வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 15/12/17 !

பரபரப்பு செய்திகள் 15/12/17 !

அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் : கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லையான களியக்காவிளையில் நிறுத்தம்.

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு.

ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்.

முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

கடலூரில் ஆய்வின் போது குளிப்பதை பார்த்து விட்டதாக தமிழக ஆளுநர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்களின் சிகிச்சை அறிக்கை வந்துள்ளது.சுகாதார துறை செயலாளர் 2 அறிக்கைகளையும் கொடுத்துள்ளார்- ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்.

காணாமல் போன 700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற உள்ளேன் - நாளை காங். தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ள நிலையில் சோனியா காந்தி கருத்து.

மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டினால் விபரீத விளைவுகள் ஏற்படும் - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

ஆர்கே.நகர் சிறப்பு தேர்தல் அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமனம் - தேர்தல் ஆணையம்.

குஜராத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு.

2020ம் ஆண்டு முதல் மண்ணெண்ணெய் மானியத்தை முழுவதும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்து எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

உள்ளாட்சி தேர்தலில் இனி வேட்பு மனுக்களில் எதிர்ப்பு எழுந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும் - உள்ளாட்சி தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

காவல் ஆய்வாளர் துப்பாக்கி குண்டு பெரியபாண்டியனின் நுரையீரலில் பாய்ந்ததால் உடனடி மரணம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு – நாதுராம் கூட்டாளிகள் 4 பேர் கைது.

தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு, வாக்கு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்கிறது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு.

நான் முஸ்லீம்களின் கைக்கூலியாக பேசிவிட்டேன் என திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : ஹெச்.ராஜா.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இலவசமாக உயிர் பாதுகாப்பு கவசம் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு : மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கைது.

காவல் ஆய்வாளர் வீரன் பெரியபாண்டியன் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்.

ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைக்கவும் விற்கவும் வாங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை.

நடப்பாண்டில் செம்மரம் கடத்தியதாக 10,558 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்.

ஆளுநரின் செயல் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவது போல இருக்கிறது.இனி ஆளுநர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்றால் திமுகவுடன், காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் : திருநாவுக்கரசர்.

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராசன் மற்றும் பாஸ்கரனுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு : பிணைத்தொகை ரூ.25 லட்சம் செலுத்தினால் போதும், ம.நடராசன் சிறை செல்ல தேவையில்லை - உச்சநீதிமன்றம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விவரிவாக்கப்பணியின் போது ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு 3 பேர் படுகாயம்.

தொழில்நுட்ப கல்லூரி
விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு : தேர்வு எழுதிய 220 பேருக்கு அதிக மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு அம்பலம். முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வு வாரிய அதிகாரிகள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு.

ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்றும் வரை எனது போராட்டம் தொடரும்.எனது நீதி போராட்டத்துக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி - கவுசல்யா சங்கர் பேட்டி.

பிரம்மபுத்திரா நதி மாசு அடைந்து வருவது குறித்து சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா.

திருவண்ணாமலை : தென்அரசம்பட்டு பகுதியில் கார் மீது அரசு பேருந்து மோதியதில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி சண்முக சுந்தரம் உயிரிழந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 22 பேரை விசாரிக்க வேண்டும் : ஜெ.தீபா கணவர் மாதவன் கோரிக்கை.

திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி.

ராமநாதபுரம் : அனுமதியின்றி குண்டாறு ஆற்றில் மணல் அள்ளிய 3 டிப்பர் லாரி, 2 ஜேசிபி வாகனங்கள் பறிமுதல் 4 பேர் கைது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் ரூ.1 கோடி மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கலா மற்றும் உதயக்குமார் என்ற தம்பதி கைது.

திருச்சி: கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி ஸ்ரீரங்கத்தில் ரிக்‌ஷா ஓட்டுநர் தீக்குளிப்பு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமாவாசை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் குடும்பத்திடம் ரூ.1 லட்சம் நிதியை திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் நிதி வழங்கினார்.

கடலூரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி – ஆய்வுப் பணிகளில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம்.

ஆர்கே.நகரில் மொத்தம் 85 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன - மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்.

ஆர்கே.நகரில் இதுவரை 54 வழக்குகளில், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி உள்ளே வந்ததால் ஆவடி குமாரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது, பணம் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

ஒடிசாவில் நக்சலைட்டு சுட்டுக் கொலை: ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்.

கோவை : ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 8 பேரை, கோவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை.

வெளிநாட்டு செல்ஃபோன் டிவிக்கான சுங்கவரி இருமடங்கு உயர்வு.

ரசிகர் சந்திப்பில் அரசியலுக்கு வருவதை அறிவிக்கிறார் நடிகர் ரஜினி - தமிழருவி மணியன்.

மாமல்லபுரம் அருகே ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை.

ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் ஜனவரி 7 முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக