கும்ப ராசி நேயர்களே இதோ உங்களுக்காக தான்
கும்பம்:
கும்பராசி அன்பர்களே! வார முற்பகுதி சுமாராகத்தான் இருக்கும். பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது.
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்கள் திருமணம் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக முடியும். வேலைக்குச் செல்லும் அன்பர்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்வது பாதிப்பையே ஏற்படுத்தும். அலுவலகப் பணிகளிலும் கவனமாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்ற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். மாணவர் மாணவியர் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சில சலுகைகளைப் பெற வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: அவிட்டம்: 8, 9, 10, 12; சதயம்: 6, 9, 10, 11; பூரட்டாதி: 6, 7, 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
தவிர்க்கவேண்டிய நாள்கள்: அவிட்டம்: 6, 7, 11; சதயம்: 7, 8, 12; பூரட்டாதி: 8, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும். மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக