வெள்ளி, 8 டிசம்பர், 2017

🚨பரபரப்பு🚨செய்திகள்🚨07/12/17 !

ஓகி புயலால் உயிரிழந்தவர்களின் மீனவ
குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை
ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியது கேரள அரசு.

கன்னியாகுமரி: காணாமல்போன மீனவர்களை மீட்க கோரி குழித்துறையில் கொட்டும் மழையிலும் 8 கிராமங்களைச் சேர்ந்த 5,000 க்கும் அதிகமான மீனவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்.

கன்னியாகுமரி மீனவர்களின் தொடர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை.ஆலோசனையில் மீன்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பங்கேற்பு.

குளச்சலில் தமிழக ஆளுநரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் : பயணத்தை பாதியில் கைவிட்டு குமரிக்கு திரும்பினார்.

தமிழக முதலமைச்சர் வரும்வரை குழித்துறை ரயில் நிலையத்தில் போராட்டம் தொடரும் - மீனவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர்கள் சேதம் குறித்து அறிக்கை தர அதிகாரிகளுக்கு தமிழக ஆளுநர் உத்தரவு.

அரசு திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணை.

வங்கிகணக்கு, பான் எண், கைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படும் - மத்திய அரசு.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு பரோல் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் நளினி பதில் மனு தாக்கல்.

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை அங்கீகரித்து, ஜெயலலிதா 20 இடங்களில் பதிவுசெய்த கைரேகையையும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் - திமுக சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு.

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது சிபிஐ நீதிமன்றம்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி செய்துள்ளனர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஜெ.தீபா புகார்.

கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா, சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்.

பிரதமர் நரேந்திர மோடியை தரம்தாழ்த்தி விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மணிசங்கர் அய்யருக்கு, ராகுல்காந்தி வலியுறுத்தல்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் : நமது கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு தொப்பி சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் : டிடிவி.தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் - திவாகரன்

ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை லண்டன், எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர். தொடக்கத்தில் அவர் இட்லி எல்லாம் சாப்பிடவில்லை; பல நாட்கள் திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொண்டார் - மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்திடம் தகவல்.

சீமான் - திருமுருகன் காந்தி சொந்த அடையாளத்தை மறைப்பது ஏன் ? - எஸ்வி.சேகர் கேள்வி.

வைகை ஆற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு.

இரட்டை இலை ஒதுக்க எதிர்ப்பு :
மதுசூதனனின் படிவம் B-ல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 2 பேர் கையெழுத்திட்டதால், இரட்டை இலை சின்னம் ஒதுக்க தினகரன் தரப்பு எதிர்ப்பு.

அண்மைக்காலமாக வழக்கறிஞர்கள் குரலை உயர்த்தி வாதிடுகின்றனர், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல, இது குறித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா.

ஆட்சி மாற்றத்துக்கான முன்னோட்டம் ஆர்.கே.நகரில் தொடங்க வேண்டும் - திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

சிறந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் தாஜ்மகாலுக்கு 2வது இடம்.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பழனிசாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்களிடம் கொடிநாள் நிதியை வழங்கினார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் ஒதுக்கும்படி டி.டி.வி.தினகரன் உட்பட 29 பேர் கோரிக்கை.குலுக்கல் முறையில் தேர்வாகும் ஒருவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்படும் : தலைமை தேர்தல் அதிகாரி.

நாச்சியார் படத்தில் ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர வேண்டும் : வழக்கு தொடர்ந்த இந்திய குடியரசுகட்சியின் தலித் பாண்டியனுக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

நடிகை ஜோதிகா, இயக்குநர் பாலா மீது நடவடிக்கை கோரிய வழக்கு ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்கே.நகர் தொகுதியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை - நடிகர் விஷால்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்.

மதுரை ஆதீனம் மடத்திற்கு நித்யானந்தா நுழைய விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் : வழக்கின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி வழங்கப்படும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .

பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு : ஏலியன்கள் இருக்க வாய்ப்பு என அறிவியலாளர்கள் கணிப்பு.

ஆர்கே.நகர் : காசிமேட்டில் அஇஅதிமுக தேர்தல் பணிமனையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் என்ற பெயரில் 4 வேட்பாளர்களும் , அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பெயரில் 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதிக்கு பிறகு தனியார் பேருந்துகளில் தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு சாதனங்களை பயன்படுத்துவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டிசம்பர் 20ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலாகிருஷ்ணனுக்கு சம்மன்.

இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - ஆட்சியர் வீரராகவராவ்.

காணாமல் போன தீபன், சுமதி ஆகிய 2 பேரையும் கண்டுபிடித்து தரவேண்டும்.தீபன், சுமதி ஆகியோரை தொடர்புகொள்ள இயலவில்லைநான் தேர்தலில் போட்டியிடுவதைவிட அவர்களின் பாதுகாப்பே முக்கியம் - நடிகர் விஷால்.

அதிமுகவினர் பயப்படுவதற்கு விஷால் என்ன சூரப்புலியா ? பாம்பையே கையில் பிடிக்கும் தைரியம் அதிமுகவிற்கு உண்டு எங்களிடம் சொன்னால் விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

கன்னியாகுமரியில் 2 நாட்களுக்குள் முழு மின் விநியோகம் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி.

குமரி மாவட்டம் குழித்துறையில் 3 மணிநேரத்திற்கும் மேல் மீனவர்கள் போராட்டம் நடத்திவருவதால் திருச்சி - திருவனந்தபுரம் வரை செல்லும் பயணிகள் ரயில்சேவை நிறுத்தம்.

குழித்துறையில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் எதிரொலியாக, கன்னியாகுமரி - கொல்லம், கொச்சுவேலி - நாகர்கோவில் ரயில்கள் ரத்து

மோட்டர் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை இயக்க அறிவுறுத்தல் மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து - தமிழக அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக