பரபரப்பு செய்திகள் 19/02/18 !
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை - செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் தலைமையில் வரும் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் - தமிழக அரசு.
இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் நாளை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு : நாளை மாலை காரைக்கால் வந்து சேருவார்கள்.
மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க, பிப்.24-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ம் தேதி, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது.
விவசாயிகளின் நலன் கருதி தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி - உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
அதிமுக அணிகள் இணைந்ததில் பிரதமர் மோடி தலையீடு என்பதில் உண்மையில்லை - முதலமைச்சர் பழனிசாமி.
ஏரியில் விழுந்து 5 தமிழர்கள் பலி , கடப்பா அரசு மருத்துவமனையில் உடல்கள் பிரேத பரிசோதனை.
ரூ.11,400 கோடி மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சீல் - சிபிஐ அதிரடி.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் டிடிவி.தினகரன் மற்றும் விவேக் சந்திப்பு.
தமிழ் பழமையான கலாசார மொழி என முதலில் இருந்தே கூறிவருகிறோம், ஆனால் மோடி ஆட்சியில் ஹிந்தியே முன்னிலைப்படுத்தபடுகிறது, ஹிந்தி, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை - தூத்துக்குடியில் சிபிஎம் பொதுசெயலாளர் சீதாராம்யெச்சூரி பேட்டி.
காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழக முதலமைச்சர்.
திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன்.அரசியலில் எனக்கு மூத்தவர் என்ற முறையில் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பயணம் குறித்து கூறினேன், உடல்நலமும் விசாரித்தேன் - தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின் நடிகர் கமல் பேட்டி.
கட்டாயத்தின் பேரிலேயே முதல்வராக பதவியேற்றேன், கட்டாயத்தின் பேரிலேயே பதவியும் விலகினேன்.முதலமைச்சராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டதால் என்னை பதவி விலக கட்டாயப்படுத்தினார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன் அவரும் இணைவது நல்லது என்றார்.பாஜகவுடன் கூட்டணி எதுவுமில்லை ஆர்கே நகர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதே இதற்கு உதாரணம் - துனை முதல்வர் ஓபிஎஸ்.
கச்சத்தீவு விழாவுக்கு நாட்டுப்படகு மீனவர்களை அனுமதிக்காவிட்டால் போராட்டம்.
அரசியல் ஒரு சாக்கடை அதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம் - உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி பதில்.
காவிரி விவகாரம் பற்றி திமுக சார்பில் பிப்ரவரி 23ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 23ந்தேதி காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
டிடிவி.தினகரன் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பதால் அணிகள் இணைய வேண்டுமென நல்ல எண்ணத்துடனும் பெருந்தன்மையுடனும் பிரதமர் மோடி கூறினார் - துணை முதல்வர் ஓபிஎஸ்.
மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய விசாரணை வரம்பை திரும்பப்பெற வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்தை ரத்து செய்வதாகவும் திமுக அறிவிப்பு : அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகளை அழைக்கவும், தமிழக அரசுக்கு திமுக கோரிக்கை.
கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரம் மற்றும் நீச்சல் வீரர்களை பணியமர்த்துவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்.
திருவண்ணாமலை : ஜவ்வாது மலைக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருட்டு; போலீசார் விசாரணை.
அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டும் உரிமை ஆளுங்கட்சிக்கு தான் உள்ளது, காவிரி விவகாரத்தை ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
கனவுலகத்தில் மிதக்கும் ஸ்டாலினிடம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை நினைவுபடுத்துங்கள் - திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில்.
தமிழ்நாடு, தமிழ் மொழி மீது அளவு கடந்த பாசம் பிரதமர் மோடிக்கு உண்டு : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது இவர்கள் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவது கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் உள்ள 318 அரசுப் பள்ளிகளில் தனியாருடன் இணைந்து, இலவச வை-பை வசதி : தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கையெழுத்தானது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-44, காங்கிரஸ்-13, மற்ற கட்சிகள்-12 இடங்களில் வெற்றி.
திருவண்ணாமலை : குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 21 முதல் மார்ச் 18 வரை 517.62 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக
அலுவலகத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு.
சேலம் உள்ளிட்ட இரண்டாம்கட்ட பெருநகரங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
பிரதமர் கூறியதால் அணியில் இணைந்தேன் என ஓபிஎஸ் பகிரங்கமாக பேசியதை பொய் எனக் கூற முடியாது.உண்மைக்கு புறம்பாக ஓ.பி.எஸ். பேசி இருந்தால் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் - இந்திய கம்யூ.,தேசிய செயலர் டி.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரில் வன அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பலாத்கார வழக்கில் நித்தியானந்தாவின் கோரிக்கையை நிராகரித்தது கர்நாடக நீதிமன்றம்.
தேனி : அல்லிநகரம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு.
கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு பிப்.21 முதல் பிப்.24ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மீன்பிடிக்கத் தடை விதிப்பு - ஆட்சியர் நடராஜன் அறிவிப்பு.
பிப்.23, 24ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவில் முதன்முறையாக சிங்கள மொழியில் திருப்பலி மற்றும் ஜெபங்கள் நடைபெறும் - யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் வேதநாயகன்.
சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது : ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.
ஜெ.தீபா வீட்டில் நடைபெற்ற போலி வருமான வரி சோதனைக்கும் எனக்கும் தொடர்பில்லை; தொலைக்காட்சி மூலமாக தான் சோதனைக்கு வந்தது போலி அதிகாரி என தெரிய வந்தது - ஜெ.தீபாவின் கணவர் மாதவன்.
ஆந்திரா கடப்பா அருகே நீரில் மூழ்கிய நிலையில் 5 தமிழர்களின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் இயற்கை மரணம் இல்லை என கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
பல்லடம் அருகே கொடுவாயில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக