சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை பட்டியலிட்ட மத்திய அரசு!
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படும் நிலையில், எட்டுவழிச்சாலை திட்டத்தால் கிடைக்கும் பயன்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
➤சேலம் - சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர் பசுமை வழிச்சாலைக்காக மலைகள் எதுவும் சேதப்படுத்தப்படாது
➤பசுமை வழிச்சாலையால் பயண நேரம் குறைவதோடு, ஆண்டுக்கு 6 கோடி லிட்டர் டீசல் செலவு மிச்சமாகும்
➤டீசல் பயன்பாடு குறைவதால் காற்றில் கலக்கும் கோடிக்கணக்கான கிலோ மாசு குறையும்
➤பசுமை வழிச்சாலையால், தூரம் குறைவதால், ஒரு மூட்டைக்கு ஐந்து பைசா குறையும்
➤முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கிய பின்னரே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்
➤பசுமை வழிச்சாலைக்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்
➤கட்டிடம், வீடு அல்லது வியாபார கட்டிடமாக இருக்குமானால் சதுர அடிக்கு ரூ.2000 இழப்பீடு
➤நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சமோ (அ) பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடோ வழங்கப்படும்
➤பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மாற்று இடங்கள் கொடுக்கப்பட்ட பின்னர் தான் நிலம் கையகப்படுத்தப்படும்
➤நிலத்திலுள்ள மரங்கள், கட்டிடங்கள், கிணறு போன்றவற்றிற்கு தனித்தனியே இழப்பீடு
➤சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருமருங்கிலும் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்
➤கட்டிடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப்படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும்
➤வெட்டப்படும் மரங்களுக்கு பதில் சாலையின் இருமருங்கிலும் 10 மீட்டர் அகலகத்திற்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்
➤பசுமை வழி விரைவுச்சாலையை மேம்பாலம் மூலம் அமைக்க கிலோ மீட்டருக்கு ரூ.140 கோடி வரை செலவாகும்
➤செலவினங்களை குறைக்க ரூ.15 கோடி செலவில் தரை மார்க்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக விளக்கம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக