ஞாயிறு, 31 டிசம்பர், 2017

CURRENT AFFAIRS

CURRENT AFFAIRS..

தமிழ்நாடு

1. சாக்பீஸ் கார்விங் முறையில் 1,330 "அ" எழுத்துகளைக் கொண்டு திருவள்ளுவர் உருவம்: சீர்காழி இளைஞர் சாதனை!
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் நகை தொழிலாளி அன்பழகனின் மகன் அரவிந்தன் (21) 3அடி உயரத்தில் கார்விங் முறையில் சாக்பீஸால் 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில் தமிழின் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தை 1,330 எண்ணிக்கையில் சாக்பீஸ்களை செதுக்கி உருவாக்கினார். பின்னர், அந்த எழுத்துகளைக் கொண்டு, திருவள்ளுவர் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

2. 365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை
சிவகங்கை ஓவியர், 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் என்.முத்துக்கிருஷ்ணன். 1988 முதல் அஞ்சல் அட்டையில் மாத இதழை நடத்தி வருகிறார். அட்டையின் இருபுறமும் பொதுஅறிவு, சிரிப்பு, கேள்வி-பதில் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த இதழ் தமிழகம் மட்டுமின்றி அந்தமான், கேரளா மற்றும் சண்டிகார், டில்லி, மும்பை போன்ற வெளிமாநில பகுதிகளுக்கும் சிங்கப்பூர், பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதற்கு லிம்கா சாதனை, அசிட் உலகச் சாதனை விருதுகளும் கிடைத்துள்ளன. இந்த இதழுக்கு இலவச இணைப்பாக 2004 முதல் ஆண்டுதோறும் காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். 2004 ல் அரை இஞ்சில் 1330 திருக்குறளுடன் கூடிய காலண்டரை தயாரித்தார். தொடர்ந்து 13 ஆண்டுகளாக புதுப்புதுவிதமான காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம் காலண்டர் தயாரித்துள்ளனர்.

3. டீ டம்ளர் மீது30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்து சாதனை :
திண்டுக்கல்லை சேர்ந்த யோகா மாஸ்டர் டீ டம்ளர்களின் மீது 30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்து சாதனை செய்துள்ளார். 2013 ல் விருதுநகரை சேர்ந்த பாஸ்கரன் இருளப்பன் என்பவர் டீ டம்ளர்களின் மீது 30 வினாடிகளில் 35 தண்டால் எடுத்து சாதனை படைத்தார். இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை திண்டுக்கல்லை சேர்ந்த யோகா மாஸ்டர் அப்துல்ரகுமான் முறியடித்தார். ஸ்போர்ட்ஸ் இன் யு அகாடமி சார்பில் அவர் இரண்டு டம்ளர்களின் மீது கைகளையும், மற்றொரு டம்ளரில் இரு கால்களையும் வைத்தப்படி 30 வினாடிகளில் 50 தண்டால் எடுத்தார். இது கடந்த சாதனையை விட அதிகம். இவரின் சாதனைகள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

4.  கால்நடை திருவிழா
நம் நாட்டு கால்நடைகளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை நகர மக்களுக்கு எடுத்துரைக்கவும், இயற்கை விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு, இயற்கை வளத்துடன் உள்ள தொடர்பை விளக்கவும், சென்னையில், "செம்புலம் 18” என்ற கால்நடை திருவிழா, நடத்தப்பட உள்ளது. சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில், ஜன., 5, 6 தேதிகளில் திருவிழா நடக்கிறது. முதல் முறையாக நடக்கும் இவ்விழாவில், மாடு, குதிரை, எருமை, நாய், கோழிகள் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட இனங்களைச் சார்ந்த, 30 ஆயிரம் கால்நடைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதில், உள்நாட்டு கால்நடைகளை பல தலைமுறைகளாக வளர்க்கும் விவசாயிகளை, பொதுமக்கள் சந்தித்து, உரையாடலாம். இதுதவிர, சுவையான இயற்கை உணவுகளை உண்ணவும், பாரம்பரிய விளையாட்டுகளை பார்க்கவும், நகரவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தென்னிந்திய இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர், ஜிதேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.  முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது
முஸ்லிம் கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அதையடுத்து உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் "முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா" பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தனர். ஆனால் அந்த திருத்தங்கள் குரல் ஓட்டு மூலம் நிராகரிக்கப்பட்டன. அதன்பிறகு சபையில் மசோதா நிறைவேறியது.

2.  அனைத்து இல்லங்களுக்கும் தடையில்லா மின்சாரம்
இன்னும் மின்சார விநியோகம் கிடைக்கப்பெறாமல் உள்ள 1694 இல்லங்களுக்கு டிசம்பர் 2018-க்குள் மின் விநியோகம் வழங்கப்படும். இந்த வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வரும் மார்ச் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்படும். மார்ச் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தடையில்லா மின்சாரம் வழங்க தவறும் பட்சத்தில், மின்விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள மின்சார உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது என மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய மின்சார துறை மந்திரி ஆர்.கே சிங் தெரிவித்துள்ளார்.

3.  உத்தரகாண்டில் மிதமான நிலநடுக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மாலை 4:50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.கடந்த 11-ம் தேதி இதே பகுதியில் 5.5 ரிக்டராக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. உலக இனிப்புத் திருவிழா!
தெலங்கானாவில் ஜனவரி 13ஆம் தேதி முதல் உலக இனிப்புத் திருவிழா கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக இனிப்புத் திருவிழா ஜனவரி 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை செகந்தராபாத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் இந்தியாவின் 25 மாநிலங்களைச் சேர்ந்த இனிப்புகள், வெளிநாட்டைச் சேர்ந்த இனிப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட இனிப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.
அனைத்து மாநிலங்களின் இனிப்புகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம் எனச் சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் செயலாளர் பி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இனிப்புத் திருவிழாவின்போது சர்வதேசப் பட்டம் பறக்கவிடும் திருவிழாவும் நடத்தப்படும்.


உலகம்

1.  ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம்
டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு புதிய சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை இஸ்ரேல் நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் தாக்கல் செய்தார். அப்போது அவர், மேற்கு சுவர் மற்றும் பழமை நகருக்கு இடையே பூமிக்கு அடியில் 3 கி.மீ. தூரத்துக்கு சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளதாவும், இந்த ரெயில் பாதையில் 2 ரெயில் நிலையங்கள் இடம் பெறும் என்றும் அறிவித்தார். அவற்றில் பழமை நகரில் அமைக்கப்படும் ரெயில் நிலையத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் பெயர் சூட்டப்படும் என இஸ்ரேல் நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி அறிவித்தார்.

2. அதிக வாராக்கடன் நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்
வங்கி வாராக்கடன் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது. "பிரிக்ஸ்" நாடுகளின் வங்கி துறையில், அதிகளவில் வாராக்கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக்கடனில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை உள்ளன. இந்தியாவின் வாராக்கடன் விகிதம், 9.85 சதவீதமாக உள்ளது. இது அடுத்துள்ள ஸ்பெயின் நாட்டின் 5.28 சதவீதத்தை விட, 4 சதவீதம் அதிகமாகும். ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தென் கொரியா, பிரிட்டன் ஆகியவை, மிகக் குறைந்த வாராக்கடனை வைத்துள்ளன. இவற்றின் வாராக்கடன், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

3.  ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா
கோகோ எனும் பெண் கொரில்லா குரங்கு சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறது. ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியும் என மனித மிருக உரையாடல் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்த பென்னி என்பவர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1. உலக ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!
சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள்.
ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

2.  ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள்
கடந்த 9ஆம் தேதி நடந்த “Murali Goodness Cup” போட்டித் தொடர், இலங்கையின் முன்னாள் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த தொடரில் விளையாடிய 15 வயதான நவிந்து பகாசரா, தொடரின் இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் (no ball உட்பட) ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்தார். அவரின் இந்த சாதனைப் பாராட்டிய முரளிதரன், பகாசராவை வாழ்த்தியதோடு, கிரிக்கெட்டில் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக கூறினார்.


விருதுகள்

1. மாரத்தான் யோகா: சென்னை பெண் கின்னஸ் சாதனை!
தொடர்ந்து யோகா செய்து சென்னையைச் சேர்ந்த கவிதா பரணிதரன் புதிய கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். மூன்றரை வயது குழந்தைக்கு தாயானவர் இவர்.
டிசம்பர் 23-ந் தேதி காலை 7 மணியளவில் இவருடைய மாரத்தான் (தொடர்ச்சியாக ஒரு செயலைச் செய்வது) யோகா தொடங்கியது. இதன்மூலம் 5-ஆம் நாளான டிசம்பர் 28-ந் தேதி (இன்று) பிற்பகல் 02:02 மணியளவில் இவர் முந்தைய மாரத்தான் யோகா கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ந்து மாரத்தான் யோகாவில் ஈடுபட்டு வரும் கவிதா, டிசம்பர் 30-ந் தேதி வரை இதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாசிக்கைச் சேர்ந்த பிரதன்யா பாட்டீல், இதே வருடம் ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிய மொத்தம் 103 மணிநேரங்கள் தொடர்ந்து மாரத்தான் யோகா செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்திருந்தார்.


முக்கிய நியமனங்கள்

1. ஜிம்பாப்வே துணை அதிபரானார் கான்ஸ்டன்டினோ சிவெங்கா!
ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலகக் காரணமான அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா (61), அந்த நாட்டின் துணை அதிபராக பொறுப்பேற்றார்.
கான்ஸ்டன்டினோவும், முகாபே அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கெம்போ மொஹாதியும் துணை அதிபர்களாக பொறுப்பேற்றனர்.


அறிவியல் தொழில்நுட்பம்

1.  ஏவுகணைகளை நடுவானில் வழி மறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
எதிரி நாட்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் இந்தியாவை தாக்க வந்தால் அதனை இடைமறித்து தாக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு சூப்பர்சானிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. தயாரித்து உள்ளது. இதன் நீளம் 7½ மீட்டர் ஆகும். இந்த ஆண்டு ஏற்கனவே 2 தடவை வெற்றிகரமாக நடந்த சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை 3–வது தடவையாக நடந்தது. ஒடிசா மாநிலத்தில் வங்காளவிரிகுடா கடலில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது. ஒடிசாவில் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து எதிரி நாட்டு ஏவுகணை போல் "பிரித்வி" ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. அந்த ஏவுகணையை வழிமறித்து தாக்குவதற்காக, வங்கக்கடலில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது. நடுவானில், பிரித்வி ஏவுகணையை சூப்பர்சானிக் ஏவுகணை வழி மறித்து வெற்றிகரமாக தாக்கியது. இச்சோதனை வெற்றிகரமாக முடிந்ததால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


பொருளாதாரம்

1.  செய்தித்தாள் நிறுவனம் ரூ.264 கோடி லாபம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், 2016 - 17ம் நிதியாண்டில், நிகர லாபம், 264.56 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இதில், தமிழக அரசின், 75 சதவீத பங்கு ஈவுத் தொகை, 18.33 கோடி ரூபாய். இதற்கான வரைவு காசோலையை, தொழில் துறை அமைச்சர், எம்.சி. சம்பத், முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார்.அதேபோல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழக அரசின் பங்கு ஈவுத் தொகை, 3.03 கோடி ரூபாய். இதற்கான காசோலையையும், முதல்வரிடம் அமைச்சர் வழங்கினார்.

சனி, 30 டிசம்பர், 2017

அரசியலுக்கு வருகிறேன்.. தனிக்கட்சி தொடங்குவேன்.. ரஜினி அறிவிப்பு


அரசியலுக்கு வருகிறேன்.. தனிக்கட்சி தொடங்குவேன்.. ரஜினி அறிவிப்பு

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார்.
போருக்கு நான் தயார். நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டசபைத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம் என்று ரஜினி காந்த் அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வார்த்தை இன்று ரஜினியின் வாயாலேயே வந்து விட்டது. ரசிகர்களை இது பெரும் உற்சாகமடைய வைத்துள்ளது.
முன்னதாக ரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்போம். அதேசமயம், ரசிகர்களுக்கேற்றார் போலத்தான் அவர் அறிவிப்பார் என்றும் அவர்கள் உறுதிபடக் கூறியிருந்தனர். அதற்கேற்ப தற்போது ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி- 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி- ரஜினிகாந்த்

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக ரஜினி அறிவித்தார்.
ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர் முதல் நாளன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிக்க போவதாக ரஜினி கூறியிருந்தார்.
இன்று ரஜினி பேசுகையில் கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய்.
யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்தார்.

2017 - ஆண்டு கண்ணோட்டம்

2017 - ஆண்டு கண்ணோட்டம்

சர்வதேச நாட்டாமை:

அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த டிரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் டிரம்ப் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பந்தாடப்பட்டது, மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவது, 7 முஸ்லிம் நாடுகளின் அகதிகளுக்கு தடை, ஜெருசலேம் விவகாரம், வடகொரியாவுடன் தகராறு என டிரம்ப்உலகச்செய்திகளில் தொடர்ந்து தனி இடம் வகித்து வந்தார்.

அதிபராக பதவி பிரமானம் எடுக்கும் டிரம்ப்

ஆறுதல் இல்லாத சோகம்:

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் உள்ள ரோகிங்கியா முஸ்லிம்கள் சொந்தநாட்டு ராணுவத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டது இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம். பல்லாயிரக்கானோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 6 லட்சம் ரோகிங்கியா மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுகியின் இமேஜ் இந்த விவகாரத்தில் முற்றிலும் சிதைந்தது. ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனத்தை அடுத்து தற்போது, அகதிகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது.

ஏவுகணை வில்லன்:

அடுத்தடுத்த ஏவுகணை சோதனை, அணுகுண்டுகள் பரிசோதனை என உலக நாடுகளை பதற்றத்தில் வைத்திருந்தவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவில் எந்த நேரத்தில் என்ன சோதனை நடக்கும் என அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை வைத்த கண் வாங்காமல் கவனித்து கொண்டிருந்தன. மூன்றாம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போட்டுவிடுமோ என்று அனைவரும் அச்சப்பட்ட நிலையில், வெறும் வாய் தகராற்றுடன் நின்று கொண்டது.

கிம் ஜாங் உன்னும், டொனால்ட் டிரம்ப்பும் தங்களை அதிபர்கள் என்பதையே மறந்து தரைமட்ட லெவலில் இறங்கி விமர்சித்து கொண்டனர். யாரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டதன் விளையாக தடை மேல் தடையாக வடகொரியா மீது விழுந்தது. பெட்ரோல், டீசல் முதல் நிலக்கரி வரை அத்தியாவசிய பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொஞ்சம் கீழே இறங்கி வருவதற்கு வடகொரியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிம் ஜாங் உன்

அரக்கர்களின் அழிவு:

கடந்த 2014 முதல் வல்லரசு நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இந்த ஆண்டில் அடக்கப்பட்டது. ஈராக்கின் மொசூல் நகரை தலைமையகமாக அறிவித்து உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள இவர்கள், சர்வதேச கூட்டுப்படையினரால் மொசூல் நகரை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர்.

ஐ.எஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஈரான், ஈராக் நாடுகள் அறிவிக்க, அந்த இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று குழப்பமான தகவல்கள் மிஞ்சுகின்றன. அடி வாங்கிய பாம்பாக உள்ள ஐ.எஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற எச்சரிக்கையையும் பல்வேறு தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

வெற்றி உற்சாகத்தில் ஈராக் வீரர்கள்

நவீன களவு:

சர்வதேசமும் கணினிகளின் பிடியில் இயங்கிங்கொண்டிருக்க கடந்த மே மாதத்தில் ரான்சம்வேர் என்ற வார்த்தை இணைய உலகை புரட்டிப்போட்டது. வான்னாகிரை எனும் ஹேக்கிங் குழுவினர்கள் மருத்துவமனை, தொழிற்சாலை உள்பட பல நிறுவனங்களின் கணினிகளை முடக்கி தகவல்களை திருடியது. பணம் தந்தால், தகவல்களை திரும்ப தருவோம் என ஹேக்கிங் குழு பேரம் பேச, இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டன.

வெள்ளை மாளிகையில் கல் விழுந்தாலே வடகொரியாதான் காரணம் என சொல்லும் அமெரிக்கா, இந்த பிரச்சனையிலும் வடகொரியாவை நோக்கி கை நீட்டியது. எது நடந்தாலும் எங்களையே குறை சொல்வது நல்லதற்கல்ல என வடகொரியா பதிலளிக்க, வைரஸ் விவகாரத்தை விட அமெரிக்கா - வடகொரியா சண்டை சூடுபிடித்தது.

தூக்கி எறியப்பட்ட அதிகாரம்:

ஆப்ரிக்காவின் குட்டி நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே ராணுவம் மூலம் வீழ்த்தப்பட்ட நிகழ்வு அதிக காலம் அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. முகாபேவுக்கும், துணை அதிபராக இருந்த எம்மெர்சன் நங்காக்வாவுக்கும் இடையே அதிகார போட்டி நிலவ எம்மெர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாள் காலையில் தலைநகர் ஹரரேவை ராணுவம் முற்றுகையிட, ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி என செய்திகள் வெளியானது. ஆனால், அதிபர் முகாபே பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது மட்டுமே ராணுவத்தின் நோக்கம் என்று கூறப்பட்டதை அடுத்து தான், இதன் பின்னர் எம்மெர்சன் இருப்பது தெரியவந்தது. சுற்றிலும் தனக்கு தடுப்பு கட்டப்பட்டதை அடுத்து பதவியை முகாபே ராஜினாமா செய்ய, மக்கள் ஆதரவுடன் புதிய அதிபராக எம்மெர்சன் நங்காக்வா பதவியேற்றார்.

ராபர்ட் முகாபே

தனி ஒருவன்:

வளைகுடா நாடான சவூதியின் பட்டத்து இளவரசராக ஜூன் மாதம் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், செய்த அதிரடி மாற்றங்கள் சவூதி மீதான பழமைவாத பார்வைவை மாற்றியது. மன்னர் சல்மானின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவரான இளவரசர் சல்மானுக்கு முக்கிய அதிகாரங்களை மன்னர் வழங்கியது அரச குடும்பத்தில் சலசப்பை உண்டாக்கியது.

சவூதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி, மீண்டும் சினிமா அரங்குகள் திறக்க முடிவு என 2030-ம் ஆண்டில் சவூதி அரேபியா நவீன மாற்றங்களை அடைந்திருக்கும் என்று சல்மான் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் உச்சமாக, கோடீஸ்வரர் அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அரசின் சொத்துகளை, அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்க படுவார்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். எனினும், டிரம்ப் உடன் அதீத நெருக்கம் வைத்து கத்தார் உடனான உறவு துண்டிக்கப்பட்டதில் சல்மான் மீது சரமாரியான விமர்சனங்கள் விழுந்தது.

முகம்மது பின் சல்மான்

பழம்பெரும் பஞ்சாயத்து:

புராண காலம் தொட்டே ஜெருசலேம் நகரில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புனித தலங்கள் உண்டு. நவீன காலத்திலும் ஜெருசலேம் பிரச்சனை, இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு மட்டுமல்ல உலகிற்கே தீராத தலைவலியாக உள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவிக்க, காஸா முனையிலும், மேற்கு கரையிலும் தீ பற்றிக்கொண்டது. இதற்காக போராடிய பாலஸ்தீனியர்களில் சிலரது உயிர்களையும் இஸ்ரேல் வாங்கியது.

உலக அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ள டிரம்ப் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஜெருசலேமில் அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கு டிரம்ப் பெயர் சூட்டப்படும் என இஸ்ரேல் மந்திரி பேட்டியளிக்க, ஜெருசலேம் விவகாரம் முடிவு எட்டப்படாமலேயே முடிந்து விடும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

ஜெருசலேம் நகரின் தோற்றம்

மனிதம் குடித்த துப்பாக்கிகள்:

சிரியா, ஏமன், ஈராக், ஆப்கன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எப்போதும் போல இப்போதும் துப்பாக்கிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும் அப்பாவிகள் பலியாகிக்கொண்டு இருக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடந்துள்ளன. ஐரோப்பாவில் லண்டன், மான்செஸ்டர், பார்சிலோனா, பாரீஸ், இஸ்தான்புல் மாஸ்கோ ஆகிய நகரங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கியது.

கூட்டமாக மக்கள் இருக்கும் போது வாகனம் மூலம் மோதி தாக்குதல் நடத்தும் யுக்தியை ஐ.எஸ் தீவிரவாதிகள் லண்டனில் செயல்படுத்த, இதேபாணியில் பல நகரங்களிலும் தாக்குதல்கள் அரங்கேறின. அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பண்டிகை உற்சாகத்தில் பொதுமக்கள் கூடியிருக்க பக்கத்து கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியால் ஒருவன் சரமாரியாக சுட்டுத்தள்ள 29 பேர் உயிரிழந்தனர். நவம்பர் மாதத்தில் டெக்சாஸில் உள்ள சர்ச்சில் புகுந்து இதே போல ஒருவன் நடத்திய தாக்குதலில் 29 உயிர்களை துப்பாக்கி குடித்தது.

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு

சூடான ஆபத்து:

கரியமல வாயு காரணமாக புவி அடைந்துள்ள வெப்பநிலை இந்தாண்டு இரண்டாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு பாரீசில் உலக நாடுகள் ஒன்று கூடி ஒப்பந்தம் போட்டன. ஆனால், பாரீஸ் ஒப்பந்தம் அமெரிக்காவின் வளர்ச்சியை பறிப்பதால் அதிலிருந்து வெளியேறுவதாக அதிபராக பதவியேற்ற பின் டிரம்ப் அறிவித்தார்.

புவி வெப்பமயமாதலின் எதிர்மறை விளைவுகளாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய புயல்கள் உண்டானது. புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களின் மதிப்பு மட்டும் 290 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொடும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புவி சூடாவதை சிறிதளவாது கட்டுப்படுத்தும் பாரீஸ் ஒப்பந்தமும் தூக்கி எறியப்படும் நிலையிலேயே உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தூசு தட்டி செயல்படுத்தினால் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தலேமே ஒழிய வேறு வழியே இல்லை.


1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சித்தர்கள் காட்சி கிடைக்கும் அபூர்வ பௌர்ணமி



1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சித்தர்கள் காட்சி கிடைக்கும் அபூர்வ பௌர்ணமி...

வரும் 1.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை காலை 11.26 முதல் 2.1.2018 காலை 9.22 வரை பௌர்ணமி நிலவுகிறது .இந்த பௌர்ணமி 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ பௌர்ணமி ஆகும். இந்த பௌர்ணமி நாள் அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தால் 100 முறை கிரிவலம் செய்த புண்ணியம் அந்த ஒரே நாளில் கிடைக்கும்.
 இந்த நாள் கிரிவலம்  செய்வது நமது சகலவிதமான தோஷங்கள் நிவர்த்தியாகும். மேலும்  ""  ஓம் நம சிவய "" என்று சொல்லி கொண்டு கிரிவலம் செய்தால் சித்தர்கள் தரிசனம் கிட்டும்.  இந்த கிரிவலம் செய்தால் ஏற்படும் முக்கியமான நன்மைகள்

  * கடுமையான தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

  * தொழில் மேன்மை அடையும்

  *கடன் பிரச்சனை தீரும்

  * திருமணம் தடை    நிவர்த்தியாகும்

  * புத்திர தோஷம் நீக்கி குழந்தை பாக்கியம் கிட்டும்

   * சகல கர்ம வினை நோய்களும்  நிவர்த்தியாகும்

நாமும் இந்த  அபூர்வ கிரிவலம் செய்து நன்மைமை பெறுவோம் மற்றும்  இந்த  செய்தியை மற்றவர்களுக்கு பகிர்வோம்.

வியாழன், 28 டிசம்பர், 2017

தங்கமகள் சேமிப்பு உள்ளிட்ட பல சிறு சேமிப்புகளுக்கு வட்டி திடீர் குறைப்பு - மத்திய அரசு...


தங்கமகள் சேமிப்பு உள்ளிட்ட பல சிறு சேமிப்புகளுக்கு வட்டி திடீர் குறைப்பு - மத்திய அரசு...
 ஏமாற்றமடைந்த ஏழைகள்.....


கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.), பி.பி.எப்., தங்க மகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டியை 20 காசுகள் வரை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேசமயம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.
2018ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலாண்டுக்கான சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டங்கள் தவிர, இதர சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டிவீதம் 20 புள்ளிகள்(20காசு) குறைக்கப்பட்டு, வட்டி வீதத்தை 4 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, மூத்த குடிமக்களின் 5 ஆண்டு சிறு சேமிப்பு திட்டத்துக்கு கடந்த காலாண்டு வழங்கப்பட்ட 8.3 சதவீதம் வட்டியே தொடர்ந்து இருக்கும்.

2017 அக்டோபர் முதல்டிசம்பர் வரை பி.பி.எப். திட்டத்துக்கு வட்டி வீதம் 7.8 சதவீதம் வழங்கப்பட்ட நிலையில், அது 7.6 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு பத்திரத்துக்கும் வட்டி 7.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி வீதம் 7.8 சதவீதம் இருந்த நிலையில் அது 7.6 சதவீதமாகவும், *பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான செல்வ மகள் சிறுசேமிப்பு என்று அழைக்கப்படும் ‘சுகன்யா சம்ரிதி’ திட்டத்துக்கு வட்டி வீதம் 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது*

5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் தொகைகளுக்கு வட்டி வீதம் 7.1 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.மேலும், ஒன்று முதல் 5 ஆண்டுகள்வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி 6.6 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து, மாதந்தோறும் வருவாய் கிடைக்கும் திட்டத்துக்கு வட்டி 7.5 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவில் கோவிலாக மாறும் தேவாலயங்கள்...


அமெரிக்காவில் கோவிலாக மாறும் தேவாலயங்கள்...

அமெரிக்காவின் டீலாவேர் பகுதியில் உள்ள 50 ஆண்டு கால பழமை வாய்ந்த தேவாலயம், சுவாமிநாராயண் காதி சன்ஸ்தான் கமிட்டியினரால், சுவாமிநாராயண் ஹிந்து கோவிலாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியினரால், ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் கென்டுகி நகரங் களில் உள்ள தேவாலயங்களும் மற்றும் பிரிட்டனின் போல்டன் மற்றும் மான்சென்ஸ்டர் நகரங்களில் உள்ள தேவாலயங்களும் கோவிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 26/12/17 !

பரபரப்பு செய்திகள் 26/12/17 !

புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும்.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு.திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் - டிடிவி.தினகரன்.

அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு டிடிவி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து.

விவசாய டிராக்டரை வணிக வாகனமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் : மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள்.

11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு. ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை பாட திட்டத்தில் இடம் பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, விசாரணைக்குழுவை அமைத்தது திமுக.

ராமநாதபுரம் உப்பூரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனல்மின் நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு : ஜனவரி 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனஎனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும்.அரசியலின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன் போருக்கு சென்றால் ஜெயிக்கணும் - நடிகர் ரஜினிகாந்த்

குஜராத் மாநில பாஜக முதலமைச்சராக விஜய் ரூபானி பதவியேற்பு : விழாவில் பிரதமர் மோடி , அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் அரசியல் என்ன மணல் வீடு கட்டி மகிழும் விளையாட்டா? டிடிவி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கருத்து.

சுயேச்சை என கேலி செய்தவர்களுக்கு முன் டிடிவி.தினகரன் சுயம்பு என நிரூபித்திருக்கிறார் - நாஞ்சில் சம்பத்.

ஆர்கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி என்பது கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி - அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் தலைமை, தினகரன் தான் என்பதை ஆர்கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது - புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் பேட்டி.

ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது.தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே காலம் தாழ்த்தி வந்தார் - நடிகர் ஜீவா.

ரஜினி எம்எல்ஏ ஆகலாம், முதல்வர் ஆகக்கூடாது : நடிகர் எஸ்வி.சேகர்.

டிடிவி.தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு - அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது, ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க யார் வந்தாலும் வரவேற்போம் - தமிழிசை சௌந்தரராஜன்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன், அவர் வரட்டும்.ரஜினி பாஜகவுக்கு பின்நின்று வருவார் என ஒரு யூகம் உள்ளது, அவ்வாறு இருந்தால் அது வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் - திருமாவளவன்.

ரஜினி அரசியலுக்கு வருவது, அவர் உடல்நலத்திற்கும், குடும்பத்திற்கும் நல்லதல்ல - அமைச்சர் ஓஎஸ்.மணியன்.

தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சர் தரப்புக்கு கிடையாது.விரைவில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தினகரனுடன் வந்து சேருவர் - நடிகர் செந்தில்.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைப்பு.அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே பரபரப்பால் போலீஸ் குவிப்பு.

ஆருத்ரா தரிசனத்திற்காக ஜன-2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது.

பெய்ஜிங் : ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.

வியாழன், 21 டிசம்பர், 2017

2ஜி முறைகேட்டு வழக்கில் 10 ஆயிரம் பக்கம் எழுதி... 3 வாரத்துக்குள் 105 பக்கமா சுருங்கினது எப்படி?



2ஜி முறைகேட்டு வழக்கில்  10 ஆயிரம் பக்கம் எழுதி... 3 வாரத்துக்குள் 105 பக்கமா சுருங்கினது எப்படி?

டிச. 21 வியாழக்கிழமை இன்றைய ஹாட் டாபிக், 2ஜி முறைகேட்டு வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்புதான். இந்தத் தீர்ப்புக்காக வெகு நாட்கள் சிரமப்பட்டு தீர்ப்பை பக்கம் பக்கமாக எழுதி வந்ததால் தான் தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப் பட்டு வருவதாக நீதிபதி ஓ.பி.சைனி கூறி வந்தார்.

முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாகக் கூறப்பட்டது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு. இதுபோன்ற கிரிமினல் வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் பார்வை.

முன்னர், மாணவி ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலனை ஆருஷியின் பெற்றோருக்கு அளித்து அவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்.

இங்கே அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில், ஆ.ராசா தனக்கு சந்தேகத்தின் பலனைக்கூட கேட்கவில்லை. இந்தக் குற்றப்பத்திரிகையே தவறு எனக் கூறித்தான் வாதிட்டார். அதாவது, குற்றப் பத்திரிகையே தவறு என்று கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்கினார். ஒரு குற்றம் நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்று சொல்வது ஒரு வகை. 'அப்படியொரு குற்றமே நடக்கவில்லை' என வாதிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையில்தான் வாதிட்டார் ஆ.ராசா.

சர்க்காரியா ஊழல் வழக்கில், திமுக.,வினர் மீதான குற்றச்சாட்டில், விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார்கள் என்ற வார்த்தை, அன்று முதல் இன்று வரை அப்படியே ஒத்துப் போகிறது. குற்றம் செய்வது தெரிகிறது. குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்க இயலவில்லை என்ற கதையாகத்தான் சிபிஐ.,யின் நிலை ஆகிப் போயுள்ளது.

இந்த வழக்கு, நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமான வழக்கு இது. மத்திய தணிக்கைக் குழு சிஏஜி., அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடுக்கப் பட்டது. ஆனால், இந்த சிஏஜி அறிக்கையே தவறு என, வேரை வெட்டிவிட்டு மரத்தைச் சாய்க்கும் நுட்பத்தைத்தான் ஆ.ராசா இங்கே பிரதானமாகத் தன் வாதங்களில் கையாண்டார்.

இதற்காக, 2010ல் தொலைத் தொடர்பு அமைச்சகம் எழுதிய பதில் கடிதங்களை ஆ.ராசா தனக்கு துணைக்கு வைத்துக் கொண்டார். அவற்றில், சிஏஜி.,யின் குற்றச்சாட்டு ஒவ்வொன்றையும் மறுதலித்து, அலைக்கற்றை குறித்த போதுமான சட்டப் புரிதலோ தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை இது. போதிய அறிவு இல்லாமல் தயாரிக்கப் பட்ட இந்த அறிக்கை தூக்கி எறியப்பட வேண்டியது என கடிதங்களில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இப்படி தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் இருந்து இதை எழுதிய உயரதிகாரிதான், சிபிஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில் ஒருவராக இருந்தார். இவர் சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம் ஆ.ராசாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘சிஏஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மைதான். பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்துத் தரப்போடும் ஆலோசித்து கூட்டு முடிவே எடுக்கப்பட்டது' என ஒப்புக் கொண்டார்.

இப்படி, தொலைத் தொடர்புத் துறைக்கும் சிஏஜி.,க்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருக்கும் விவரங்களை, சிபிஐ.,யின் காவலில் இருந்தபோதுகூட ஆ.ராசா சிபிஐ.,யிடம் தெரிவிக்காமல் மறைத்தார். சிபிஐ.,யும் இந்த ஆவணங்களைக் கைப்பற்றாமலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதி முன் கடிதங்களை ஒவ்வொன்றாக வெளியில் விட்டார் ராசா.


இந்தக் கடித ஆவணங்களின் படி, 2ஜி ஏல தேதியை முன்னதாகவே மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை தருவது, இரட்டைத் தொழில் நுட்பம் இப்படியாகக் கூறப்பட்ட சிபிஐ.,யின் குற்றச்சாட்டுகளுக்கு, தன் துறை தன்னிச்சையாக இயங்கவில்லை, பிரதமர் அமைச்சகம், நிதியமைச்சகம் இவற்றையும் சேர்த்துக் கொண்டார் ஆ.ராசா. எனவே, ராசா கூறியோ, அல்லது கட்டாயப்படுத்தியோ 2ஜி விவகாரத்தில் முடிவுகள் எடுக்கப் பட்டதாக நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த வழக்கைக் கையில் எடுத்த பிறகாவது, 'தொலைத் தொடர்பு அமைச்சரின் வற்புறுத்தல் மற்றும் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாகவே, நான் இந்தக் கடிங்களை எழுத நேரிட்டது' என அந்த உயரதிகாரியிடம் சிபிஐ., வாக்குமூலமாகப் பெற்றிருக்க முடியும். ஆனால் அதையும் கோட்டை விட்டது. இத்தகைய பின்னணியில் தான், ஆவணங்களைச் சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு தயாராகிறது என்பதால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதே ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 5ஆம் தேதிக்கு தீர்ப்பு குறித்த தேதி ஒத்திவைக்கப் பட்டது. அப்போது, நீதிபதி ஓ.பி. சைனி, தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் படுகிறது என்று கூறியிருந்தார்.

பின்னர் டிச.5ம் தேதி வந்து, மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறி, டிச.21 அன்று வெளியாகும் என்று கூறினார். ஆனால், டிச.5ம் தேதி அவர் குறிப்பிட்டபோது, இங்கே ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருந்தது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் நடக்கும் நிலையில், காலை 10.30க்கு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டால், தேர்தலில் திமுக.,வுக்கு பாதகமாக இருக்கும் என்று திமுக.,வினர் பரவலாகக் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தான், இன்று இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. ஆனால், 10 ஆயிரம் பக்கங்கள் என்பது வெறும் 105 பக்கங்களாக சுருங்கிப் போனது. அந்த 105 பக்கங்களும் டிச.5ம் தேதி தொடங்கி, டிச.21ம் தேதிக்குள்ளாக, அதுவும் மூன்று வார காலத்துக்குள்ளாக சுருக்கம் கண்டு, அல்லது புதிதாக எழுதப் பட்டு இன்று வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்த 10 ஆயிரம் பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் குடி கொண்டிருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாதுதான்!

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?


உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

*நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும்.*

உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்.

''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்''

தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.

எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.

*மை ஆக்டிவிட்டியை அழிப்பது*

ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது.

ஜி மெயில் உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும்.

இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ''மை ஆக்டிவிட்டி (My activity)'' எனும் தளத்தில் இருக்கும். நீங்கள் இங்குதான் செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட பக்கங்களையே, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையையோ அழிக்க வேண்டும் என்றால், தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தைத் தேடி அழிக்கலாம். அல்லது கொடுக்கப்பட்ட தேதி வரம்புவரை, தேர்வு செய்யப்பட்ட அல்லது அனைத்துப் பக்கங்களையும் அழிக்கலாம்.

இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்கள் கூகுள் கணக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

*யூடியூபில் உங்கள் செயல்பாடு அனைத்தையும் அழிப்பது*

யூடியூபில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதையும், எதை தேடுகிறீகள் என்பதையும் கூகுள் பின்தொடர்கிறது.

ஆனால், இதையும் எளிதாக அழித்துவிடலாம். இடது பக்கம் மெனுவில் உள்ள ஹிஸ்டரியை க்ளிக் செய்து, ''அனைத்து தேடுதல் வரலாறு'' மற்றும் '' அனைத்து பார்வை வரலாறு'' என இரண்டையும் க்ளிக் செய்யவும். இப்படி தேர்வு செய்தபின் அழிக்கலாம்.

உங்களைப் பற்றி விளம்பரதாரர்கள் தெரிந்திருப்பதை அழிப்பது

கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது.

அதனால்தான் உங்கள் தேடல் வரலாற்றுடன் பொருந்தக்கூடிய விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்.

ஆனால் கவலைப்படாதீர்கள் - விளம்பரதாரர்களுக்கு என்ன தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம்.

இதை பார்ப்பதற்கு கூகுள் கணக்குக்குள் லாகின் செய்து, தனிப்பட்ட தகவல் & அந்தரங்க உரிமை (Personal info & privacy) பக்கத்திற்குச் செல்லவும்.

பிறகு ஆட்ஸ் செட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சென்று, மேனேஜ் ஆட்ஸ் செட்டிங் (Manage ads settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இதை நீங்கள் செயலிழக்க செய்வதன் மூலம், உங்களைப் பற்றி கூகுள் வைத்துள்ள தகவல்கள் தொடர்பாக விளம்பரங்கள் வராது. விளம்பரமே வராமல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

*உங்கள் இருப்பிட*
*வரலாற்றை அழிப்பது*

நீங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியுடன் நீங்கள் சென்ற இடங்களின் பட்டியலை கூகுள் வைத்திருக்கும்.

கூகுள் மேப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அனைத்தையும் அழிக்கவேண்டுமானால் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் செல்லவேண்டும்.

லோகேஷன் டிராக்கிங்கை ஆப் செய்யவும், முழு வரலாற்றையும் அழிக்கவும், குறிப்பிட்ட நாளுக்கான அல்லது நேரத்துக்கான வரலாற்றை அழிக்கவும் முடியும்.

*கழிவுக்கூடை ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பயணத்துக்கான பதிவை மட்டும்கூட அழிக்கமுடியும்.*


புதன், 20 டிசம்பர், 2017

மதி பரபரப்பு செய்திகள் 21/12/17 !

மதி பரபரப்பு செய்திகள் 21/12/17 !

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மையா? விளக்கமளிப்பதாக இருந்தால் அறிக்கை வெளியிடுவோம் : அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் ஆஜர்.

எழிலகத்தில் உள்ள கலசமகாலில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடக்க உள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக இன்று மாலை பதிலளிக்கிறேன் : டிடிவி.தினகரன்.

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆர்கே.நகரில் வாக்காளருக்கு பணம் தர ரூ. 20ஐ டோக்கனாக தந்த 15 பேர் கைது.

டெல்லி : 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஜனவரி 2 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர், வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுதலை ....


2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி விடுதலை ....

-திமுகவை அவமானப்படுத்தி அழிக்க போடப்பட்ட வழக்குதான் ஸ்பெக்ட்ரம்: ஸ்டாலின்
 

-சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி
-கனிமொழி விடுதலை- இனிப்பு வழங்கி ஸ்டாலின் கொண்டாட்டம்
-நீதி கிடைத்துள்ளது- நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது- வசந்தி ஸ்டான்லி
-திமுக இனி நிமிர்ந்து நிற்கும் - டெல்லியில் துரைமுருகன் பேட்டி
-2ஜி வழக்கில் வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: திருநாவுக்கரசர்
-2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலையால் மகிழ்ச்சி- காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு
-பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்தல்
-2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை
-டெல்லி நீதிமன்ற வளாகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
-2ஜி வழக்கில்: குற்றம்சாட்டப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலை என தகவல்
-ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலை
-2ஜி: நீதிமன்றத்திற்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வந்துவிட்டார்களா?
-வருகையை சரிபார்த்துக்கொண்டுள்ளார் நீதிபதி ஷைனி
-2ஜி வழக்கில் காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஷைனி
-2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி, கனிமொழி கணவர் அரவிந்தன் பாட்டியாலா நீதிமன்றம் வருகை
-கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாள், சகோதரர் அழகிரி ஆகியோரும் கோர்ட்டில் உள்ளனர்
-2ஜி தீர்ப்பு வழங்க நீதிமன்றத்துக்கு வந்தார் நீதிபதி ஷைனி
-டெல்லி நீதிமன்றத்துக்கு துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன் வருகை
-டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் வெளியே சுமார் 1000 திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்
-2ஜி தீர்ப்பை எதிர்நோக்கி பெரம்பலூரிலிருந்து அதிகப்படியான தொண்டர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்
-சிபிஐ நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமியை அனுமதிக்க கடும் எதிர்ப்பு
-2ஜி வழக்கில் சில நிமிடங்களில் தீர்ப்பு: சிறப்பு அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் வந்தடைந்தார்
-தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றம்
-2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு டெல்லி போலீசார் நடவடிக்கை

-2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
-கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
-வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுப்பு
-டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாளும் வருகை
-சில நிமிடங்களில் 2ஜி தீர்ப்பு .. டெல்லி நீதிமன்றத்தில் குவிந்த ராஜா ஆதரவாளர்கள்
-நீதிமன்றத்திலிருந்து ஆதரவாளர்கள் வெளியேற ராஜா உத்தரவு
-காலை 10.30 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி தீர்ப்பளிக்க உள்ளார்.
-இன்னும் சிறிது நேரத்தில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது
-டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மு.க.அழகிரி
-2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் கனிமொழியுடன் அழகிரியும் கோர்ட்டுக்கு வருகை
-2ஜி வழக்கில் காலை 10.30 மணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்குகிறார்
-2ஜி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு - நீதிமன்றத்துக்கு புறப்பட்டார் ஆ ராசா
-சுப்பிரமணிய சாமியும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வருகை

செய்திச் சுருக்கம் (20/12/2017)

செய்திச் சுருக்கம் (20/12/2017)


இன்றைய நிகழ்வுகள் சுருக்கமாக*


1 பாரத ஸ்டேட் வங்கிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வங்கியின் இரு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

2 குஜராத் முதல் அமைச்சராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

3 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்கோலி தனது திருமணத்தை இத்தாலியில் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரிலால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

4 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

5 அரசியல், ஜாதி, மதங்கள் மனிதனை பிளவுபடுத்துவவை, கலை, இலக்கியம் மட்டுமே மனிதத்தை வளர்ப்பவை என எழுத்தாளர் பொன்னீலன் பேசினார்.

6 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும், 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

7 வங்க கடலில், வரும், 25-ல், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், வலுவிழந்துள்ள வடகிழக்கு பருவ மழை, இந்த மாத இறுதியில், முற்றிலும் விலகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் சில இடங்களில், நாளை மிதமான மழை பெய்யலாம். வரும், 25ல், வங்க கடலில், அந்தமானுக்கு தென் கிழக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும், வானிலை மையம் கணித்துள்ளது.

8 அமேசான் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 10.or D -என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேசான் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது.

9 கடலூர் மாவட்டத்தில் 1.13 லட்சம் ஏக்கர் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

10 குஜராத் முதல்வராக, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியும், ஹிமாச்சல முதல்வராக, மத்திய அமைச்சர், ஜே.பி.நட்டாவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

11 வைகை அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு, இன்று முதல் தண்ணீர் திறந்து விட, முதல்வர் பழனிசாமிஉத்தரவிட்டு உள்ளார்

12 இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று(டிச.,20) நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் இன்று நடைபெறுகிறது.

13 சென்னை ஆர்.கே.நகரில் நாளை காலை 8 முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு திமுகவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

14 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்து வருகிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார். இதனையடுத்து தற்போது ஆளுநர் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்து வருகிறார்.

15 இந்தியாவில் பெண் பைலட்கள் அதிகம் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

16 குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது என சிவசேனா விமர்சித்து உள்ளது.

17 தமிழகத்தில் ஒக்கி புயல் பாதிப்புக்கு ரூ.4,047 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு அளித்தார்.

18 பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பெயர் அடிபடுகிறது.

19 பீகார் மாநிலம் மசூதான் பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் புகுந்த நக்சல்கள், அங்கு தீவைத்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

20 திராவிட இனம் தலைதூக்க கூடாது என்பதை மத்திய பா.ஜ.க. ஆட்சி லட்சியமாக கொண்டு செயல்படுகிறது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசினார்.

21 முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்த மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கேரளா அரசு அனுமதி மறுத்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு எர்ணாகுளம் பிரிவு துணை கமாண்டர் ஜோக்ராஜூக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

22 சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை(டிச.,21) நடைபெறுகிறது. இதனையொட்டி 3,300 போலீசார், 900 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், நாளை காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

23 நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் வெள்ளையரால் உருவாக்கப்பட்டு, இன்றைய நடைமுறையில் இருந்து வழக்கொழிந்துப்போன 245 சட்டங்களை ஒழிப்பதற்கு பாராளுமன்றம் மக்களவை ஒப்புதல் இன்று அளித்தது.

24 டில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

25 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.

26 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

27 ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

28 பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார். உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது

29 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

30 மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில், விஜிலென்ஸ் அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.

32 ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

33 இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து முதல்-மந்திரி வீரபத்ரசிங் ராஜினாமா செய்தார்.

34 மன்மோகன் சிங் மீதான சதிக்குற்றச்சாட்டு விவகாரத்தில், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. வெளிநடப்பும் செய்தது.

35 பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்

36 கிறிஸ்துமஸ் கொண்டாடினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, உ.பி., மாநிலம், அலிகாரில் உள்ள பள்ளிகளுக்கு, ஹிந்து அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

37 சென்னைக்கு சாய்கங்கை குடிநீரை பெறுவதற்கான பேச்சுவார்த்தை, ஆந்திராவில், நேற்று மீண்டும் துவங்கியது.

38 புதுடெல்லி: ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

39 வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

41 பசிபிக் பெருங்கடலோரம் தென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள சிலி நாட்டில் நேற்று 5.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

42 கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் பதில் அளித்தார்.

43 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

44 கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா படகு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

45 இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று(டிச.,20) நடைபெறுகிறது.

46 இலக்கியத்திற்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருதுகள் நாளை (டிச.,21) அறிவிக்கப்படுகின்றன.

47 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 382 கனஅடியில் இருந்து 235 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 74.34 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 36.54 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 9000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

48 தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவாயு திட்டமோ செயல்படுத்தப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.

49 மாநிலம் முழுவதும் வேளாண் விளை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உயர்தர பாதுகாப்பு பெட்டக வசதி (ஹைடெக் சேப்டி லாக்கர் ஸ்பெஷாலிட்டி) அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

50 சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

51 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

52 ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க கோரி, சென்னை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த, 302 புகார் மனுக்கள், விசாரணை கமிஷனுக்கு மாற்றப்பட்டன.

53 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.

54 2016-17-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது

55 சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

56 இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

57 மூணாறில் முதன்முறையாக குளிர் கால மலர் கண்காட்சி இன்று துவங்கி ஜன. 10 வரை நடக்க உள்ளது.

58 கார்கள், இருசக்கர வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கப்படும் தடுப்புக் கம்பிகள் பொறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

59 தமிழகத்தில், 'பிட் காயின்' எனப்படும், 'டிஜிட்டல்' நாணயங்கள் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள சிலரிடம், வருமான வரித்துறை, விசாரணையை துவக்கி உள்ளது. சிலரை, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளது.

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!


அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

🌻ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது

2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.

🍊 வட்டி வீதம்:
🌻கடன் தொகையில்
முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
🌻இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

🍊கடன் வரம்பு:

🌻அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000.

🌻கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம்.

🌻 அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

🍊யாரெல்லாம் கடன் பெறலாம்?:

🌻சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

🍊கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

🍊விண்ணப்பம்:

🌻வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

* மனை வரைபடம்

* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )

* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

🍊கடன் ஏற்பளிப்பு:

🌻மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.

🌻முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

🌻இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.

🌻ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

🍊கடன் பிடித்தம்:

🌻ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.

🌻 இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.

🌻இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

🍊காப்பீடு:

🌻வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
 🍎சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

🌻வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும்.

🌻 கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்

செவ்வாய், 19 டிசம்பர், 2017

சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை? எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்


சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை? எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்?


சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை எனக்கு தெரிந்த வரை கணித்துள்ளேன்..நன்மை நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
சனி பகவான்
வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 12 ராசிகளுக்கான பலன்கள், எந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

*மேஷம் அதிர்ஷ்டம்*

மேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.

அஷ்டம சனி முடிவதால் இதுவரை இருந்து வந்த தொழில் தடைகள் விலகும். பணப்பிரச்சினைகள் தீர்ந்து கடன் பிரச்சினைகள் தீரும். மருத்துவ செலவினங்கள் குறையும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சீரடையும். புதிய முயற்சிகள் முதலீடுகள் ஜாதகத்தில் தசாபுத்தி ஒத்து வந்தால் இனி செய்யலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் புதிய பொருள்கள் வாங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும்,பெண்களால் லாபம்,மகிழ்ச்சி உண்டாகும்.

*ரிஷபம் உஷார்*

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. பண விரயம், கடன்,கெட்ட செலவு அதிகம் தருவது அஷ்டம சனி.

ரிஷபம் ராசியினருக்கு சனி யோகாதிபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை. ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம்,நெருங்கிய உறவுகளை இழத்தல்,உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை,பொருள் காணாமல் போதல்,தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும். வருமானம் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருக்கும். புதிய முதலீடு செய்தால் திரும்பி வருதல் கடினம். கவனமாக முதலீடு செய்தல் நல்லது.

அஷ்டம சனி நல்லது செய்யாதா..? இல்லைங்களே.சனி என்பது இருள் கிரகம்.குரு போல ஒளி கிரகம் அல்ல.சனி வறுமையை தருபவர்.மனதை குழப்பி தெளிவான முடிவெடுக்க முடியாமல் செய்து ,உணர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வைப்பவர்.

சனி என்பது தொழில் கிரகம். அவர் நம் ராசிக்கு மறைகிறார். உழைப்புக்கு காரகம். உடல் ஆரோக்கியம் குறையும். உடல் பலம்,மன பலம் குறையும். தந்தைக்கு 12ல் மறைகிறார் தந்தைக்கு ஆயுள் பாவம் கெடுகிறது.பரிகாரம்

சனிக்கிழமை அனுமனை வழிபடுங்க. நவகிரகங்களை வழிபடுங்க. காக்கைக்கு சாதம் வைங்க.உஷாரா இருங்க..ராசிக்கு குரு பலம் இருக்கு. அதனால் இப்போது பாதகம் இல்லை. ஆகஸ்ட் மாதம் குரு ராசிக்கு ஆறில் ருணம்,ரோகம் என மாறுவார். அப்போதுதான் அதிக சிரமம் தரும்.

*மிதுனம் கண்டசனி*

மிதுனம் ராசியினருக்கு 7ல் சனி வருகிறார். இது நல்லதுதான். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.கூட்டாளிகளால் லாபம் உண்டாகும். தொழில் வளம் அடையும்.பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வியாபாரத்தில் புதிய யுத்துடம் இரு மடங்கு லாபம் காண்பீர்கள். பதவி உயர்வு கிடக்கும். 7ல் சனி என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானத்துக்கு சனி வருவது. எனவே குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும். எட்டுக்கு 12ல் சனி மறைவதால் சிறுநீரகம்,கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார். சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்வர்.

*கடகம் - பொன்னான காலம்*

கடக ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். எதிரி ஒழிந்தான். கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது. அடிச்சது லக் என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும் .பெண்களால் யோகம் வரும். பணம் எவ்வளவு வந்தாலும் தானம்,தர்மம் செய்து விடும் பொன்னான மனம் கொண்டவரே, சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். சனி நல்லது செய்வார். புதிய முயற்சிகள்,முதலீடுகள் துணிந்து செய்யலாம். எதிரிகளை வெல்லலாம்.வெற்றிகள் குவியும்.திசாபுத்தி நன்றாக இருந்தால் இது அப்படியே நடக்கும்.

*சிம்மம் - புண்ணியசனி*

சிம்மம் ராசியினருக்கு புண்ணிய சனி ஆரம்பிக்கிறது. கண்டக சனியில் இருந்து தப்பி விட்டீர்கள். இனி அலைச்சல் இருக்காது.மருத்துவ செலவுகள் இருக்காது.பணவிரயம் குறைந்து சேமிப்பு அதிகமாகும். ஐந்தாமிட சனி அத்தை,மாமன் வர்க்க பகை உண்டாக்கும். குழந்தைகள் சம்பந்தமான கவலைகள் ஏற்படும். அவர்களால் விரய செலவும் காணப்படும். சிலர் மனைவி, குழந்தைகளை பிரிந்து தொழிலுக்காக வெளியூர் ,வெளிநாடு செல்ல நேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தாத்தா வகையில் பகை,குலதெய்வ கோயில் பங்காளி வகையில் பகை,பூர்வீக சொத்து சார்ந்த சங்கடம்,தடங்கல்,சிக்கல் உண்டாகும்.

*கன்னி ராசி - கண்டக சனி*

கன்னி ராசியினருக்கு கண்டக சனி ஆரம்பிக்கிறது.நாலில் சனி நாய்படாத பாடு என சொல்வார்கள் . அலைச்சலைதான் அப்படி சொல்லி இருக்கிறார்கள் . நார்கால் பிராணிகளிடம் கவனம் தேவை. வாகனத்தில் கவனம் தேவை. வாகனத்தால் செலவு உண்டு. தாய்க்கு பாதிப்பை தரும் சொத்து சம்பந்தமான தடங்கல்கள்,பிரச்சினைகள் தரும். உடலை கவனித்துக்கொள்ளுங்கள். மருத்துவ செலவு ஒன்று காத்திருக்கிறது. இடம் மாறுதல், ஊர்மாறுதல்,வீடு மாறுதல்,கம்பெனி மாறுதல் உண்டாகும். தாய் வழியில் பகை உண்டாக்கும். வெளிநாடு சிலர் செல்வர். சிலர் வேறு நாடு,வேறு மாநிலம் மாறுதல் செய்வர்.பரிகாரம்

உடல் ஊனமுற்றோர்க்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் உணவு,செருப்பு,ஊன்றுகோல் வாங்கி கொடுங்கள்.

*துலாம் ராசி - ஏழரை முடிவு*

துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முழுவதும் முடிகிறது. இனி மகிழ்ச்சிதானே.. ஏழு வருசமா பட்ட பாடுக்கு சனி பதில் சொல்ல மாட்டார். அவர் கடமை முடிந்து கிளம்பிவிட்டார். பெற்ற அனுபவங்கள், பாடங்கள் உங்கள் வாழ்வை இனி நீங்கள்தான் இனிமையாக்கிக்கொள்ள வேண்டும்.
வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக அணுகுவதுதான் உங்கள் பாணி. இனி கொண்டாட்டம் அதிகரிக்கும்படி நல்ல செய்திகள் தேடி வரும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தன லாபம் அதிகரிக்கும். கடவுளையே நம்பி இருப்பது உங்க பாணி அல்ல. சிறிது உழைப்பு அதிக லாபம் கொண்டவர். இனி தொழில் படிப்படியாக முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் ,முதலீடுகள் செய்யலாம். ஜாதகத்தில் திசாபுத்திக்கேற்றவாறு முன்னேற்றம் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்,புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு சீரமைப்பீர்கள்.

*விருச்சிகம் - காலில் பிரச்சினை*

விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது. பாத சனி தொடங்குகிறது.
பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும்.பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும். பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நீங்கதான் அதிகம் வெளிப்படுத்துவீங்க. முகத்தை சோர்வாக வைத்திருப்பது,அதிக கவலை,முகம் சுளித்தல் இவற்றை தவிர்க்கவும்.

_*பரிகாரம்*_

மந்திரங்கள் படிங்க, போதும். தூரமா இருக்குற கோயிலுக்கெல்லாம் கஷ்டப்பட்டு போய் வழிபட்டாதான் பிரச்சினை தீரும் என கிளம்பி போய் காலை உடைத்துக்கொண்டவர்கள்தான் அதிகம். ஏற்கனவே ஏகப்பட்ட வழிபாடுகளை செய்துட்டுதான் இருக்கீங்க. அப்படியே மனுசாளையும் கொஞ்சம் வழிபடுங்க எந்த பிரச்சினையும் வராது.

*தனுசு - ஜென்ம சனி*

ராசியினருக்கு ஜென்ம சனி வருகிறது..சந்திரனும் சனியும் இங்கு ஒன்று சேர்கிறது.மனதில் இருள் புகுந்தால் என்னாகும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு, தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு. சனியும் சந்திரனும் சேரும் போது சந்திரன் உடல் காரகன் என்பதால் இனி உடலும் ஒத்துழைக்காது.சோம்பல் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் கெடும்.எனவே கவனமாக செயல்படுங்கள். இது பொதுவாக சொன்னதுதான்.பயப்பட வேண்டாம். எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். நான்காம் அதிபதி சுபர் இருந்து, கெடாமல் இருந்தால் பெரிதாக பாதிக்காது.

உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம்.

நெருப்பால் கண்டம் இருக்கு. அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை. குடும்பத்தில் விண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறைஅலசியபின் செயல்படுத்துங்கள்.

*மகரம் - விரயசனி*

மகரம் ராசியினருக்கு விரய சனி எனும் ஏழரை சனி ஆரம்பிக்கிறது. ராசிக்கு 12ல் சனி வருவது தொழில் முடக்கம்,நஷ்டத்தை தரும் என முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு , கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாகவருகிறது. அலுவலகத்திலும்,வீட்டிலும் செல்வாக்கு குறைகிறது. தவறுகள் அதிகமாகின்றன. சிலர் தூரமான ஊர்களுக்கு தொழிலுக்காக செல்வர். அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

*கும்பம் - லாபசனி*

கும்பம் ராசியினருக்கு லாப சனி ஆரம்பிக்கிறது.....தன லாபம், வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால், உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பதவி உயர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சேமிப்பு உயரும். பெண்களால் லாபம். அண்ணனுக்கு, பாட்டிக்கு பாதிப்பு. வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.

*மீனம் - கர்ம சனி*

மீனம் ராசியினருக்கு கர்ம சனி ஆரம்பிக்கிறது. பத்தில் சனி தொழிலில் இடைஞ்சல்.உறவினர்களுக்கு கர்மகாரியம். பங்காளி வகையில் இழப்பு. தொழிலில் லாபம்.வருமான உயர்வு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில்

சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.



சனிப்பெயர்ச்சியால் யோகம் அடையக்கூடிய இராசிக்காரர்கள் :

தற்போது நடைபெறுகின்ற சனிப்பெயர்ச்சியில் மேஷம், கடகம், சிம்மம், துலாம், கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது அனைத்து செல்வ செழிப்புகளையும் வாரி வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தப் போகிறது.

பரிகாரத்தின் மூலம் பலன் அடையும் இராசிக்காரர்கள் :

ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய இராசிக்காரர்கள் பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த சனிப்பெயர்ச்சியில் பலன்களை பெறலாம்.

சனிப்பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு திருமண யோகம்?

மேஷம், சிம்மம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் திருமணம் யோகம் உண்டு.                  என்றும்  இறைபணியில் ஜோதிடர் சிவராமகிருஷ்ணன்  கோடம்பாக்கம்

திங்கள், 18 டிசம்பர், 2017

குஜராத் தேர்தல் 2017: பச்சை டீ-ஷர்ட்..கருப்பு ட்ரவுசர்...ஸ்போர்ட்ஸ் ஷூ.. - ஜிக்னேஷ் மெவானி ஜெயித்த பின்னணி



குஜராத் தேர்தல் 2017: பச்சை டீ-ஷர்ட்..கருப்பு ட்ரவுசர்...ஸ்போர்ட்ஸ் ஷூ.. - ஜிக்னேஷ் மெவானி ஜெயித்த பின்னணி!

 ஐஷ்வர்யா

மொத்தம் 63.41 சதவிகித வாக்குப்பதிவு, நோட்டாவுக்கு வாக்களித்த 2 லட்சம் வேட்பாளர்கள் எனப் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தல். ‘பி.ஜே.பி-யின் கோட்டை’ குஜராத் எனப்பட்டாலும்,  2012 தேர்தலில் வெற்றிபெற்ற 119 இடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை வெற்றிச் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. பி.ஜே.பி-யின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்தாம்  அவர்களின் இந்தச் சிறுசறுக்கலுக்குக் காரணமாக இருக்கும் என்று ஊகிக்கலாம். ஆனால், இந்தமுறை தேர்தலில் களமிறக்கப்பட்ட காங்கிரஸின் அல்பேஷ் தாகூர், சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மெவானி மற்றும் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் ஆகியோர்களின் பங்கு இதில் அதிகம். ஹர்திக் பட்டேல் தோல்வியைத் தழுவினாலும் அல்பேஷ் தாகூரும் ஜிக்னேஷ் மெவானியும் வெற்றியடைந்துள்ளார்கள். குறிப்பாகச் சுயேச்சை வேட்பாளரான ஜிக்னேஷ் மெவானி 63,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றிபெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளர் என்பதைக் கடந்து ஜிக்னேஷ் மெவானிக்குப் பல சுவாரஸ்ய முகங்கள் உண்டு. ஊடகங்களும் மற்ற அரசியல்வாதிகளும் விமர்சிப்பதற்கு இடமளிக்காமல், “நான் ரொமான்டிக், கவிஞன் கூடவே கொஞ்சம் படாடோபக்காரன்” எனத் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்டவர்.

சரி, இதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது? இது மட்டுமே சுவாரஸ்யம் இல்லை. 2017 தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டவரின் பிரசார யுக்தியே மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.

பார்த்தாலே மதிப்பை ஏற்படுத்தும் வெள்ளைக் குர்தா, அதற்கேற்ப கம்பீரமான ஒரு குஜராத்தி வகையறா முண்டாசு என வலம்வந்து வாக்குச் சேகரித்த வேட்பாளர்களிடையே, பச்சை கலர் ஷர்ட், அதற்கு ஏற்றது மாதிரி ஒரு கறுப்பு ட்ரவுசர், காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன் தான் போட்டியிட்ட வத்காம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மெவானி போட்டியிடுகிறார் என்பதற்காகவே அந்தத் தொகுதியில் தனது வேட்பாளர்களை அறிவிக்காமல் விட்டுக்கொடுத்தது காங்கிரஸ் தரப்பு. தேர்தல் நடந்த அன்று... மெவானிக்கு எதிராகச் செயல்பட்ட எதிர்தரப்பு, வாக்களிக்கும் இயந்திரத்தில் அவரது சின்னமான தையல் இயந்திரத்திலும் அவரது புகைப்படத்தின்மீதும் மை ஊற்றி இருந்தது. “இத்தனைக்கும் இயந்திரத்தைச் சுத்தப்படுத்தித்தானே வைத்திருந்தேன். எப்படி மை வந்தது” என்று கேள்வி எழுப்பினார் தேர்தல் அதிகாரி. ஆனால், அதற்குள் 700-க்கும் மேற்பட்ட வாக்குகள் அங்கே பதிவாகி இருந்தன. அதனால் தற்காலிகமாக அங்கே தேர்தலும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 2.42 லட்சம் மக்களுடைய இந்த வத்காம் தொகுதியில் 74,000 இஸ்லாமியர்களும், 42,000 தலித்களும் அடங்குவர். தேர்தல் நிறுத்தப்பட்ட சிலமணி நேரங்களில்கூட அங்கே குழுமியிருந்த வாக்காளர்கள், “இயந்திரத்தில் ஜிக்னேஷின் முகத்தின்மீது மை பூசப்பட்டிருப்பது அவருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கம். இவர்கள் நேர்மையாகத் தேர்தலை நடத்தட்டும். நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கே காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டனர். மக்கள் இப்படி வெளிப்படையாகவே ஜிக்னேஷுக்கு ஆதரவளிக்க... அங்கே காங்கிரஸ் இளைஞர்களும் சேர்ந்து தீவிரமாக அவருக்காக வாக்குச் சேகரித்தார்கள் என்பதும் ஒரு காரணம்.

காங்கிரஸ் சொன்னால் அங்கே வத்காம் தொகுதி மக்கள் கேட்பார்களா என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம்? உண்மையில், வத்காம் காங்கிரஸின் பாதுகாப்பான தொகுதி எனலாம். கடந்த முறையும், அதற்கு முந்தைய 2007 தேர்தலிலும் காங்கிரஸ் மட்டுமே அங்கு வெற்றிபெற்றும் வந்திருக்கிறது. தனது வெற்றித் தொகுதியை விட்டுக்கொடுத்த காங்கிரஸ், அதோடு மட்டுமல்லாமல் அங்கே ஜிக்னேஷ் மெவானி போட்டி அறிவிப்புக்கு முன்பாகவே அவருக்கான பிரசாரத்தைத் தொடங்கியிருந்தது. இந்த பலம்தான், ‘தேர்தலில் போட்டியிடவே மாட்டேன்’ என்று அறிவித்த ஜிக்னேஷை, அங்கே போட்டியிட வைத்தது. தற்போது வெற்றியும் பெறவைத்திருக்கிறது.

‘ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்’ என்கிற ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ். 2016-ல் குஜராத் மாநிலம் உனாவில், இறந்த மாட்டை தோலுரித்ததற்காக நான்கு தலித் இளைஞர்களைப் பசுப் பாதுகாவலர்கள் சிலர் கட்டிவைத்து இரும்புக் கம்பியாலும் மாட்டை அடிக்கும் சாட்டையாலும் தாக்கினார்கள். சமூக வலைதளம் எங்கும் பரவிய அந்தச் சம்பவத்தின் வீடியோவால் நாடெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்துதான் ஜிக்னேஷ் மெவானி 20,000 தலித் இளைஞர்கள் புடைசூழ அகமதாபாத்திலிருந்து உனாவுக்குப் பயணம் சென்றார். பசுத்தோல் உரிப்பதை பரம்பரைத் தொழிலாகச் செய்ய வேண்டாம் என்பதும் தலித்களுக்கு நில உரிமை வேண்டும் என்பதும் அந்தப் பயணத்தின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்துதான் ஜிக்னேஷ் மக்களிடையே குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையே பெரிதும் பேசப்பட்டார்.

தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்கு முன்பு, ‘ஹஃபிங்டன் போஸ்ட்’ என்னும் ஆன்லைன் இதழுக்கு ஒரு சுவாரஸ்யப் பேட்டியை அளித்திருந்தார் ஜிக்னேஷ் மெவானி, அதில்.. “ 18-ம் தேதி அறிவிக்கப்படும் முடிவுகள் எனக்கு ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் மாறலாம். நான் ஜெயிக்கும் நிலையில், எனது தொகுதியிலிருந்து எண்ணற்ற இளைஞர்களைச் சமூகப் பணிகளுக்காக ஈடுபடுத்த முடியும். இவர்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பினால் அதைச் செய்வார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை நான் தோற்றால், வீதியில் இறங்கி மீண்டும் மக்களுக்காக எனது பணியைத் தொடருவேன். ஏனென்றால் அரசியல் என்பது வெறும் தேர்தலோடு நின்றுவிடுவதில்லை” என்றார்.

“தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்” என்று அந்த நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்குத் தேவை 160 தலித் இளைஞர்கள். அவர்களது வாழ்நாளில் வெறும் 15 நாள்களை மட்டும் எனக்காகச் செலவிடச் சொல்வேன். அந்த 15 நாள்களில் அவர்கள் என் தொகுதியில் இருக்கும் 160 நகராட்சிகளுக்குச் செல்லச் சொல்வேன். இந்த நகராட்சிகளில் இருக்கும் அத்தனை துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளம்கூட மறுக்கப்படுகிறது. இந்த 160 இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவேன். எனது திட்டத்தில் நான்கில் ஒருபகுதி வெற்றியடையும் சூழலில்கூடக் குறைந்தபட்சமாக 15,000 பணியாளர்களுக்குச் சரிவரச் சம்பளம் கிடைக்கும். மேலும் தலித் இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்காகவும், தலித்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தலித்களை முன்னேற்றுவதற்கும் உழைப்பேன். சட்டமன்றத்துக்குச் சென்று பேச வேண்டியவன் போராடலாமா என நீங்கள் கேட்கலாம். நான் 90 சதவிகித போராட்டவாதிதான்” என்றார்.

90 சதவிகித போராட்டவாதிக்கு வாழ்த்துகள்!

நன்றி விகடன்.

மாலை செய்திகள்18/12/17

மாலை செய்திகள்18/12/17 

தேர்தல் முடிவுகள் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடி மீது உள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளது; பாரதீய ஜனதா தலைவர்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை-தலைமைத் தேர்தல் ஆணையர்

இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரின் காவல் நீட்டிப்பு.

எத்தியோப்பியாவில் இரு பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த வன்முறை மோதலில் 61 பேர் வரை பலியாகியுள்ளனர்.

திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கவுண்டம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

குஜராத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக : குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை பட்டாசு வெடித்து பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்.

குஜராத் இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து.

குஜராத் , இமாசலபிரதேச வெற்றியை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தொகுதிக்கு 7 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்தது ஆர்கே.நகரில்தான் - தேர்தல் ஆணையம்.

ஆர்கே.நகர் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்.

குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வாழ்த்து.

இரு மாநில பாஜகவின் வெற்றி, தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - முக.ஸ்டாலின்.

தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.நேர்மையாக, நியாயமாக தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட பிரேம் குமார் துமல் தோல்வியடைந்துள்ளார். இதனால் அங்கு முதல்வர் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு ஓபிஎஸ் , ஈபிஎஸ் தான் காரணம் -முக.ஸ்டாலின்.

ஆர்கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்கும் - அமைச்சர் எஸ்பி.வேலுமணி.

குஜராத்தின் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலமைச்சர் விஜய் ரூபானி வெற்றி.

என்னை தோற்கடிக்க அதிமுக , பாஜக , தேர்தல் ஆணையம் கூட்டணி - டிடிவி.தினகரன்

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

நரேந்திர மோடி 3 முறை வென்ற மணிநகர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் பட்டேல் 75,199 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.

குஜராத், இமாச்சல் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றி : அதிமுக எம்பி மைத்ரேயன்.

ஆர்கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நேரடி ஒளிபரப்பு : தேர்தல் ஆணையம் தகவல்.

குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து சென்றார்.

சென்னை தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன், ஆர்கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரி விகரம் பத்ரா ஆலோசனை.

ஆர்கே.நகரில் இதுவரை 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ 30.48 லட்சம் பறிமுதல். ஆர்கே.நகரில் நாளை மாலை 5 மணிக்குள் வெளியூர்காரர்கள் வெளியேற்றப்படுவர் - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே.விஸ்வநாதன்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி கூறிய கருத்திற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாநிலங்களவையில் காங்கிரசார் அமளி - அவை நாளை வரை ஒத்திவைப்பு.

குஜராத்தில் 1.9 சதவீதம் வாக்குகள் பெற்று நோட்டா 4-ம் இடம்.

குஜராத் வத்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி.

காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை மக்கள் புறக்கணித்துள்ளனர் - உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

மும்பையில் சாகி நாகா பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் எதிரொலி : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் ஏறுமுகத்திற்கு திரும்பின.

சேலம் ஓமலூர் அருகே திண்டமங்கலத்தில் தூய்மை இந்தியா பேரணியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சிப் பதவிகளில் புதுமுகங்களுக்கு இடமளிக்கப்படும் - ராகுல் காந்தி.

மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குஜராத் தேர்தல் முடிவு காட்டுகிறது: சிவசேனா எம்.பி. கருத்து

விலங்குகளுக்கு ஆதரவான கொள்கைகளை பரப்பிவரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பீட்டா அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை டிசம்பர் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு : வழக்கு விசாரணைக்காக தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

30வது நினைவு நாளையொட்டி 24 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலரஞ்சலி - அதிமுக.

மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பும் நடக்கிறது.ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரஞ்சலி - அதிமுக.

போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க நவடிக்கை : பேருந்து கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் குழு பரிந்துரை.

குஜராத்தில் காங்கிரஸ் வாக்கு அதிகரித்துள்ளது: முதல்வர் நாராயணசாமி

உலகிலேயே அதிக விலை: ரூ.2 ஆயிரம் கோடிக்கு வீடு வாங்கிய சவுதி இளவரசர்

மொகாலியில் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சிலி நில சரிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி வெற்றி..

குஜராத் தேர்தல் மூலம் உருவாகிய இளம் தலைவர்கள்.



குஜராத் தேர்தல் மூலம் உருவாகிய இளம் தலைவர்கள்.

குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரைவிட 18,150 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி. தொடர்ச்சியாகத் தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குறிப்பாக பா.ஜ.க-வின் அரசியலை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் தொடர் பிரசாரம், பேரணி நடத்தினார்.

எந்த உனா நகரில் நான்கு தலித் மக்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதோ அதே ஊரை நோக்கி அகமதாபாத் நகரிலிருந்து பேரணியாகச் சென்று ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார், மேவானி. அரசியல் கட்சிகளின் கூட்டத்தை விஞ்சும்வகையில் அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

குஜராத்தில் தேர்தல் களத்தில் முதன் முறையாக களமிறங்கிய 24 வயதான ஹர்திக் படேல், தனது தீவிர பிரச்சாரம் மூலம் பட்டியல் இன தலைவரும், முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்த படியாக புகழ்பெற்று உள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு ஹர்திக் படேல் மற்றும் அவரது படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடுமையாக உழைத்தது.

இவர் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் தொகுதியிலேயே பொதுக்கூட்டம் நடத்தி பெரும் திரளான மக்களை கூட்டத்தை கூட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்.

மாநிலம் முழுவதும் படேல் இன மக்களை நேரில் சந்தித்து, தேர்தல் சமயத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர். இவர் ஹட்வா படேல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பட்டியல் துணை சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஆதரவு கோரினார். இதனால் ஹர்திக்கின் புகழ் பரவியது.

தனது பிரச்சாரத்தின் போது பாஜக ஹட்வா மற்றும் லேவா இன மக்களை பிரிக்க நினைக்கிறது. நமது வாக்குகளை பிரித்து, நம்மை அதிகாரமற்றவர்களாக ஆக்க நினைக்கிறது, அவர்களின் எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இது போல் பாரதீயஜனவுக்கு குடைச்சல் கொடுத்த அல்வேஷ் தாக்கூரும் வெற்றி பெற்று உள்ளார். காங்கிரஸ் சார்பில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவர் அல்பேஷ் தாக்கூர், 80 ஆயிரத்து 378 வாக்குகள் பெற்று வாகை சூடினார்.



ஞாயிறு, 17 டிசம்பர், 2017

புதிய ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்த 6 வயது சிறுவன்..


புதிய ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்த 6 வயது சிறுவன்..
         
*‘லெவிடிரோம்’ வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.*

*ஆச்சரியங்களை நிகழ்த்துவதற்கு வயது தடையில்லை என நிரூபித்திருக்கிறான் கனடாவைச் சேர்ந்த 6 வயது சிறுவனான லெவி பட்.*

ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும்போது வேறு வார்த்தை உருவானால் அதை குறிப்பிட்டுச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. (தமிழில் ‘விகடகவி’ என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்க) அதனைக் குறிப்பிடுவதற்கு ‘லெவிடிரோம்’ (levidrome) என்ற புதிய வார்த்தையை சிறுவன் லெவி பட் உருவாக்கி இருக்கிறான். இந்த வார்த்தை, stressed, desserts போன்ற திருப்பி எழுதினாலும் அர்த்தம் தரக்கூடிய ஆங்கில வார்த்தைகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும்.

லெவி தனது தாயுடன் காரில் சென்றபோது, நிறுத்தல் சமிக்ஞையுடன் stop என்ற வார்த்தையைப் பார்த்திருக்கிறான். அதன் எழுத்துகளை திருப்பிப் படித்தபோது pots என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது.

இப்படி, திருப்பிப் படித்தால் அர்த்தம் தரக்கூடிய சொற்களைக் குறிக்கும் வார்த்தை ஏதும் ஆங்கிலத்தில் இருக்கிறதா என்று தனது தாயிடம் கேட்டிருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த மாதிரியான வார்தைகளுக்கு ‘லெவிடிரோம்’ என்றே பெயர் சூட்டிவிட்டான் அச்சிறுவன்.

தற்போது இந்த வார்த்தையை மெர்ரியம்- வெப்ஸ்டர் ஆங்கில அகராதி அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது.

‘லெவிடிரோம்’ வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதற்கு, இந்த வார்த்தையை குறிப்பிட்ட காலத்துக்கு மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே தங்கள் அகராதியில் இடம்பெறச் செய்வோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

*ஆனால் சிறுவனின் கண்டுபிடிப்புக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வார்த்தை அகராதியில் இடம்பெறும் என்பதால், பலர் இதை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயலுகின்றனர். ஆக விரைவில், ‘லெவிடிரோம்’ ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.*


முக்கிய செய்திகள்@18/12/17

முக்கிய செய்திகள்@18/12/17

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி நாளை பார்வையிடுகிறார்

ஜெயலலிதா மர்ம மரணத்தில் முதல் குற்றவாளி ஓபிஎஸ்தான்; அப்போலோ ரெட்டி அதை உறுதி செய்திருக்கிறார்: ஸ்டாலின்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 22 ஆயிரம் பேர் பாதிப்பு - மத்திய அரசின் சுகாதாரத்துறை தகவல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கள், எதிர்கட்சி தலைவர்களுக்கு விருந்தளித்தார்

மத்திய அரசின் நிதி தீர்வு மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு - அருண் ஜெட்லிக்கு கடிதம்

பா.ஜனதா அரசை வெளியேற்ற கடைசி வரை போராடுவேன் - லாலு பிரசாத் யாதவ்

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்- வெங்கையா நாயுடு யோசனை

வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட உள்ளன

சென்னை: அமைந்தகரையில் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து

காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (டிச.18) விடுமுறை

கவர்னர் மீண்டும் அதிரடி; சேலத்தில் இன்று ஆலோசனை

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை பிரசாரம் ஓய்கிறது

கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லப் பிள்ளையாக இருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியை வளர்ப்புப் பிள்ளையாக கருதி பேணிப் பாதுகாப்போம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை ராகுல் நிறைவேற்றுவார்: அன்புமணி

டிச-18: பெட்ரோல் விலை ரூ. 71.70, டீசல் விலை ரூ.61.67

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

சனி, 16 டிசம்பர், 2017

ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது... உண்மையே !


ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது... உண்மையே !

'ஜெ., உடல் நிலை குறித்து, பொய்யான தகவல் சொன்னது உண்மையே' என, சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுப்பதற்காகவே, அவ்வாறு கூறியதாகவும், அவர் திடீர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெ., அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.முதல்வராக இருந்த ஜெ., 2016 செப்., 22ல், உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; விரைவில், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்' என, மருத்துவமனை சார்பில், அப்போது அறிக்கை வெளியிடப்பட்டது.அதை அனைவரும் நம்பினர்; ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.சந்தேகங்கள்'அவர் உடல் நலம் தேறி விட்டார்; இட்லி சாப்பிடுகிறார்; கிச்சடி சாப்பிடுகிறார்; நர்சுகளுடன் கலந்துரையாடினார்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்' என, பல தகவல்கள் வெளியாகின.
அமைச்சர்களும், ஜெ.,வை சந்தித்ததாக, பொய் கூறினர். ஆனால், ஜெ., வீடு திரும்பாமல், டிச., 5ல், மரணமடைந்தார்.இது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விடை காண, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் விசாரணையில், பல்வேறு உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன.
அமைச்சர்கள், 'ஜெ.,வை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை' என, 'பல்டி'அடித்தனர்.ஜெ., உடல் நிலையை கவனிக்க, அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், 'ஜெ.,வை சந்திக்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் சாட்சியம் அளித்தனர்.ஜெ., அண்ணன் மகன் தீபக், விசாரணை கமிஷனில், 'மருத்துவமனைக்கு ஜெ., கொண்டு வரப்பட்ட போது, சுய நினைவு இல்லாமல் இருந்தார்' என, தெரிவித்தார். அரசு தரப்பில் வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளும், அதை உறுதி செய்துள்ளன. இதெல்லாமே உண்மையே' என, ஓராண்டுக்கு பின், சென்னை, அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி ஒப்பு கொண்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் சென்னையில், நேற்று அளித்த பேட்டி:ஜெ., மரணம் தொடர்பாக, விசாரணை நடந்து வருவதால், அதைப் பற்றி பேச முடியாது. அவர், மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே, ஆபத்தான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார்.
மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவே, அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத்தர சிகிச்சை தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, உண்மையை கூற முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாகவே, மருத்துவமனை அறிக்கைகளில், உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றன.அதேநேரத்தில், அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, உலகத்தர சிகிச்சை அளிக்கப்பட்டது; ஆனாலும், நோயின் தீவிரத்தால், அவர், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனிடம் இருந்து, தற்போது வரை, எனக்கு, 'சம்மன்' வரவில்லை. என் மருத்துவமனை டாக்டர்களுக்கு, சம்மன் வழங்கப்பட்டது குறித்து, எனக்கு தெரியாது.
சம்மன் அளித்தா லும், எங்களுக்கு கவலையில்லை. எங்கள் தரப்பில், ஜெ., வுக்கு, சிறந்த முறை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். நடந்தது என்ன?
மருத்துவமனைக்கு வரும் போது, ஜெ., ஆபத் தான நிலையில் இருந்தார் என்றால், அவர் வசித்த, சென்னை,போயஸ் கார்டனில் அவருக்கு நிகழ்ந்தது என்ன என்ற, கேள்வி எழுந்துள்ளது.அத்துடன், அப்பல்லோ மருத்துவ மனை தவறான அறிக்கை வெளியிட வேண்டும் என, சசிகலாவும், அவரின் குடும்பத் தினரும் நிர்ப்பந்தம் செய்தனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, ஜெ., மரண விவகாரத்தில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள், விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி தினமலர்.