வெள்ளி, 8 டிசம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 08/12/17 !

பரபரப்பு  செய்திகள்  08/12/17 !

புயலால் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி தேங்காய்பட்டினம் சந்திப்பில் மீனவர்கள் மீண்டும் போராட்டம் : இனயம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தொடக்கப்பள்ளி, 9 நடுநிலை பள்ளி கட்டடங்கள் பாதிப்பு.14 கட்டடங்களில் பழுது நீக்கம், 13 கட்டடங்களில் பழுது நீக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது - தமிழக அரசு.

கன்னியாகுமரி: காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி குளச்சலில் நடந்து வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்.

ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு உதவி ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ10 இலட்சம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா கைரேகை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்.

வங்கிக்கணக்கு, செல்போன், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.

பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம்.

ஸ்மார்ட் கார்ட் இல்லையென்றாலும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் - உணவுத்துறை தகவல்.

குஜராத் அரசு சிறப்பாக செயல்படுவதால், அதனை நாங்கள் மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை இல்லைபொருளாதார வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது - அருண் ஜெட்லி.

நாடெங்கும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

இந்து கோவில்கள் தொடர்பான திருமாவளவனின் பேச்சு , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் - அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி.

இந்து கோவில்களை இடிக்குமாறு நான் பேசவில்லை - திருமாவளவன்.

மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட திருநங்கைகளை கான்ஸ்டபிள் பணிகளில் நியமிக்க சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் முடிவு.

சேகர் ரெட்டி டைரியில் பெயர் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

தான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை டைரி என்ற பெயரில் வெளியாகி உள்ள காகிதத்தில் இருப்பது தம் கையழுத்து அல்ல - சேகர்ரெட்டி பேட்டி.

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை முன்மொழியவில்லை : தீபன், சுமதி தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளித்த வீடியோ காட்சிகள் வெளியீடு.

ஆர்கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை செய்கையில் பாட்டில் வீசியதாக டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு.

ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு டிச. 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர் பிரதாப் ஆஜராக கால அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைப்பு.

வெளிமாநிலங்களில் உள்ள மீனவர்கள் தமிழகம் திரும்ப அவர்களின் தேவைக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.

என்னுடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்.ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என்னுடைய மனு நிராகரிப்புஆர்கே நகரில் எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி - நடிகர் விஷால்.

திருப்பதியில் வரும் ஜனவரி முதல் ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரு வி.ஐ.பி டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் - தேவஸ்தான இணை அதிகாரி அறிவிப்பு.

திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலை அபகரித்ததாக, நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினி மீது சிபிஐ முதற்கட்ட குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

சிறுமி ஹாசினி, தாயை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது.

சேலம் மேட்டுத்தெருவில் அசாருதீன் என்பவரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.

கடற்படை, கடலோர காவல்படை, விமானப் படைகள் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்.

கடலூர் : காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தை சந்தித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக