இந்தியாவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் எது?
இந்தியாவில் குற்றங்கள் அதிகம் மாநிலங்களின் பட்டியலை தேசிய குற்றங்கள் பதிவு இயக்கம் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியல்படி, உத்திரப் பிரதேசம் குற்ற எண்ணிக்கையில் முதல் இடத்தில உள்ளது. சென்ற 2016 ஆம் ஆண்டு, நாட்டில் நடந்த கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில், உத்தர பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு, 4,889 கொலைகள் நடந்து உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகப்படியான குற்ற சம்பவங்கள் நடக்கும் முக்கிய நகரங்களின் பட்டியலில், தலைநகர் டில்லி முதலிடத்தையும், மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, இரண்டாவது இடத்தையும் பிடித்து உள்ளன.
சென்னையும், கொல்கட்டாவும் கடைசி இரண்டு இடத்தில உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக