குஜராத் தேர்தல் மூலம் உருவாகிய இளம் தலைவர்கள்.
குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரைவிட 18,150 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார்.
ஜிக்னேஷ் மேவானி. தொடர்ச்சியாகத் தலித் மக்களின் உரிமைகளுக்காகக் குறிப்பாக பா.ஜ.க-வின் அரசியலை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் தொடர் பிரசாரம், பேரணி நடத்தினார்.
எந்த உனா நகரில் நான்கு தலித் மக்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதோ அதே ஊரை நோக்கி அகமதாபாத் நகரிலிருந்து பேரணியாகச் சென்று ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார், மேவானி. அரசியல் கட்சிகளின் கூட்டத்தை விஞ்சும்வகையில் அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
குஜராத்தில் தேர்தல் களத்தில் முதன் முறையாக களமிறங்கிய 24 வயதான ஹர்திக் படேல், தனது தீவிர பிரச்சாரம் மூலம் பட்டியல் இன தலைவரும், முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்த படியாக புகழ்பெற்று உள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு ஹர்திக் படேல் மற்றும் அவரது படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடுமையாக உழைத்தது.
இவர் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் தொகுதியிலேயே பொதுக்கூட்டம் நடத்தி பெரும் திரளான மக்களை கூட்டத்தை கூட்டி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்.
மாநிலம் முழுவதும் படேல் இன மக்களை நேரில் சந்தித்து, தேர்தல் சமயத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர். இவர் ஹட்வா படேல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், பட்டியல் துணை சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஆதரவு கோரினார். இதனால் ஹர்திக்கின் புகழ் பரவியது.
தனது பிரச்சாரத்தின் போது பாஜக ஹட்வா மற்றும் லேவா இன மக்களை பிரிக்க நினைக்கிறது. நமது வாக்குகளை பிரித்து, நம்மை அதிகாரமற்றவர்களாக ஆக்க நினைக்கிறது, அவர்களின் எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இது போல் பாரதீயஜனவுக்கு குடைச்சல் கொடுத்த அல்வேஷ் தாக்கூரும் வெற்றி பெற்று உள்ளார். காங்கிரஸ் சார்பில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவர் அல்பேஷ் தாக்கூர், 80 ஆயிரத்து 378 வாக்குகள் பெற்று வாகை சூடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக