புதன், 13 டிசம்பர், 2017

MATHI NEWS பரபரப்பு செய்திகள் 13/12/17 !



MATHI NEWS பரபரப்பு செய்திகள்  13/12/17 !

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க நாட்டின் 12 இடங்களில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.

கன்னியாகுமரி : கடலோர கிராமங்களில் நடந்து வந்த மீனவர்கள் போராட்டம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 படகுகளில் 48 மீனவர்கள் ஆழ்கடல் நோக்கி பயணம்.

டிசம்பர் 31க்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் : பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

ஓகி புயலில் பாதிக்கப்பட்ட கேரள மாநில மீனவர்களுக்கு அந்த மாநில அமைச்சர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார்கள்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் : அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு.

தர்மபுரி அருகே சோலார் சார்ஜர் கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, தேசிய அறிவியல் கவுன்சில் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதை வழங்கியுள்ளது.

193 ஏக்கர் அரசு நிலத்தை லீசுக்கு கொடுத்த விவகாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு : வருமான வரித்துறையும் சேர்ந்து நடத்தியது.

ஆர்கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.ஒருமுறைக்கு மேல் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.

போலி வாக்காளர்கள் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் சந்திப்பு.

காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் உடனே கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் உதவ சுசீந்திரம் அல்லது வேதாரண்யத்தில் ஹெலிகாப்டர் தளம் வேண்டும் : ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை.

திருமாவளவன், மணிசங்கர் அய்யர் ஆகியோரை கண்டித்து, பாஜக சார்பில் காரைக்குடியில் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா வேட்டியை மடித்து கட்டினால் தானும் ரவுடி தான் என்றார்.

நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது தமிழக காவல்துறை அதிகாரி ராஜஸ்தானில் சுட்டுக்கொலை.

தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் போலீஸ் உறுதுணையாக இருக்கும்.ராம்புரா பகுதியில் இருக்கும் கொள்ளையர்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம் : பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் பேட்டி.

தமிழக காவல்துறையுடன் இணைந்து ராம்புரா பகுதியில் உள்ள கொள்ளையர்களை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை - ராஜஸ்தான் டிஜிபி கல்ஹோத்ரா.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் தொடர்பாக விவரம் கேட்கப்பட்டுள்ளது, முழு விவரம் கிடைத்த உடன் நிவாரணம் அறிவிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி.

சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆறுதல்.

போலீஸ் துப்பாக்கியாலேயே ஆய்வாளர் சுட்டுக்கொலை : நாது ராம் என்ற கொலையாளியை கைது செய்த போது பெரியபாண்டியின் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெ. மரண மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன் ஆஜரானார் ஜெ. தீபா.

தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணம் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா தான் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகிறார்.

நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் டிச.19ம் தேதிக்குள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வீராணம் ஏரி முதன்முறையாக முழுகொள்ளளவை எட்டியது - 47.50 அடி நீர் கொள்ளளவு ஏரி நிரம்பியது.

எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் : அன்னா ஹசாரே.

திருப்பதி கோயிலில் வைகுண்டஏகாதசியன்று அனைத்து முன்னுரிமை தரிசனங்களும் ரத்து.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்.

பொதுமக்களின் தாக்குதலை தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வர தஷ்வந்த் மறுப்பு, மீண்டும் தாக்கப்படலாம் என்பதால் நீதிமன்றத்தில் தஞ்சம்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகல் : தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் நீதிமன்றத்தில் பதில்.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் ஜாமின் மனு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

இலங்கை : கடும் எதிர்ப்புக்கு இடையே ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்தது இலங்கை.99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்னையை போல மீனவர்கள் விவகாரத்திலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் - மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார்.நடிகர் சங்கத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது - நடிகர் பொன்வண்ணன்.

நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். மூத்த கலைஞர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன்.

நாமக்கல் : குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியினைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம் என பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

நாகை : மயிலாடுதுறை தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் 3 மாணவிகள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக