செவ்வாய், 26 டிசம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 26/12/17 !

பரபரப்பு செய்திகள் 26/12/17 !

புதிய உத்வேகத்துடன் திமுக தொடர்ந்து செயல்படும்.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை திமுகவிற்கே உண்டு.திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் எச்சரிக்கை செய்தி சென்று சேர்கின்ற தொழில்நுட்ப வசதியை அரசு உறுதி செய்ய வேண்டும் - டிடிவி.தினகரன்.

அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கிறேன் : நடிகர் ரஜினி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுக்கு டிடிவி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து.

விவசாய டிராக்டரை வணிக வாகனமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் : மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள்.

11ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் சி.பா.ஆதித்தனார் வரலாறு. ஊடக தமிழில் ஆதித்தனார் கொண்டு வந்த எழுத்துநடை பாட திட்டத்தில் இடம் பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து விசாரிக்க, விசாரணைக்குழுவை அமைத்தது திமுக.

ராமநாதபுரம் உப்பூரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அனல்மின் நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு : ஜனவரி 8 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனஎனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் - நடிகர் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வர வீரம் மட்டும் போதாது, வியூகமும் வேண்டும்.அரசியலின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன் போருக்கு சென்றால் ஜெயிக்கணும் - நடிகர் ரஜினிகாந்த்

குஜராத் மாநில பாஜக முதலமைச்சராக விஜய் ரூபானி பதவியேற்பு : விழாவில் பிரதமர் மோடி , அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் அரசியல் என்ன மணல் வீடு கட்டி மகிழும் விளையாட்டா? டிடிவி.தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கருத்து.

சுயேச்சை என கேலி செய்தவர்களுக்கு முன் டிடிவி.தினகரன் சுயம்பு என நிரூபித்திருக்கிறார் - நாஞ்சில் சம்பத்.

ஆர்கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி என்பது கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி - அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் தலைமை, தினகரன் தான் என்பதை ஆர்கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது - புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் பேட்டி.

ரசிகர்களிடம் வீரம் உள்ளது, ரஜினியிடம் வியூகம் உள்ளது.தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே காலம் தாழ்த்தி வந்தார் - நடிகர் ஜீவா.

ரஜினி எம்எல்ஏ ஆகலாம், முதல்வர் ஆகக்கூடாது : நடிகர் எஸ்வி.சேகர்.

டிடிவி.தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு - அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது, ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்க யார் வந்தாலும் வரவேற்போம் - தமிழிசை சௌந்தரராஜன்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புகிறேன், அவர் வரட்டும்.ரஜினி பாஜகவுக்கு பின்நின்று வருவார் என ஒரு யூகம் உள்ளது, அவ்வாறு இருந்தால் அது வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் - திருமாவளவன்.

ரஜினி அரசியலுக்கு வருவது, அவர் உடல்நலத்திற்கும், குடும்பத்திற்கும் நல்லதல்ல - அமைச்சர் ஓஎஸ்.மணியன்.

தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சர் தரப்புக்கு கிடையாது.விரைவில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தினகரனுடன் வந்து சேருவர் - நடிகர் செந்தில்.

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைப்பு.அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே பரபரப்பால் போலீஸ் குவிப்பு.

ஆருத்ரா தரிசனத்திற்காக ஜன-2ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

சுற்றுலா பயணிகளை கவர சர்வதேச விண்வெளியில் ஆடம்பர சொகுசு ஓட்டல்: ரஷியா கட்டுகிறது.

பெய்ஜிங் : ஒரே ராக்கெட் மூலம் மூன்று புவி நுண்ணுணர்வு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக