செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பரபரப்பு செய்திகள் 27/02/18 !

பரபரப்பு செய்திகள்  27/02/18 !

தமிழகத்தில் இனி மின்வெட்டே இருக்காது - அமைச்சர் தங்கமணி.

பிரிட்டனின் பிரபல சாலையில் உள்ள கடை ஒன்றில் குண்டு வெடிப்பு : 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

மத்திய அரசிடம் மாநில அரசு அடிப்பணியவில்லை மத்திய அரசுடன் இணைந்து சென்றால்தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மது அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி ? – சுப்பிரமணியன் சுவாமி கேள்வி.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் நாளை காலை 9.30 முதல் 12.30 மணி வரை
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.பிற்பகல் 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தமிழ்தாய் வாழ்த்து தமிழகத்தில் பாடவேண்டும் என்பதே என் கருத்து - நடிகர் கமல்.

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரி திமுக தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவு : வரும் 5-ம் தேதி எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர்; 6 மாதம் மனநல சிகிச்சைக்கு
செல்வது நல்லது - ஆர்கே நகர் எம்.எல்.ஏ. தினகரன்.

தமிழகத்தில் ஒருமையில் பேசி தவறான கலாச்சாரத்தை ஹெச்.ராஜா உருவாக்கி வருகிறார் : டிடிவி தினகரன்.

தமிழகத்தில் 500 பள்ளிகளில் தலா ரூ.25 லட்சம் செலவில் நவீன ஆய்வகம் அமைக்கப்படும்.மத்திய அரசு கொண்டுவரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

மத்திய அமைச்சர் பதவியேற்பு உறுதிமொழிக்கு எதிராக தயாநிதி மாறன் செயல்பட்டுள்ளார் அமைச்சர் என்ற முறையில் வழங்கப்பட்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் - சிபிஐ தரப்பு.

அதிமுகவின் கரைவேட்டியை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பயன்படுத்தினால் அதனை
அவிழ்த்து விடுங்கள் - அமைச்சர் மணிகண்டன் கடும் தாக்கு.

சமஸ்கிருதம், இந்தியை திணிக்க பாரதிய ஜனதா முயற்சிக்கிறது.தமிழகத்தில்தான் வெடிகுண்டு கலாசாரம் இல்லை ஆனால் அதற்கு தூண்டுகிறது பாஜக - டிடிவி தினகரன்.

மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.3 நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள்.கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர் எனது மகன் சிலம்பரசன் - டி.ராஜேந்தர்.

ஆதாரமின்றி எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன் நடிகர் கமல்ஹாசன் சம்பள பாக்கி வைத்திருப்பதாக புகார் கூறியது குறித்து நடிகை கவுதமி விளக்கம்.

சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐநா.வுக்கு கண் இல்லையா ? அன்று இலங்கை இன்று சிரியா! ஆக யாருக்குமே இதயம் இல்லையா ? - நடிகர் விவேக்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 2 இடங்கள் உட்பட நாடு முழுவதும் கூடுதலாக 43 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் யாரையும் விடுவிக்கக்கூடாது - சிபிஐ தரப்பு

வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரின் வாதங்கள் நிறைவு.

டெல்லி மற்றும் சண்டிகரில் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் -மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜேபி. நட்டாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம்.

பாலேஸ்வரம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து முதியவர்களை வெளியேற்றி நாளை மறுநாள் சீல் வைக்கப்படும் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

கேரளத்தில் அரிசி திருடியதாக கொல்லப்பட்ட மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேலூர் : தனியார் பள்ளியில், 4-ம் வகுப்பு மாணவன் பிரகாஷை தலைமை ஆசிரியர் ராஜா அறைந்ததாக புகார் : ஆசிரியர் தாக்கியதால், காது கேட்காமல் போன மாணவன் பிரகாஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரும் 3 தேதி முதல் செல் போன் தடை : செல்போனை பாதுகாப்பாக வைக்க ₹10 தரவேண்டும் என கோயில் நிர்வாகம் தகவல்.

மதுரை ஆதீனத்துக்குள் நித்யானந்தா நுழைவதை தடுக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மார்ச்5 இல் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கீதாஞ்சலி வைர நகை நிறுவனம் ரூ.1,251 கோடி மோசடி என புகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக