புதன், 8 ஆகஸ்ட், 2018



   08.08.18* Today crime news

*☦🅾கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி அடித்து கொலை*
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (30). மினி லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரமதி (27). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த மார்ச் 11ம் தேதி கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி கிராமத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே செல்வம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினர்கள் ‘‘கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்’’ என்று கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தினர். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், செல்வம் வீட்டுக்கு அதே கிராமத்தை சேர்ந்த அவரது நண்பரான ஆனந்தன் (35) என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதனால் ஆனந்தனுக்கும், சந்திரமதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது, செல்வத்துக்கு தெரியவர, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமதி, ‘‘செல்வம் இருக்கும்வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்றும், அதனால் செல்வத்தை தீர்த்துக்கட்ட வேண்டும்’’ என்றும் ஆனந்தனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆனந்தனின் கூட்டாளிகளான சுரேஷ் (30), ஸ்ரீதர் (30), கார்த்திக் (22), பிரகாஷ் (20) ஆகியோர் சவாரிக்கு அழைப்பது போன்று செல்வத்தை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிந்தது. இது தொடர்பாக சந்திரமதி, ஆனந்தன், சுரேஷ், ஸ்ரீதர், கார்த்திக், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சந்திரமதி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். அதற்கு பிறகு அவரது தாய் வீடான திருக்கழுக்குன்றம் அடுத்த எலுமிச்சம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ‘‘பிள்ளைகளை பார்க்க வேண்டும்’’ என்ற ஆசை சந்திரமதிக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் யாருக்கும் தெரியாமல் ஆயப்பாக்கம் கிராமத்துக்கு சென்றார். சந்திரமதி வந்திருந்த தகவல் செல்வத்தின் உறவினர்களுக்கு தெரியவந்தது. ஏராளமானோர் திரண்டனர். அப்போது சந்திரமதியை சரமாரியாக அடித்து உதைத்தனர். பயங்கர அலறல் சத்தத்துடன் நிலைகுலைந்து கீழே சாய்ந்த சந்திரமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். சதுரங்கப்பட்டினம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக 15 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

*☦🅾பூசாரியை தாக்கி ரூ.1 லட்சம் நகை கொள்ளை*

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செட்டியார்பேட்டையில் ஜெயின் சமூகத்தினர்களுக்கு சொந்தமான கோயில் உள்ளது. இங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவர்லால் (68) என்பவர் பூசாரியாக வேலை பார்க்கிறா.கோயிலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை பவர்லால் கோயிலில் இருந்தார். அப்போது கோயிலுக்கு வந்த மர்மநபர்கள் 3 பேர், வந்தனர். அந்த நேரத்தில் நெடுஞ்சாலை போலீசார் ரோந்து சென்றனர். தை பார்த்ததும், மர்மநபர்கள் ஓடிவிட்டனர். பின்னர், சிறிதுநேரம் கழித்து மீண்டும் அவர்கள் கோயிலுக்குள் சுவர் ஏறி குதித்து வந்தனர். சத்தம் கேட்டு வந்த பவர்லாலை, மர்மநபர்கள் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்த மோதிரம், செயின் உள்பட சுமார் ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். சிறிது நேரம் கழித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள், படுகாயமடைந்த பவர்லாலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

*☦🅾மேடை பாடகியிடம் செயின் பறிப்பு*

 சென்னை: மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலை, நேரு காலனி பகுதியை சேர்ந்தவர் உஷா ராணி (30). மேடை பாடகி. இவர், நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு பின்னர் அவரது இருசக்கர வாகனத்தில் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு  பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் உஷாராணியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பக்கிரிசாமி (48), நேற்று காலை திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகில் லாரியை நிறுத்திவிட்டு நின்றிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 2 பேரில் ஒருவன், பக்கிரிசாமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பதுபோல் நடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு இருவரும் தப்பினர். பொதுமக்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கிப் பிடித்து  தர்ம அடி கொடுத்து திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர்.  திருவொற்றியூர் தாங்கல் தெருவை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையர் வெங்கடேசன் (24) மற்றும் இவருடன் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22) என்பதும் தெரியவந்துள்ளது. தப்பிய சதீஷ், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணலியில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது. சதீஷை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரிடம் இருந்து ₹7.5  லட்சம் வாங்கி ஏமாற்றிய கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (31) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

*☦🅾செல்போன் பறித்த டிரைவர் கைது*

ஆவடி: ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசி (30). இவர், நேற்று முன்தினம் இரவு ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் தமிழரசி மட்டுமே இருந்துள்ளார். பருத்திப்பட்டு அருகே சென்றபோது ஆட்டோவை நிறுத்திய டிரைவர், தமிழரசியை தாக்கி அவரது செல்போன், ₹400 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். விசாரணையில் ஆவடி, கோவர்த்தனகிரி, வீஆர் கார்டன் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (43) வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


*☦🅾ஊத்துக்கோட்டை அருகே 2 ரவுடிகள் வெட்டிக்கொலை*

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே செங்கரை காட்டுப்பகுதியில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 2 ரவுடிகளை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

☦🅾திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் கூட்டநேரத்தில் பெண்களிடம் நகை பறித்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

*☦🅾ரூ250 கோடி ஹெராயின் காஷ்மீரில் பறிமுதல்*

ஜம்மு : காஷ்மீர் மாநில ஐஜி எஸ் டி சிங் ஜம்வால் கூறியிருப்பதாவது: குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாராவில் இருந்து குப்பை காகித லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரியை ஜம்மு நகரையோட்டிய நர்வால்-பத்திண்டி சாலையருகே போலீசார் நேற்று மாலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.லாரியை தீவிரமாக சோதனையிட்டதில், லாரியின் பக்கவாட்டு இரும்புத் தகடுகளில் சாதுரியமாக உருவாக்கப்பட்டு இருந்த மறைவிடத்தில் பதுக்கியிருந்த 51 பார்சல்களில்  தலா 1 கிலோ எடையுள்ள ஹெராயின் பதுக்கி வைக்கபப்ட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு ரூ250 கோடியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

*☦🅾கோவையில் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க ரூ50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது*

பெ.நா.பாளையம்: கோவை கணபதியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் துடியலூர் பகுதியில் தொழிற்சாலை துவக்க திட்டமிட்டு மின் இணைப்பு பெற துடியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த செயற்பொறியாளர் நந்தகோபால், உதவி செயற்பொறியாளர் அய்யாவு ஆகியோர் மின் இணைப்பு உடனடியாக வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கேட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.50 ஆயிரத்தை ரசாயனம் தடவி சிவக்குமாரிடம் அளித்தனர். அதை சிவக்குமார் நேற்று மதியம் துடியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் நந்தகோபாலிடம் அளித்தார். அவர் அதில் பாதி பணத்தை உதவி செயற்பொறியாளர் அய்யாவுவிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

*☦🅾வாணியம்பாடி மாஜி எம்எல்ஏ வீட்டில் 50 சவரன், ரூ4 லட்சம் கொள்ளை*

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முன்னாள் எம்எல்ஏ வீட்டுக்குள் புகுந்து 50 சவரன் நகை மற்றும் ரூ4 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சமத். இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 1989-90ம் ஆண்டுகளில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பணியாற்றினார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ஷம்ஷாத்(68). இவரது மகன் நதீம்(42), தோல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நதீம் கடந்த 4  நாட்களுக்கு முன்பு தாய், மனைவி மற்றும் 3 மகள்களுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 50 சவரன் நகை, ரூ4 லட்சம் ரொக்கம் திருடுபோனதாக கூறப்படுகிறது. திருட்டுபோன பொருட்களின் முழுவிவரம் தெரியவில்லை. முன்னாள் எம்எல்ஏவின் வீடு, வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகத்தின் பின்புறம் உள்ள தெருவில் உள்ளது. புகாரின்படி வாணியம்பாடி டவுன் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.  அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் நடந்த இத்திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

*☦🅾நெல்லையில் கிரிக்கெட் சூதாட்டம் 9 பேர் கைது*

நெல்லை: நெல்லையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் மாநில அளவிலான அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பார்வையாளர் வரிசையில் அமர்ந்து, ஃபோர் எடுத்தால் ரூ500, சிக்சர் அடித்தால் ரூ1000 என்று பெட் கட்டி சூதாட தொடங்கினர். ஒரு பந்துக்கு ரூ100 முன்பணம் செலுத்தும்படி ரசிகர்களிடம் தெரிவித்தனர். தகவலின்படி தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மோகின் (42), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அபின்(32), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாபு ஜெயின்(26), ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ்சர்மா(26), அரியானாவைச் சேர்ந்த கோரத்(26) உட்பட 9 பேரை கைது செய்து, ரூ13,500ஐ பறிமுதல் செய்தனர்.

*☦🅾கைதான படகு உரிமையாளர் பகீர் வாக்குமூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தினால் ஒருமுறைக்கு ரூ1 லட்சம் கமிஷன்*

வேதாரண்யம் : இலங்கைக்கு கஞ்சா கடத்தினால் படகுக்கு ஒரு முறைக்கு ரூ1 லட்சம் கமிஷன் கிடைக்கும் என கைதான இலங்கை படகு உரிமையாளர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள பெரிய குத்தகை கிராமபகுதியில், கடலோர காவல் குழுமத்தினர், கடந்த 3ம்தேதி இரவு வாகன சோதனையில் 6 மூட்டை கஞ்சாவை (மொத்தம் 192 கிலோ) பிடித்தனர். கஞ்சா மதிப்பு ரூ20 லட்சம் ஆகும். சினிமா பாணியில் டிரைவர் ரமேஷ்குமாரை கடத்தல்கார்களோடு பேச வைத்து போலீசார் பின்தொடர்ந்து சென்று படகில் கஞ்சா கடத்த இருந்த இலங்கை யாழ்பாணம் மருந்தககேணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(44), ரமேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மகேந்திரன்(32) என்பவரை கைது செய்தனர். இவர் வேதாரண்யம் கடலோர காவல்படையில் உள்ளார். மேலும் தப்பியோடிய பெரியகுத்தகையைச் சேர்ந்த முனீஸ் (எ) முனீஸ்வரன், யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகுமார் ஆகிய இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் புஷ்பவனம் கருவைக்காட்டுக்குள் பதுங்கியிருந்த இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த படகு உரிமையாளர் சுகுமார் என்ற ராஜ்குமார்(34)என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஒரு முறை கஞ்சா கடத்தினால் படகுக்கு ரூ1 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்பதால் பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்த வந்தேன் என்று கூறியுள்ளார். கைதான 4 பேரையும் போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை நேற்று முன்தினம் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். விசாரணையில் இவர்கள் திருச்சி, மதுரையில் கஞ்சா வாங்கி சொகுசு காரில் கடத்தி வந்து படகில் இலங்கைக்கு அனுப்பி தங்கமாக மாற்றி வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான பெரியகுத்தகையைச் சேர்ந்த முனீஸ் (எ) முனீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.


*☦🅾போலீசார், தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை பெங்களூருவில் பதுங்கிய நக்சலைட் அதிரடி கைது : சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதியா?*

* போலீசார் தீவிர விசாரணைபெங்களூரு: பெங்களூரு ராம்நகரில் பதுங்கியிருந்த நக்‌சலைட் ஒருவரை, போலீசார் உதவியுடன் ஜார்கண்ட் போலீஸ் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர். சுதந்திர தினவிழாவை  சீர்குலைப்பதற்கு தீவிரவாதிகள் மற்றும் நக்‌சலைட்கள் திட்டமிட்டிருப்பதாகவும், மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் ஜார்கண்ட்டைச் சேர்ந்த நக்சலைட் ஒருவர், குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு தப்பி சென்றிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ஜார்கண்ட் மற்றும் டெல்லியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பே பெங்களூருவில் முகாமிட்டு விட்டனர். லோக்கல் போலீசார் உதவியுடன் நக்சலைட்டை தேடி வந்தனர். இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் தேடி வந்த நக்சலைட் பெங்களூருவின் புறநகர்ப்பகுதியான ராம்நகர் ட்டூருப் லைன் என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நடவடிக்கையை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். நேற்று அதிகாலை கிடைத்த முறையான தகவலின் பேரில் ஜார்கண்ட் போலீசார், தேசிய புலனாய்வு அதிகாரிகள், ராம்நகர் போலீசார் அனைவரும் ஒன்றாக இணைந்து, ட்டூருப் லைன் பகுதியில் இருந்த நக்சலைட்டின் வீட்டை சுற்றி வளைத்து கைது செய்து தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த முனீர் (25) என்று தெரியவந்தது. பிழைப்பு தேடி ஜார்கண்ட் வந்தவர் அங்கிருந்த நக்சலைட் படையினருடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். நக்சலைட் பிரிவில் சேர்ந்து கொண்டு, ஏராளமான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  சோதனையில் அவரிடம் இருந்த விலையுயர்ந்த லேப்டாப் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது, நக்சலைட்டுகளுக்கு மறைமுகமாக உதவி செய்திருப்பதும், பல்வேறு நக்சலைட் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டு தலங்களின் வரைப்படங்களும் சிக்கியது. இது தவிர ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் பவுடர் உள்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வரைப்படம் உள்ளிட்ட பொருட்களை வைத்திருப்பதால் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

*☦🅾ஜிம் பயிற்சியாளருக்கு அரிவாள் வெட்டு*

தாம்பரம்: ஜிம் பயிற்சியாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய  3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  தாம்பரம் அடுத்த முடிச்சூர், பொன்னியம்மன் நகர், 1வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜஸ்டின் (28). ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த டேனியல், ஜேம்ஸ், ராகுல் ஆகியோர் வெளியில் அழைத்துள்ளனர். வெளியில் வந்தபோது ஜஸ்டினை அவர்கள் 3 பேரும் தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த ஜஸ்டின் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் ஜஸ்டின் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  அதில், அதே பகுதியில் உள்ள கல்லூரி மாணவி திவ்யா என்பவரை டேனியல் காதலித்ததாகவும், ஆனால் திவ்யா அதற்கு முன்னர் ஜஸ்டினை காதலித்ததாகவும், இந்நிலையில் டேனியலை திவ்யாவின் உறவினர் அருண்குமார் தட்டிகேட்டபோது அதற்கு ஜஸ்டின் தான் காரணம் என டேனியல் அவரை வெட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக டேனியல் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

*☦🅾பக்ரைனில் இருந்து கடத்தி வந்த ரூ. 21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் : வாலிபர் கைது*

மீனம்பாக்கம்: பக்ரைனில் இருந்து விமானம் மூலம் கடத்தி வந்த 21 லட்சம் தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.பக்ரைனில் இருந்து கல்ப் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, சென்னையை சேர்ந்த ஹைதுரு (34) என்பவர் சுற்றுலா பயணியாக பக்ரைன் சென்று திரும்பினார். அவர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி, அவரிடம் இருந்த உடமைகளை சோதனையிட்டனர். அதில், எதுவும் இல்லை.இதையடுத்து அதிகாரிகள், அவர் வைத்திருந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தனர். பெட்டியின் நடுவில், வெள்ளி முலாம் பூசப்பட்ட பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, 700 கிராம் தங்க தகடு இருந்ததை கண்டு பிடித்து, அதனை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹21 லட்சம். தொடர்ந்து ஹைதுருவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

*☦🅾ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய பெண்ணுக்கு கத்திக்குத்து*

சென்னை: போரூர் சிக்னல் ஆற்காடு சாலையில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு பெண் கையில் சூட்கேசுடன் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக சென்றார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் உள்ள சூட்கேசை கேட்டு தகராறு செய்தனர். அந்த பெண் சூட்கேசை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், அங்கு பொதுமக்கள் கூடியதையடுத்து அந்த நபர்கள் கத்தியால் அந்த பெண்ணின் முகத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். தகவலறிந்து, வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா (23), என்பது தெரியவந்தது. பின்னர், அவர் வைத்திருந்த சூட்கேசை போலீசார் சோதனை செய்தபோது அதில் நிறைய பண்டல்கள் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அவை அனைத்தும் கஞ்சா என்பது தெரிந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது, தனக்கும் அந்த சூட்கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தான் ஒரு படித்த பட்டதாரி  பெண் என்றும் தெரிவித்தார். இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரை விசாரித்தபோது ரேணுகா கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் கூறுகையில்,  ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக இரண்டு முறை ஆந்திரா போலீசார் ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அப்போது, செம்மஞ்சேரியைச் சேர்ந்த  கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி (65), ஆந்திராவில் கஞ்சா வாங்க சென்றபோது அவரும் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ரேணுகாவிற்கும், முத்துலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே ரேணுகா விபசார வழக்கில் சிறைக்கு சென்றதால் அவரை வீட்டில் பெற்றோர் சேர்த்துக்கொள்ளவில்லை. இதையடுத்து, ரேணுகாவை முத்துலட்சுமி பெரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தேவசகாயம், ரேணுகா மீது காதல் கொண்டதால் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முத்துலட்சுமி திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லை. மேலும், ரேணுகாவிற்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் என்பதால் அங்கிருந்து கஞ்சாவை சென்னைக்கு எடுத்து வர அதிகளவில் உதவி புரிந்துள்ளார். அவ்வாறு எடுத்து வரும் கஞ்சாவை நிர்மல்குமார் என்பவரிடம் கொடுத்து வந்தார். இந்த நிலையில், ரேணுகா மேலும் சில ஆண்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவசகாயம், ரேணுகாவை வீட்டில் இருந்து விரட்டி விட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், நிர்மலுடன் சேர்ந்து தனியாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதனால் ரேணுகாவிற்கு அதிகளவில் பணம் கிடைக்க ஆரம்பித்தது. இதையடுத்து, கடந்த 4ம் தேதி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சூட்கேசில் வைத்துக்கொண்டு தனியார் சொகுசு பஸ்சில் வந்து நேற்று முன்தினம் காலை சோழிங்கநல்லூரில் வந்து இறங்கி உள்ளார். கஞ்சாவை வாங்குவதற்காக நிர்மல்குமார் அங்கு வர தாமதம் ஆனதால் ரேணுகா நின்று கொண்டிருந்தார். அப்போது கார் மற்றும் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ரேணுகாவை காரில் ஏறும்படி கூறி உள்ளனர். இதில் பதறிப்போன ரேணுகா கூச்சல் போட்டுள்ளார். இதனால் அங்கு பொதுமக்கள் கூட ஆரம்பித்ததையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ரேணுகா செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்யவில்லை. போலீசார் விசாரணை முடிந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் போரூருக்கு வந்த ரேணுகாவை பின் தொடர்ந்து வந்த அதே மர்ம கும்பல்தான் ரேணுகா கஞ்சா வைத்திருந்த சூட்கேசை பறிக்க முயற்சி செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.கணவனுக்கு வலை;ரேணுகா தன்னிடம் இருந்து பிரிந்து சென்று தனக்கு போட்டியாக கஞ்சா தொழில் செய்வதால் அவரது கணவர் தேவசகாயமே ஆள் வைத்து ரேணுகாவை கடத்தி கஞ்சாவை பறிக்க முயற்சி செய்தாரா? அல்லது தொழில் போட்டியில் வேறு யாராவது ரேணுகாவை கடத்த முயற்சி செய்தார்களா? என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து தேவசகாயம் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  ரேணுகாவிடம் இருந்து தற்போது 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவரை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் யார்? யார்? அதன் பின்னணியில் உள்ள நெட்ஒர்க் என்ன என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

*☦🅾ஒரு குவாட்டருக்கு ரூ.50 கூடுதலாக கேட்டதால் டாஸ்மாக் பார் ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து*

சென்னை: அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பார் அமைந்துள்ளது. இங்கு, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் 10 பேர், ஒரு காரில் வந்து, பார் ஊழியர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம்சந்த் (22) என்பவரிடம், 10 குவாட்டர் பாட்டில்கள் வேண்டும், என்று கேட்டுள்ளனர். அதற்கு ராம்சந்த், ஒரு பாட்டிலுக்கு 50 அதிகமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில், காரில் வந்த கும்பலை அங்கு கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து, ராம்சந்த்தின் தலையில் ஓங்கி அடித்தும், கையில் குத்திவிட்டும் தப்பினர். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், படுகாயமடைந்த ராம்சந்த்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். ஆவடி அயப்பாக்கம் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்துமணி (45), ஆட்டோ டிரைவர். இவரது ஆட்ேடாவை  நேற்று முன்தினம் பாடி குமரன் நகரில் நிறுத்தி இருந்தபோது,  மர்ம நபர்கள் திருடி சென்றனர். விசாரணையில், வில்லிவாக்கம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்த  அய்யப்பன் (29), பரங்கிமலை, வஉசி நகரை சேர்ந்த நாகராஜ் (31) ஆகியோர் ஆட்டோவை திருடியது தெரிந்தது. அவர்களை நேற்று கைது  செய்தனர். அம்பத்தூர் காமராஜர்புரம் குளக்கரை  தெருவை சேர்ந்த ஜெயகுமார் (29), நேற்று முன்தினம் சிடிஎச் சாலையில் நடந்து சென்றபோது, 2 பேர் அவரை வழிமறித்து குடிக்க பணம் கேட்டனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரை சரமாரியாக  தாக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை தாக்கிய அம்பத்தூர்  காமராஜர் நகர் பெரியார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25), அதே பகுதி வஉசி  தெருவை சேர்ந்த முருகன் (37) ஆகியோரை நேற்று கைது செய்தனர். தரமணி எம்ஜிஆர் நகரில் உள்ள  முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம்   தீமிதி திருவிழா நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீ  மிதித்தனர். தரமணி அண்ணா தெருவை சேர்ந்த குப்புசாமி (74) என்பவர்  தீக்குண்டம் இறங்கியபோது தடுமாறி தீக்குண்டத்தில்  விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட ஒரு பெண்  உட்பட 2 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், கனகநந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (38) என்பவர், நேற்று அதிகாலை பெருங்களத்தூரில் இருந்து   தாம்பரத்திற்கு கம்ப்ரஷர் டிராக்டரில் சென்றார். கிளீனர் ரவீந்திரன் (30) உடன் இருந்தார்.  இரும்புலியூர் மேம்பாலம் சென்றபோது டிராக்டர் பழுதாகி ஜிஎஸ்டி   சாலையில் நின்றது. அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த லாரி, டிராக்டர் மீது மோதியதில்   சுரேஷ் சம்பவ இடத்திலேயே   உயிரிழந்தார். ரவீந்திரன் காயத்துடன் உயிர் தப்பினார். கிழக்கு தாம்பரம் கணபதிபுரத்தில் உள்ள மசூதியின் பூட்டை   உடைத்து ₹2 ஆயிரம், செல்போன் திருடுபோனது. இந்த சம்பவம் தொடர்பாக மசூதி   நிர்வாகிகள் சேலையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார்   சிசிடிவியில் பதிவான திருடனின் உருவத்தை வைத்து அவனை தேடி வருகின்றனர்.  ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்தவர்  நரேஷ்குமார் (21). சென்னை சவுகார்பேட்டையில்  தங்கி, தங்கசாலையில்  உள்ள கிரில் கேட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை  செய்து வந்தார்.  நரேஷ்குமாருடன் அவரது மைத்துனர் கமலேஷ் (19) என்பவரும்  வேலை செய்து  வந்தார். நேற்று முன்தினம் மெரினா கடலில் இருவரும் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நேற்று காலை எம்ஜிஆர் சமாதி பின்புறம் நரேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது. மாயமான கமலேஷ்  உடலை  போலீசார் தேடி வருகின்றனர்.  தி.நகர் ராஜாபிள்ளை கார்டனை சேர்ந்தவர் சரவணன் (21), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு தங்கசாலை வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், சரவணன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த அவர், திருடன், திருடன் என கூச்சலிட்டார்.அந்த நேரத்தில் அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட பூக்கடை போலீசார், பைக் ஆசாமிகளை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதில் 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பினார். பிடிபட்ட 2 பேரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்த அபிமன்யு (20), சந்தோஷ்குமார் (19) என தெரிந்தது. இவர்கள் மீது பூக்கடை, ஏழுகிணறு, யானைக்கவுனி உள்பட பல காவல் நிலையங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன், பர்ஸ், செயின் பறித்து செல்வது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பைக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய அவர்களது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

*☦🅾பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் மீது வேறு வழக்கு பாய்ந்தது : காப்பாற்றும் முயற்சியா?*


சென்னை: மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கிய ஆசிரியரை வேறொரு வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பேடு அருகே சேகண்யம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (34). திருமணமான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.இதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை சுதாகர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்த பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணி நீக்கம் செய்தது.  இதையடுத்து, அவர் செங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில்  ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேற்கண்ட மாணவிக்கு வயிற்று வலி அதிகமானது. உடனே அவரை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். பரிசோதனையில், அவள் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இதுபற்றி ஆசிரியர் சுதாகர் மீது யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சுதாகரை போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்தனர். அதாவது எளாவூரை சேர்ந்த பாலு என்பவர், மளிகை கடைக்கு செல்லும்போது, கத்தியை காட்டி மிரட்டி,  பணம் பறித்ததாக சுதாகர் மீது போலீசார் பதிவு செய்து கைது செய்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மீது வேறு ஒரு வழக்கு பதிந்து  கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*☦🅾வாட்ஸ் அப் மூலம் புகார் ஈரோட்டில் 95 கிலோ குட்கா பறிமுதல்*

ஈரோடு:  ஈரோடு கடைவீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு கொங்காளம்மன் கோயில் வீதியில் அமராராம் (40), என்பவருக்கு சொந்தமான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்  கலைவாணிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அமராராம் கடையில் ரெய்டு நடத்தினர். இதில் 1 லட்சம் மதிப்பிலான 95 கிலோ குட்கா பொருட்களை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக