பரபரப்பு செய்திகள் 11/12/17 !
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.
லட்சத்தீவில் தத்தளித்துக்கொண்டிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 180 பேர் கேரளா வந்தடைந்தனர்.
குமரியில் ஒகி புயலால் 1,408 ஹெக்டேர் ரப்பர் மரங்கள் சேதம் : வேளாண்மைத்துறை முதன்மை செயலர் தகவல்.
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாகிஸ்தான் சதி என்று பிரதமர் மோடி கூறியதற்கு மன்மோகன் கண்டனம்.
ஜெயலலிதா பிறந்தநாளன்று பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக டிசம்பர் 16-ம் தேதி பதவி ஏற்கிறார் ராகுல்காந்தி.நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராகும் 6-வது பிரமுகர் ராகுல் காந்தி.
மீனவர்களுக்கு ஆதரவாக நாளை சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க உள்ளேன் - முக.ஸ்டாலின்.
தலித்துகள் ஒட்டுமொத்தமாக பவுத்தமதத்தை தழுவிவோம் : ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு மாயாவதி எச்சரிக்கை.
பேனர், கட்அவுட்டுகளை அனுமதிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது : நீதிமன்றம்.
அரசியல் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது
பார் கவுன்சிலில் போட்டியிடுபவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் : இந்திய பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பரிந்துரை.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் : போலி வாக்காளர்களை நீக்கக் கோரிய வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது - பாஜக பிரமுகர் அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு.
மத்திய, மாநில அரசுகளின் மீனவர் விரோதப் போக்கை கண்டித்து டிச.13ல் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.
தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை செயலற்றுவிட்டது : பிஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு.
அதிமுக பணத்தை நம்பி இல்லை எம்ஜிஆர் , இரட்டை இலை சின்னம் தொண்டர்களை நம்பி உள்ளது கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் - அமைச்சர் ஜெயக்குமார்.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் சேதமடைந்த ரப்பர், வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்.
குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்.தேர்வு கட்டணம் ரூ.100 ஐ செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் : தேர்வாணையம் தகவல்.
இரட்டை இலை சின்னம் திருடர்கள் கையில் உள்ளது.அதிமுக கட்சியினரைப் போல காவல்துறை செயல்படக்கூடாது : டிடிவி.தினகரன்.
தமிழ் ராக்கர்ஸ் உட்பட சட்டவிரோதமாக திரைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் மூன்று இணைதளங்கள்மீது வழக்குப் பதிவு.
தேர்தல் நடந்தால் நியாயமாக நடைபெற வேண்டும், இல்லையேல் தேர்தல் நடத்துவது வீண் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின் தமிழிசை பேட்டி.
ஆர்கே.நகர் தொகுதியில் உள்ள மீனவர்களுக்கு 54 ஆயிரம் வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும் - அமைச்சர் எஸ்பி. வேலுமணி.
அமித்ஷா நினைத்தால் புதுச்சேரியில் இன்றே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும், ஏனெனில் காங்கிரசிலும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேச்சு.
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 2000க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
வட ஐரோப்பிய நாடுகளில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து.
தாயை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் உள்ள தஷ்வந்த் உயர்மட்ட பாதுகாப்பு அறைக்கு மாற்றம்.
மதுரை : இரயில்வே காலி பணி இடங்களை ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்க முயற்சிப்பதை கண்டித்து இந்திய ஐனநாயக வலிபர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
35 ஆண்டுகால தடைக்கு பின் சவூதி அரேபியாவில் திரைப்படங்களுக்கு அனுமதி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடைநீக்கம் ரத்து: பிசிசிஐயின் தலைவர் சிகே கண்ணா.
டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியை இந்தியாவுடன் விளையாடுகிறது - பிசிசிஐ.
நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா.
படிக்கும் காலத்தில் சில இயக்கங்களால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் மாணவி வளர்மதி - சென்னை உயர்நீதிமன்றம்.
முதற்கட்டமாக அரசு ஓமந்தூரார் தோட்டம் முதல் டிஎம்எஸ் வரையிலான 4 கி.மீ தூர மெட்ரோ ரயில் சுரங்க பணி நிறைவு - மெட்ரோ நிர்வாகம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் காந்திக்கு டிடிவி. தினகரன் வாழ்த்து.
இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையே கடும் மோதல் : தொடர் போராட்டத்தால் வளைகுடா நாடுகளில் பதற்றம்.
காஞ்சிபுரத்தில் மாணவி சரிகாவுக்கு பதிவு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் பிரேக் டவுன் ஆனதே தாமதத்திற்கு காரணம் - காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக