ஆர்.கே.நகரில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு... மீண்டும் உதயமாகிறது பிரமாண்ட கூட்டணி?
*ஆர்.கே.நகரில் திமுகவுக்கு மதிமுகவும் ஆதரவளித்துள்ளதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல், 2019 லோக்சபா தேர்தல்களுக்கு திமுக தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி உதயமாகக் கூடும் என தெரிகிறது.*
*ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. இங்கு சுயேட்சை வேட்பாளர்களாக தினகரன், தீபா மற்றும் நடிகர் விஷால் போட்டியிடுகின்றனர்.*
*திமுகவுக்கு ஆதரவு*
*அடுத்தடுத்து ஆதரவு*
*தேமுதிக, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் தரவில்லை.*
*திமுக வேட்பாளர் மருது கணேஷூக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தன.*
*இந்த வழக்கமான கூட்டணி கட்சிகள் அல்லாமல் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.*
*உயர்நிலை குழு கூட்டம்*
*மதிமுக நிலை அறிவிப்பு*
*இந்த நிலையில் சென்னையில் இன்று கூடிய மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆர்கே நகர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தபட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார்.*
*வைகோ விளக்கம்*
*அத்துடன் எதிர்காலத்தில் திமுகவுடனான கூட்டணி தொடருமான என்ற கேள்விக்கு, இது ஒரு தொடக்கப் புள்ளி எனவும் வைகோ கோட்டிட்டுக் காட்டியிருக்கிறார்*.
*ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் திமுக- மதிமுக கூட்டணி தொடரும் என்றே தெரிகிறது.*
*மெகா கூட்டணிஉருவாகிறது*
*பிரமாண்ட கூட்டணி*
*மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக திமுக ஏற்கனவே தேசிய அளவில் பிரமாண்ட கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது.*
*தமிழகத்திலும் பாஜக மற்றும் அதன் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவுக்கு எதிராக திமுக தலைமையில் மிகவும் வலுவான கூட்டணி உதயமாகிறது என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் சுட்டுக்காட்டுகின்றன.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக