புதன், 6 டிசம்பர், 2017

இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்



இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்

இசையமைப்பாளர் ஆதித்யன் ஹைதராபாத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 63.
'அமரன்' திரைப்படம் தொடங்கி தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக வளர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி டைட்டஸ், இவருக்கு 2 மகள்கள். மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். ஆதித்யன் சென்னையில் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம் ஆதித்யன் இசையமைப்பில் வெற்றிப்படமாக அமைந்தது.
மேலும் தமிழில் 'நாளைய செய்தி', 'அசுரன்', 'மாமன் மகள்', 'லக்கிமேன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பல படங்கள் வெற்றிபெற்றன. முதன்முதலில் ரீமிக்ஸ் பாடல்களுக்கான விஷுவல் ஆல்பம் வெளியிட்ட இசையமைப்பாளரும் இவரே.
என்றாலும் சில நல்ல பாடல்களை இசையமைத்திருந்தும் அதற்கான திரைப்படங்கள் தோல்வியுறும்போது அப்பாடல்கள் மக்களிடம் செல்லமுடியாமல் போவதுகுறித்து அவருக்கு வருத்தம் இருந்தது. அதனாலேயே அவருக்கு வந்த பல வாய்ப்புகளையும் மறுத்துவந்தார்.
சிலகாலம் இசையமைப்பதிலிருந்து விலகியிருந்த ஆதித்யன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமானார்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது. நாளை மதியம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக