இந்தியாவுக்கு சீனா அளித்த சலுகை.! ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது..!
இந்தியாவுக்கு சீனா அளித்த சலுகை.!
இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு சோயாபீன்ஸ் மற்றும் கால்நடை தீவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ததாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு சீனாவும் கடுமையாக வரி விதித்து இருப்பதால் அவ்விரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இரு அமெரிக்க மற்றும் சீன நாடுகளிடையே வர்த்தக போர் நடந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், அண்டை நாடுகளான ஆசிய நாடுகளுடன் நல்லுறவை விரும்புவதாக சீனா அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவுடனான வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் சீன அரசு நட்புடன் இருக்க விரும்புவதாக தெரியவந்து உள்ளது.
அந்த வகையில் சீன அரசு இந்தியா உள்பட வங்காளதேசம், லாவோஸ், தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகின்ற சோயாபீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களுக்கு வரியை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இந்த வரி ரத்து வரும் ஜூலை 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவை அந்த நாட்டின் நிதி அமைச்சகம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி சோயாபீன்ஸ் மீது 3 சதவீதம் வரியும், சோயாபீன்ஸ் புண்ணாக்கு மீது 2 சதவீதம் வரியும் சீனா வரி விதித்து வருகிறது. அமெரிக்காவில் இருந்துதான் சீனா அதிகளவில் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் வரி ரத்தால் இனி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கூடுதலாக சோயாபீன்ஸ் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக