அண்ணா இறந்தபோது ,சென்னை வானொலியில் கலைஞர் வாசித்த கண்ணீர் அஞ்சலிக்கவிதை. .இன்று அவருக்கே பொருந்துகிறது.......
பூவிதழின் மென்மையிலும் மென்மையான
புனித உள்ளம்_அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னைஉள்ளம்_ அவர்
மலர்இதழ்கள் தமிழ் பேசும்
மா,பலா,வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்
விழிமலர்கள் வேலாகும்வாளாகும்
தீங்கொன்று தமிழ்த்தாய்க்கு வருகுதென்றால்
கால்மலர்கள் வாடிடினும்
அவர்கடும்பயணம்
நிற்காது
கைமலர்கள் பிணைத்து நிற்கும் தம்பதியரை,கழகத்தை அம்மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர்போல்தலைநாணச்செய்துவிடும்..........
இன்று அவலப்பரணி பாடுகிறேன்...
கவியினில் பொருளென
கரும்பினில் சுவையென
கதிரினில்ஒளியென
காவினில் மலரென
நிலவினில்குளிரென
நிலமிசைவளமென
குலவிடும்அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழும்கடலில் ஆடிடும்நுரையென
கலைமணம்கமழக்
கூடியகவிஞர் தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிய
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ!
வெள்ளம் !வெள்ளம்!
மாபெரும் வெள்ளம்!
............
தலைவர் என்பார்!தத்துவமேதை என்பார்!நடிகரென்பார்_நாடகவேந்தர்என்பார்
சொல்லாற்றல்_ சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்!
மனிதர் என்பார் மாணிக்கமென்பார்!
மாநிலத்து அமைச்சர் என்பார்!
அன்னையென்பார் அருள்மொழிக் காவலர் என்பார்!
அரசியல்வாதி என்பார்-அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே "அண்ணா" என்ற ஒருசொல்லால்
அழைக்கட்டும் என்றே-அவர் அன்னை பெயரும் தந்தார்.......
நாத இசைகொட்டுகின்ற
நாவை ஏன்சுருட்டிக்கொண்டாய்?
விரல்அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச்செய்தாயே,அந்த விரலை ஏன் மடக்கிக்கொண்டாய்?
கண்மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.....
இன்று மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை?
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாய்_
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
..................
இயற்கையின் சதியெமக்குத்தெரியும் அண்ணா-நீ
இருக்கும் இடம் தேடி யான் வரும் வரையில்........
இரவாக உன் இதயத்தைத்தந்திடண்ணா
நான் வரும்போது கையோடு கொணர்ந்து _,அஃதை
உன்கால்மலரில் வைப்பேன் அண்ணா....என்று அன்று கலைஞர் இயற்றிப்படித்த கவிதை இன்று அவருக்கும் பொரூந்தும்....இதனைத் திரு.சுபவீரபாண்டியன்அவர்கள் இன்று குறிப்பிட்டார்கள். கலைஞர் தமிழ்நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்வார்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக