வெள்ளி, 1 டிசம்பர், 2017

ஓகி என்னும் அழகி....



ஓகி என்னும் அழகி....

கடலோடு பயணித்த அவளுக்கு திடீரென குமரி மீது காதல்...

எட்டி நின்று கொஞ்சம் பார்த்து ரசித்தாள்
கை தட்டி ஒரு முறை அழைத்துப் பார்த்தாள்

பார்த்தவளுக்கோ அத்தனை ஆச்சர்யம்
இயற்கையின் மொத்த சொந்தங்களையும் கண்டு குதூகலித்தாள்

ஒடினாள்!!! ஆடினாள் !!!

கண்ட மரங்களை எல்லாம் கட்டி அணைத்தாள்
கையதில் தூக்கி கன்னம் முத்தமிட்டாள்

ஆனந்தக்காற்றை வேகமாய் வீச செய்தாள்
வீதிகளில் இலைகளை வாறித் தூவினாள்...

இன்னும் கொஞ்சம் பெய்து விட்டு போ என
மழையிடம் முறையிட்டுக் கொண்டாள்

மாலை வரை ஆடி விட்டு மயங்கிச் சரிந்தவள்
மேற்கு நோக்கி மெல்ல நகரத் தொடங்கினாள்

நிச்சயம் நாளை இந்நேரம் கதகளி கற்று இருப்பாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக