புதன், 29 ஆகஸ்ட், 2018

இந்தியாவின் 36 ஆண்டு கனவை நனவாக்கிய பி. வி சிந்து

இந்தியாவின் 36 ஆண்டு கனவை நனவாக்கிய
பி. வி சிந்து

ஜகார்தா: ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இதற்கு முன் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் எந்த ஒரு வீரரும், வீராங்கனையும் வெள்ளிப்பதக்கம் வென்றதே இல்லை. முதல் முறையாக வெள்ளி வென்று சிந்து வரலாறு படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பத்தம் வெல்வது என்பது இந்தியாவின் 36 ஆண்டு கனவாகும். அதை நேற்று சாய்னா நேவால் வெண்கலம் வென்று நிறைவேற்றினார். கடைசியாக 1982-ம் ஆண்டு சயித் மோடி ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின், 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நிறைவேறியது.

ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை சாய்னா வசமாகி உள்ளது. கடந்த 36 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு பதக்கம் கூட வென்றதில்லை, மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை யாரும் பதக்கம் வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை சாய்னா, சிந்து இருவரும் மாற்றி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக