பட்டூர் தலித் இளைஞர் சபரீஸ்வரன் படுகொலையின் பின்னணி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பட்டூரில் கடந்த ஆண்டு பட்டூர் பேருந்து நிறுத்தம் எதிரில் தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் என்ற சாதிய அமைப்பின் கொடிக்கம்பத்தை நட மேலவளவு கள்ளர் சமூகத்தைச் சார்ந்த கரிகாலன் தலைமையிலான கும்பலை சார்ந்த பட்டூர் குணபாலன் என்பவர் முயற்சித்தார்.
இதனை சாதிக் கொடியென அனைத்து பொது மக்களும் ,இளைஞர்களும் சேர்ந்து அப்போது தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதில் சபரீஸ்வரன் உள்ளிட்ட தம்பிகள்தான் முன்னிலையாக இயங்கினார்கள் என அந்த அமைப்பினர் வன்மத்தில் இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல் கடந்த 2018-பொங்கல் அன்று பட்டூரில் நடந்த மஞ்சுவிரட்டில் பழிதீர்க்க முயற்சித்தது, ஆனால் முடியவில்லை.இந்நிலையில் மேலவளவு படுகொலைக்கு பின்பு 20 வருடங்களுக்கு பின்பு மீண்டும் சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்திட விரும்பும்,கொலைபாதக உள்நோக்கம் கொண்ட கொண்டாட்ட விழாவையும், மஞ்சுவிரட்டு விழாவையும் நடத்திட மேலவளவு தலித் மக்களின் பலத்த எதிர்ப்பையும் தாண்டி,காவல்துறையும் ,அரசும் அனுமதி தந்து அவர்களை ஊக்கப்படுத்தியது.
உயர் நீதிமன்றம் வரை சென்று திருவிழா& மஞ்சுவிரட்டுக்கு தடை கேட்டும் , விழாக்களுக்கு தடை இல்லை, ஆனால் கோவில்களை வேண்டுமானால் இந்து சமய அறநிலையத்துறை க்கு மாற்றிடலாம் உத்தரவிட்டது.இந்நிலையில் தான் நேற்று மதியம் 31.7.18 மேலவளவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவை பயன்படுத்தி ஆயுதங்களுடன் அதே குணபாலன் தலைமையிலான கொலைகார கும்பல் வேடிக்கை பார்க்க வந்த தம்பி சபரீஸ்வரன் உள்ளிட்டோரை நோட்டமிட்டு மஞ்சுவிரட்டு திடலிலேயே "கள்ளர்களுக்காக கள்ளர்களால் நடத்தும் விழாவில் பறைப்பயலுகளுக்கு என்னடா வேலை "என வம்பு செய்துள்ளது.
அங்கு மக்கள் திரள் அதிகம் என்பதால் நிலைமை உணர்ந்து அதில் தப்பி பட்டூருக்கு சபரீஸ்வரன் உள்ளிட்டோர் சென்று விட்டனர்.ஆனாலும் விடாமல் நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்று காத்திருந்து நேற்று மாலையில் ஊருக்குவெளியே காவிரிக் கூட்டுகுடிநீர் கழிவு தொட்டிக்கு குளிக்க சென்ற போது சபரீஸ்வரனை வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் குத்தி கொலை செய்துவிட்டு வெளியே தப்பிவிட்டது.இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை...................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக