வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பரபரப்பு செய்திகள் 02/02/18 !

பரபரப்பு செய்திகள் 02/02/18 !

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான திட்ட அறிக்கையை தயார் செய்து கொடுத்து விட்டோம் இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய சட்ட அமைச்சர்.

சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் : அமைச்சர் ஜெயக்குமார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை கேரளாவில் விற்றால் 200% வரி - கேரள அரசு.

நியூட்ரினோ திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 10 கோடியில் அனல் மின் திட்டம் கொள்ளைக்கான திட்டம். வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கூடங்குளம் அணு உலை போராளி முகிலன் பேட்டி.

ஊதிய உயர்வு கோரி வரும் 16ம் தேதி தமிழக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.

இலங்கை யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்ட நூலகத்திற்கு 1 லட்சம் நூல்கள் வழங்கப்படும்.
தமிழகத்தில் 119 நூலகங்களை டிஜிட்டல் மயமாக்க ₨2 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் மறு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை.

வேண்டியவர்களை உயர் பதவியில் நியமிக்க நேர்மையானவர்கள் மீது களங்கம் சுமத்த வேண்டாம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

குஜராத் முதலமைச்சராக இருந்த போது ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமரே, தற்போது GST வரியை அமல்படுத்தியுள்ளார் - குஷ்பு.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் 6,500 இலங்கை பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் : யாழ்ப்பாணம் ஆட்சியர்.

கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் டயஸ் பாலார்ட் மன அழுத்தம் காரணமாக தற்கொலை.

சசிகலா குடும்பத்துக்கு எதிராக ஆதாரம் போலீசில் அளித்துள்ளேன்.எனது அரசியல் சுற்றுப்பயணத்தை தடுக்க தினகரன் ஆதரவாளர்கள் அவதூறு பரப்புகிறார்கள் -ஜெ.தீபா.

வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு : செவி வழி செய்தி அடிப்படையில் மனுதாக்கல் செய்ததாக கூறி வழக்கு தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.

பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு ரூ 17 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள மோடி அரசு, தமிழகத்துக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை - திருமாவளவன்.

மொழியை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல; ஒரு மொழியில் பட்ஜெட் படிக்கப்பட்டதால் மற்ற மொழிகளை புறக்கணிப்பதாக அர்த்தம் இல்லை - பாஜக மாநில தலைவர் தமிழிசை.

மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளது, ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது - நடிகர் கமல்.

இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28-ம் தேதி புதுச்சேரி வருகிறார் : ஆரோவில் உதய தின விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் : காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு.

மற்ற மாநிலங்களுக்காகவே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் உரையாற்றினார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் உரையாற்றியதை அரசியலாக்க வேண்டாம் - தமிழிசை.

இனிவரும் தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் : நடிகர் சரத்குமார்.

பாம்பன் ரயில் பாலத்தை அனுமதியின்றி ட்ரோன் கேமராவில் படம்பிடித்ததாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது உளவுத்துறை போலீசார் விசாரணை.

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம் : நாட்டிலுள்ள 15 அச்சகத்தை ஒன்றாக இணைத்து 5 அச்சகங்களாக மாற்ற மத்திய அமைச்சரவை முடிவு.

திருச்சியில் போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் பெற முயன்ற 7 பேர் கைது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக