வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டில்..



மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டில்..

முடிவடைந்த 35 ஆயிரத்து 819 திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 6 ஆயிரத்து 411 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..

*தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்..*

அரசு விழாக்கள் மற்றும் காணொலிக் காட்சி மூலமாக 11ஆயிரத்து 827.34 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரத்து 819 முடிவடைந்த பணிகள் திறந்துவைக்கப்பட்டதாகவும், 8 ஆயிரத்து 837.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 ஆயிரத்து 411 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால், இதுவரை 5 ஆயிரத்து 208 கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

பொதுப்பணித்துறை சார்பில் 100 கோடி ரூபாய் செலவில் 30 மாவட்டங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதற்காக 331.68 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சுமார் 83 ஆண்டுகளுக்குப்பின் முதன் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட்டதாகவும், 669.13 கோடி ரூபாய் செலவில் 5 ஏரிகள், 3 அணைக்கட்டுகள் மற்றும் 2 வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு செய்யப்பட்டடிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கும் வகையில், அரசே நேரடி விற்பனை செய்வதற்கான தமிழ்நநாடு மணல் இணைய சேவை தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

743.56 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 325 ஏரிகள் மற்றும் 115 அணைக்கட்டுகளுக்கான வெள்ள புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது..

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், உழைக்கும் மகளிர்க்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

2 ஆயிரத்து 998 கோடி ரூபாய் செலவில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ்1லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டிருப்பதாகவும், 800 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 568 ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

300 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 200 சிறுபாசன ஏரிகள் புனரமைப்பும், 150 கோடியில் 7 ஆயிரத்து 282 அடிப்படை உட்கட்டமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது..

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3 ஆயிரத்து 359 ஆசிரியர்கள் மற்றும் 4,356 ஆசிரியரல்லாதோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..

 மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 18.88 லட்சம் பேருக்கு313.58 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் மன அழுத்தங்களை போக்க, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

437.78 கோடி ரூபாய் செலவில் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் முதற்கட்டமாக 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது..

 கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், 4 ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மின் உற்பத்தியில் ‘சி’ தரவரிசையில் இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் தற்போது ‘பி’ வரிசைக்கு முன்னேற்றமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 16 ஆயிரத்து 998 கோடி ரூபாய் அரசு நிதியுதவி செய்திருப்பதாகவும், 9 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 320 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் 3 ஆயிரத்து 992 கோடி செலவில் 42 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
 
279 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலைகள் நிறுவப்பட்டு மொத்த காற்றாலை நிறுவுதிறன் 7 ஆயிரத்து 957 மெகாவாட் ஆக உயர்ந்திருப்பதாகவும், 284 மெகாவாட் சூரிய மின் சக்தி தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

248.58 கோடி செலவில் 8 ஆயிரத்து 417 பேருக்கு விலையில்லா கறவை பசுக்களும் 97,473 பேருக்கு 3.89 லட்சம் விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில மாட்டின ஆராய்ச்சி நிலையம், மற்றும் தமிழ்நாட்டில் உள்ளநாட்டு மாட்டின பாதுகாப்பிற்கென புலிக்குளம் மரபணு வள மையம் ஆகியவை நிறுவப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது..

மதுரையில், 55 கோடி ரூபாய் செலவில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையும் மற்றும் 45 கோடி ரூபாய் செலவில் உயர்வெப்பநிலையில் பதப்படுத்தி சிப்பம் கட்டும், நறுமண பால் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

 பால் கொள்முதல் நாளொன்றுக்கு 31.04 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டு, விற்பனை 22.02 லட்சமாக லிட்டராக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதுபோல், நிதித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்துறை என அனைத்துத் துறைகளிலும் கடந்த ஓராண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் விவரங்கள் தமிழக அரசின் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக