புதன், 28 பிப்ரவரி, 2018

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது..

பிளஸ் 2 தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது..

இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்..

மேலும் தனித் தேர்வர்களாக 40,682 பேர் எழுதுகின்றனர்..

அதுமட்டுமல்லாமல் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 103 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்..

இதற்காக 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, நண்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெறுகிறது..

பிளஸ் 2 தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்தார்..

தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், பிட் அடித்தல் போன்ற முறைகேடுகளை தடுக்க 4,000 பறக்கும் படைகள்அமைக்கப்பட்டுள்ளன..

முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

தேர்வை கண்காணிக்கும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது..

சிரியாவின் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 லட்சம் பேர் மரணம்...!



சிரியாவின் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 லட்சம் பேர் மரணம்...!

பூமியின் நரகம் என அழைக்கபடும் சிரியாவில் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் நடக்கும் போரில் தற்போது வடகொரியாவும் களம் இறங்கி இருக்கிறது. இரண்டு வருடமாக மறைமுகமாக இதில் செயல்பட்டு வந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. கடந்த 48 வருடங்களில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறி இருந்தது.இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனத்தையும் வைத்திருந்தது, இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். கிளர்ச்சியாளர்களை நசுக்கும் வேலையில் இறங்கிய ஆசாத் அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கியுள்ளது.


இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக.கடந்த 9 நாட்களில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், போர் உக்கிரம் அடைந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போரில் தடை செய்யப்பட கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது . பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் இது செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.


இந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த கெமிக்கல் குண்டுகள் வடகொரியா மூலம் சிரியாவிற்கு கிடைத்து இருக்கிறது. வடகொரியாதான் 12 கப்பல்களில் இந்த குண்டுக்கான பொருட்களை வழங்கி இருக்கிறது. இது குறித்து அமெரிக்க பத்திரிக்கைகளை விரிவாக எழுதி இருக்கிறது.


வடகொரியா 2015ல் இருந்தே இந்த குண்டுகளை அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறது. 2013ல் சிரியாவின் அனைத்து விதமான கெமிக்கல் குண்டுகளும் அழிக்கப்பட்டது. அதன்பின் புதிதாக வடகொரியா இப்படி உதவி செய்து இருக்கிறது.இந்த குண்டுகளில் காணப்படும் பல முக்கியமான வேதிப்பொருட்கள் வடகொரியா குண்டுகளால் காணப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க படை மிதவாத போராளிகளுக்கு உதவுவதால், வடகொரியா அதற்கு எதிரான நிலையை எடுத்து இருக்கிறது. இதுதான் நிறைய குழந்தைகளின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.


இந்த குண்டுகள் ஜநாவால் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது.இந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது. கண்கள் எரிய தொடங்கும். மூச்சு குழலை சுற்றி பெரிய படலம் உருவாகும். குழந்தை சில நேரத்தில் மரணம் அடைவார்கள்.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்


காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்.

 காஞ்சிபுரம்: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி (வயது 83) உடல்நலக் குறைவால் காலமானார்.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார். காஞ்சி மடத்தின் 69-வது மடாதிபதியாக 1994-ம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றார். முன்னதாக 1954-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார் காஞ்சி ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு செய்திகள் 27/02/18 !

பரபரப்பு செய்திகள்  27/02/18 !

தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது - அமைச்சர் தங்கமணி.

பிரிட்டனின் பிரபல சாலையில் உள்ள கடை ஒன்றில் குண்டு வெடிப்பு : 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

மத்திய அரசிடம் மாநில அரசு அடிப்பணியவில்லை மத்திய அரசுடன் இணைந்து சென்றால்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மது அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி ? – சுப்பிரமணியன் சுவாமி கேள்வி.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் நாளை காலை 9.30 முதல் 12.30 மணி வரை
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தமிழ்தாய் வாழ்த்து தமிழகத்தில் பாடவேண்டும் என்பதே என் கருத்து - நடிகர் கமல்.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரி திமுக தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவு : வரும் 5-ம் தேதி எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர்; 6 மாதம் மனநல சிகிச்சைக்கு
செல்வது நல்லது - ஆர்கே நகர் எம்.எல்.ஏ. தினகரன்.

தமிழகத்தில் ஒருமையில் பேசி தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார் : டிடிவி தினகரன்.

தமிழகத்தில் 500 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் செலவில் நவீன ஆய்வகம் அமைக்கப்படும்.மத்திய அரசு கொண்டுவரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மத்திய அமைச்சர் பதவியேற்பு உறுதிமொழிக்கு எதிராக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் - சிபிஐ தரப்பு.

அதிமுகவின் கரைவேட்டியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பயன்படுத்தினால் அதனை
அவிழ்த்து விடுங்கள் - அமைச்சர் மணிகண்டன் கடும் தாக்கு.

சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாரதிய ஜனதா முயற்சிக்கிறது.தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக - டிடிவி தினகரன்.

மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.3 நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள்.கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் எனது மகன் சிலம்பரசன் - டி.ராஜேந்தர்.

ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன் நடிகர் கமல்ஹாசன் சம்பள பாக்கி வைத்திருப்பதாக புகார் கூறியது குறித்து நடிகை கவுதமி விளக்கம்.

சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐநா.வுக்கு கண் இல்லையா ? அன்று இலங்கை இன்று சிரியா! ஆக யாருக்குமே இதயம் இல்லையா ? - நடிகர் விவேக்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் கூடுதலாக 43 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் யாரையும் விடுவிக்கக்கூடாது - சிபிஐ தரப்பு

வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரின் வாதங்கள் நிறைவு.

டெல்லி மற்றும் சண்டிகரில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் -மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜேபி. நட்டாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம்.

பாலேஸ்வரம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து முதியவர்களை வெளியேற்றி நாளை மறுநாள் சீல் வைக்கப்படும் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

கேரளத்தில் அரிசி திருடியதாக கொல்லப்பட்ட மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேலூர் : தனியார் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவன் பிரகாஷை தலைமை ஆசிரியர் ராஜா அறைந்ததாக புகார் : ஆசிரியர் தாக்கியதால், காது கேட்காமல் போன மாணவன் பிரகாஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரும் 3 தேதி முதல் செல் போன் தடை : செல்போனை பாதுகாப்பாக வைக்க ₹10 தரவேண்டும் என கோயில் நிர்வாகம் தகவல்.

மதுரை ஆதீனத்துக்குள் நித்யானந்தா நுழைவதை தடுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மார்ச்5 இல் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கீதாஞ்சலி வைர நகை நிறுவனம் ரூ.1,251 கோடி மோசடி என புகார்.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஹைப்பர்லூப் அடுத்த தலைமுறை பயணம்


ஹைப்பர்லூப் அடுத்த தலைமுறை பயணம்

  இனி, பஸ்ஸில் ஏறி ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்றால் அது நடக்காது.. காரணம் அதற்குள் பெங்களூர் வந்து விடும் அது தான் ஹைப்பர் லூப் பயணம்.. Train, பஸ், விமானம், புல்லட் Train, இந்த வரிசையில் அடுத்தது ஹப்பர்லுப் .. இதன் மூலம் இந்தியாவில் எந்த மூலைக்கும் அதிக படியாக ஒரு மணி நேரம் தான் .. ..
♦️பொதுவாக எந்த ஒரு பொருளும் வெற்றிடத்தில் (vacuum) வேகமாக பயணிக்கும், இந்த கோட்பாட்டை  உள்ளடக்கியது தான் ஹப்பர்லூப் பயணம்..
 ♦️எடுத்து காட்டாக முதலில் சென்னை முதல் பெங்களூர் வரை பழைய வீராணம் பைப் அளவு விட்டம் கொண்ட குழாய்கள், பூமிக்கு மேலோ, கீழோ அமைக்கபடும். அதற்குள் ரயில்வே தண்டவாளங்கள் போல் அமைக்க படும்.. பிறகு அதில் காற்று அழுத்த 0 (zero) அளவுக்கு குறைக்கபடும்.. பிறகு அதன் உள்ளே இருக்கும் பஸ் போன்ற  ,ஹைப்பர் லூப் வாகனத்தில் உள்ள புரபெல்லர் இயக்க படும்.. அவ்வளவு தான் ஹப்பர்லூப் வெற்றிடத்தில் விமானத்தை விட வேகமாக பறக்கும்,.ஒடும் (sorry புது வார்த்தை கண்டு  பிடிக்க வேண்டும்).. அதாவது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகம்..( எழுதும் போதே மெய் சிலிர்க்கிறது..
♦️இதன் திட்ட செலவு புல்லட் ரெயிலை விட மிக குறைவு என்பதால் டிக்கட் விலையும் சாமானியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்..
♦️இந்த ஹைப்பர்லூப்பில் நாம் நம் தலைமுறையிலே பயணம் செய்ய போகிறோம்..அதாவது இன்னும் பத்து வருடத்திற்குள்.... ,
♦️உலகில் முதல் ஹைப்பர் லூப் வழித்தடம் அமேரிக்காவில் நிர்மாணிக்க பட்டு வருகிறது..
♦️உலகில் இரண்டாவது நாடாக நம் இந்தியா தான் இந்த  விஞ்ஞான வசதியை பெறப்பேகிறது..
♦️இன்று மும்பை பூனே இடையே ஹப்பர்லூப் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது..
பெங்களூர்_ சென்னை அடுத்த திட்டங்களில் உள்ளது..
♦️ இனி காலை மும்பைக்கு வேலைக்குப்போய் இரவு வீடு வந்து விடலாம்...

மாட்டுக்கறி ஏற்றுமதிக்கே இவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்போது மனித எலும்பு ஏற்றுமதி அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?

மாட்டுக்கறி ஏற்றுமதிக்கே இவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்போது மனித எலும்பு ஏற்றுமதி அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?

செங்கல்பட்டு அருகே செயல்பட்டுவந்த செயின்ட் ஜோசப் கருணை இல்லம் தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ளது.

முழுமையான விசாரனை நடத்தி அங்கு தவறு நடந்திருந்தால் அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனைக்கூட கொடுங்கள்.

தவறு யார் செய்தாலும் தவறுதான்.

தமிழக அரசின் சமூக நலத்துறை, காவல்துறை, தாசில்தார் உள்ளிட்டோர் அங்கு சோதனை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அறிக்கையாக கொடுத்துள்ளனர்.

அதில் உள்ள விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் பல தகவல்களை உண்மையா பொய்யா என யோசிப்பதற்கு முன்பே இங்கு பரவவிடும் கும்பலும் இருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் டார்கெட் யாராக இருக்கிறார்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இங்கு முதியவர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு அவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக ஒரு தகவலை பரப்பி பீதிக்குள்ளாக்கும் யாராவது ஒருத்தர் இதற்கு பதில் சொல்லட்டும்

1.இந்தியாவிலிருந்து மனித எலும்புகளை ஏற்றுமதி செய்ய சட்டம் அனுமதிக்கிறதா?

2 . ஏற்றுமதி /இறக்குமதி செய்யும் எந்த ஒரு பொருளும் கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு தெரியாமல் செய்ய முடியுமா?

3.செயிண்ட் ஜோசப் கருணை இல்லம் சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஏதேனும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா?

4. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கருணை இல்லத்திற்கு லைசன்ஸ் இருக்கிறதா?

5. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து NGOக்களுக்கு வந்த நிதியை தடுத்துவிட்டோம் என சொல்லி வந்த பாஜகவினர் தற்போது மட்டும் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்திற்கு வெளிநாட்டு நிதி வருகிறது என சொல்வது எப்படி?

6. மத்திய அரசுக்கு தெரியாமல் எப்படி நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவர முடியும்?

7. சசிகலா குடும்பம் தொடர்புடைய 150க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரி சோதனை செய்து அதை இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரி சோதனையாக சொன்ன மத்திய அரசால் இந்த கருணை இல்லம் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை கண்டுபிடிப்பது கடினமான காரியமா என்ன?

8. கூடங்குளம் போராட்டம் வெளிநாட்டு நிதியில்தான் நடக்கிறது. அதை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம் என சொன்ன பாஜக ஆட்சிக்கு வந்து மூனரை ஆண்டுகளாகியும் ஒரு சிறு வங்கி பரிவர்த்தனை ஆதாரத்தையும் கொடுக்கவில்லை ஏன்?

