கார்ப்பரேட் வளர்ச்சிக்காகவே சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை'
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாங்கிய கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். மேலும் துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எந்த வித நிபந்தனையும் இன்றி நிரந்தரமாக மூட வேண்டும்.
சேலம், தருமபுரி மாவட்டங்களில் தாது வளம் இருப்பதை அறிந்து, அங்கு தொழில் தொடங்கவுள்ள ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்திற்காகவே இந்த எட்டு வழிச் சாலை அமைக்கப்படுகிறது.
இது மக்களுக்கான வளர்ச்சி அல்ல. கார்ப்பரேட்டுக்கான வளர்ச்சி.
மேலும் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் அழித்து அமைக்கப்பட இருக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாங்கிய கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும். மேலும் துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எந்த வித நிபந்தனையும் இன்றி நிரந்தரமாக மூட வேண்டும்.
சேலம், தருமபுரி மாவட்டங்களில் தாது வளம் இருப்பதை அறிந்து, அங்கு தொழில் தொடங்கவுள்ள ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்திற்காகவே இந்த எட்டு வழிச் சாலை அமைக்கப்படுகிறது.
இது மக்களுக்கான வளர்ச்சி அல்ல. கார்ப்பரேட்டுக்கான வளர்ச்சி.
மேலும் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் அழித்து அமைக்கப்பட இருக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக