செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞர் மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை.ஏழு நாட்கள் அரசு துக்கம் அரசு அறிவிப்பு!




கலைஞர் மறைவையொட்டி நாளை அரசு விடுமுறை.ஏழு நாட்கள் அரசு துக்கம் அரசு அறிவிப்பு!



சட்டச்சிக்கல் இருப்பதால் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை தலைமைச் செயலாளர்*


கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை - தமிழக அரசு


கலைஞர் உடலை அடக்கம் செய்ய ராஜாஜி மணிமண்டபம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே இடம் ஒதுக்கீடு*

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் எதிரே கலைஞர் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட உள்ள சென்னை ராஜாஜி அரங்கில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.*


கலைஞர் மறைவை ஒட்டி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் - தலைமைச் செயலாளர்*

கலைஞர் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்படும் - தலைமைச் செயலாளர்*

ராணுவ மரியாதையுடன் குண்டு முழங்க கலைஞர் உடலுக்கு மரியாதை வழங்கப்படும் - தலைமைச் செயலாளர்*


நள்ளிரவு 1 மணி வரை* *கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்*

சி.ஐ.டி காலனி இல்லத்தில் கலைஞர* உடல் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும்
கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி காலனியில் கலைஞர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.


கோவை திமுக அலுவலகத்தில் கருணாநிதியின்
புகைப்படத்திற்க்கு மாலை அணிவித்து தொண்டர்கள் அஞ்சலி


சென்னை  மெரினாவில் #திமுக தலைவர்  கலைஞருக்கு இடம் கேட்டு  போராட்டம். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம்*


திமுக தலைவர் கலைஞர்  உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது*



கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி காலனியில் கலைஞர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு*

அதிகாலை 4 மணி முதல் சென்னை ராஜாஜி ஹாலில் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு



வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்” -காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக