புதன், 20 டிசம்பர், 2017

செய்திச் சுருக்கம் (20/12/2017)

செய்திச் சுருக்கம் (20/12/2017)


இன்றைய நிகழ்வுகள் சுருக்கமாக*


1 பாரத ஸ்டேட் வங்கிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வங்கியின் இரு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

2 குஜராத் முதல் அமைச்சராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

3 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்கோலி தனது திருமணத்தை இத்தாலியில் நடத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரிலால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

4 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

5 அரசியல், ஜாதி, மதங்கள் மனிதனை பிளவுபடுத்துவவை, கலை, இலக்கியம் மட்டுமே மனிதத்தை வளர்ப்பவை என எழுத்தாளர் பொன்னீலன் பேசினார்.

6 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, தனித் தேர்வர்கள், வரும், 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

7 வங்க கடலில், வரும், 25-ல், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், வலுவிழந்துள்ள வடகிழக்கு பருவ மழை, இந்த மாத இறுதியில், முற்றிலும் விலகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் சில இடங்களில், நாளை மிதமான மழை பெய்யலாம். வரும், 25ல், வங்க கடலில், அந்தமானுக்கு தென் கிழக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் எனவும், வானிலை மையம் கணித்துள்ளது.

8 அமேசான் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி 10.or D -என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேசான் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் வெளிவந்துள்ளது.

9 கடலூர் மாவட்டத்தில் 1.13 லட்சம் ஏக்கர் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

10 குஜராத் முதல்வராக, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியும், ஹிமாச்சல முதல்வராக, மத்திய அமைச்சர், ஜே.பி.நட்டாவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

11 வைகை அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு, இன்று முதல் தண்ணீர் திறந்து விட, முதல்வர் பழனிசாமிஉத்தரவிட்டு உள்ளார்

12 இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று(டிச.,20) நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி ஒடிசாவின் கட்டாக் நகரில் இன்று நடைபெறுகிறது.

13 சென்னை ஆர்.கே.நகரில் நாளை காலை 8 முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு திமுகவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

14 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாமி தரிசனம் செய்து வருகிறார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார். இதனையடுத்து தற்போது ஆளுநர் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்து வருகிறார்.

15 இந்தியாவில் பெண் பைலட்கள் அதிகம் என மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

16 குஜராத் சட்டசபை தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது என சிவசேனா விமர்சித்து உள்ளது.

17 தமிழகத்தில் ஒக்கி புயல் பாதிப்புக்கு ரூ.4,047 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு அளித்தார்.

18 பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவிக்கு மத்திய மந்திரி ஜே.பி. நட்டா பெயர் அடிபடுகிறது.

19 பீகார் மாநிலம் மசூதான் பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேசனில் புகுந்த நக்சல்கள், அங்கு தீவைத்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ரயில்வே ஊழியர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

20 திராவிட இனம் தலைதூக்க கூடாது என்பதை மத்திய பா.ஜ.க. ஆட்சி லட்சியமாக கொண்டு செயல்படுகிறது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசினார்.

21 முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு நடத்த மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கேரளா அரசு அனுமதி மறுத்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு எர்ணாகுளம் பிரிவு துணை கமாண்டர் ஜோக்ராஜூக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

22 சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை(டிச.,21) நடைபெறுகிறது. இதனையொட்டி 3,300 போலீசார், 900 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், நாளை காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

23 நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் வெள்ளையரால் உருவாக்கப்பட்டு, இன்றைய நடைமுறையில் இருந்து வழக்கொழிந்துப்போன 245 சட்டங்களை ஒழிப்பதற்கு பாராளுமன்றம் மக்களவை ஒப்புதல் இன்று அளித்தது.

24 டில்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

25 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.

26 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

27 ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

28 பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து கொண்டார். உலகிலேயே இதுதான் நீளமான திருமண ஆடை என்ற கின்னஸ் சாதனையை இந்த ஆடை அடைந்துள்ளது

29 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

30 மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில், விஜிலென்ஸ் அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.

32 ஷார்ஜாவில் நடைபெற்ற டி10 கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி கேரளா கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

33 இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து முதல்-மந்திரி வீரபத்ரசிங் ராஜினாமா செய்தார்.

34 மன்மோகன் சிங் மீதான சதிக்குற்றச்சாட்டு விவகாரத்தில், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. வெளிநடப்பும் செய்தது.

35 பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பதை நாம் பார்க்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்

36 கிறிஸ்துமஸ் கொண்டாடினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, உ.பி., மாநிலம், அலிகாரில் உள்ள பள்ளிகளுக்கு, ஹிந்து அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

37 சென்னைக்கு சாய்கங்கை குடிநீரை பெறுவதற்கான பேச்சுவார்த்தை, ஆந்திராவில், நேற்று மீண்டும் துவங்கியது.

38 புதுடெல்லி: ஏர்டெல் நிறுவனம் மீதான புகார் காரணமாக, சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கும் வங்கிகள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்ற பிறகே, வேறு வங்கிக்கு மானியத்தை மாற்ற வேண்டும் என்று ஆதார் வழங்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

39 வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதில் 1.65 கோடி பேருடன் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

41 பசிபிக் பெருங்கடலோரம் தென் அமெரிக்காவின் மேற்கே அமைந்துள்ள சிலி நாட்டில் நேற்று 5.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

42 கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதத்துக்கு மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் பதில் அளித்தார்.

43 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் தொடர்ந்து மெல்போர்னில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

44 கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா படகு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

45 இலங்கை அணிக்கெதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று(டிச.,20) நடைபெறுகிறது.

46 இலக்கியத்திற்கான மத்திய அரசின் 'சாகித்ய அகாடமி' விருதுகள் நாளை (டிச.,21) அறிவிக்கப்படுகின்றன.

47 மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 382 கனஅடியில் இருந்து 235 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 74.34 அடியாகவும், அணையின் நீர்இருப்பு 36.54 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 9000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

48 தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் எந்தவொரு மீத்தேன் எரிவாயு திட்டமோ செயல்படுத்தப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்துள்ளார்.

49 மாநிலம் முழுவதும் வேளாண் விளை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உயர்தர பாதுகாப்பு பெட்டக வசதி (ஹைடெக் சேப்டி லாக்கர் ஸ்பெஷாலிட்டி) அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

50 சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் உள்ள அரண்மனையின் மீது ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

51 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி வரி அமைப்புக்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

52 ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க கோரி, சென்னை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த, 302 புகார் மனுக்கள், விசாரணை கமிஷனுக்கு மாற்றப்பட்டன.

53 2018 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.

54 2016-17-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கான விருது பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது

55 சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

56 இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது.

57 மூணாறில் முதன்முறையாக குளிர் கால மலர் கண்காட்சி இன்று துவங்கி ஜன. 10 வரை நடக்க உள்ளது.

58 கார்கள், இருசக்கர வாகனங்களில் ‘கிராஷ் கார்டு’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கப்படும் தடுப்புக் கம்பிகள் பொறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

59 தமிழகத்தில், 'பிட் காயின்' எனப்படும், 'டிஜிட்டல்' நாணயங்கள் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள சிலரிடம், வருமான வரித்துறை, விசாரணையை துவக்கி உள்ளது. சிலரை, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக