MATHI NEWS பரபரப்பு செய்திகள் 05/12/17 !
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 65 மீனவர்கள், 20 படகுகள் மீட்கப்பட வேண்டும். கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், லட்சத்தீவில் 2384 மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 126 படகுகள் மற்றும் 1126 மீனவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளது - மீன்வளத்துறை தகவல்.
லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக்கூடாது ? - சென்னை உயர் நீதிமன்றம்.
தடுப்பு காவல் சட்டத்தை ஏன் கொண்டு வரக் கூடாது ? புதிய சட்டம் இயற்றும் வரை குண்டர் சட்டத்தில் அடைக்கலாம் எனவும் நீதிபதி கிருபாகரன் கருத்து.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் என்ன ? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,500 ஹெக்டேர் வாழைகள் சேதம்.54 குழுக்கள் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறது - வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங்.
கதிராமங்கலத்தில் 200-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விஷால் போட்டியிட அனுமதி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு.
ஆர்கே.நகரில் 65 வேட்பு மனுக்கள் ஏற்பு ஜெ.தீபா உள்பட 56 பேரின் மனுக்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணையர்.
அதிமுக தோற்றுவிடும் என்பதால் எனது வேட்புமனுவை நிராகரித்திருக்கிறார்கள் - ஜெ.தீபா.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு : காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 89 பேர் ராகுல் காந்தியின் பெயரை மட்டுமே பரிந்துரை செய்துள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.
ஒகி புயல் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்கள் மற்றும் 2,802 மக்கள் பாதிப்பு - உள்துறை அமைச்சகம்.
புயலால் கேரளத்தில் 29 பேரும், தமிழகத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.தமிழக மீனவர்கள் 74 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகம் - உள்துறை அமைச்சகம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 மணி நேரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து, மின் விநியோகம் முழுமையாக வழங்கப்படும் - மின்சாரத்துறை செயலாளர்.
நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்படுகிறது - இயக்குநர் சேரன்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு.
காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி நிர்மலா சீதாராமனுக்கு முக.ஸ்டாலின் கடிதம்.
ஆர்கே நகரில் தொப்பி சின்னம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் எங்களிடம் கருத்தை கேட்க வேண்டும் ஓபிஎஸ் சார்பில் கேவியட் மனு தாக்கல்.
சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் : தேர்தல் ஆணையம்.
மதுசூதனன் மனுவை ஏற்க கூடாது. பொதுச்செயலாளர் மட்டுமே பி-படிவத்தில் கையெழுத்திட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட முடியாது - டிடிவி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.
சசிகலா துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்ய கோரியவர்க்கு ரூ.1 லட்சம் அபராதம் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
செய்தியாளரை தாக்கிய வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.
10 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை எத்தனை பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது.லஞ்ச வழக்கில் சிக்கியவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - உயர் நீதிமன்றம் கேள்வி.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி.தினகரன் , திமுக வேட்பாளர் மருதுகணேஷ் , அதிமுகவின் மதுசூதனன் , நாம் தமிழர் கட்சியின் கலைகோட்டுதயம் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு.
நடிகர் ராதாரவி , ராதிகா இருவரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விஷால் விலக வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் இயக்குநர் சேரனுக்கு ஆதரவு.
விஷால் குளத்து ஆமை மாதிரி; நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அதை கெடுத்துவிடுவார்.நான் எதிர்க்கும் அளவிற்கு விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை - நடிகர் ராதாரவி.
தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் நடிகர் விஷால் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
சேரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறும் விஷால், தமிழகத்தில் என்ன வரலாற்றை உருவாக்கினார் ? - டி.ராஜேந்தர்.
விளம்பரத்திற்காக யார் ஆசைப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் அனுபவமின்மையும் , அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது - இயக்குநர் சேரன்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா.
சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக ஞானவேல்ராஜா அறிவிப்பு.
தமிழக போலீசார் தங்களை அடிமைகள் போல் நடத்துவதாக புகார் : தமிழக காவல்துறையின் கீழ் பணியாற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.
மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்லும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஷீலா பிரியா தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வாக உள்ளதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை : தமிழிசை.
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நடிகர் விஷால் ஒன்றும் அறியாமல் அரசியலுக்கு வருகிறார், பெரும் சரிவை சந்திப்பார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
தனி திரையரங்குகளுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பாணை.
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி அறிவிப்பாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
மைசூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமன் ஜெயந்தி: பாஜக எம்பி உள்ளிட்ட 58 பேர் கைது.
அரசு மரியாதையுடன் நடிகர் சசி கபூர் உடல் தகனம் செய்யப்பட்டது.
அரியலூரில் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் உதவியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாரிசு சான்றிதழ் தர ரூ.500 லஞ்சம் பெற்ற தெய்வசிகாமணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தீபா கணவர் மாதவன், மருத்துவர் ஒருவரும் நாளை காலை ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்.
விஜய் - முருகதாஸ் இணையும் புதிய படத்தை தயாரிப்பதை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளாவை தொடர்ந்து மும்பை - குஜராத் நோக்கி நகர்ந்தது ஒகி புயல் : மும்பை - குஜராத் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக