வியாழன், 14 டிசம்பர், 2017

பரபரப்பு செய்திகள் 14/12/17 !

பரபரப்பு செய்திகள்  14/12/17 !

இலங்கை சிறையில் உள்ள 120-ம் மேற்ப்பட்ட மீனவர்கள் முதல் கட்டமாக 16 மீனவர்களை விடுதலை செய்ய ஊர்காவல்துறை நீதிமன்றத்திற்கு இலங்கை அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள்.

ஒகி புயலால் 619 மீனவர்களை காணவில்லை என உள்துறை அமைச்சகம் தகவல் : ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒகி புயலில் சிக்கி 433 தமிழக மீனவர்கள் மாயமாகி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை அத்துமீறல் : 200-க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.

கேரளா சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு : குற்றவாளி அமீருல் இஸ்லாமிற்கு தூக்குத்தண்டனை வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவு.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மற்றும் காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சி தேவையான உதவிகளை செய்யும் - ராகுல் காந்தி.

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 69 பேரின் காவலை இன்று ஒரே நாளில் நீட்டித்து பருத்தித்துறை மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு : 38 மீனவர்களின் காவலை டிச.21 வரையும், 31 மீனவர்களின் காவலை டிச.26 வரையும் நீட்டித்து உத்தரவு.

ஒக்கி புயல் நிவாரணம் முழுமையாகச் சென்றடைவதை ஆராய தனிக்குழு – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலி பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகார மண்டபம் இடிந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை சாத்தப்பட்டது.

திருச்செந்தூர் கோயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

திருச்செந்தூர் கோயில் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆராயாமல் இருந்ததே விபத்திற்கு காரணம் - ரமேஷ் ஆலய வழிபடுவோர் சங்கம்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டபம் இடிந்து விழுந்த விபத்து : இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படா வண்ணம், கோவில்களில் கட்டட ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு செல்லாது என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயில் பிரகாரம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம்.காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணையை டிச. 21-க்கு ஒத்திவைத்தது டெல்லி கீழமை நீதிமன்றம்.

கோவை : சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியால் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு இல்லை : 13 மாவட்டங்களில் ரூ. 68 கோடியில் மீனவர்கள் வசதிக்காக வாக்கி டாக்கி டவர் மார்ச்சில் அமைக்கப்படும்நேற்று மட்டும் 35 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர் : அமைச்சர் ஜெயக்குமார்.

திருச்செந்தூர் கோயிலின் வெளிப்பிரகாரம் முழுவதும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் -இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரன்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி வழங்க வேண்டும் - திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

ஆர்கே.நகர் தொகுதியில் போதுமான அளவுக்கு சிஆர்பிஎஃப் வீரர்களை பணியமர்த்த கோரி திமுக வழக்கு - திங்கட்கிழமை விசாரணை.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் அவரது அண்ணன் மகன் தீபக் ஆஜர்.

கோவை ஏடிஎம் கொள்ளை வழக்கில் நாமக்கல் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது : கீரம்பூர் அருகே நிற்காமல் சென்ற கொள்ளையர்கள் காரை போலீசார் விரட்டி சென்று கைது செய்தனர்.

பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

குஜராத் சட்டசபைக்கான 2ம் கட்ட தேர்தலில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காந்திநகரில் வாக்களித்தார்.

குஜராத் தேர்தல் பணிகள் இருந்ததால் தாமதமாக வந்ததற்கு மீனவர்களிடம் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி : சின்னத்துறை பகுதியில் புயல் பாதிப்புகள் குறித்து ராகுல் காந்தி ஆய்வு : மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார் ராகுல் காந்தி.

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஜாதி மத மோதல்களை உண்டாக்க முயற்சிக்கிறார் திருமாவளவன் - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.

தேன்கனிக்கோட்டை அருகே வட்டவடிவு பாறை பகுதியில் முகாமிட்டிருந்த 70 யானைகளை, நொகனூர் காட்டிற்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கோவை : பூச்சியூர் ஹைடெக் நகர் பகுதிக்குள் காட்டுயானைகள் வருவதை தடுக்க சுஜய் என்ற கும்கி யானை நிறுத்திவைப்பு.

பிரம்மபுத்திரா நதிநீர் திடீரென கருமையாக மாற காரணம் என்ன? ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவு.

சென்னை பெரம்பூர் ரயில்வே குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை : ரயில்வே அதிகாரிகள் அரசு தங்களுக்கு ஒதுக்கிய வீடுகளை உள்வாடகை விட்டதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை : மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சம்.

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ஸ்ரீதர் தற்கொலை.

ஆந்திராவின் புதிய தலைமைச்செயலக வரைபடம் இயக்குநர் ராஜமௌலி யோசனைப்படி தயாரிப்பு.

தேர்தல் ஆணையம் கண்ணில் மண்னை தூவி நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக மற்றும் தினகரன் தரப்பினர் மீது வைகோ குற்றச்சாட்டு.

ராயபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட குக்கர் கடையில் மாநில விற்பனை வரி அதிகாரிகள் ஆய்வு : டோக்கன் மூலம் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை.

ஆர்கே.நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு உள்ளூர் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை : பணியாளர்கள் வாக்களிக்க வசதியாக விடுமுறை அறிவித்து தொழிலாளர் துறை உத்தரவு.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டிச.26 முதல் டிச.31 வரை, ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சந்திப்பு : தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க ரஜினிகாந்த் முடிவு.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் டிசம்பர் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மழைக்கு வாய்ப்பில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக