மெக்ஸிகோவில் நாய்களுக்கான பிரத்யேகமான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.
டான் பேலட்டோ ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமையாளர் மவுரிசியோ மொன்டாயோ,
“மனிதர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடும்போது தங்களின் செல்லப் பிராணிகளுக்கும் கொடுத்துவிடுகிறார்கள்.
இதனால் நாய்களின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதனால் நாய்களுக்காக ஐஸ்கிரீம் உருவாக்க நினைத்தேன்.
கால்நடை மருத்துவர்களைச் சந்தித்து, எந்தெந்த உணவுப் பொருட்கள் நாய்களுக்கு கெடுதல் விளைவிக்கும் என்பதைக் கேட்டு அறிந்து அவற்றை தவிர்த்து, ஐஸ்கிரீம்களை உருவாக்கினேன்.
எங்கள் ஐஸ்கிரீமில் லாக்டோஸ் இல்லை, சர்க்கரை இல்லை. தேனையும், பழச்சாறுகளையும் இனிப்புக்குச் சேர்த்துகொண்டேன்.
செல்லப்பிராணிகள் மீது உண்மையான அக்கறையுள்ளவர்கள் தாங்கள் சாப்பிடுவதைக் கொடுக்க மாட்டார்கள்.
நாய்களுக்கென்று தயாரிக்கப்படும் உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும்” என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக