில் நீங்கள் ஏன் இஸ்லாம் மத மாற்றம் பற்றி ஆய்வு செய்தீர்கள்?

#பதில்: அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் தனிப்பெரும்தலைவர். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அவரை தலைவராக ஏற்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மக்கள் அகில இந்திய அளவில் பௌத்தத்தை தழுவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் பௌத்தத்தை தழுவுவதற்கு பதில், ஏன் இஸ்லாம் மதத்தை தழுவுகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

இதுதான் நான் ஆராய்ச்சி செய்வதற்கான முக்கியமான காரணம். ஆகவே இந்த ஆய்வு எனக்கு என்ன விடையை தருகிறது என்றால், கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் சாதிக் கொடுமைகளுக்கு எதிரானதாக, அல்லது சாதியை ஒழிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்துதான் இந்த மக்கள் இவ்வாறு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு புரிய வந்துள்ளது.

#கேள்வி: அரசியல்வாதிகள் பலரும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கௌரவ டாக்டர் பட்டம் பெறுகையில், நீங்கள் படித்து வாங்கியிருக்கிறீர்கள். இதைப்பற்றி உங்களுடைய கருத்து?

#பதில்: டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அதற்காகவும் இதை நான் செய்யவில்லை. இந்தசாதி ஒழிப்பு களத்தில் நான் நீண்ட காலமாகவே பணியாற்றி கொண்டிருக்கிறேன். அதில் மதமாற்றம் என்பது முக்கியமானஒரு நிகழ்வு. அம்பேத்கர் அவர்கள் 1956-ம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்களோடு பௌத்தத்தை தழுவினார். சாதியை ஒழிப்பதற்கு அது ஒரு வழிமுறை. அதுபோல் இங்கே தமிழகத்தில் இஸ்லாம் மதத்தை ஒரு கிராமமே கிட்டத்தட்ட 200 குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். இந்த செயல்பாட்டை அதன் வரலாற்று பின்னணியோடு பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது. மதமாறிய பிறகு அவர்களின் சமூக அந்தஸ்து, பொருளாதார தகுதி, கல்வித்தகுதி எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையும் காணவேண்டும். அதை அறிவியல்பூர்வமான வழிமுறைகளோடு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே இதற்காகத்தான் இந்த ஆய்வில் ஈடுபட்டேனே தவிர டாக்டர் பட்டம் கிடைக்க வேண்டும் என்று படிக்கவில்லை. வரலாற்று உண்மைகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் என்னை இதில் ஈடுபடுத்தி கொண்டேன்.

#கேள்வி: 1.உங்களுடைய ஆய்வில் நீங்கள் எந்த மாதிரியான முடிவைக் கண்டடைந்தீர்கள்?

2.மீனாட்சிபுரத்தில் மதம்மாறிய மக்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது?

#பதில்: கண்டிப்பாக அவர்களின் சமூக தகுதி மாறியிருக்கிறது. 37 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை பள்ளர்கள் என்று இழிவுபடுத்திய சமூகம் இன்றைக்கு இஸ்லாமியர்களாக பார்க்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படி பார்க்கிறபோது, "வாங்க பாய்..." என்று அழைக்கும் என்ற ஒரு நிலையை கண்ணெதிரே என்னால் பார்க்க முடிகிறது. அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இப்போது பிறவி இஸ்லாமியர்களாக அதாவது BORN MUSLIMS -களாக வளர்ந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு சமூக ரீதியான எந்த ஒடுக்குமுறையோ இழிவோ எதுவும் கிடையாது. பொருளாதாரத்திலும் அவர்கள் மேம்பட்டிருக்கிறார்கள். அயல்நாடுகளுக்கும் மிக எளிதாக வேலைக்கு செல்கிறார்கள்.

கோரைக் குடிசைகள் எல்லாம்இப்போது மாறி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டியிருக்கிறார்கள். அதுபோல பொது இடங்களில், வணிக வளாகத்தேயே ஒருவர் கட்டியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அவருக்கு பெட்டிக்கடை கூட திறக்க முடியாத நிலை இருந்தது.

புதன், 22 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ள பாதிப்பு: ரூபாய் 25 லட்சம் உதவி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

கேரள வெள்ள பாதிப்பு: ரூபாய் 25 லட்சம் உதவி!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~
கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும்விதமாக ரூபாய் 25 லட்சம் உதவி வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 10 லட்சம் நிதியாகவும் ரூபாய் 15 லட்சம் பொருட்களாகவும் வழங்கப்படும்.
மழைவெள்ள பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு மொழி, இனம், மதம் கடந்து பல்வேறு தரப்பினரும் உதவ முன்வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. கேரள மாநிலத்தின் கோரிக்கையை ஏற்று மிகத்தீவிரமான இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள உதவி போதுமானதல்ல. குறைந்தபட்சம் ஐந்தாயிரம் கோடி ரூபாயாவது நிதியுதவி அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

கர்நாடகாவிலும் கேரளாவிலும் பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பொழிந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பருவ மழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விசிக.

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம் ...

ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம் ...

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தனது மனிதாபிமான பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அன்னான்.
அன்னானின் மரணம் குறித்து அறிவித்துள்ள அவரது அறக்கட்டளை சனிக்கிழமையன்று கோபி அன்னான் மரணமடைந்தார். அவர் கொஞ்ச காலமாகவே நோயினால் பாதிக்கப்பட்ருந்தார்.

1997 முதல் 2006 வரை ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்தவர் கோபி அன்னான். இந்தப் பதவியை வகித்த முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் அன்னான்தான். அதன் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக கோபி அன்னான் பணியாற்றியுள்ளார்.
சிரியாவில் அமைதி திரும்பச் செய்வதற்காக கடுமையாக முயற்சி செய்தார். அன்னானின் பதவிக்காலத்தின்போதுதான் 2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. சதாம் உசேன் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் 2006ல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!


ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!

சமூக வலைதளங்களில் இப்போ இந்தப் படம்தான் உலா வந்து கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி.

சமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

இதுதான் மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.

யார் எடுத்த படம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது.

நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம்.

அந்தப் பாட்டியின் கண்களைப் பாருங்கள், அவரது கைகளைப் பாருங்கள்.. எத்தனை செய்தி.. எத்தனை வேதனை.. எத்தனை ஆதங்கம்.. எத்தனை குமுறல்.. எத்தனை வருத்தம்.. எத்தனை எதிர்பார்ப்பு.. எத்தனை ஏமாற்றம்.

மறுபக்கம் அந்தக் குரங்கு..

அதன் உணர்வுகளைப் பாருங்கள். அதன் கண்களைப் பாருங்கள். அது கைவைத்திருக்கும் விதத்தைப் பாருங்கள்.. உணர்ந்து அது செய்திருக்கவில்லைதான். ஆனால் அதன் தோற்றமும், அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே சமாதானம் செய்வதைப் போல, ஆறுதல் சொல்வதைப் போல உள்ளது.இந்தப் படம்

பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வலி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை."
ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!

சமூக வலைதளங்களில் இப்போ இந்தப் படம்தான் உலா வந்து கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி.

சமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

இதுதான் மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.

யார் எடுத்த படம், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இதைப் பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது.

நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம்.

அந்தப் பாட்டியின் கண்களைப் பாருங்கள், அவரது கைகளைப் பாருங்கள்.. எத்தனை செய்தி.. எத்தனை வேதனை.. எத்தனை ஆதங்கம்.. எத்தனை குமுறல்.. எத்தனை வருத்தம்.. எத்தனை எதிர்பார்ப்பு.. எத்தனை ஏமாற்றம்.

மறுபக்கம் அந்தக் குரங்கு..

அதன் உணர்வுகளைப் பாருங்கள். அதன் கண்களைப் பாருங்கள். அது கைவைத்திருக்கும் விதத்தைப் பாருங்கள்.. உணர்ந்து அது செய்திருக்கவில்லைதான். ஆனால் அதன் தோற்றமும், அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே சமாதானம் செய்வதைப் போல, ஆறுதல் சொல்வதைப் போல உள்ளது.இந்தப் படம்

பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வலி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கேரளத்தில் பேய் மழை.....தொடரும் அபாயம்......



கேரளத்தில் பேய் மழை.....தொடரும் அபாயம்......

மனித புரிதலை யும் தாண்டிய ஏதோ ஒன்று.....

இந்த தேசத்தில் எதுவும் சாத்தியமே...

Vijayakumar Arunagiri   ன் பதிவு

கேரளாவில்  நிகழ்வது இயற்கையின் சீற்றமா இல்லை இறைவனின் தண்டனையா?

தொடர்ந்து பெய்து வரும் கடுமையான மழையினா ல் ஒட்டுமொத்த கேரளா மாநிலமே பாதிக்கபட்டு
ள்ளது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து
விட்டது.சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக் கான ரோடுகள் அழிந்து விட்டது.8000 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில
அரசு அறிவித்துள்ளது.

ஆச்சரியமாக பம்பை நதியில் ஓடும் வெள்ளத்தி னால் சபரிமலைக்கே யாரும் வர வேண்டாம்
என்று  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்த
மாதம் தான் உச்சநீதி மன்றத்தில் சபரிமலைக்கு
அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும்
என்று மாநில அரசு வாதாடிய நிலையில் இப்பொழு து யாருமே கோயிலுக்கு செல்ல முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.இது இயற்கையின் சீற்றமா இல்லை
இறைவனின் தண்டனையா என்று கேட்டால் இரண்டும் ஒன்று தான் என்றே நான் கூறுவேன்.

ஏனென்றால் இயற்கையே இறைவனின் படைப்பு
தானே..

நம்முடைய பாரத நாடு ஒரு புண்ணிய பூமி.இங்கு ஏராளமான புராணங்களும்அதை சுற்றும் பல நம்பி க்கைகளும் இங்கு உள்ளது.. நம்முடைய நாட்டில் விஞ்ஞானத்திற்கும் மேற்பட்ட நிறைய நிகழ்வுகள் நடைபெறுகிறது.அதில் ஒன்று தான் இப்போதைய கேரள பெரு வெள்ளம்.

சமீபத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயிலில்
இளம் பெண்கள் நுழைந்தால் என்ன தவறு? என்கிற
வாதங்க ளை  மாநில அரசாங்கமே உச்சநீதி மன்றத் தில் எடுத்து வைத்து வந்தது.இதன் தீர்ப்பு வெளி வர
இருக்கும் நிலையில் கேரளாவை சுழற்றி அடிக்கும்
மழையும் சூழ்ந்து நிற்கும் வெள்ளமும் இதற்கெல் லாம் ஐயப்பன் தான் காரணம் என்று கேரளா மக்களை கூற வைத்துள்ளது.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அடையாளம் உண்டு. நம் முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த ஆகம விதிகள் உண்டு.இதில் அரசர்களே தலையிட்டது கிடையாது.ஆனால் கேரளாவை ஆளும் கடவுள் எதிர்ப்பு  இடது சாரி கூட்டம் சபரிமலை கோயிலில் பெண்களை வயது வித்தியாசம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று  ஒப்பாரி வைக்கிறார்கள்.

இதனால் தான் இப்பொழுது  கேரளா வரலாற்றில் இல்லாத  மழை பெய்து பெரு வெள்ளம் உண்டாகி கேரளாவே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.சென்னை யில் கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த வெள்ளத்தை விட  5 மடங்கு வெள்ளத்தை கேரளா மாநிலம் சந்தித்து வருகிறது.இது கடவுளின் தண் டனை என்று கடவுள் தேசத்தின் மக்கள் இப்பொழுது
கண்ணீருடன் கதறி வருகிறார்கள்.

கிட்ட தட்ட  இப்போதைய கேரளாவின் நிலைமை
2013 ல் உத்தர்காண்டு மாநிலம் சந்தித்த கன மழை
யையும் அதனால் உண்டான பெரு வெள்ளத்தையும்
உதாரணம் காட்டி கேரளா மீடியாக்கள் எழுத ஆரம்பித்து இருக்கிறார்கள்.அதனால் தான் நானும்
கேரளாவின் வெள்ளத்தையும் உத்தரகாண்டு வெள்ள த்தையும் ஒற்றுமை படுத்தி கடவுள் நம்பிக்கையோ டு இதை எழுதுகிறேன்..

முதலில் கேரளாவில் இருந்து ஆரம்பிப்போம்..

இந்த உலகில் நீர் தோன்றி நிலம் உருவாகி உயிரி னங்கள் உருவாகி மனிதகுலம் பிறந்து நாகரிகங்கள் வளர்ந்து தர்மமும் அதர்மமும் மனித வாழ்வில் பிறப்பில் இருந்து இறப்பின் வரை உடன் வருபவை என்று உலகிற்கு உணர்த்த இந்து தர்மம் சொல்லும் கடவுளின் அவதாரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பூமி  கேரள மாநிலம்.

எப்பொழுதுஎல்லாம் அதர்மம் ஆட்டம் போடுகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவன் மனிதஅவதாரமெடு த்து தர்மத்தை நிலை நாட்டுவான் என்கிற கூற்றுபடி பெருமாளின்ஐந்தாவது அவதாரம் என இந்து தர்மம் போதிக்கும் வாமன அவதாரம் நிகழ்ந்த பூமி

கேரளா மாநிலம் விஸ்ணுவின்  ஆறாவது அவதார மான பரசுராம ரால் உருவாக்கபட்டது.என்று புராண ங்கள் சொல்கி ன்றது.சத்ரியர்களை கொன்ற தோஷ த்தை போக்க இன்னொரு பூமியை உருவாக்கி பிரா மணர்க ளுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய கோடாரியால் கடலை பிளந்து உரு வாக்கிய பூமிதான் மலையாள பூமி..

பரசுராமரால் உருவாக்கப்பட்ட பூமி என்பதாலே  இன் றும் கேரளாவை கடவுளின் தேசம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.அது மட்டு மல்லாது .இன்று ம்  கேரளாவை பரசுராம சேத்திரம் என்றும் சொல்கி றார்கள். இப்படி ப் பட்ட பெருமை கொண்ட து கேரளா.

கடலின் நீர் உப்புத்தன்மை வாய்ந்தது என்று இந்த அறிவியல் உலகம் எப்பொழுது உணர்ந்தது என்று நமக்கு தெரியாது. ஆனால் பரசுராமர் உருவாக்கிய இந்த கேரளா கடலில் இருந்து வந்ததால் நீரில் இரு ந்த உப்பு தன்மையை போக்க காலகோடா என்கிற விஷத்தை பாம்புகளிடம் இருந்து  கக்க வைத்து நிலத்தின் உப்புத்தன்மையை மாற்றி கேரளாவை இயற்கை பூத்துக்குலுங்கும் சோலையாக பரசுராமர்
உருவாக்கினார் என்று இந்து புராணங்கள் கேரளா வின் வரலாற்றை கூறுகின்றன.

இதற்கு அடையாளமாக  கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபட் என்கிற இடத்தில் உள்ள  மானரசலா நாகராஜர்  கோயிலில் தான் பரசுராமர் நாகராஜாவை வணங்கி மலையாள மண்ணின் உப்புத்தன்மையை போக்க நாகங்களின் உதவிக் கேட்டு தவமிருந்தார் என்று கேரளா மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

இப்படி கடவுள் நம்பிக்கை உடைய கேரள மக்கள்
இப்பொழுது கேரளாவை அழிக்கும் கனமழையை
இயற்கையின் சீற்றம் என்று கூறாது இறைவனின்
தண்டனை என்றே கூறுகிறார்கள்.இப்படித்தான்
உத்தரகாண்டு மக்களும் 2013 ல் நடைபெற்ற பெரு
வெள்ளத்தை தாரீ தேவியின் தண்டனை என்றே
கூறினார்கள்.

மேக வெடிப்பினால் மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தான் உத்தரகாண்டில் பெரு வெள் ளம் வந்தது என்று விஞ்ஞானம் சொல்லிக் கொண்டு இரு க்க உத்தர காண்டில் கேதர்நாத்துக்கு நேர் எதி ரில் இருக்கும் ஸ்ரீநகரில் வாழும் மக்களோ இத னை தாரீ தேவியின் கோபம் தான் என்று இன்றும் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். இதாங்க ஆச்சரியம்

காஸ்மீரை போலவே உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரு ஸ்ரீநகர் உள்ளது அலக்நந்தா நதிக்கரையில் இந்த நகரம் உள்ளது. இங்கு தான் அன்னைதாரி தேவி கோயில் இருந்தது.உத்தர்கான்டின் காவல் தெய்வம் தாரீதேவி யாகும்.சார்தாம் யாத்ரா என்று சொல்லப் படும் கேதார் நாத் பத்ரிநாத் கங்கோத்ரி யமுனோத்ரி யாத்திரை தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு காவலாய் நின்று காப்பவள் தாரீ தேவியாகும்

கங்கைநதியின் துணை நதிகளில் மந்தாகினி நதி அமைதியின் ஸ்வரூபம். பெண்மையின் அம்சம். இங்கு தான் கேதார்நாத் கோயில் உள்ளது.ஆனால் அலக்நந்தா நதி வீறு கொண்டு எழுந்த ஜல்லிக்கட்டு காளையை போல ஆண்மையின் ஒரு அம்சமாக பிரவாகமாக ஓடி வரும்.இங்கு தான் தாரீ தேவி கோயில் உள்ளது.

இந்த அலக்நந்தா நதியின் சீற்றத்தை அடக்கி ஆள் பவள் தான் அன்னை தாரீ தேவியாகும்.அவளது அரு ளால் தான் அலக்நந்தா கட்டுப்பாட்டில் இருக்கிற தென்றும் அலக்நந்தா அமைதியாக அடக்கமாக ஓடிக்கொண் டிருக்கிறது என்பதும் இங்குள்ள மக்க ளிடையே இன்றளவும் உலவும் நம்பிக்கையாகும். நம்பிக்கை தானே வாழ்க்கை.

இந்த நிலையில் தான் அலக்நந்தா நதியில் அணை கட்டி நீர்மின்சாரம் தயாரிக்க முடிவு செய்து அதற்கா ன ஏற்பாட்டில் இறங்கியது  முந்தைய காங்கிரஸ் அரசாங்கம். அணை கட்டுவதற்கு இடைஞ்சலாக உள்ள தாரீ தேவி கோயிலை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்து அதற்காக வேறு ஒரு இடத்திலும் கோயில் கட்டபட் டது.

2013 ம் ஆண்டில் ஜூன் 16, மாலை 6 மணிக்கு மேல் அன்னை தாரீ தேவியின் கோயில் இடிக்கப்ப்பட்டது. கோயிலில் குடி கொண்டிந்த தேவியின் சிலையும் அறுக்கபட்டு புதிதாக கட்டப்பட்ட கோயிலுக்கு இர வோடு இரவாக இடம் மாற்றப்பட்டது.

இது நடந்த இரண்டு மணி நேரத்தில் கேதாரநாத்தில் பலத்த இடியுடன் மழை பெய்ய துவங்குகிறது அதைத் தொடர்ந்து அலக்நந்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ' உத்தரகாண்ட் மாநிலமே அழிந்து போனதை நாம் அறிவாம்.

சற்றே யோசித்து பாருங்கள் எத்தனையோ மழை காலங்களில் பெருகாத காட்டாற்று வெள்ளம் இந்த கோயி ல் இடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும் வெள் ள ம் வந்து பேரழிவு ஏற்படுத்தியதை நினைத் தால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..

இது தன்னுடைய கோயிலை இடித்ததால் தாரீதே வி க்கு உண்டான கோபம் என்று அப்பகுதி மக்கள் சொல் வதி லும் நியாயம் இருக்கிறதல்லவா..எதுவாக இரு ந்தாலும் நமக்கு மேல் ஒரு சக்தி இறைவன் வடிவில் உள்ளது என்பதை ஏற்று கொண்டேஆக வேண்டும்.

இதனால்தான் மீண்டும் கூறுகிறேன்..நம்முடைய பாரத நாடு ஒரு புண்ணிய பூமி.இங்கு ஏராளமான புராணங்களும் அதை சுற்றும் பல நம்பிக்கைகளு ம்  உள்ளது..அதனால் சபரிமலை கோயிலுக்கு  யார் வர வேண்டும்  யார் வரக்கூடாது என்று தீர்மா னிக்க வேண்டியது கோயில் நிர்வாக மே தவிர அடு த்த தேர்தலில் அட்ரஸ் இல்லாமல் போகப்போகும் இடது சாரிகள் அல்ல...

வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு



வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார். நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்த வாஜ்பாய் தனது 93வது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று மாலை 5.5 மணிக்கு வாஜ்பாய் காலமானார்.
வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

மதுரை பேந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!!!

மதுரை பேந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது!!!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி லீக் துவக்க சுற்று ஆட்டங்கள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கலில் தொடங்கி நடைபெற்று வந்தன. இந் நிலையில் 31 ஆட்டங்கள் முடிந்து புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திண்டுக்கல் அணி தரப்பில் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
துவக்கமே சரிவு: ஹரி நிஷாந்த் 1, பாலச்சந்தர் அனிருத் 4, சதுர்வேதி 9, வருண் தோடாத்ரி 0, மோகன் அபிநவ் 1, விவேக் 13 என சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 7.4ஆவது ஓவரின் போது 6 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 42 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது.
கேப்டன் ஜெகதீசன் மட்டுமே நிலைத்து ஆடினார். மற்ற வீரர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை. ராமலிங்கம் ரோஹித் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
ஜெகதீசன் 51: 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஜெகதீசன் ஆட்டமிழந்தார். இறுதியில் மொகமது 17, சிலம்பரசன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து திண்டுக்கல் அணி 117 ரன்களையே எடுத்தது.
மதுரை தரப்பில் அபிஷேக் தன்வர் 4-30, லோகேஷ் ராஜ் 3-31, வருண் சக்கரவர்த்தி 2-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
118 ரன்கள் இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது.
ஆரம்பமே அதிர்ச்சி: மதுரை அணி தரப்பில் அருண்கார்த்திக், தலைவன் சற்குணம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் அதற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. திண்டுக்கல் அணியின் சிலம்பரசன் அபாரமாக பந்துவீசி தொடர்ந்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். தலைவன் சற்குணம், துஷார் ரஹேஜா, ரோஹித் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். அப்போது முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டை இழந்து 2 ரன்களுடன் மதுரை தள்ளாடியது.
பின்னர் சிறப்பாக ஆடி தலா 4 சிக்ஸர், பவுண்டரியுடன் 50 பந்துகளில் 75 ரன்களை குவித்த அருண் கார்த்திக், 49 பந்துகளில் 38 ரன்களை குவித்த ஷிஜித் சந்திரன் ஆகியோர் மதுரை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 17.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து மதுரை அணி 119 ரன்களுடன் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 3-23 விக்கெட்டை வீழ்த்தினார். அருண் கார்த்திக் போட்டி நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதன்முறையாக மதுரை பேந்தர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்...


கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்...

கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி; ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் மொத்தம் 44 ஆறுகள் உள்ளன. இந்த 44 ஆறுகளிலும் பாரபட்சமின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பதால் அணைகளில் கூட வெள்ளநீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இடமின்றி தற்போது அத்தனை அணைகளையும் கேரள அரசு திறந்து விட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் அந்த 44 ஆறுகள் என்னென்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக கேரளாவில் ஆறுகள் அளவில் சிறியவை மட்டுமல்ல, அவை கடந்து சென்று கடலில் கலக்கும் தூரமும் குறைவு என்பதாலும், கேரளாவில் மலைப்பாங்கான பிரதேசங்கள் அதிகம் என்பதாலும் ஆறுகளின் வேகம் மிதமிஞ்சியதாக இருக்கும். போலவே மழைப் பருவங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கோடையில் இந்த ஆறுகளில் பலவும் முற்றிலும் வற்றி உலர்ந்து போகும் தன்மையும் கொண்டவை. மொத்தம் 44 ஆறுகளில் 41 ஆறுகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாயக்கூடியவையாகவும் மீதமுள்ள 3 ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயக்கூடியவையாகவும் உள்ளன.

மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் (41)

1. பெரியார் ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

இடமலா ஆறு
செருத்தோணி ஆறு
முல்லையார் ஆறு
முத்திரப் புழா ஆறு
பெரிஞ்ஞான் குட்டி ஆறு
2. பரதப்புழா ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

துத்தப்புழா ஆறு
காயத்ரிப் புழா ஆறு,
கல்பாத்திபுழா ஆறு,
கண்ணாடிப்புழா ஆறு
3. பம்பா நதி மற்றும் அதன் கிளையாறுகள்...

அழுதயாறு
காக்கியாறு,
காகட்டாறு
கல்லாறு
பெருந்தேனருவி
மடத்தருவி
தனுங்கட்டித்தோடு
கோழித்ஹ்டோடு
வரட்டாறு
குட்டேம்பெரூர்
4. சாலியார் ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

செறுபுழா (மாவூர்)
இருவஞ்சிப்புழா
செறுபுழா (அரீகோட்)
குத்திரப்புழா
குறுவன் புழா
கஞ்சிரப்புழா
கரிம்புழா
பாண்டிப்புழா
நீருப்புழா
5. சாலக்குடி ஆறு & கிளையாறு...

பரம்பிக்குளம் ஆறு
6. கடலுண்டி ஆறு

7. அச்சன்கோயில் ஆறு

8. கல்லடா ஆறு

9. மூவாட்டுப்புழா ஆறு

10. வலப்பட்டணம் ஆறு

11. சந்திரகிரி ஆறு

12. மணிமாலா ஆறு

13. வாமனபுரம் ஆறு

14. குப்பம் ஆறு

15. மீனாட்சி ஆறு

16. குட்டியாடு ஆறு

17. கரமனா ஆறு

18. சிரியா ஆறு

19. கரியங்கோடு ஆறு

20. இத்திக்கர ஆறு

21. நெய்யாறு

22. மாஹே ஆறு

23. கெச்சேரி ஆறு

24. பெரும்பா ஆறு

25. உப்பள ஆறு

26. கருவன்னூர் ஆறு

குருமலி ஆறு
27. அஞ்சரகண்டி ஆறு

28. திரூர் ஆறு

29. நீலேஷ்வரம் ஆறு

30. பலிக்கல் ஆறு

31. கல்லயி ஆறு

32. கோரப்புழா ஆறு

33. மோக்ரல் ஆறு

34. கவ்வை புழா ஆறு

35. தனிக்குடம் ஆறு

36. மாமம் ஆறு

37. தலசேரி ஆறு

38. சித்தரி ஆறு

39. ராமாபுரம் ஆறு

40. அயிரூர் ஆறு

41. மஞ்சேஸ்வரம் ஆறு

கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள்... (3)

1. கபனி
2. பவானி
3. பம்பாறு

நன்றி
தினமணி


ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

அம்மாவைவிட செல்போன் அதிக மகிழ்ச்சி தருகிறதோ..

அம்மாவைவிட செல்போன் அதிக மகிழ்ச்சி தருகிறதோ..

நவீன காலத்து குழந்தைகளை ‘டச் போன்’கள் மகிழ்வித்துக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதனோடுதான் செலவிடுகிறார்கள். அதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைபார்த்துவிட்டு களைத்துப் போய் வீடு திரும்புகிறார்கள். குழந்தைகளிடம் பேசக்கூட நேரமில்லாத நிலையில், கையில் இருக்கும் போனை அதனிடம் கொடுத்துவிட்டு, ‘இதை பார்த்துக்கொண்டு அம்மாவை தொந்தரவு செய்யாமல் இரு’ என்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக அதை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அம்மா-அப்பாவைவிட போன் தான் அதிக மகிழ்ச்சியை தரும் விஷயம் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.
சின்ன குழந்தைகள் கூட விரல் களால் அழகாக டச் ஸ்கிரீனை தள்ளி தங்களுக்கு வேண்டிய விவரங்களை தேடிக் கொள்ள தெரிந்துவைத்திருக்கிறார்கள். இது அவர் களுக்கு பழகிவிட்டது. இதனால் பென்சில் பிடித்து எழுதும் வழக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது. வளரும் குழந்தைகள் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான் அந்த விஷயம் ஆழமாக மனதில் பதியும். என்றும் மறக்காமலிருக்கும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு எழுதும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. எல்லாவிஷயங்களையும் செல்போனில் ‘டைப்’ செய்து மெசேஜ்களாக அனுப்பிவிடுகிறார்கள். அதனால் கையால் எழுதுவது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் எதிர்கால மாணவர்கள். அவர்கள் வருங்காலத்தில் எல்லா தேர்வுகளையும் எழுதித்தான் தேர்ச்சி பெற வேண்டும். அந்த நிலையில் வேகமாக எழுத முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். அப்போது வருத்தப்பட்டு பலனில்லை. எழுதும் வழக்கம் குறையக் குறைய மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் உள்ள தொடர்பு குறைந்துபோகும். நாளடைவில் எழுதுவது அவர் களுக்கு ஒரு சுமையான வேலையாகிவிடும். எழுதினாலும் கிறுக்கல்போல் தோன்றும். இந்த நிலை ஏற்பட்டபின் மாற்றுவது கடினம்.
இன்று கஷ்டப்பட்டு தேடுவது என்பது குழந்தைகளிடம் இல்லை. செல்போன் மூலம் எதையும் அவர்களால் எளிதாக தேடிவிட முடிகிறது. தேடும் விஷயம் எளிமையாக கிடைத்து விடும்போது ஏன் கஷ்டப்பட வேண்டும்? என்று நினைத்து, கஷ்டப்படாமலே அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அப்படி ஒரு கஷ்ட நிலை வரும்போது அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தடுமாறிவிடுவார்கள். அப்போதும் தங்களுக்கு எளிதாக வழிகாட்டுவது யார் என்று தேடிக்கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல, இந்த ‘டச் ஸ்கிரீன்’ அவர்களுடைய விரல்களை செல்போன் பயன்பாட்டிற்குதக்கபடி மாற்றிவிடும். வேறு எந்த வேலைக்கும் பிரயோஜனமில்லாமல் செய்துவிடும். வரைவது, பெயிண்டிங் செய்வது எல்லாமே அவர் களுக்கு கஷ்டமாகிவிடும். விரல் களோடு மூளை ஒத்துழைக்காது. விரல்கள் சோம்பேறியாகிவிடவும் செய்யும்.
குழந்தைகள் விரல்களை பயன் படுத்தி எழுதினாலோ, படம் வரைந்தாலோ மூளை சுறுசுறுப்பாகும். அந்த வேலையை சிறப்பாக செய்துமுடிக்கவைக்கும். நாளடைவில் அந்த வேலையும் எளிமையாகிவிடும். எழுதும் போதும், ஓவியம் வரையும்போதும் மனம் அதிலே லயித்து ஒருநிலைப்படும். அதன் மூலம் மனஅழுத்தம் நீங்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். உடலுக்கும்- மனதுக்கும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். இவை அனைத்துமே டச்போன் செயல்பாடு களால் கிடைக்காது. குழந்தைகளுக்கு எழுத்துத்திறன் இல்லாமல் போனால் அவர்கள், படித்ததையும், தெரிந்ததையும் எழுதமுடியாமல் தடுமாறி கல்வியில் பின்தங்கிவி டுவார்கள்.
படிப்பது, எழுதுவது இரண்டும், இரு கண்கள் போன்றவை. படிக்க படிக்க எழுதியும் பழகவேண்டும். முதன் முதலில் சிலேட்டில் எழுதிப் பழகுவார்கள். அதில் எழுதும்போது எழுத்து களுக்கு ஒரு அழுத்தம் கிடைக்கும். கைகள் தடுமாறாமல் இருக்கும். எழுத்துகள் தாறுமாறாக போகாது. அப்படி எழுதி பழகியதும், அடுத்தகட்டமாக நோட்டில் எழுதப் பழக்குவார்கள். எழுத ஓரளவு பழகும் வரைதான் சிலேட்டில் எழுத வேண்டும். குழந்தை முதன் முதலில் எழுத ஆரம்பிப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள். எழுத்து என்பது அவ்வளவு முக்கியமானது. கல்வியின் ஆரம்பம், நம் மூளைக்கும்- கல்விக்கும் தொடர்பை ஏற்படுத்தும் எழுத்துதான்.
இது பற்றி நரம்பியல் நிபுணர் டாக்டர் தீபாலி தேஷ்முக் சொல்கிறார்.. "இன்றைய தலைமுறை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கலை அறிமுகத்தை விரல்கள்தான் ஏற்படுத்துகின்றன. எழுதும் பழக்கம் மறந்து போனால் எதிர்காலத்தில் பேனா, பென்சில் பிடித்து எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கலையும் துளிர்விடாது. இது மூளையை பாதிக்கும் விஷயமாகி விடும். அதனால் சிறுவயதிலேயே ‘டச் ஸ்கிரீன்’ கலாசாரத்தை முறைப் படுத்தி அதற்கு முற்றுப்புள்ளிவைக்க முன்வாருங்கள்” என்கிறார்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது இளம் தாயார் செய்த செயல்,வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன நெட்டிசன்கள்.!


 குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது இளம் தாயார் செய்த செயல்,வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன நெட்டிசன்கள்.!


மெக்சிக்கோ நாட்டில் இளம் தாயார் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டு தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதே அபூர்வமாக உள்ளது .மேலும் இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாசமாக பார்க்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மெக்சிகோவில் ஒரு ஹோட்டலில் இளம் தாயார் ஒருவர் தனது குழந்தைக்கு அமர்ந்தப்படி தாய்ப்பால் கொடுத்துள்ளார்.அப்பொழுது அந்த பெண் குழந்தையின் தலையால் தனது மார்பகத்தை மறைத்துக்கொண்டும் துணியால் தனது முகத்தையும் மூடிக்கொண்டார்.


இந்த புகைப்படத்தை அந்த பெண்ணின் தோழி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“படத்தில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார் குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதைத்தான் அவளும் செய்துள்ளார்.” என கேலியாக கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எந்தவித விவாதத்திற்கும் இடம் அளிக்காமல் தனது முகத்தை மூடிக்கொண்ட அந்த பெண்ணிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்

கேரளா மாநில இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற வேண்டிய நிலைமை

இயற்கை

கேரளா மாநில  இடுக்கி அணையை காப்பாற்ற முல்லைப்பெரியாறு அணையில்  142 அடிக்கு மேல் நீர் தேக்க கூடாது என்ற வழக்கை கேரளா வாபஸ் பெற வேண்டிய நிலைமை

142 அடிக்கு மேல் முல்லைபெரியாரில் நீர்தேக்கினால் மட்டுமே இடுக்கி அணையை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் கேரளாவுக்கு

முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும்.

காரணம் இதுதான்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை.

இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணை.

இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல .

167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது.

ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது.

750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும்.

இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழு கொள்ளளவை அடைந்திருக்கிறது.

இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீணமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது என பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.

பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார் மறைந்த முதல்வர் அம்மா.

இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன.

1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் மலையாள மனோரமா பத்திரிக்கை ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணையில் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்தியை மக்களிடையே பரப்பியது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது.

ஆனாலும் கேரள ஊடகங்களும், கேரள அரசும் திருந்தவில்லை. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். Dam 999 என்ற தலைப்பே விஷமத்தனமானது. Dam 999 என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள  பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் மலையாளிகள் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.

விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி.

முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில்,  இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.

முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும்,  காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்த தண்ணீர் சேர்ந்துவிடும்.

இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள்.

தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம்.

தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிராத்தனை செய்கிறார்கள்.

ஆனால் நாம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும்

முல்லைபெரியாறு
இடுக்கிஅணை
பகிர்வு

கலைஞருக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும்! பட்டியலுடன் களமிறங்கிய பிரபல கட்சி தலைவர்!

கலைஞருக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும்! பட்டியலுடன் களமிறங்கிய பிரபல கட்சி தலைவர்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கியே ஆக வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர், கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார்கள்.
ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.
இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல.
மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.
வான்புகழ்கொண்ட வள்ளுவரின் குறளுக்கு அவர் தீட்டிய ‘குறளோவியம்’ தமிழரின் தொன்மைச் சிறப்பை இயம்பும் ‘தொல்காப்பியப் பூங்கா’, தமிழ் இனத்தின் பழைய பண்பாட்டின் புதிய வடிவத்தை கண்முன் நிறுத்தும் ‘சங்கத் தமிழ்’, கடலாண்ட தமிழனின் வரலாற்றைக் கூறும் ‘ரோமாபுரிப் பாண்டியன்’, தமிழ் மண்ணின் வீரம் மணக்கும் ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ போன்றவை தலைவர் கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும்.
தமிழ்த் திரைஉலகில் பேனா முனையில் புரட்சிகர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர் கலைஞர்.
ஐந்துமுறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றிய தலைவர் கலைஞர், ஆட்சித் துறையில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்.
இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.
திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.
செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர். எண்ணிலடங்கா சமூக நலத் திட்டங்களுக்கு முன்னேடியான மாநிலம் தமிழ்நாடு என்ற கீர்த்தி தலைவர் கலைஞரால்தான் கிடைத்தது.
பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, இவையெல்லாம் கலைஞரின் ஆட்சித் திறனுக்கு சான்று கூறும் சரித்திரச் சாதனைகள் ஆகும்.
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொணர்ந்த பெருமை கலைஞரையே சேரும்.
இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தாவரங்களை மெல்லக் கொல்லும் கொலைகாரக் காளான்கள் பற்றி தெரியுமா?

தாவரங்களை மெல்லக் கொல்லும் கொலைகாரக் காளான்கள் பற்றி தெரியுமா?

உலகிலேயே மிகவும் பழமையான ஆச்சரியமளிக்கக் கூடிய உயிரினம் ஒன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதியில் காணப்படும் இதன் பெயர்( Armillaria Ostoyae )தேன் காளான் ஆகும்.

இவை 22௦௦ ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகின்றன.இவை அனைத்தும் கண்ணுக்குத்தெரியாத ஒரே ஒரு
வித்திலிருந்து தான் உருவாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தேன் காளான்கள் படந்து செல்லும் வழியில் உள்ள உயிரினங்களை கொன்றுவிடுகின்றன.ஒவ்வொரு இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் நிற காளான்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் இருப்பிடங்களை வெளிக்காட்டிக்கொள்கின்றன.

அத்துடன் இந்த தேன் காளான்கள் மரங்களுக்கு பாரியளவில் ஆபத்தை விளைவிக்கின்றன.மரத்தின் வேர்களில் இருந்து சத்தை உறிஞ்சி தங்களை வளர்துக்கொள்கின்றன.இதனால் மரங்கள் மெதுவாக சத்துக்களை இழக்கின்றன.இதன் விளைவாக 2௦,3௦ ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் மரங்கள் இறந்துவிடுகின்றன.1988 ஆம் ஆண்டிலேயே இந்த காளான்களை முதன் முதலாக கண்டுபிடித்தனர். பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்று தான் நினைத்தார்கள்.ஆனால் மரபணு பரிசோதனையின் பின்னரே ஒரே வித்திலிருந்து உருவானவை என்று தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிக விலை கொண்ட சாக்லேட் இதுதான்!

உலகிலேயே அதிக விலை கொண்ட சாக்லேட் இதுதான்!


சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஒபிடோஸ் இடத்தில் சாக்லேட் கண்காட்சிக்கு உலகிலேயே அதிக விலை கொண்ட தங்க பிளேட்டினால் ஆன சாக்லேட் வைக்கப்பட்டுள்ளது.
23 காரட் தங்க பிளேட்டினால் கொண்ட இந்த சாக்லேட்டுக்கு குளோரியஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.,6 லட்சம்.

கடந்த ஓராண்டு காலமாக டேனியல் கோம்ஸ் என்பவர் இதை தயாரித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாக்லேட்டில் தங்கத்தால் சீரியல் எண் பதியப்பட்டுள்ளது.

சனி, 11 ஆகஸ்ட், 2018

எதிர்காலத்தைக் கணிக்க உதவும் பறவையை பற்றி உங்களுக்கு தெரியுமா?| காணொளி

எதிர்காலத்தைக் கணிக்க உதவும் பறவையை பற்றி உங்களுக்கு தெரியுமா?| காணொளி

90மில்லியன் வருடங்கள் பழமையான மிக மிக அரியவகைப் பறவை ஒன்றின் புதைபடிமத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதற்கு Tingmiatornis aretica எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.றிச்சாட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட இந்தப் பறவையின் தோற்றமானது, கடற்பறவை,நீர்க்காகம் என்பவற்றின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.ஆனால்,இத்தகைய பறவைகளின் தற்போதைய தோற்றத்தை விட இவை பெரியவை.

அத்துடன் வலிமையான அலகுகளையும் பெரிய இறகுகளையும் தன்னகம் கொண்டுள்ளது.எனினும், இதுவரை கண்டறியப்பட்டபறவைகளின்படிமங்களைவிடஇதுமாறுபட்டதாகவேகாணப்படுகின்றது.
அந்தவகையில்,இப்பறவையின் எச்சங்கள் மற்றும் கூர்ப்பை ஆராய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்களையும் பறவைகள் தொடர்பான பரிணாம வளர்ச்சியையும் கண்டறிய முடியும்.என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.