9. கூடங்குளத்தில் அணுவுலை வெடித்தால் சாகப்போவது கிறிஸ்தவன் மட்டும் அல்ல தென் தமிழகம் முழுவதுமே அழிந்துபோகும். இந்த உண்மையிலிருந்து மக்களை திசை திருப்பி பிரித்தாலும் சூழ்ச்சியை கையாண்டு, அங்கு போராடும் மக்களை வெறும் கிறிஸ்தவர்களாக மட்டும் காட்டி, இது ஏதோ ஒரு மத பிரச்சினை போன்று சித்தரித்து அந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய தேவைப்பட்டது மதம். கூடங்குளத்தை சுற்றிலும் உள்ள கடற்கரையோர கிராமங்களில் வாழ்பவன்தான் அதை எதிர்த்து போராடியாக வேண்டும். அப்படி போராடுபவனின் மதம்தான் அந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய கிடைத்த ஆயுதம்.

10. ஒரு சினிமா படம் வெளிவரும் முன்பே அந்த படத்தில் நடிகர் விஜய் இந்து மதத்தை தவறாக பேசியிருக்கிறார் என சொல்லி, இந்திய அரசு ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் தனிப்பட்ட ஆவணமான வாக்காளர் அடையாள அட்டைவரை நோண்டி எடுத்து 'ஜோசப் விஜய்' என கண்டுபிடித்து சொன்ன H.ராஜா தலைமையிலான புலனாய்வு குழுவிற்கு செயின்ட் ஜோசப் கருணை இல்ல விவகாரத்தில் நடந்ததை சொல்ல ஒரு ஆதாரம் கூடவா இல்லை?

11. மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, நிதி பரிவர்த்தனைகள், சிபிஐ என இத்தனை துறைகளை வைத்திருந்தும் ஆதாரப்பூர்வமாக எதையும் கண்டுபிடிக்க முடியாத ஆட்சியா மோடி ஆட்சி?

12. வயதானவர்களை கொண்டுவந்து, சோறுபோடாமல் சாகடித்து, அவர்களை புதைத்து,அவர்களின் எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யனும். ஏன் இவ்ளோ கஷ்டப்படனும்? காசிக்கு போனா அங்க தினமும் பாதி எரிந்த நிலையில் நூற்றுக்கணக்கான பிணம் தண்ணியில் மிதந்து வருமே? அங்க கிடைக்காத பிணமா இங்க கிடைக்கப்போகுது?

13. இந்தியாவிலிருந்து சாதாரண மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால்கூட முறையான லைசன்ஸ் வேணும். ஏன் இங்கு பெரும்பான்மையான மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனத்தை நடத்திவரும் பக்தாளுக்கு தெரியாதா இது?

14. மாட்டுக்கறி ஏற்றுமதிக்கே இவ்வளவு கட்டுப்பாடு இருக்கும்போது மனித எலும்பு ஏற்றுமதி அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?

15.இது மட்டும் உண்மையா இருந்தா இதைவிட ஒரு தொக்கான மேட்டர் ஹெச்.ராஜா கோஷ்டிக்கு இருக்குமா என்ன?

உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கையை இந்த கருணை இல்லத்தின் மீது எடுங்கள். தவறு செய்திருந்தால் அதற்கு காரணமானவர்களை தூக்கில்கூட போடுங்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு புரளியை கிளப்பி மத சண்டை மூட்டிவிட இங்கு எப்போதும் முயற்சிக்க வேண்டாம்.

காரணம் இது மனிதனை தன் சுயபுத்தியால் சிந்தித்து பகுத்தறிந்து வாழ் என சொல்லிவிட்டு போன பெரியோர்கள் வாழ்ந்த மண்.

கமலும் ரஜினியும்:



கமலும் ரஜினியும்:

கமல்:

நிறைய புதிய முயற்சிகளை திரைத்துறையில் எடுத்தவர் என்ற போதிலும் எதிலும் முழுமையான வெற்றியை எட்டிடாதவர் என்பது மட்டுமல்ல, போதுமான பொருளாதார அறிவுமற்றவர். தனது தோல்வியின் படிப்பினைகளை கற்று தேறாதவர்.

மருத நாயகம் என்றொரு படம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத் அவர்கள் இளமையாய் இருக்கும் போது அவரை வைத்து துவக்கிய படம், அநேகமாய் பிரிட்டிஷ் ராணிக்கு இப்போது தொண்ணூறு வயதிற்கு மேலாகியும் படம் துவங்கிய பாடில்லை.

அதோடல்லமால் தனது முயற்சிகள் தோல்வியுற்றால் அதனை கொண்டு கற்றுணராமல், அடுத்த புதிய முயற்சியை துவங்குவதில் இவருக்கு நிகர் இவரே. உத்தம வில்லன் என்றொரு படம் தமிழ் ரசிகர்களின் சுவையறியாமல், கமல் தனது சுய சுவைக்காக எடுத்த படம்.

மெத்தப் படித்தவன் அரை பைத்தியத்திற்கு சமம் என்றொரு சொலவடை உண்டு அதன் மிக சிறந்த உதாரணம் கமல் தான். கமல் தானே கதை வசனமெழுதி இயக்கிய படங்களனைத்தும் மேலும் மற்றவர் இயக்கத்தில் குறுக்கீடு செய்த படங்களும் தோல்வியே கண்டன. அதேபோல் தோல்விகளும் பிரச்னைகளும் தன்னை நெருக்கும் போது அதனை எதிர் கொண்டு போராடாமல் அதிலிருந்து எஸ்கேப் ஆவதில் வல்லவர். விஸ்வரூபம் படப் பிரச்னையிலும் ஜெ.வை எதிர்த்து போராட தயங்கி நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிக்கை விட்டவர் தான் இவர்

இப்போது கமல் தமிழக மக்களிடையே தனது பரீட்சார்த்த முயற்சிகளை திணிக்க முயற்சிக்கிறார். தனது முயற்சிகள் தோல்வியடைந்தால், மக்களை கைகழுவிவிட்டு வேறொரு தேசம் குடியேறவும் தயங்க மாட்டார். இதுவரை அவரது முயற்சிகள் திரைத்துறையே பாதித்தது ஆனால் இம்முறை பாதிக்கப் போவது தமிழக வாக்காளர்களே.

ரஜினி:

கமலாவது பராவாயில்லை, ரஜினி இதுவரை தமிழக ரசிகர்களின் பணத்தை கொள்ளையடித்த அளவிற்கு,வேறு எந்த நடிகரும் தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடிக்கவில்லை. இதுவரை சொந்தபடம் எதுவும் தயாரிக்காமல் திரையில் கொள்ளையடித்த தமிழக மக்களின் பணத்தை பத்திரமாக பாதுகாப்பதில் வல்லவர்.

அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தினாலும் லதா அய்யங்காரின் ஆத்துக் காரர் வீட்டில் ரெய்டு நடந்ததாக வரலாறு பூகோளம் எதுவுமில்லை. கபாலி பட டிக்கட்டை₹2000 க்கு விற்று திரைத் துறையில் சிஸ்டத்தை சரி செய்த மகான் இவர்.

பள்ளி வாடகை பாக்கி கட்டமாட்டார்.பைனான்ஸிஸ் வாங்கிய பணத்தை திரும்ப தரமாட்டார். இவருக்கும் பஞ்சாப் தேஷனல் வங்கியில் பணத்ணை சூறையாடிய மோடியின் நண்பர் நீரவ் மோடிக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இவரது மாமனார் நடத்தும் பள்ளியில் ஏழு வருடங்களுக்கு முன் நீச்சல் குளத்தில் மரணமடைந்த சிறுவனின் பெற்றோருககு இதுவரை நியாயப் கிடைத்த பாடில்லை. இவரது பூர்வீகம் பால்தாக்ரேவிடமிருந்து ஆரம்பமாகிறது. பால்தாக்கரே தீவிர இந்து மத வெறியர் மட்டுமல்ல வன்முறையாளரும் கூட,  அவர்தான் ரஜினியின் அரசியல் குரு.

இதுவரை பார்ப்பனர்களுக்கென தனி கட்சி இல்லாமலிருந்தது, அவர்கள் "தம்பிராஸ்" என்ற அமைப்பின் கீழ்தான் இயங்கி வருகின்றனர், அவர்களது அரசியல் முயற்சியே லதா அய்யங்காரின் ஆத்து காரர் ரஜினியின் கட்சியென்றால் மிகையாகாது.

ரஜினியை ஆதரிக்கும், ஆடிட்டர்.குருமூர்த்தி, துக்ளக் இணையாசிரியர் ரமேஷ் ஆகியோரின் பின்புலங்களை உற்று நோக்கின் பார்ப்பனர்களின் பம்மாத்து வேலை பல்லிளிக்கும்.

ஐஸ்வர்யா தனுஷ் எந்த சிஸ்டத்தின் அடிப்படையில் ஐநா கலாச்சார தூதுவராக நியமிக்கப் ட்டார் என்று ரஜினி கூறுவாரேயானால் நான் நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு ₹10கோடி தர தயாராயிருககிறேன்.

ஆக தற்போது எரிகிற இரு கொள்ளியில் எந்த கொள்ளி யும் நல்ல கொள்ளியில்லை. தமிழக வாக்காளர்கள் மூல நோய்க்கு களிம்பு தடவலாமேயன்றி கொள்ளிக்கட்டையால் சொறியக் கூடாது. இக்கொள்ளிகளில் எதனை எடுத்து சொறிந்தாலும் பிட்டம் புண்ணாகுமே தவிர பிறிதொன்றும் நடவாது.

கமல்,ரஜினி இருவருமே மோடி அரசை விமர்பதில்லை என்பதில் உறுதியாயுள்ளதிலிருந்தே இவர்கள் இருவரும் எவரின் கைப்பாவைகள் என உள்ளங்கை நெல்லிகனியாய் விளங்கும்.

ரஜினியும்,கமலும் மோடியை ஆதரிப்பதில் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு!

#சொல்லணும்னு_தோணுச்சு நன்றி: #Manohar_Rs

பிப் 26 - மற்றுமொரு திருவிழா


பிப் 26 - மற்றுமொரு திருவிழா

அறிவை தேடும் அத்தனை எம் அறிவார்ந்த தமிழ் சொந்தங்களுக்கும் எமது அன்பின் அழைப்பு !
-----------------------------------------------------------------------

" அமைப்பாய்  திரள்வோம் " என்ற தலையங்கத்தில் - மனித வாழ்வியலை வரிகளாக்கி , வேத நூல்களின் அறிவுரையை நெறிகளாக்கி -

மண்ணில் அன்பு தழைக்க  ,
மனித வாழ்வு செழிக்க ,
தன்னலம் மறக்க ,
பிறருக்காக உழைக்க 

எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்து - நூலாக்கியிருகிறார் எழுத்தாளர் திருமா அவர்கள் !

அவரது இந்த பெருமைமிக காவியத்தின் (நூலின் ) வெளியீட்டு விழா -மிக பிரம்மாண்டமாக

நாளை ( பிப் 26 ) மாலை 5 மணியளவில் - நேர்மையின் இலக்கணமாம் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் -

உங்கள் வீட்டு அன்பு மகன் திருமா அவர்களின் ஏற்புரையில்

ஆகச்சிறந்த தமிழக அரசியல் ஆளுமைகள் , எழுத்தாளர்கள் , கவிஞ்சர்கள் , சமூக ஆர்வலர்கள் , திரை துறை பிரபலங்கள்

மேலும் தமிழ் சொந்தங்கள் உங்கள் அனைவரின் பங்கேற்பில் -

பெரும் வரலாற்று நிகழ்வாக நடைபெற உள்ளது !

இந்த நிகழ்வில் சிறுத்தைகள் ஒவ்வொருவரும் நிச்சயம் பங்கேற்கவேண்டும் !

தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் உறவுகள் நீங்களும் பெரும்திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்!

அனுமதி இலவசம் !

சனி, 24 பிப்ரவரி, 2018

ஏர்செல்: எழுந்த – வீழ்ந்த வரலாறு


ஏர்செல்: எழுந்த – வீழ்ந்த வரலாறு

ஸ்டான்லி ராஜன் அவர்களது முகநூல் பதிவு:

கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது என்கின்றார்கள்

வியாபார உலகில் அக்கார செட்டியார்களுக்கு பின் பல தமிழர்கள் முத்திரையிட்டனர், அதில் ஒருவர் சின்னகண்ணு சிவசங்கரன், சென்னையில்தான் பிறந்தார் , 1980களில் கம்பியூட்டர் வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினார் , அமிர்தராஜ் குரூப்பிடம் இருந்து அவர் வாங்கிய‌ ஸ்டெர்லிங் கம்பெனி சக்கை போடு போட்டது

சிங்கப்பூர் அவரின் தலமையகம் ஆனது, இப்பொழுது செஷல்ஸ் குடியுரிமை கொண்டிருக்கின்றார்.

தூத்துகுடி ஸ்டெர்லிங் ஆலை, மெர்கண்டைல் பேங்கினை வளைத்து போட்டது என விஸ்வரூபெமெடுத்த அவரின் கம்பெனிதான் ஏர்செல்

நல்ல வியாபாரி வருங்காலத்தை கணிக்காமல் தன் சாம்ராஜ்யத்தை தக்க வைக்க முடியாது, அப்படியே இந்த தொழிலை கையில் எடுத்தார் சிவசங்கரன், ஏர்செல்லை தொடங்கிய வேகத்தில் சென்னை ஆர்பிஜி செல் கம்பெனி எல்லாம் வாங்கி குவித்தார்

இந்தியாவில் மொபைல் புரட்சி சக்கை போடு போடும் என அவர் கணித்தது தவறல்ல, மாறாக பல எதிரிகள் உருவாவார்கள் என கணிக்காமல் விட்டது தவறு

இந்திய கைபேசி சந்தை கச்சா எண்ணெய் போல வருமானம் கொட்டும் விஷயம் என உணர்ந்த முதலாளிகள் உலகம் களத்திற்கு வந்தது

டாடா வந்தார், இன்னும் சிலர் வந்தனர் , மலேசிய தொழிலதிபரான அனந்த கிருஷ்ணன் குறிவைத்தார், இதனை எல்லாம் கவனித்துகொண்டிருந்தார் அம்பானி

அம்பானியின் பிசினெஸ் ஸ்டைல் கிட்டதட்ட ஜப்பானை போன்றது, இன்று சீனாவின் ஸ்டைலும் அதுதான். அண்ணாச்சி வைகுண்டராஜன் ஸ்டைலும் அதுதான், ஏர் ஏசியா விமான ஸ்டைனும் அதுதான்

அது என்ன ஸ்டைல் என்றால், சந்தையில் வியாபாரிகளுடன் போட்டியா? கவலைபடாதே சல்லி விலையில் பொருளை கொடு, தரம் அப்படி இப்படி இருக்கட்டும் பிரச்சினை அது அல்ல, விலை குறைத்து அடிக்க வேண்டும். குறைப்பு என்றால் தரைவரை குறையவும் தயாராய் இருக்க வேண்டும்

நஷ்டம் வரும், முதலில் தாங்கு. ஆனால் அடிக்கிற அடியில் எதிர் கோஷ்டி எல்லாம் ஓடும். அதன் பின் நீ தனிகாட்டு ராஜா. எதிரி யாரும் இல்லா நிலையில் முன்பு இழந்ததையும் சேர்த்து அள்ளிவிடலாம்”

இது ஒரு தந்திரம், நுட்பமும் அதிகம் ஆபத்தும் அதிகம்

திருபாய் அம்பானி தன் டெக்ஸ்டைல் பணத்துடன் இதில் இறங்கினார், கொஞ்ச நாளைக்குள் இறந்தும் போனார், வாரிசுகள் தொடர்ந்தன‌

இந்நிலையில் மலேசிய அனந்த கிருஷ்ணனுக்கு உட்புகும் ஆசை வந்தது. அவர் மிகபெரும் வியாபாரா சாம்ராஜ்ய அதிபர், மலேசியாவின் மிகபெரும் புள்ளி, பெட்ரோல், கட்டுமானம், விமானம் என ஏகபட்ட தொழில்கள் அதிலொன்று ஆஸ்ட்ரோ டிவி

மலேசிய டிவி ஒளிபரப்பு முழுக்க அவர் கட்டுப்பாடு, எதிரியே கிடையாது. மலேசியாவில் தமிழ் திரைபடங்கள் சில நாட்கள் ஓடும் அதன் பின் காணாமல் போகும்

எங்கு போகும்? இத்தனை டாலர் கட்டிவிட்டு அனந்த கிருஷ்ணனின் ஆஸ்ட்ரோவில் பார் என விளம்பரம் வரும், அந்த அளவு அவருக்கு வியாபார தந்திரம்

தயாநிதிமாறனுக்கு சன்டிவி வியாபாரம், அனந்த கிருஷ்ணனுக்கு இந்திய மொபைல் போன் சந்தை மீது கவனம் இருவரும் இணைந்தால் என்னாகும்?

சிவசங்கரனுக்கு நெருக்கடிகள் வந்தன, இம்மாதிரி கம்பெனிகளுக்கு உரிமம் வழங்கும் தகவல் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதிமாறன் அப்பொழுது இருந்தார், என் தொழிலை தொலைக்கபார்க்கின்றார் மாறன் என குமுறிகொண்டிருந்தார் சிவசங்கரன்

இறுதியில் ஏர்செல் நிறுவணம் அனந்த கிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவணத்திற்கு கைமாறியது

இதுபற்றி வழக்கெல்லாம் நடந்தது, அந்நிய நாட்டவரான குவாத்ரோச்சியினையே மலேசியாவில் தொட்டுபார்க்க முடியாத இந்திய அரசு அனந்த கிருஷ்ணனை என்ன செய்யமுடியும்?

வழக்கு என்னமோ ஆனது

இப்பொழுது வழக்கு சிக்கல் அல்ல, ஏர்செல்தான் சிக்கல்

தொழிற் போட்டியில் எப்படி பாம்பே டையிங் முதல் எத்தனையோ பரகாசுர கம்பெனிகளை அம்பானி குழுமம் அதிரடியாய் விரட்டியதோ அப்படி மொபைல் உலகிலும் அதிரடி காட்டிற்று

அது ஜியோ என இறங்கும்பொழுதே சொன்னோம், இந்த விலைகுறைப்பால் எதிர்கம்பெனி ஒன்று விலை குறைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டவெண்டும் இரண்டுமல்லாது சாத்தியமே இல்லை

அதுதான் நடந்திருகின்றது, மூட்டை கட்டுகின்றது ஏர்செல். இன்னும் பலர் கட்டலாம்

இன்று ஜியோ குறைவு அது குறைவு என மகிழும் இந்திய சமூகம், எல்லா கம்பெனியும் மூட்டை கட்டியபின்பே அம்பானியின் முகத்தை காணும், அதுவரை என்சாய்

இதில் யார் மகிழ்வார்களோ தெரியாது, கதற கதற தன் நிறுவணத்தை விற்ற சிவசங்கரனுக்கு நிச்சயம் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்

இனி அந்த வழக்கில் நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் அவருக்கு என்ன?

(இந்த செய்தி எல்லாம் இந்த ஏர்செல் கவிழும் நேரத்தில் எந்த ஊடகமாவது வெளியிடுமா என்றால் இல்லை, அதனால் என்ன நாம் சொல்லிவிட்டோம்.)

நடிகை ஸ்ரீதேவி காலமானார்! #BigBreakin



நடிகை ஸ்ரீதேவி காலமானார்! #BigBreakin

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர்.
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்றவை முக்கியமானப் படங்கள். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுதிரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.

புதிய தலைமுறை குழுமத்திலிருந்து ஷ்யாம் ராஜினாமா.



அசையும் புதியதலைமுறை

புதிய தலைமுறை குழுமத்திலிருந்து ஷ்யாம் ராஜினாமா.

புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கிய நாளுக்கு முன்னதாகவே, அந்தக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ஷ்யாம் ஒரு மாதத்துக்கு முன்னால் பதவி விலகியுள்ளார்.

சேர்ந்ததே ஒரு சுவையான கதை.
------------------------------------------------------------
புதிய தலைமுறை குழுமத்தில் இவர் பணியில் சேர்ந்ததே ஒரு சுவையான கதை.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சர்குலேஷன் மேலாளராக இருந்த ஷ்யாம், ஒரு மெடிக்கல் சீட் வேண்டும் என்பதற்காக எஸ்ஆர்எம் குழுமத்தின் கல்வித் தந்தை பச்சமுத்துவை சந்திக்கிறார். அப்போது பேச்சுவாக்கில், புதிய தலைமுறை சேனல் பற்றி பேச்சு வர, ஷ்யாமின் பேச்சில் மயங்கிய பச்சமுத்து, ஷ்யாமை சிஇஓவாக பணியில் சேரச் சொல்ல, அப்படித்தான் புதிய தலைமுறை குழுமத்தில் இணைகிறார் ஷ்யாம்.

கடைசியாக ஷ்யாம் வாங்கிய சம்பளம் மாதம் 12 லட்ச ரூபாய். இது போக, அலுவலகத்தில் வழங்கிய கார், ஓட்டுனர் எல்லாம் உண்டு.

புதிய தலைமுறை சேனல் தொடங்கி செயல்படத் தொடங்கியதும் அவர் நிர்வாகத்தை முழுமையாக பச்சமுத்துவின் மகன் சத்யநாராயணா பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்.

புதிய தலைமுறை சேனலை அடுத்து, மூன்று சேனல்கள் தொடங்க திட்டமிடப்பட்டது. புதிய தலைமுறை ஆங்கில செய்திச் சேனல், புது யுகம் மற்றும் வேந்தர் டிவி.
இந்த மூன்று சேனல்களைத் தவிர, புதிய தலைமுறை அச்சு இதழ், புதிய தலைமுறை கல்வி ஆகிய இதழ்களுக்கும், ஷ்யாம்தான் தலைமை செயல் அதிகாரி.

புதிய தலைமுறை ஆங்கிலச் சேனல், கடைசி வரை தொடங்கப்படவேயில்லை. பெரும் பணச் செலவுக்கு பிறகு ஒரு சுப தினத்தில் அது இழுத்து மூடப்பட்டு, அதில் பணியாற்றிய செய்தியாளர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

புதுயுகமும், வேந்தர் டிவியும் கடும் நஷ்டத்தில் இயங்கின. புதுயுகம் நடத்த மாதம் 50 லட்சம் செலவாகியது. அதில் இருந்து வரும் வருமானம் வெறும் 15 லட்சம் மட்டுமே.  கல்லூரியில் இருந்தும் பணம் வரவில்லை 

நீட் தேர்வு அறிமுகம் மற்றும் வருமான வரித் துறை சோதனைகள் மற்றும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து புதிய தலைமுறை குழுமத்துக்கு நிதி நெருக்கடி அதிகமாகியது. ஒரு கட்டத்தில் கடும் நஷ்டத்தில் இயங்கி வரும், வேந்தர் மற்றும் புது யுகம் சேனலை மூட வேண்டும் என்று உத்தரவிட்டார் பச்சமுத்து.

நீட் தேர்வினால் வந்த வினை
-----------------------------------------------------
நீட் தேர்வு அறிமுகம் ,, இந்த நீட் தேர்வினால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்த  ஒரு கல்லூரி SRM .. மெடிக்கல் சீட்டில் மட்டும் அவர்களுக்கு வருடத்திற்க்கு 1,400 கோடி ரூபாய் வருமானம் வருமாம்,, அதாவது மாதம் 115 கோடி வருமானம் ,, இது இந்த நீட் தேர்வினால் பறி போய் விட்டது. அது புதிய தலைமுறை பெருத்த அடி,,

 பண மதிப்பிழப்பு சோதனை 
------------------------------------------------------
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், அவர்களது கையில் இருந்த பணம் எல்லாம்  செல்லாததாகி விட்டது ,,  பேங்க் AC போட முடியாது , ஏனென்றால் எல்லாமே கள்ள பணம் ,, , கணக்கும்  காட்ட முடியாது ,, இப்படி  பிரச்சனையில் மாட்டியது நிர்வாகம்

இந்த நிலையில், புதுயுகமும், வேந்தர் டிவி யையும்  பச்சமுத்து மூட வேண்டும் என்று சொன்னாலும், ஷ்யாம் மூடக் கூடாது என்று தீர்மானமாக மறுத்து வந்தார். அவருக்கு ஆதரவாகவே, பச்சமுத்துவின் மகன் சத்யநாராயணாவும் குரல் கொடுத்தார்.

ஆனால், புதுயுகம் மற்றும் வேந்தர் சேனல்களின் கணக்கு வழக்குகளை கேட்டால், கடைசி வரை கொடுக்க மறுத்து வந்தார் ஷ்யாம். இந்த கட்டத்தில் புதுயுகம் சேனலை நிர்வகிக்க, சத்யநாராயணாவின் மனைவி மங்கை மற்றும் அவரது சகோதரர் மணி ஆகியோர் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர். அவர்கள் கணக்கு கேட்டாலும் கொடுக்க ஷ்யாம் மறுத்து வந்தார்.

இந்த நேரத்தில், புதிய தலைமுறை நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி முற்றுகிறது. கையில் இருந்த பணம் அனைத்தையும், சத்ய நாராயணா, அமராவதி நகரத்தின் கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்து விட்டார். சுத்தமாக பணம் இல்லாத நிலை. இந்த நிலையிலும் ஷ்யாம் கணக்கு கொடுக்க மறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் மங்கை, மணி ஆகியோர் எரிச்சலடைகின்றனர். நமது சேனலின் கணக்கை கேட்டால், நமக்கே தர மறுக்கிறான் என்று கோபமடைந்து, புது யுகத்தின் எடிட்டராக ஜெயா டிவியில் பணியாற்றிய பரணி என்பவர் அழைத்து வரப்படுகிறார்.

தனியாக ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி
----------------------------------------------------------------------------------------
பரணி முழுமையான விசாரணையை தொடங்குகிறார். ஷ்யாம் தனியாக ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்துவதும், புதிய தலைமுறை குழுமத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்துவதையும் கண்டு பிடிக்கிறார். ஷ்யாமுக்கு, கைத்தடியாக, மார்க்கெட்டிங் பொது மேலாளர் பாபி என்ற பெண்ணும், ஆப்பரேஷன்ஸ் பொது மேலாளர் சீனிவாசன் என்பவரும் இருக்கிறார்கள் என்பதும் கண்டு பிடிக்கப்படுகிறது.

புதுயுகம் சேனலின் ஸ்லாட்டுகளை, ஷ்யாம் தனியாக விற்பனை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த ஸ்லாட்டில் இந்த ப்ரோக்ராமை போடுங்கள் என்று சிஇஓ கூறினால் யார் மறுக்கப் போவது ? உடனடியாக அந்த ப்ரோக்ராம் ஒளிபரப்பப்படும். அந்த ஸ்லாட்டை வாங்கிய நிறுவனத்திடம் தொகை எங்கே என்று ஷ்யாமிடம் கேட்டால், அவர்கள் தாமதப்படுத்துகிறார்கள். இழுத்தடிக்கிறார்கள் என்று கூறுவார்.

பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகையில், அத்தனை நிறுவனங்களிடமும், ஸ்லாட்டுக்கான பணத்தை ஷ்யாம் வாங்கியுள்ளதும், எஸ்ஆர்எம் நிறுவனத்துக்கான வருமான வரி பிரச்சினையை சுட்டிக்காட்டி, பெயரில்லாமல் ப்ளாங்க் செக்குகளை வாங்கியதும் தெரிய வருகிறது.

ஒரு கட்டத்தில் ஒரு கணக்கில் மட்டும்  பார்த்தால், ஷ்யாம் புதிய தலைமுறை நிறுவனத்தின் 14 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

இது போக, கிறிஸ்துவ வெறியரான ஷ்யாம், கிறித்துவ தேவாலயங்கள் தொடர்பான செய்திகளை புதிய தலைமுறை செய்திகளில் ஒளிபரப்பப் செய்வதற்கு பணம் பெற்றதும் தெரிய வருகிறது. கிறிஸ்துவ பிரச்னைகளையும் ( அதாவது பாதிரியார் கற்பழிப்பு ) ஒளிபரப்பாமல் இருப்பதற்கும் பேரம் பேசி பணம் வாங்கியிருக்கிறார்

ஒரு நாள் விசாரணை என்று கணக்கு வழக்குகளை சரி பார்க்க அழைக்கிறார்கள். அன்று உடல் நிலை சரியில்லை என்று வராமல் தவிர்த்த ஷ்யாம், மறு நாள் ராஜினாமா கடிதம் அனுப்புகிறார்.

ஷ்யாமின் இந்த ஊழல்கள் அனைத்தையும் அறிந்தாலும், பச்சமுத்துவின் மகன் சத்யநாராயணா தொடர்ந்து ஷ்யாமுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார். அதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.

கூடுதல் தகவல் :
--------------------------------
ஷ்யாம், புதிய தலைமுறை நிறுவனத்தில் பணி புரியும் பல பெண்களிடம் முறை தவறி நடந்து கொண்டிருக்கிறார் என்பதும், பெண் விஷயத்தில் பலவீனமானவர் என்பதும் கூடுதல் தகவல். இந்த பலவீனத்தின் காரணமாக, சத்யநாராயணா ஷ்யாமை ஆதரித்தாரா என்பது குறித்து நம்மிடம் தகவல் இல்லை.


பார்வடு மெசேஜ் நன்றி...

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மிஸ்டர் கழுகு: தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?



மிஸ்டர் கழுகு: தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

 கழுகார்

‘‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே...’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.

‘‘யாரைச் சிங்கம் என்கிறீர்?’’ என்றோம்.

‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.

‘‘2017 பிப்ரவரியில் அமைதியாக தியானப் புரட்சி செய்து, சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் ஓ.பி.எஸ். இப்போது தேனியில் செயல் வீரர்கள் கூட்டத்தில் சத்தமாகப் பேசியதன் மூலம், எடப்பாடிக்கு எதிராகத் திரியைக் கொளுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.’’

‘‘அது ஏதோ தினகரனுக்கு எதிராகப் பேசியது போலத்தானே இருக்கிறது?’’

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால், இதை முதல்வர் - துணை முதல்வர் மோதலாகத்தான் சொல்கிறார்கள். எடப்பாடிக்கும் பன்னீருக்கும் செல்வாக்கையும், செல்வத்தையும் பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்னை. அடுத்தடுத்து சத்தமில்லாமல் எடப்பாடி செய்யும் உள்குத்து வேலைகளால் பன்னீர் உச்சகட்ட எரிச்சல் அடைந்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸை வெறுப்பேற்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களைப் பயன்படுத்துகிறார் எடப்பாடி. அவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைக் கச்சிதமாகச் செய்து, அவ்வப்போது பன்னீர்செல்வத்துக்குக் கண்ணீர் வரவழைக்கிறார்கள்.”

‘‘ஓஹோ.’’

‘‘கடந்த வாரம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘தினகரன் அணியில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன் எங்கள் பக்கம் வந்தால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி மொழி கொடுத்திருந்தோம்’ என்று குறிப்பிட்டார். அதுவரை உள்ளுக்குள் கசந்து கொண்டிருந்த பன்னீருக்கும் எரிச்சல் உச்சத்தில் ஏறியது. தேனி அரசியலில் பன்னீருக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஜென்மப் பகை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்போம் என்று பேசியதில் பன்னீர் கோபம் எல்லை கடந்தது. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை சம்பந்தமான ஒரு விஷயம் பேசப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறையின் சார்பில்தான் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அது தொடர்பான ஆதாயங்கள் எதுவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பக்கம் வருவதில்லை. ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குப் பிறகு சுமார் 2,000 நிர்வாகிகளை எடப்பாடியும் பன்னீரும் இணைந்து நீக்கியுள்ளனர். ‘இந்த இடங்களுக்குப் புதிய ஆட்களைப் போட மறுக்கீறீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற சூழலில் எல்லாரையும் நீக்கிக் கொண்டே இருந்தால், கட்சியை எப்படிக் காப்பாற்றுவது... தேர்தலை எப்படிச் சந்திப்பது’ என்று எடப்பாடியிடம் கேட்டுள்ளார் பன்னீர். இந்தப் பதவிகளை இருவரின் ஆதரவாளர்களுக்குள் பகிர்ந்துகொள்வதில் சிக்கலாம். அதில் வாக்குவாதமாகி, அந்தக் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறும் மனநிலைக்கு வந்தார் ஓ.பி.எஸ். அதற்கு மறுநாள்தான் தேனியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் அதிரடியாகப் பேசினார் என்கிறார்கள்.’’



‘‘தேனியில் மோடி பெயரை இழுத்து ஓ.பி.எஸ் பேச என்ன காரணம்?”

‘‘பிரதமர் மோடியைப் பற்றி வேண்டுமென்றேதான் பன்னீர் குறிப்பிட்டார். ‘மோடி சொன்னதால்தான் எடப்பாடியுடன் இணைந்தேன்’ என்றார் அவர். இதன்மூலம், ‘தனக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் பஞ்சாயத்தை டெல்லிதான் தீர்த்து வைக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ‘இல்லாவிட்டால், விலகிச்சென்று தனிக்கட்சி தொடங்கும் ஐடியாவில் இருக்கிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்..’’

‘‘சரி, எடப்பாடி என்ன திட்டத்தில் இருக்கிறார்?’’

‘‘எடப்பாடியோடு சசிகலாவின் தம்பி திவாகரன் நல்ல தொடர்பில் இருக்கிறார். ‘இந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டால், சசிகலா குடும்பம் கட்சியைக் கைப்பற்றிவிடும்’ என்ற கணிப்பு எடப்பாடிக்கு இருக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தினகரனைச் சமாளிக்க திவாகரன் தேவை என்பதால், எடப்பாடி இதைச் செய்கிறார். அதோடு, தினகரனிடமும் மூத்த அமைச்சர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார். ‘ஒருவேளை சசிகலா குடும்பம் கட்சியில் மீண்டும் தலைதூக்கினால், ஓ.பி.எஸ்ஸைப் பலிகொடுத்துவிட்டு, நாம் அவர்களிடம் சரண்டராகிவிடுவோம்’ என்பது எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘தினகரனின் தனிக் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் என்ன ஆனது?’’

‘‘அதை நோக்கித்தான் தினகரன் நகர்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் தனக்கு நல்லது என்றும் அவர் திட்டவட்டமாக நம்புகிறார். அதுபற்றி சசிகலாவிடம் பேசுவதற்குத்தான் பிப்ரவரி 19-ம் தேதி திங்கள்கிழமை பெங்களூரு பயணம். அதில், எடப்பாடி-ஓ.பி.எஸ் மோதல், திவாகரன் - எடப்பாடி கூட்டு, பி.ஜே.பி-யுடன் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் வைத்துள்ள தொடர்புகள் என எல்லாவற்றைப் பற்றியும் விவாதித்திருக்கிறார். அதோடு ஜெயா டி.வி-யையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன்.’’

‘‘ஜெயா டி.வி விவேக் கட்டுப்பாட்டில்தானே இருந்தது?’’

‘‘ஆம். ஆனால், அது தனக்குச் சாதகமாக இல்லை என்று தினகரன் கருதுகிறார். அந்தத் தொலைக்காட்சியைக் கையில் வைத்துக்கொண்டு விவேக் தனி லாபி செய்கிறார் என்பது தினகரனின் எண்ணம். அதனால், அதையும் தன் வசப்படுத்த நினைக்கிறார். ‘நிகழ்ச்சிகளின் பொறுப்பை விவேக் பார்த்துக்கொள்ளட்டும். செய்திகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார் தினகரன். தினகரனின் இந்த மூவ்மென்ட்டைப் புரிந்துகொண்ட விவேக், ‘ஒரு நிறுவனத்துக்கு இரண்டு நிர்வாகிகள் இருக்கமுடியாது; மொத்தமாக நான் சேனலைப் பார்த்துக்கொள்வதென்றால் சரி. இல்லையென்றால், எனக்கு சேனலே தேவையில்லை’ என்று சசிகலாவுக்குச் செய்தி அனுப்பியுள்ளாராம். இந்தப் பஞ்சாயத்தால் விவேக் இரண்டு வாரங்களாக ஜெயா டி.வி அலுவலகத்துக்கு வரவில்லையாம்’’ என்ற கழுகார், கிளம்பும் நேரத்தில் ஒரு தகவலைச் சிதறவிட்டுவிட்டுப் போனார்.

‘‘அடுத்த வாரம் அகமதாபாத்தில் மிக முக்கியமான சந்திப்பு ஒன்றை டெல்லி பி.ஜே.பி நடத்த உள்ளது. அது நடந்தால், தமிழக அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறும்!”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வி.ஸ்ரீனிவாசுலு



அச்சுறுத்தியவருக்கு அதிகபட்ச தண்டனை!

சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில், ஆறு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மரணத் தண்டனை அளித்துள்ளார். 2017 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கொடூரம், தமிழகத்தையே உலுக்கியது. ஐ.டி ஊழியரான 24 வயது தஷ்வந்தை அப்போது குண்டர் சட்டத்தில் கைது செய்தது போலீஸ். ஆனால், சில வாரங்களிலேயே அவரை ஜாமீனில் விடுவித்தது பெரும் சர்ச்சையானது. அந்த நேரத்தில் தன் அம்மா சரளாவைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு மும்பைக்கு ஓடினார் தஷ்வந்த். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர் பிடிபட்டார். ஹாசினி வழக்கில் இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதை ஹாசினியின் பெற்றோரே எதிர்பார்க்கவில்லை. வழக்கு நடக்கும்போதெல்லாம் ஹாசினியின் அப்பாவை அச்சுறுத்திக்கொண்டிருந்த தஷ்வந்த்துக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ளார் நீதிபதி. உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சமீபத்தில் ஆறு பேருக்கு மரணத் தண்டனை வழங்கப்பட்டது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது, கொடூரமான குற்றங்களைக் குறைக்க வேண்டும்.

விஜயகாந்திடம் கமல் சொன்ன பன்ச்!

அரசியல் கட்சி தொடங்குவதற்குமுன் தனக்கான ஆதர்ஷ மனிதர்களையும் நண்பர்களையும் கமல் சந்தித்தார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், ‘கமல் நிச்சயம் நல்ல அரசியல் பண்ணுவான்’ என்று யாரிடமோ சொன்னாராம். அதைக் கேள்விப்பட்டு சேஷனைச் சந்தித்தார் கமல். சேஷன், ‘எந்தச் சந்தேகம் இருந்தாலும் எப்ப வேணுமானாலும் சந்திக்கலாம்’ என்றாராம்.



இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவையும் கமல் சந்தித்தார். அப்போது, தான் எழுதிய ‘ஹே ராம்’ பட திரைக்கதைப் புத்தகத்தை நல்லகண்ணுவுக்குத் தந்தார். ‘உங்களின் கொள்கை, செயலைப் பொறுத்து உங்கள் அரசியல் பற்றிய என் கருத்தைச் சொல்கிறேன்’ என்றாராம் நல்லகண்ணு.

ரஜினியிடம், ‘‘உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்று கமல் சொல்ல, ‘‘சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன், வந்துடுங்க” என்றாராம் ரஜினி. ரஜினி சாப்பிட்டு முடிப்பதற்குள் கமல் போய்விட்டாராம். வாழ்த்து பரிமாறிக்கொண்டவர்கள், ‘‘நாம் அரசியலில் எதிரெதிர் அணியில் நின்றாலும் இதே கண்ணியத்தைக் காக்க வேண்டும்’’ என்று பேசிக்கொண்டார்களாம். அன்று இரவே தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் கமல். ஸ்டாலின்தான் கமலை வரவேற்று அழைத்துச்சென்றார். கருணாநிதியிடம் தன் அரசியல் அறிவிப்பு குறித்து தெரிவித்திருக்கிறார் கமல். அதைப் புரிந்துகொண்ட கருணாநிதியும் ஏதோ பேச முற்பட்டிருக்கிறார்.

விஜயகாந்தை அவரின் கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்தார் கமல். “நீங்கள்லாம் கண்டிப்பா வரணும் கமல்’’ என்று அவரை விஜயகாந்த் கட்டிப் பிடித்துக்கொண்டார். ‘‘நீங்க ‘அரசியலில் ரஜினி, கமலுக்கு நான்தான் சீனியர்’னு பேட்டி கொடுத்திருந்தீங்க. அது உண்மைதான். அந்த சீனியரிடம் வாழ்த்து பெறத்தான் வந்தேன்’’ என்றாராம் கமல். அதை ரசித்து சிரித்தாராம் விஜயகாந்த்.



 நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான ராமராஜனை அ.தி.மு.க-வில் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். உடல்நிலை மோசமானபோது, தொலைபேசியில்கூட அவரை யாரும் நலம் விசாரிக்கவில்லை. அதேசமயத்தில், தினகரன் பக்கம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தபடி உள்ளது. அதனால் அணிமாறலாமா என்ற யோசனையில் இருக்கிறார்.

 தினகரன் தஞ்சாவூரில் நடத்திய சுற்றுப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் சசிகலாவின் படம் அதிகம் இடம்பெறவில்லை. வைத்த சிலரும் ஸ்டாம்ப் சைஸுக்கு மட்டுமே படம் போட்டிருந்தனர். ஆனால், சசிகலாவின் உதவியாளராக ஒரு காலத்தில் இருந்த கார்டன் சிவா உள்ளிட்ட சிலர் சசிகலாவின் படத்தைப் பெரிதாகப் போட்டே பேனர்கள் வைத்திருந்தனர்.

 வருமானவரித்துறையில் சுமார் 350 ஃபைல்களை முன்பிருந்த ஓர் உயர் அதிகாரி குளோஸ் பண்ணிவிட்டார். அவரின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டார்கள். புதிதாக அந்தப் பதவியில் வந்து உட்கார்ந்தவர், அதில் 300 ஃபைல்களை மீண்டும் ஓப்பன் பண்ணிவிட்டாராம். அதில் சம்பந்தப்பட்ட வி.ஐ.பி-கள் மிரண்டு கிடக்கிறார்கள்.

 தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அலுவலகம் நாமக்கல் மாளிகையின் 7-வது மாடியில் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் மெமோ, தண்டனை என வாரி வழங்குகிறாராம். ‘‘அந்த அதிகாரி டார்ச்சர் தாங்கலை. ஒருநாள் 7-வது மாடியிலிருந்து யாராவது குதித்துவிடுவார்கள்’’ என்று தலைமைச் செயலக அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.

 விவசாயத்துறையின் செயலாளராக இருப்பவர் ககன் தீப் சிங் பேடி. இதே துறையின் அமைச்சர் துரைக்கண்ணுவின் மருமகன் வைப்பதுதான் எல்லாவற்றிலும் சட்டமாம். சின்னச்சின்ன விஷயங்களில்கூட துறையில் இவர் செய்யும் நெருக்கடிகளும் தலையீடும் செயலாளருக்குப் பிடிக்கவில்லையாம். பனிப்போர் நடக்கிறது.

 ரஜினியின் ‘2.0’ படம் அநேகமாக வரும் ஆகஸ்டு 15-ம் தேதி ரிலீஸ் ஆகலாம். அதையொட்டி ரஜினியின் தமிழக சுற்றுப்பயணமும் இருக்கலாம்.


வியாழன், 22 பிப்ரவரி, 2018

கமல் யாரென்று தெரிகின்றதா?



கமல் யாரென்று தெரிகின்றதா?

*இன்றைய கமலஹாசன் அரசியல் எண்ட்ரி அனைவரின் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகின்றது.*

 கமலஹாசனை இந்து விரோதி போல இந்துத்துவ அமைப்புகள் சொல்லிக் கொண்டாலும் அது அனைத்துமே சகோதர யுத்தம் மட்டுமே!

பாஜகவின் தொடர்பு இல்லாமல் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் இருக்காது என்று சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதன் ஒருபகுதிதான் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் போல வெளிக்காட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து அதன்மூலம்

தமிழக கம்யூனிஸ்டுகள் தன்னை எந்த வழியிலும் விமர்சிக்காதவாறு அனைத்து வழியையும் அடைத்து விட்டார் கமலஹாசன்.

இந்து அமைப்புகள் கமலஹாசனை எதிர்த்து வரும் நிலையில் பாஜகவிற்கும் கமலஹாசனுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினால் அதற்கான விடை மிக எளிது.

 அதுதான் பாஜகவின் அக்மார்க் செயல்பாடான நெகட்டிவ் பாப்புலாரிட்டி.

பாஜக, தனது ஆதிக்கத்தை தமிழகத்தில் செலுத்த நினைக்கிறது.

பாஜகவால் எக்காரணம் கொண்டும் நேரடியாக தமிழகத்தில் கால் வைக்க முடியாது.

அதற்காக சில சில தயாரிப்புகளை ஏற்படுத்தி தமிழக அரசியலில் வெள்ளோட்டம் பார்த்தது.

டாக்டர்.கிருஷ்ணசாமி போன்ற தலித் முகங்களை விலைக்கு வாங்கி பேச வைத்துப் பார்த்தது, அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

அடுத்து அதிமுகவை பிரித்து உடைத்து சுக்குநூறாக்கி பன்னீர் செல்வத்தை ஹீரோவாக்கி தன் வேலையைச் செய்ய நினைத்தது.  அதுவும் எடுபடவில்லை.

 அதன்பிறகு இந்தா வர்ரேன் அந்தா வர்ரேன் புகழ் *ரஜினிகாந்தை வைத்து ஆழம்பார்த்தனர்.*

ஆனால் அரசியலுக்குப் போனால் சேர்த்து வைத்த காசுகளை மொத்தமாக கரைக்க வேண்டிவரும் என பயந்த தங்கக்காசு தமிழர் ரஜினிகாந்த் சத்தமில்லாமல் அதே நேரத்தில் தன் படங்களுக்கு பங்கம் வராத மாதிரி காய் நகர்த்துகிறார்.

நல்ல வியாபாரி

 அதன்பிறகு தற்காலிகமாக *தினகரன்,  & சசிகலா* இல்லாத அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார்கள்.

ஆனால் என்னதான் அதிமுகவினரை அவர்களின் குடுமியைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினாலும்

அதிமுகவினர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவிற்கு எதிராகத் திரும்பலாம் என்ற பயம் எப்போதுமே பாஜகவிற்கு இருக்கின்றது.

தியாகத் தலைவி சின்னம்மா என்று புகழ்பாடிய அதே வாய்கள் இன்றைக்கு ஒட்டிக்கொண்ட ஆயம்மா என்று மாற்றி மாற்றி பேசும் அதிமுகவினரின் திறமையை  பாஜகவினரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

 ஒருவேளை அதிமுகவிற்கு கொஞ்சம் தலைமை பலம் வந்த பிறகு யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள் என்பதும் பாஜகவினருக்கு நன்கு தெரியும்.

எனவேதான் தன்னுடைய சொந்த பிள்ளையை அரசியலில் களமிறக்குகிறது பாஜக.

அன்னாஹசாரே என்ற கூலிக்கிழவனை வைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்து மக்களை ஏமாற்றியது போல

இப்போது தமிழக அண்ணா ஹசாரே கமலஹாசனை வைத்து தமிழகத்தைப் பிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

கமலஹாசனின் அரசியல் பசிக்கு அதிமுகவினரைத்தான் இரையாகத் தூண்டிலில் குத்திப் போடுகின்றார்கள் என்பது புரியாமல்

பல அதிமுகவினர் பாஜக எங்களைக் காப்பாற்றும் என்றும், மோடி எங்களைக் காப்பாற்றுவார் என்றும் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை;

கமலஹாசனின் அரசியல் பிரவேசம் ஏதோ எதேச்சையாக நடந்தது போன்றது என்று நினைக்கலாம்.

கிடையவே கிடையாது. அது பாபர் மஸ்ஜித் இடிப்பு போல, கோத்ரா கலவரம் போல மிகத்துல்லியமாகத் திட்டமிடப் பட்டது.

 கமலஹாசனின் அரசியல் பிரச்சாரத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்கத்தான் #பிக்பாஸ் நிகழ்ச்சியே உருவாக்கப்பட்டது.

அதிமுகவினரின் வாயைக் கிளறிவிட்டு அவர்கள் கமலஹாசனை எதிர்ப்பது போலவும்,

கமலஹாசன் அவர்களை எதிர்த்து சமாளிப்பது போலவும் என அனைத்துமே கடைந்தெடுத்த பிக்பாஸ் செட்டப்புகள்.

இது தெரியாமல் அப்பாவித்தனமாக ஜெயகுமார் போன்ற லூசு அதிமுகவினர் கமலஹாசனை எதிர்த்து தங்களை மக்களிடம் கெட்டவர்களாகக் காட்டிவிட்டனர்.

பாஜகவை, காவி பயங்கரவாதத்தை தானே கமலஹாசன் எதிர்க்கிறார்.

அப்பறம் அவர் எப்படி பாஜகவின் அடிவருடியாக இருப்பார்? என்று ஒரு கேள்வி எழலாம்.

 இங்குதான் பாஜகவின் சூட்சுமம் ஒழிந்துள்ளது.

 அதாவது பாஜகவினரால் என்றைக்குமே பாசிட்டிவாக முன்னேற முடியாது,

நல்ல காரியங்கள் செய்து முன்னேற முடியாது. நெகட்டிவ் பேஸ்தான் பேமஸ் ஆகும் என்பது பாஜகவின் தாரக மந்திரம்.

மோடி என்றால் யாரென்றே தெரியாத ஒருவரை பிரபலமாக்க கோத்ராவில் ரயிலை எரிக்க வேண்டியதாயிருந்தது,

அதில் 52 அப்பாவி தலித் ஹிந்துக்களையும், அதனைத் தொடர்ந்து குஜராத் கலவரம் மூலம்

ஒன்றுமறியாத மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்களையும் கொடூரமாகக் கொன்று அந்த இரத்த வாடையில் பிரபலமானார் மோடி.

அதே நெகடிவ் பாணிதான் இன்றைக்கு கமலஹாசனுக்கும் தேவைப்படுகின்றது.

தமிழகத்தில் இன்றைக்கு மக்கள் மத்தியில் இடம்பிடிக்க ஒரேதேவை பாஜக, மோடி எதிர்ப்பு,.

இதைச் சரியாகச் செய்தால் கமலஹாசன் தமிழகத்தில் ஆட்சியைக் கூட பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

இரட்டை இலைச் சின்னம் எனக்கு உனக்கு என இரண்டு தரப்பும் போட்டி போட....

இனி அது யாருக்கும் இல்லை என்ற உள்ளடி வேலையைச் செய்து தமிழத்தில் பிரபலமான இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அழிக்க...

அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரட்டை இலையை மொத்தமாக ஊற்றி மூடிவிட்டால் தமிழகத்தில் இனி ஒரே ஒரு சின்னம் அது உதயசூரியன் மட்டும்தான்.
ஸ்டாலினை ஈஸியாக டேக்கல் செய்துவிடலாம்.

கருனாநிதியைவிட குடும்பவெறி அதிகமாயுள்ளவர் இவர்.இவரை இவரின் மருமகன் சபரீசன் மூலம் சரி கட்டிவிடலாம்.

அதற்கடுத்து தேசிய கட்சி காங்கிரஸின் கை சின்னம். அடுத்து தாமரைச் சின்னம்.

அந்த நேரத்தில் கமலஹாசனை அரசியல் களத்தில் இறக்கி விட்டு அதன்மூலம் தன்னுடைய லாபத்தை அடைய பாஜக திறமையாகத் திட்டமிடுகின்றது.

கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் சமீபத்தில்  தந்தி டிவியில்* பேட்டி கொடுத்த போது "இனி தமிழகத்தில் பாஜக மட்டும்தான்" என கூறியிருந்தார். அதைத்தான் தம்பியை வைத்து செயல்படுத்தத் தயாராகி விட்டது பாஜக.

கமலஹாசன் என்ன வேடத்தில் என்ன கலர்பூசிக்கொண்டு  வந்தாலும் அவர் பாஜகவின் பிள்ளைதான் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பாஜகவின் ஸ்லீப்பர்செல் அயோக்கியர் ஊழல் ஒழிப்பு அரிதார அவதாரம்  அண்ணாஹசாரேவின் உண்மை முகத்தை  தெரிந்துகொள்ள எப்படி ஒரு மத்திய தேர்தல் தேவைப்பட்டதோ

 ( பின்பு  BJP ஊழல்கலைப்பற்றி வாயையே திறக்காமல் இருந்தாரோ)

அதுபோல எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுக ஓட்டுக்களை உடைத்து பலவீனப்படுத்த ஒரு பொது கவர்ச்சி முகமூடி தேவை அவர்தான் கமல்ஹாசன்

எதிர்வரும் தேர்தலில் ரஜினியைவைத்து அடுத்த சதுரங்க காய்களையும் நடத்துவார்கள் BJPயினர். 

எப்படியென்றால் ரஜினிகாந்த் கமலுக்கு ஆதரவு கொடுப்பார் ஒரு சக நடிகனும் நண்பனுமாகிய கமலுக்கு

ரஜினிகொடுக்கும் ஆதரவை அரசியல்வட்டாரத்திலும் மக்களும் பெரிதாக விமர்சிக்கவும் முடியாது.

வருங்காலத்தில் அவர்மூலமாகவே BJP யை வளர்க்கவேண்டும் பல சட்டமன்ற தொகுதிகளை நாடாளுமன்ற தொகுதிகளை அறுவடை செய்யவேண்டும்

இதற்காக எத்தனை ஆயிரம் கோடியையும் செலவழிக்க அமித்ஷா ரெடி....

கொடுக்கும் தொகைக்கு ஏற்பவும் கொஞ்சம் கூடுதலாகவும் கூட கூட்டி நடிப்பதற்கு கமலும் ரெடி!!

தமிழகமக்களின் தலையில்
சிறப்பாய்த் தேய்க்கிறார்
தாமரை பிராண்ட் சீயக்காய்ப்பொடி!

புதன், 21 பிப்ரவரி, 2018

குவாட்டரும், ஸ்கூட்டரும் கண்டிப்பாக இல்லை.. இலவசங்களுக்கு நோ சொன்ன கமல்ஹாசன் !!


குவாட்டரும், ஸ்கூட்டரும் கண்டிப்பாக இல்லை.. இலவசங்களுக்கு நோ சொன்ன கமல்ஹாசன் !!


எம்என்எம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என்றும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும், வசதி வாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் நீங்களே மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.
மதுரையில் 21-ந் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கப்போவதாக கூறிய நடிகர் கமலஹாசன், இது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கமல்ஹாசன் மதுரையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் சென்றார். ராமேசுவரத்தில் இருந்து, ‘நாளை நமதே’ என்ற பெயரில் நேற்று அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
நேற்று காலை ராமேசுவரத்தில் உள்ள, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்துக்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயரை சந்தித்து பேசிய கமல்ஹாசன், பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு ராமேசுவரத்தில் பேய்க்கரும்பு என்ற இடத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின், ராமநாதபுரத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மதுரை திரும்பினார். மதுரை வரும் வழியில் பரமக்குடி, மானாமதுரையில் மக்களை சந்தித்தார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் கலந்துகொள்வதற்காக, கமல் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அங்கு வந்து குவிந்து இருந்தனர்.
கமல்ஹாசன், காளவாசல் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6.40 மணிக்கு ஒத்தக்கடை மைதானத்திற்கு காரில் புறப்பட்டார்.வழியில், அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கு தங்கி இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
பின்னர் ஒரே காரில் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஒத்தக்கடை பொதுக்கூட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் பொதுக்கூட்ட மைதானத்தை வந்து அடைந்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொது மக்கள் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார்.அப்போது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் இலவசமாக தருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்.
நாங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் கண்டிப்பாக கிடைக்காது என பதில் அளித்தார். வேலைவாய்ப்பு பெருக வேண்டும் அதன் மூலம் . வசதி வாய்ப்பு பெருக வேண்டும் என கூறிய கமல் , நீங்களும் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை என்றும், எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? என்றார்.
ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் என்றும் கமல் உறுதியாக பதில் அளித்தார்.


மக்களின் கேள்விகளும் கமலின் அசத்தல் பதில்களும்...!

கேள்வி : எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிப்பீர்கள்?
பதில்: என் மூச்சு உள்ளவரை தாக்கு பிடிப்பேன்.
கேள்வி : ஸ்கூட்டர், குவாட்டர் போன்ற இலவசங்கள் உங்கள் ஆட்சியில் வருமா?
பதில் : கண்டிப்பாக கிடைக்காது. வேலைவாய்ப்பு பெருக வேண்டும். வசதி வாய்ப்பு பெருக வேண்டும். நீங்களுக்கு மற்றவருக்கு ஸ்கூட்டர் வாங்கித்தரும் நிலை உருவாக வேண்டும்.
கேள்வி: ஊழலை ஒழிக்க என்ன வழி? நீங்கள் ஒழிப்பீர்களா?
பதில்: எல்லா குறைகளும் பேராசையால் வந்தவை. தேவைகளுக்கு அனைத்தும் இங்கு உண்டு. எல்லோரும் சேர்ந்து ஊழல் செய்துவிட்டு என்னை மட்டும் ஒழிக்க சொன்னால் எப்படி? ஊழலை நான் மட்டும் ஒழிக்க முடியாது. நாம் ஒன்று சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும்.
கேள்வி: தமிழை காக்க என்ன வழி?
பதில்: நீயும் நானும் தமிழில் பேசினாலே போதும்.
தமிழ் அழியாது. எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழை மறக்காமல் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.
கேள்வி : உங்களுக்கு எந்த தலைவர் பிடிக்கும். வழிகாட்டி யார்?
பதில் : உங்களுக்கு பல சாமிகள் பிடிக்கிறது. நான் ஏன் என்று கேட்கிறேனா? அதுபோல் என்னையும் விட்டுடுங்களேன். எனக்கு பினராயி விஜயனை, அரவிந்த் கெஜ்ரிவால், காந்தி, அம்பேத்கார், நேரு, என நிறைய பேரை பிடிக்கும். மறைந்தவர்களை விட வாழ்ந்து செயலில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்.
கேள்வி: இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்?
பதில்: இவ்வளவு நாள் உங்கள் உள்ளங்களில் இருந்தேன். இனி உங்கள் இல்லங்களில் இருப்பேன்.
கேள்வி: உங்கள் வாரிசுகள் அரசியலுக்கு வருவார்களா?
பதில்: நீங்கள் தான் என் வாரிசுகள். நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். என் பெண்கள் அவர்கள் விரும்பினால் வரட்டும். இல்லெயென்றால் இருக்கட்டும். அது அவர்கள் முடிவு.
கேள்வி: காவிரி பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: முறையான உரையாடல் நடந்தது என்றால் எந்த மாநிலத்திடமும் எதையும் பேசி பெற முடியும்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் கமல்



மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் கமல்

*மதுரை: நடிகர் கமல்ஹாசன் இன்று நேரடி அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் கொடியை ஏற்றி  வைத்தார்.*

*♦"மக்கள் நீதி மய்யம்"♦ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.*

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

பரபரப்பு செய்திகள் 20/02/18 !

பரபரப்பு செய்திகள்  20/02/18 !

தென்மாநில நதிகள் இணைப்பு தொடர்பாக ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் ஆலோசனை : தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் பங்கேற்பு.

தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம் ஆனால் மணக்காது - முக.ஸ்டாலின்.

நான் பூ அல்ல வித என்னை விதைத்து பாருங்கள் முளைப்பேன்.நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை.முக.ஸ்டாலின் என்னை பற்றி சொல்லியிருக்கமாட்டார் - நடிகர் கமல்ஹாசன் முக.ஸ்டாலின் அறிக்கை குறித்து பதில்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்து பேசினேன் - ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் வாக்குமூலம்.

தேவையற்ற அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து ஆராய குழுவை அமைத்தது தமிழக அரசு : செலவினங்களை குறைக்கும் நடவடிக்கை என விளக்கம்.

மதுரையில் நாளை நடைபெறும் கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆதிச்சநல்லூரில் மறு அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறதுமத்திய அரசு தவறும்பட்சத்தில் மாநில அரசு மறு அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள முன்வர வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை.

தமிழர்கள் 5 பேரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்தமிழர்கள் 5 பேரின் இறப்பில் சந்தேகம் உள்ளதால் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் - மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர் ரவி.

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்திப்பு.

டெல்லி தலைமைச் செயலகத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு : தலைமைச்செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் வேலைநிறுத்தம் என தகவல்.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கமல்ஹாசனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு.

கமலின் பயணம் புரட்சிகரமாக, வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்; கமல் என்னை வந்து சந்திப்பதை விட நானே நேரில் சந்திப்பதற்காக வந்தேன் - சீமான்.

படிக்கும்போதே கமல்ஹாசனின் ரசிகனாக இருந்தேன்; தமிழகத்தில் எந்த வகையிலாவது மாற்றம் வராதா என எதிர்பார்க்கிறேன் - சீமான்.

சீமானுக்கு என்னை தெரியும், எனது சீனிமாவை தெரியும்; ஆனால் எனது கொள்கை தெரியாது அதிமுக ஆட்சியே சரியில்லை என்கிறேன்; பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன் - கமல்ஹாசன்.

தமிழகத்தில் தீவிரவாதிகள் பயிற்சி பெறுவதாகவே நான் கூறினேன்மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் துறைமுக திட்டம் குறித்து முதலமைச்சருடன் பேசினேன் - பொன். ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தின் 4 ஆவது மாடியில் தீ விபத்து.

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான துணைசேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஜாமீன் கோரி மீண்டும் மனு.

பாடலில் புருவத்தை உயர்த்தி வைரலான பிரியாவாரியரின் மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. மகாராஷ்டிரா, ஹைதராபாத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்துசெய்ய மலையாள நடிகை கோரிக்கை : பிரியாவாரியர் இடம்பெறும் பாடல் இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு.

ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாள் விழா அதிமுக பொதுக்குழு கூட்டங்கள் பிப்.25 முதல் பிப்.27 வரை நடைபெறும் : ஈபிஎஸ்- ஓபிஸ்.

இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கிற்கு தடையில்லை : உச்சநீதிமன்றம்.

அரசியலில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைப்பை காலம் தான் தீர்மானிக்கும்; கமல்ஹாசனை சீமான் சந்தித்தது அரசியல் நாகரீகம் : கருணாஸ் எம்.எல்.ஏ.

கருணை கொலை செய்ய அனுமதி கோரி திருநங்கை ஷாநவி பொன்னுசாமி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு.

அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும்
அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர் - முக.ஸ்டாலின்.

ஒடிஷாவில் அப்துல்கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டு அக்னி- 2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை : அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மழலையர் காப்பகம் விரைவில் செயல்படத் தொடங்கும்.நாடாளுமன்ற அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்காக மழலையர் காப்பகம் - மத்திய அரசு.

கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரியில்லை எத்தனை கமல்ஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.கட்சி நடத்துபவர்களிடம் ஆதரவுகோரும் கமலின் முடிவு கேலிக்கூத்தாக முடியுமே தவிர விஸ்வரூபமாக மாறாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

மதுரை விஷால் மாலில் மதுபானக் கடைக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து மதுரையில் சட்டவிரோத கட்டடங்களை தடுக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு.மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும் - உயர்நீதிமன்றம்.

மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் - தொழிற்சங்கங்கள்.

சோடா பாட்டில் வீசத் தெரியும் என்ற ஜீயர் கருத்தில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் - சென்னை உயர்நீதிமன்றம்.

எனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன்; நாளை காலை ராமேஸ்வரத்தில் இருந்து எனது அரசியல் பயணம் தொடங்குகிறது- மதுரையில் கமல்ஹாசன் பேட்டி.

சென்னை அப்போலோவில் சிகிச்சை பெறும் வைத்திலிங்கம் எம்பியை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ,துணை முதல்வர்.

சென்னையில் முதல்வர் தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு.

மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறி கட்டடம் கட்டியவர்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தை மேற்கொள்ள தடையில்லை வழக்கறிஞர்கள் நியமனத்தில் இறுதி முடிவு நீதிமன்ற ஒப்புதலுக்குட்பட்டது - உயர்நீதிமன்ற கிளை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசை வலியுறுத்த சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 24ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் - டிடிவி தினகரன்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பரபரப்பு செய்திகள் 19/02/18 !


பரபரப்பு செய்திகள் 19/02/18 !

சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை - செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் - தமிழக அரசு.

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் நாளை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு : நாளை மாலை காரைக்கால் வந்து சேருவார்கள்.

மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க, பிப்.24-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ம் தேதி, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது.

விவசாயிகளின் நலன் கருதி தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி - உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.

அதிமுக அணிகள் இணைந்ததில் பிரதமர் மோடி தலையீடு என்பதில் உண்மையில்லை - முதலமைச்சர் பழனிசாமி.

ஏரியில் விழுந்து 5 தமிழர்கள் பலி , கடப்பா அரசு மருத்துவமனையில் உடல்கள் பிரேத பரிசோதனை.

ரூ.11,400 கோடி மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சீல் - சிபிஐ அதிரடி.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் டிடிவி.தினகரன் மற்றும் விவேக் சந்திப்பு.

தமிழ் பழமையான கலாசார மொழி என முதலில் இருந்தே கூறிவருகிறோம், ஆனால் மோடி ஆட்சியில் ஹிந்தியே முன்னிலைப்படுத்தபடுகிறது, ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை - தூத்துக்குடியில் சிபிஎம் பொதுசெயலாளர் சீதாராம்யெச்சூரி பேட்டி.

காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழக முதலமைச்சர்.

திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்.அரசியலில் எனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பயணம் குறித்து கூறினேன், உடல்நலமும் விசாரித்தேன் - தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் நடிகர் கமல் பேட்டி.

கட்டாயத்தின் பேரிலேயே முதல்வராக பதவியேற்றேன், கட்டாயத்தின் பேரிலேயே பதவியும் விலகினேன்.முதலமைச்சராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டதால் என்னை பதவி விலக கட்டாயப்படுத்தினார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன் அவரும் இணைவது நல்லது என்றார்.பாஜகவுடன் கூட்டணி எதுவுமில்லை ஆர்கே நகர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதே இதற்கு உதாரணம் - துனை முதல்வர் ஓபிஎஸ்.

கச்சத்தீவு விழாவுக்கு நாட்டுப்படகு மீனவர்களை அனுமதிக்காவிட்டால் போராட்டம்.

அரசியல் ஒரு சாக்கடை அதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம் - உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி பதில்.

காவிரி விவகாரம் பற்றி திமுக சார்பில் பிப்ரவரி 23ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 23ந்தேதி காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்.

டிடிவி.தினகரன் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதால் அணிகள் இணைய வேண்டுமென நல்ல எண்ணத்துடனும் பெருந்தன்மையுடனும் பிரதமர் மோடி கூறினார் - துணை முதல்வர் ஓபிஎஸ்.

மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய விசாரணை வரம்பை திரும்பப்பெற வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை ரத்து செய்வதாகவும் திமுக அறிவிப்பு : அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்கவும், தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை.

கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் நீச்சல் வீரர்களை பணியமர்த்துவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.

திருவண்ணாமலை : ஜவ்வாது மலைக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருட்டு; போலீசார் விசாரணை.

அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டும் உரிமை ஆளுங்கட்சிக்கு தான் உள்ளது, காவிரி விவகாரத்தை ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

கனவுலகத்தில் மிதக்கும் ஸ்டாலினிடம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை நினைவுபடுத்துங்கள் - திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில்.

தமிழ்நாடு, தமிழ் மொழி மீது அளவு கடந்த பாசம் பிரதமர் மோடிக்கு உண்டு : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது இவர்கள் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவது கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் உள்ள 318 அரசுப் பள்ளிகளில் தனியாருடன் இணைந்து, இலவச வை-பை வசதி : தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கையெழுத்தானது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-44, காங்கிரஸ்-13, மற்ற கட்சிகள்-12 இடங்களில் வெற்றி.

திருவண்ணாமலை : குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 21 முதல் மார்ச் 18 வரை 517.62 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக
அலுவலகத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு.

சேலம் உள்ளிட்ட இரண்டாம்கட்ட பெருநகரங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

பிரதமர் கூறியதால் அணியில் இணைந்தேன் என ஓபிஎஸ் பகிரங்கமாக பேசியதை பொய் எனக் கூற முடியாது.உண்மைக்கு புறம்பாக ஓ.பி.எஸ். பேசி இருந்தால் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் - இந்திய கம்யூ.,தேசிய செயலர் டி.ராஜா.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரில் வன அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவின் கோரிக்கையை நிராகரித்தது கர்நாடக நீதிமன்றம்.

தேனி : அல்லிநகரம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு பிப்.21 முதல் பிப்.24ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீன்பிடிக்கத் தடை விதிப்பு - ஆட்சியர் நடராஜன் அறிவிப்பு.

பிப்.23, 24ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவில் முதன்முறையாக சிங்கள மொழியில் திருப்பலி மற்றும் ஜெபங்கள் நடைபெறும் - யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் வேதநாயகன்.

சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது : ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

ஜெ.தீபா வீட்டில் நடைபெற்ற போலி வருமான வரி சோதனைக்கும் எனக்கும் தொடர்பில்லை; தொலைக்காட்சி மூலமாக தான் சோதனைக்கு வந்தது போலி அதிகாரி என தெரிய வந்தது - ஜெ.தீபாவின் கணவர் மாதவன்.

ஆந்திரா கடப்பா அருகே நீரில் மூழ்கிய நிலையில் 5 தமிழர்களின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் இயற்கை மரணம் இல்லை என கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

பல்லடம் அருகே கொடுவாயில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு.

சனி, 17 பிப்ரவரி, 2018

பரபரப்பு செய்திகள் 17/02/18 !

பரபரப்பு செய்திகள்  17/02/18 !

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட 109 தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது : தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி.

தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 ரோபோக்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ.செங்கோட்டையன்.

பிரபல நடிகருக்கு எல்லாம் தெரியும் என மக்கள் நம்பக்கூடாது அப்படி நம்பினால் அது தவறு , நான் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்ன என்பது பற்றி யோசிக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்.

பிரதமர் மோடி அறிவுறுத்தியதால் மீண்டும் கட்சியில் சேர்ந்தேன் - துனை முதல்வர் பன்னீர்செல்வம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடாகா கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் : கர்நாடகா முதல்வர் சித்தராமையா.

21ம் தேதி 4 பொதுக்கூட்டங்களில் கமல் உரையாற்றுகிறார்.ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மற்றும் மதுரையில் பொதுக் கூட்டங்கள் : பிப்.21ம் தேதி மாலை 6.30 மணிக்கு கட்சிக் கொடியை கமல் அறிமுகம் செய்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

முறைகேடாக பணப்பரிவர்த்தனை செய்ததாக சென்னை விஜிஎன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ரூ 115 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை.

நிரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.25 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல்.

அரசியல் காரணங்களுக்காக நடிகர் கமல் என்னை சந்திக்கவில்லை,கமல் தனது கொள்கையை அறிவிக்கும்போது தான் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூற முடியும் - இந்திய கம்யூ மூத்த தலைவர் நல்லக்கண்ணு.

மதுரையில் 21ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் - நடிகர் கமல்ஹாசன்.

கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன். - நடிகர் கமல்ஹாசன்.

நல்லகண்ணு உடனான சந்திப்பு கட்சிக்கு அப்பாற்பட்டது,மக்களுக்கு யார் சேவை செய்தாலும் அவர்களை மதிப்பேன். நேர்மையாக வாழும் மனிதர்களுடனான சந்திப்பு எனக்கு பலம் சேர்க்கும் என நம்புகிறேன் - நடிகர் கமல்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு உள்ளதை ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டுள்ளார் - தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்.

தஞ்சையில் காவிரி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் : தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து கோரி மீண்டும் போராட்டம் : நெடுவாசலில் 18ம் தேதி ஆலோசனை கூட்டம்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அதிமுக இணையவேண்டும் என பிரதமர் மட்டுமல்ல, யார் கூறியிருந்தாலும் சரிதான் - அமைச்சர் ஜெயக்குமார்.

முக.அழகிரிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் : மத்திய அரசின் பரிந்துரைப்படி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரத்தில் இரு நாட்கள் குழந்தையை பார்க்க தந்தையை அனுமதிக்காத தாய்க்கு ரூ.2,000 அபராதம்.குழந்தை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக வளர தாய் - தந்தை இருவரின் அன்பும் தேவை - உயர்நீதிமன்றம்.

கடலில் கலக்கும் நீரை தடுக்க ரூ.1,000 கோடியில் தடுப்பணை கட்டும் பணி நடக்கிறது.உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து நீர் முழுமையாக வந்தால் தமிழ்நாடு வளம்பெறும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் என்ற பகுதியில் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழப்பு.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க ஏற்ற தருணத்தில் இந்தியா உள்ளது - இந்திய பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்.

பிரதமர் மோடியின் கூற்றால் மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன் - கவிஞர் வைரமுத்து.

மீண்டும் என்னை டீ கடையில் உட்காரவைப்பேன் என டிடிவி.தினகரன் கூறி வருகிறார் - துனை முதல்வர் ஓபிஎஸ்.

காவிரி இறுதித் தீர்ப்பு தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாத நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தண்ணீரை முறையாக பெறுவதை உறுதி செய்யுமாறு நடிகர் விஷால் வேண்டுகோள்.

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த தாக்குதலில் AK-47 ரக துப்பாக்கி மீட்பு.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது.ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்தால் சில சாதகமன தீர்ப்புகளும் கிடைத்துள்ளது : உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ்.

எத்தியோப்பியாவில் பிரதமர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு.

சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது - பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

பஞ்சாப் நேசனல் வங்கி சரிவில் இருந்து 6 மாதத்தில் மீட்சியடையும் – வங்கித் தலைமைச் செயல் அலுவலர் பேச்சு.

நிரவ் மோடியை பிடிக்க தீவிர நடவடிக்கை ,
நிரவ் மோடி மோசடி செய்தது காங்கிரஸ் ஆட்சியில்தான் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சென்னையில் நிரவ் மோடிக்கு தொடர்புடைய 3 பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் விசாரணை.

மதுரை திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் கைது.

சென்னை பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மென் பொறியாளர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

தமிழ்நாடு காவல்துறை சரித்திரம் படைத்து வருகிறது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காவலர்களின் குறைகள் தீர்க்கப்படும் - காவல் ஆணையர் விஸ்வநாதன்.

காவிரி வழக்கில் கர்நாடகாவைப் போல் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளாததே பாதகமான தீர்ப்புக்கு காரணம் - காவிரி வழக்கில் வாதாடிய முன்னாள் வழக்கறிஞர் கே.சுப்ரமணியன்.

ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையம் ஊர் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி : துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுவதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைபள்ளிக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான 1 ஏக்கர் நிலத்தை தானமாக
வழங்கினார் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி பொன்மணி தேவி. பள்ளியின் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மதுரை திருமங்கலம் அருகே ஒருதலை காதலால் கொளுத்தப்பட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.

தூத்துக்குடி சங்கர பேரி அருகே உள்ள ஜோதிநகரில் அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்பு அருகில் 2 வயது பையன் அழுது கொண்டிருந்த நிலையில் மீட்பு.

உயர்நீதிமன்றம் அனுமதி தந்ததையடுத்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நாளை சென்னையிலிருந்து லண்டன் பயணம்.

ஃபால்கன் ஹெவி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமியில் நொறுங்கி விழக் கூடும் – ஆராய்ச்சியாளர்கள்.

நெல்லை : வள்ளியூர் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுமித்ரா தேவி என்பவரிடம் 7 சவரன் நகை பறிப்பு.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டில்..



மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டில்..

முடிவடைந்த 35 ஆயிரத்து 819 திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 6 ஆயிரத்து 411 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..

*தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..*

அரசு விழாக்கள் மற்றும் காணொலிக் காட்சி மூலமாக 11ஆயிரத்து 827.34 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரத்து 819 முடிவடைந்த பணிகள் திறந்துவைக்கப்பட்டதாகவும், 8 ஆயிரத்து 837.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 ஆயிரத்து 411 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், இதுவரை 5 ஆயிரத்து 208 கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

பொதுப்பணித்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்காக 331.68 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சுமார் 83 ஆண்டுகளுக்குப்பின் முதன் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட்டதாகவும், 669.13 கோடி ரூபாய் செலவில் 5 ஏரிகள், 3 அணைக்கட்டுகள் மற்றும் 2 வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு செய்யப்பட்டடிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும் வகையில், அரசே நேரடி விற்பனை செய்வதற்கான தமிழ்நநாடு மணல் இணைய சேவை தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

743.56 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 325 ஏரிகள் மற்றும் 115 அணைக்கட்டுகளுக்கான வெள்ள புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது..

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், உழைக்கும் மகளிர்க்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

2 ஆயிரத்து 998 கோடி ரூபாய் செலவில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்1லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டிருப்பதாகவும், 800 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 568 ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

300 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 சிறுபாசன ஏரிகள் புனரமைப்பும், 150 கோடியில் 7 ஆயிரத்து 282 அடிப்படை உட்கட்டமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது..

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3 ஆயிரத்து 359 ஆசிரியர்கள் மற்றும் 4,356 ஆசிரியரல்லாதோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

 மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 18.88 லட்சம் பேருக்கு313.58 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் மன அழுத்தங்களை போக்க, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

437.78 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் முதற்கட்டமாக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது..

 கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மின் உற்பத்தியில் ‘சி’ தரவரிசையில் இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தற்போது ‘பி’ வரிசைக்கு முன்னேற்றமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 16 ஆயிரத்து 998 கோடி ரூபாய் அரசு நிதியுதவி செய்திருப்பதாகவும், 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 320 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் 3 ஆயிரத்து 992 கோடி செலவில் 42 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
 
279 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டு மொத்த காற்றாலை நிறுவுதிறன் 7 ஆயிரத்து 957 மெகாவாட் ஆக உயர்ந்திருப்பதாகவும், 284 மெகாவாட் சூரிய மின் சக்தி தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

248.58 கோடி செலவில் 8 ஆயிரத்து 417 பேருக்கு விலையில்லா கறவை பசுக்களும் 97,473 பேருக்கு 3.89 லட்சம் விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில மாட்டின ஆராய்ச்சி நிலையம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ளநாட்டு மாட்டின பாதுகாப்பிற்கென புலிக்குளம் மரபணு வள மையம் ஆகியவை நிறுவப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது..

மதுரையில், 55 கோடி ரூபாய் செலவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையும் மற்றும் 45 கோடி ரூபாய் செலவில் உயர்வெப்பநிலையில் பதப்படுத்தி சிப்பம் கட்டும், நறுமண பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 பால் கொள்முதல் நாளொன்றுக்கு 31.04 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டு, விற்பனை 22.02 லட்சமாக லிட்டராக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதுபோல், நிதித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்துறை என அனைத்துத் துறைகளிலும் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் விவரங்கள் தமிழக அரசின் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன..

காவிரி - கடந்து வந்த பாதை



காவிரி  - கடந்து வந்த பாதை:


1807 - காவிரி நீர் பகிர்வு பிரச்சனை ஆம் ஆண்டு தொடங்கியது.

1892 - காவிரி நீர் பகிர்வு குறித்து சென்னை - மைசூர் இடையே 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

1910 - காவிரிக்கு குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை கட்ட மைசூர் அரசு முடிவு

1924 - சென்னையும், மைசூரும் அணை கட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்தது

1947 - இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப்பகிர்வு   நடந்து வந்தது.

1956 - மொழிவாரி மாநிலங்கள் பிரித்த போது காவிரி உற்பத்தியாகும் குடகுமலை கர்நாடகாவின் பகுதியானது

கபினியின் பிறப்பிடம் கேரளாவில் அமைந்ததால் காவிரி நீரில் கேரளாவும், புதுச்சேரியும் பங்கு கேட்டன.

1960 -  மேலும் 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டம் - தமிழக அரசு கடும் எதிர்ப்பு

1974 - 50 ஆண்டுகால காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது

1986 - காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை

1990 - பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது

நடுவர் மன்றத்தில் கார்நாடகா 465 , தமிழகம் 566 , கேரளா 99.8 , புதுச்சேரி 9.3 டி.எம்.சி தண்ணீர் கேட்டது.

1991  ஜூன் 25-ல் காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை அளித்தது.

1991 -  டிசம்பர் 11-ல் தீர்ப்பை  அரசிதழிலில் வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

1991 - மேலும் 11.2 லட்சம்  ஏக்கருக்கு மேல் கர்நாடகாவின் சாகுபடி பரப்பளவு உயர்த்தக்கூடாது என உத்தரவு

1991 - இதன் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நிகழ்ந்த கலவரத்தில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

1995 - 30 டி.எம்.சி தண்ணீர் தர கர்நாடகா மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடியது.

1995 - தமிழகத்துக்கு 11 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவு - கர்நாடக அரசு மீண்டும் நிராகரித்தது.

1998- பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் அமைப்பு

2002 - காவிரி நீர் பகிர்வு பிரச்சனை மீண்டும் வெடித்தது.

2007 - காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது


2007 - அதில் கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி, தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி தண்ணீர் என தீர்ப்பு

2007 -  தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி அப்போதைய முதலமைச்சர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்.

2007 -  நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

2013 - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

2014 - உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலை கர்நாடக அரசு தாக்கல் செய்தது.


2014 - அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.


2016 - கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்களை தாக்கல் செய்தது.

100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில் இன்று தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு


இன்று தீர்ப்பு:

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

2007-ல் நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை குறைத்தது

தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன

இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நிரவ் மோடி


நிரவ் மோடி

1. இவர் தான் நிரவ் மோடி
2. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி
3. இவர் பிறந்தது பெல்ஜியத்தில்
4. இவரின் மனைவி அமெரிக்க பிரஜை
5. 2017 'இல் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்களில் 87 'ஆவது இடத்தை பிடித்தவர்
6. இவரின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 11500 கோடிகள்
7. தன்னுடைய வைர விளம்பரங்களுக்கு இவர் பயன்படுத்திய நடிகைகள் கேட் வின்ஸ்லெட், பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா ஷர்மா மற்றும் பலர்
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2011 'ஆம் ஆண்டு இவர் கடன் பெற்றார்.
9. தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதன் கடன் வழங்கும் முழு  அதிகாரமும் மத்திய அரசிடம் தான் உள்ளது.
10. அதன்படி அப்போதைய ஊழல் அரசான காங்கிரஸ் அரசிடம் தான் முழு அதிகாரமும் இருந்தது.
11. அப்போதைய ஊழல் அரசான காங்கிரஸ் தான் இந்த கடனை நிரவ் மோடிக்கு வழங்கியது.
12. பண மதிப்பிழப்பிக்கு பிறகும் GST 'க்கு பிறகும் ஒவ்வொரு கம்பெனியும் வருமான வரியை சரியாக கணக்கு காட்ட வேண்டும் என்று ஆன பிறகு நிரவ் மோடியின் கம்பெனி அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறது.
13. அமலாக்கத்துறை FERA கேஸ் பதிவு செய்கிறது
14. நிரவ் மோடியின் அசையா சொத்துக்கள் ஆன வைர வியாபார கடைகள்,  வைர பேக்டரி'கள், அலுவலுகங்கள் மற்றும் அவரின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள், வைரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்படுகிறது.
15. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துகளின் நிகர மதிப்பு 5500 கோடிகள்.
16. பஞ்சாப் நேஷனல் வங்கியின் 21 பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு அவரகள் அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
17. Geethanjali  , GINI , Nakshatra போன்ற நிறுவனங்களும்  தற்பொழுது அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் உள்ளது.

பரபரப்பு செய்திகள் 16/02/18 !

பரபரப்பு செய்திகள் 16/02/18 !

இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 79 பேர் விடுதலை - ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

1892 , 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும்.தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது- உச்சநீதிமன்றம்.

வேட்பாளர்கள், சொத்து விவரங்களோடு அதை சம்பாதித்த விவரங்களையும் பிரமாண பத்திரமாக கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்.

நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்.

மைசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு : பெங்களூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு.தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்களை தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை.

காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி பெற்றுத்தந்த உரிமைகளை பறிகொடுத்துவிட்டது அதிமுக அரசு - முக.ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு கர்நாடகாவிற்கு சாதகமாக உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை - ராகேஷ் சர்மா, தமிழக வழக்கறிஞர்.

தமிழக - கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; சூழலைப் பொறுத்து இருமாநில எல்லையில் வாகனங்களை இயக்க நடவடிக்கை - கிருஷ்ணகிரி ஆட்சியர்.

தமிழகம் , கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்.

காவிரி நதிநீர் வழக்கு: தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம்.

குடியரசு தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் பிப்.18 முதல் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு.

காவிரி வழக்கில் வில்லன் மத்திய அரசு; தமிழகத்தை நாசம் செய்யும் முடிவோடு மோடி அரசு உள்ளது.காவிரி வழக்கில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது - வைகோ.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது - உச்ச நீதிமன்றம்.

காவிரி வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். புதுச்சேரிக்கு வழங்கப்படவேண்டிய 7 டிஎம்சி நீரில் எந்த மாற்றமும் இல்லை - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்திருங்கள்.குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்.
நமக்குள் எப்போது சண்டை வரும் என்று காத்திருக்கிறார்கள் - நடிகர் ரஜினி காணொலி மூலம் பேச்சு.

தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்திற்கான பங்கை குறைக்கும் உத்தரவை தமிழக பாஜக வரவேற்கவில்லை - தமிழிசை.

அமெரிக்க தமிழர்களுக்கான அடையாள தேடலே ஹார்வார்ட் இருக்கை அமைப்பதற்கு உந்து சக்தியாக உள்ளது : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு.

13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி.அன்பழகன் ஆலோசனை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு தமிழகம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.தமிழகத்தின் நிலத்தடி நீர் கணக்கிடப்பட்டு காவிரி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது : அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்.

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் மிகப்பெரிய தோல்வி, 95% ஊழியர்கள் பணியில் உள்ளனர்.திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், அதற்கு பிறகு தான் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய முடியும் - அமைச்சர் தங்கமணி.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தலையிட முடியாது - திமுக எம்எல்ஏ அன்பழகன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

கந்துவட்டி கொடுமையால் குடியாத்தத்தில் கட்டிட தொழிலாளி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக சித்தராமையா அறிவிப்பு.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் & ஈபிஎஸ் நடவடிக்கை.

காவிரி வழக்கை சரியாக கையாளாத அதிமுக தலைமையிலான தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும் - எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன்.

காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது - ஆர்கே.நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன்.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத் தரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் கண்ணீரை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது - பாமக நிறுவனர் ராமதாஸ்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரானது.காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் : மணியரசன் கருத்து.

நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜிகர்தண்டா, இறைவி பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு.

காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. காவிரிக்கு எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்றது வரவேற்கத்தக்கது - திருநாவுக்கரசர்.

தமிழக உரிமையை மீட்க மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே உள்ளிட்டோர் ஆலோசனை.

காவேரி தீர்ப்பு தொடர்பாக யாரும் எந்தவித கருத்தையும் ஊடகங்களிடம் தெரிவிக்கவோ பகிரவோ கூடாது என மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சென்னை காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன் சந்திப்பு.

பழநி - கொடைக்கானல் சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் : பயணிகள் பீதி.

காவிரி நீரை கர்நாடகா கொடுக்காததும், இதில் மத்திய அரசு தலையிடாததும் தான் இந்த நிலைமைக்கு காரணம் - தமாகா தலைவர் வாசன்.

ஆந்திரா : சித்தூர் மாவட்டம் பலமனேரியில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.