சனி, 23 ஜூன், 2018

இணையச் சேவை இல்லாமலே! இனி கூகுள் பயன்படுத்த மு டியும்


இணையச் சேவை இல்லாமலே! இனி கூகுள் பயன்படுத்த முடியும்

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணமாய் இருக்கிறது.
அனைத்து மக்களும் பயன் பெறும் ஒரு பகுதியாக தனது குரோம் தேடுபொறியை பிரபலப்படுத்தும் நோக்கில் இணையச் சேவை வசதியில்லாமல் முடங்கலை முறையிலேயே அதை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இதேபோல், கூகுள் வரைபடத்தை முடங்கலையில் பயன்படுத்தலாம் என்ற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியது.
அதேபோல், தற்போது ஆன்ட்ராய்ட் செல்பேசி பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இணையச் சேவை இல்லாமல் இணையதளத்தில் தேவையான தகவல்களை தேடி கொள்ளலாம், தேவையானவற்றை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த புதிய சேவையை முதல்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோம் செயலியை மேம்படுத்தல் செய்வதன் மூலம் அண்மைப் பதிப்பை பெற்றுக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக