திங்கள், 18 ஜூன், 2018

#BREAKING_NEWS சேலம் 08 வழி சாலைக்கு நிலத்தை தரமறுத்த விவசாயியை... குடும்பத்துடன் கைது செய்து போலீசார் அட்டூழியம்..!

#BREAKING_NEWS சேலம் 08 வழி சாலைக்கு நிலத்தை தரமறுத்த விவசாயியை... குடும்பத்துடன் கைது செய்து போலீசார் அட்டூழியம்..!



#BREAKING_NEWS சேலம் 08 வழி சாலைக்கு நிலத்தை தரமறுத்த விவசாயியை... குடும்பத்துடன் கைது செய்து போலீசார் அட்டூழியம்..!

விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பசுமை சாலை அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மாவட்ட அளவிலான கருத்துக்கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்து வட்டவாரியாக நிலத்தை இழக்கும் விவசாயிகளை மட்டும் அழைத்து கருத்துகேட்பு என்ற பெயரில் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 நிலம் கையகப்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு, நிலத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு வியாபாரம் செய்பவர்கள் என சமூகத்தின் சகல தரப்பினருக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு மதிப்பீடு செய்ய வேண்டுமென்று சட்டம் தெளிவாக குறிப்பிடுகிறது.
விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை எனது அரசு செயல்படுத்தாது, மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டதற்கு நேர்மாறாக தற்போதைய அதிமுக அரசு செயல்படுகிறது.
விளைநிலங்களையும், வனநிலங்களையும் மக்களின் குடியிருப்புகளையும் அழித்து பசுமை சாலை அமைப்பதற்கு பதிலாக மாற்று வழிமுறைகளை அரசு ஆலோசிக்க வேண்டுமென்று மத்திய - மாநில அரசுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
இந்நிலையில், சற்றுமுன் சேலம் மாவட்டம் அடிமலைபுதூரில் நிலம் அளக்க எதிர்ப்பு தெரிவித்த நிலத்தின் உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் அத்துமீறி கைது செய்தனர். விவசாயி ரவிச்சந்திரன் தனது குடும்பத்துடன் சேர்ந்து தனது நிலத்தை விட்டு தரமாட்டேன் என்று போராடியதன் காரணமாக அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக