திங்கள், 11 டிசம்பர், 2017

நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு கவுசல்யா தந்தை உட்பட 11 பேரும் குற்றவாளி.



நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு கவுசல்யா தந்தை உட்பட 11 பேரும் குற்றவாளி.

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை சின்னசாமி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரும் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர் பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சங்கர் உயிரிழந்து விட்ட நிலையில், படுக்காயங்களோடு கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் அமைந்திருக்கும் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. .

இந்த வழக்கு தொடர்பாக கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கெளசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர். சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், ஏற்னவே இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக